1/கவிஞனை கட்டிக்கிிட்டியே.எப்டிடி போகுது LIFE?
ம்ம்க்கும்.நைட் 8 மணிக்கு என் அழகை வர்ணிக்க ஆரம்பிச்சா விடிஞ்ச பின் தான் கவிதையே முடியுது.
===============
2/நைட் ஒரிஜினல் டிபி வெச்சேன் . நீங்கபாக்கலயே மாம்ஸ்"
சாரி.பொண்ணுங்க டிபி யைக்கூட தலை நிமிர்ந்து பார்க்கறதில்லை
==========
3/டியர்.4 நாளா ரூம்ல பட்டினி போட்டு சாப்ட்டியா?ன்னு கேட்கறீங்ளே ஏன்?
அன்பானவர்கள் கேட்கும் "சாப்டியா?" என்ற வார்த்தையே மனநிறைவுன்னியே?
=============
4/டியர்.நாம 2 பேரும் இணைய உனக்கு ஆர்வமே இல்லையா? இணையப்பற்று இல்லாத
காதலியா இருக்கியே?
இல்லையே?மாசம் இணையம் (NET)பில் மட்டும் 1000ரூ் வருதே
===================
5/ஜட்ஜ் = 1000 கோடி ரூபா சொத்து எப்டி வந்தது?
கைதி = 999 கோடி பேங்க்ல 10 வருசம் போட்டு வெச்சிருந்தேன்.வட்டி 1 கோடி வந்தது.மொத்தம் 1000 கோடி
=============
6/டாக்டர்.வாக்கிங் போனா தலைவலி போய்டும்னு சொல்றாங்களே?10 கிமீ போகவா?
லூசாம்மா நீ?கால் வலி வந்துடும்
=============
7/ஜட்ஜ் = 1000 கோடி ரூபா உங்களுக்கு எங்கே இருந்து வந்தது?
கைதி = பேங்க் ல இருந்து
===========
8/மாப்ளைக்கு மாத வருமானம் 1 ரூபாங்கறீங்க.எப்டி பொண்ணு தர்றது?
அது இன் கம் டாக்ஸ் கணக்குக்கு.1000 கோடி க்கு சொத்து இருக்கு
==========
உங்க க்ளினிக் ல எத்தனை நர்ஸ்?
லேடி டாக்டர் லேகா = ஐ ஆம் ஒன் மேன் ஆர்மி
மேன்?அப்போ நீங்க விமன் இல்லையா?விமல்?
============
10/ஜட்ஜ் = தாமிரபரணி யை கம்மி ரேட்க்கு வித்துட்டீங்களா?
கைதி = யெஸ் யுவர் ஆனர்.விஷால் படம் விலை போகாத சரக்கு தானே?
================
11/தலைவரே! காவிரி ஆற்றை வித்துடலாமா?ன்னு ஏன் கேட்கறீங்க?
தாமிரபரணி ஆத்தை அவங்க வித்துட்டாங்க.இப்போ நாம எதையாவது வித்தே ஆகனும்
=============
12/போத்தீஸ் க்கு கமல் விளம்பரம் பண்ணுனதுல இருந்து பரணி சில்க்ஸ் ல கூட்டம் குறைஞ்சிடுச்சு.
தாமிர பரணி சில்க்ஸ் னு பேர் மாத்துங்க.ஹிட் ஆகிடும்.
=================
13/தமிழ் நாட்டில் எத்தனை ஆறுகள் ஓடுது?
டீச்சர்.வித்த ஆறா?லீசுக்கு விட்ட ஆறா?
============
14/பசுபிக் பெருங்கடல் ,இந்தியப்பெருங்கடல் ,அரபிக்கடல் எல்லாத்துக்கும் ராணுவப்பாதுகாப்பு எதுக்கு போட்டிருக்காங்க?
அதையும் யாராவது வித்துட்டா?
===============
15/உங்க பேரை ஏன் தேசியம் னு கெஜட்ல மாத்தீட்டீங்க?
தாமிரபரணி ஆறு வித்த வழக்கு வந்தா நதிகள் தேசியமயம் ஆக்கப்பட்டனன்னு சமாளிச்சு வாதாடலாமே?
================
16/ஜட்ஜ் = 1000 கோடி சொத்து சேத்தியா?
கைதி = 1000 கோடிக்கு எத்தனை சைபர்னு கூட எனக்குத்தெரியாதுங்க எஜமான்.
அப்போ நீ நிரபராதிதான்
==============
17/குத்துமதிப்பு குமாரசாமி = 1 நாள் கால்ஷீட்க்கு 10 லட்சம் ரூபாயா? ஜாஸ்தியா இருக்கே?
ஹீரோயின் -10% டிஸ்கவுண்ட் தர நான் என்ன போத்தீசா?
=============
18/ஜட்ஜ் =இன் கம்டாக்ஸ் ரெய்டு வந்த ஆபீசர்கிட்டே 10 லட்சம் ரூபா கேட்டீங்களாமே?எதுக்கு?
நடிகை =,யார் எப்போ வந்தாலும் 10 லட்சம் கேட்பேன்.
============
சார்.நீங்க எப்டி ஒல்லி கில்லியா இருக்கீங்க?
நீங்க எப்டி குண்டா இருக்கீங்க?ன்னு நான் கேட்டேனா?
=============
20/நான் அவர்ட்டஇருந்து வாழ்க்கைல கம்மியா பேசனும்னு கத்துக்கிட்டேன்.
ஓஹோ.நான் உங்க கிட்டே இருந்து அதிகம் வாய் விடக்கூடாதுன்னு கத்துக்கிட்டேன்
=============
0 comments:
Post a Comment