அடுத்து தி.மு.க.வின் ஆட்சிதான்னு ஸ்டாலின் சொல்றாரு. எங்க கூட்டணி இல்லாம தனியா நில்லுங்க பாப்போம். தி.மு.க., அ.தி.மு.க. ரெண்டு பேரும் தனிச்சு நின்னு உங்க பலத்த காட்டுங்க பார்ப்போம்" என்று திருப்பூரில் நடந்த தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் சவால்விட்டு பேசினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் தே.மு.தி.க. சார்பில் மக்களுக்கான மக்கள் பணி திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நலத்திட்ட உதவிகள் வழங்கி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்டோர் பேசினர்.
பிரேமலதா பேசும்போது, ''கோடநாட்டில் ஓய்வு எடுக்கும் ஜெயலலிதா. மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்படுகிறார். இன்னும் ஆறு மாதம்தான் இருக்கிறது. அதன் பின்னர் அவர் கோடநாட்டில் நிரந்தரமாக ஓய்வு எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். தி.மு.க., அ.தி.மு.க.,வை திட்டி ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் தே.மு.தி.க.வுக்கு இல்லை. தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என கோரி வரும் நிலையில், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தீபாவளிக்கு, மதுவிற்பனை 350 கோடி ரூபாய், 500 கோடி ரூபாய் என்று இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்கிறார்கள். பூரண மதுவிலக்கு கோரி வரும் நிலையில் அதை நாம் ஊக்கப்படுத்த முடியாது. அதே சூழலில், கேரளாவில் கள்ளை இட்லி, தோசை போன்ற உணவு பொருட்களில் பயன்படுத்துவது போல பயன்படுத்தலாம். தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால், கேரளாவில் உணவு பதார்த்தங்கள் தயாரிக்க கள் பயன்படுத்தப்படுவது போல, கள்ளை ஆரோக்கிய உணவு பதார்த்தமாக கொடுக்க திட்டங்கள் கொண்டுவரப்படும்" என்றார்.
அதன்பின் விஜயகாந்த் பேசும்போது, ''எதை பேசினாலும் கேஸ் போடுறாங்க. அனா, அதுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். கொலை செஞ்சவனே கேமரா முன்னாடி டாடா காட்டிட்டு போறான். நான் எதுக்கு பயப்படணும்?. அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்தான் அதிகமாக உள்ளது. லஞ்ச ஊழலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க சொன்ன எங்க கட்சிக்காரங்க இப்போ வருத்தப்படறாங்க.
தியேட்டரை வாங்கிட்டதா சசிகலா உள்ளிட்டோர் மேல் புகார் வந்து எத்தனை நாளாச்சு. இத்தனை நாளா யாரும் எதுவும் பேசலை. இப்போ திடீர்னு விலைக்கு விக்கலை. லீசுக்குதான் கொடுத்திருக்கோம்னு சொல்றாங்க.
அடுத்து தி.மு.க.வின் ஆட்சிதான்னு ஸ்டாலின் சொல்றாரு. எங்க கூட்டணி இல்லாம தனியா நில்லுங்க பாப்போம். தி.மு.க., அ.தி.மு.க. ரெண்டு பேரும் தனிச்சு நின்னு உங்க பலத்த காட்டுங்க பார்ப்போம். நாங்களும் தனிச்சு நிக்குறோம். எப்போ பார்த்தாலும் யார் கூட கூட்டணினு கேக்கறாங்க. கூட்டணி பத்தி ஜனவரியில முடிவு பண்ணலாம். பிப்ரவரியில முடிவு பண்ணலாம். அதுக்குள்ள என்ன அவசரம்?
அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எல்லாத்துலயும் பொய் சொல்றார். மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களே இல்லைன்னு சொல்றார். திருப்பூர்லகூட பஸ் ஒப்பந்த தொழிலாளர்கள் இறந்திருக்காங்க. அவங்களுக்கு நஷ்ட ஈடு கூட கொடுக்கலை. இவர் நத்தம் விஸ்வநாதன் இல்லை. நத்தை விஸ்வநாதன். நத்தை மாதிரிதான் செயல்படுறார்" என்று சாடினார்.
- ச.ஜெ.ரவி
-விகடன்
0 comments:
Post a Comment