Wednesday, November 25, 2015

ஸ்க்ரீன் பிரசன்ஸ் இல்லாத ஹீரோ!!???

தோழி க்கு ஐ லவ் யூ சொல்லுவாங்களா யாராவது?



ஏம்மா நாங்க எல்லாம் முன்னே பின்னே பார்க்காத பொண்ணுக்கே லவ் யூ சொல்ற ஆளுங்க



-------------------

2 டியர்.என்னை வாழ்க்கைத்துணையா ஏத்துக்குவீங்களா?



வாழ்க்கை பூரா ஏத்துக்க முடியாது.அப்பப்ப டைம் கிடைக்கும்போதுன்னா ஓக்கே



================

3 டியர்.உனக்கு சமைக்கத்தெரியுமா?



சாப்பிடத்தெரியும்.

அட்லீஸ்ட் பரிமாறத்தெரியுமா?
பசியாறத்தெரியும் ்


================

4 சார்.உங்க புதுப்படத்துக்கு சம்பூர்ண ராமாயணம் னு ஏன் டைட்டில் வெச்சிருக்கீங்க?



ஹூம்.நான் எங்கே வெச்சேன் ? டைரக்டர் பேரு பரதன்.



===============

5 சார்.சேலரி கம்மியா இருக்கே?என்ன ஸ்ட்ரக்சர்ல இப்டி போட்டிருக்கீங்க?



மேடம் .எல்லாம் 36-28-36 ஸ்ட்ரக்சரை பேஸ் பண்ணித்தான்



================

6 மேடம்.ஸ்விம்மிங் டிரஸ் ல நடிக்கனும்.



சாரி.முடியாது.

ஏன்?கூச்சமா?
ச்சே ச்சே அந்த டிரஸ் போட்டு நீந்தும்போது குளிரும்.நடிக்க முடியாது.


==============

7 இது என் 60 வது படம்.ரிசல்ட் எப்டி இருக்குமோ?



ரிட்டையர் ஆகற மாதிரி இல்லாம இருந்தா சரி


================

8 டியர்.உங்க வாழ்க்கைல வந்த முதல் காதலி நான் தானே?



தெரியல.எனக்கு ஞாபக சக்தி கம்மி.நேத்து யாரை லவ் பண்ணேன்னு இன்னைக்கு மறந்துடுவேன்

=============

9 இன்ட்ரோ சீன் ல ஹீரோ திரைல வந்து உள்ளேன் அய்யா ங்கறாரே?



ஸ்க்ரீன் பிரசன்ஸ் இல்லாத ஹீரோன்னு கிண்டல் பண்ணாங்களாம்


==================

10 தலைவரே! நீங்க நாத்திகவாதியா? ஆத்திகவாதியா?



உண்மையாச்சொல்லனும்னா நான் ஒரு சந்தர்ப்பவாதி


==============

11 உங்க வெற்றியின் ரகசியம் என்ன? சொல்லுங்க நாங்களும் ட்ரை பண்ணுறோம்



சொல்லிட்டா அது எப்படி ரகசியம் ஆகும்?

=================

12 டாக்டர்.வேக வெச்ச வேர்க்கடலை,வறுத்த நிலக்கடலை 2 ல் எது நல்லது?



2 ம் நல்லது தான்.ஆனா நீங்க நர்ஸ் கிட்டே போட்ட கடலை ஆபத்து.புருசன் போலீஸ்


=====================

13 ரயிலில்



சார்.உங்க மிடில் பர்த் தை எனக்கு தர்றீங்களா?நீங்க மேல ஏறிப்படுத்துக்குங்க
தாங்க்ஸ் மிஸ்.உங்க அப்பா எதும் சொல்லமாட்டாரா?


===================

14 FBல ,ட்விட்டர்ல அதிக நேரம் செலவிடறவங்க வீணா போய்டுவாங்க.



ஓஹோ.வீணா வுக்கு என்ன வயசு இருக்கும்?


=====================

15 ஹலோ! நீங்க எங்கே இருக்கீங்க? லோயர் பர்த்தா? மிடில் பர்த்தா?



விக்ரம் ரசிகன் = அதுக்கும்மேல.அப்பர் பர்த்


=================

16 லட்டு சாப்பிடும்போது எதுக்கு அதை வெயிட் போட்டு பார்க்கறீங்க?



டாக்டர் தான் ஸ்வீட் சாப்பிடறதை நிறுத்தனும்னாரு.அதான் தராசில் நிறுத்தறேன்


===============

17 இன்ட்ரோ சீன் ல ஹீரோ திரைல வந்து உள்ளேன் அய்யா ங்கறாரே?



ஸ்க்ரீன் பிரசன்ஸ் இல்லாத ஹீரோன்னு கிண்டல் பண்ணாங்களாம்


===================

18 தலைவரே! தேசியக்கொடி தலைகீழா இருந்ததை கவனிக்கல?



சிரசாசனம் நல்லதுன்னு தேசத்துக்கே ஒரு மெசேஜ் சொல்றோம் இதன் மூலம்


====================

19 உங்க கிட்டே கம்பெனி இன்னும் நிறைய எதிர்பார்க்குது.



சார்.நான் கூடத்தான் சம்பளம், இன்சென்ட்டிவ் ,அலவன்சஸ் இன்னும் எதிர்பார்க்கிறேன்.


===================

20 டாக்டர். மூக்குத்தி குத்திக்கிட்டா ப்ரீத்திங் ட்ரபுள் வருமா?


நோ மிஸ் ப்ரீத்தி.மூக்குல ரத்தம் தான் வரும்


=====================

0 comments: