சத்யராஜ் ஒரு குடும்பத் தலை வர். சக கல்லூரி மாணவ னுடன் சகஜமாக பைக்கில் செல்லும் மகளை தவறாகப் புரிந்து கொள்கிறார். மகளின் படிப்பை நிறுத்திவிட்டு திருமணத்துக்கு நாள் குறிக்கிறார். மகள் மீதிருக் கும் கோபத்தில் அன்று இரவு நண்பர்களுடன் மது அருந்துகிறார். எப்போதும் தன்னுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆட்டோ டிரை வரை அழைத்துக்கொண்டு நகரை வலம் வருகிறார். பேருந்து நிறுத் தத்தில் நின்றுகொண்டிருக்கும் பாலியல் தொழிலாளியை (அனுமோள்) கண்டதும் சபலம் ஏற்படுகிறது.
காலியாக இருக்கும் தனது கடைக்கு அவரை அழைத்துவரு கிறார். அது அவரது வீட்டின் காம் பவுண்டை ஒட்டி வரிசையாகக் கட்டப்பட்ட கடைகளில் ஒன்று. அதில் சத்யராஜையும் அனு மோளையும் வைத்துப் பூட்டி விட்டு சாப்பாடு வாங்கிவர வெளியே செல்லும் ஆட்டோ டிரை வர், போலீஸில் மாட்டிக்கொள்ள நிலைமை விபரீதமாகிறது.
கோபத்துடன் வெளியே சென் றவர் திரும்பி வரவில்லையே என்று சத்யராஜின் குடும்பம் பதற, பூட்டிய கடைக்குள் சத்யராஜும் அனுமோளும் ஆட்டோ டிரைவருக் காகக் காத்திருக்க, அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் திரைக்கதை.
ஜாய் மேத்யூ எழுதி இயக் கிய ‘ஷட்டர்’ என்ற மலை யாளப் படத்தின் மறுஆக்கமாக வெளிவந்திருக்கிறது இப்படம். எத்தனை நீளமான படத்தையும் வெட்டித் தள்ளி விறுவிறுப்பாகத் தந்து விடுவார் என்று பெயர் பெற் றிருக்கும் படத் தொகுப்பாளர் ஆன் டனி இயக்குநராக அறிமுகமாகி யிருக்கும் படம். படத் தொகுப் பும் அவரே. 135 நிமிடங்கள் நீளம் கொண்ட மலையாளப் படத்தை 109 நிமிடங்களுக்குத் தமிழில் கொடுத் திருக்கிறார். அப்படியானால் மலை யாளத்தை விட இன்னும் வேகமும் விறுவிறுப்புமாகப் படம் இருக்கும் என்ற எண்ணம் வரலாம். ஆனால் அப்படி இல்லை.
பாலியல் தொழிலாளியுடன் கடைக்குள் மாட்டிக்கொண்ட சத்யராஜ், இது வெளியே தெரிந்தால் தன் குடும்ப கவுரவம் என்னாவது என்று பதறு கிறார். அந்த பெண்ணுக்கும் பெருத்த சங்கடம். இதனால் சத்ய ராஜை கண்டபடி திட்ட ஆரம்பிக் கிறார். அவரை சமாளிக்க வழி தெரியாமல் சத்யராஜ் விழி பிதுங்குகிறது.
இந்த பதற்றமும் தவிப்பும் தான் திரைக்கதையின் அழுத் தத்தை தீர்மானித்திருக்க வேண் டும். ஆனால் துணைக் கதாபாத்திர மான யூகி சேது, பையைத் தவற விட்டுவிட்டு அதைத் தேடி அல்லாடும் பிரச்சினையையும் இதற்கு இணையாகச் சேர்த்துக் கொள்வது திரைக்கதையின் வேகத்தை மட்டுப்படுத்துகிறது. சத்யராஜின் நிலைமை மீது மையம் கொள்ளும் பார்வையாளரின் கவனம் சிதறுகிறது.
இந்த பின்னடைவு, மூலப்படத் திலேயே உண்டு. ஆனாலும், மலையாளத்தில் இருந்த சின்னச் சின்ன அழகான தருணங்கள் இக்குறையை ஈடுகட்டின. அது இப்படத்தில் இல்லாததால், வறண்ட சித்தரிப்பாக மாறிவிட்டது.
டிரைவரால் பகலில் கதவைத் திறக்க முடியாது என்பது புரிகிறது. ஆனால் சத்யராஜின் நீண்ட கால நண்பரான அந்த டிரைவருக்கு, பின்புறம் இருக்கும் ஜன்னல் பற்றி தெரியாதா? அதன் வழியே சாப்பாடு கொடுத்திருக் கலாம். செய்தி பரிமாறிக்கொண் டிருக்கலாம். டிரைவர் மாற்று வழியை யோசிக்காமலேயே இருப்பது நம்பும்படி இல்லை.
கடைசியில் எதிர்பாராத ஒரு திருப்பம் மூலம் சிக்கல் விடுபடுவது பொருத்தமாகவே காட்டப்பட்டுள் ளது. அதன் பின்விளைவுகளும் அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன.
ஏ.ராஜேஷின் கலை இயக்கம், எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு, நவீன் ஐயரின் இசை ஆகிய அம்சங்கள் படத்துக்குத் தோள் கொடுக்கின்றன.
நட்சத்திரத் தேர்வில் இயக்கு நரின் ஆளுமை பளிச்சிடுகிறது. சேகராக வரும் சத்யராஜ், பாலியல் தொழிலாளியாக வரும் அனு மோள், திரைப்பட இயக்குநராக வரும் யூகி சேது, ஆட்டோ டிரைவ ராக வரும் வருண், சத்யராஜின் மகள் தீக் ஷிதா, மனைவி கல் யாணி என அனைவரும் தங்கள் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்கள். இமேஜ் உள்ள நடிகர்கள் ஏற்கத் தயங் கும் வேடத்தை எவ்வித மனத் தடையுமின்றி சத்யராஜ் ஏற்று நடித்திருப்பது பாராட்டுக்குரியது.
சத்யராஜ் அதிக வசனம் பேசா மல், ஒரு வேகத்தில் ஏற்பட்ட தாபத் தில் பொறியில் சிக்கிய எலியாக பதற்றம், தவிப்பு, பயம், அழுகை எனத் தேவைப்படும் உணர்ச்சி களை மட்டும் அளவாகக் கொட்டி அசத்துகிறார். துளியும் ஆபாசம் வெளிப்படாமல் பாலியல் தொழி லாளியின் நிலையை சித்தரிக் கும் அனுமோள் வசீகரிக்கிறார். வாய்ப்புகள் இல்லாமல் அல்லா டும் விரக்தியின் நடுவே மிச்சமிருக் கும் கொஞ்சம் நம்பிக்கையைக் கால்களில் தேக்கியபடி நடக்கும் யூகி சேதுவின் நடிப்பும் கதா பாத்திரமும் அருமை. ஆனால், திரைக்கதையின் துருத்தலான கதாபாத்திரம் என்பதால் அவர் வெளிப்படுத்தும் அவநம்பிக்கை நம்மை அயர்ச்சியில் தள்ளுகிறது. அதேநேரம், தேவைக்கு அதிக மாக ஒரு வார்த்தைகூட எழுதப் படாத அவரது வசனம் மொத்த படத்துக்கும் பெரிய பலம்.
கதையம்சம், திரைக்கதையில் உருவாகும் பதற்றம், இசை, ஒளிப்பதிவு, நடிப்பு எனப் பல அம்சங்கள் சிறப்பாக இருந்தாலும் திரைக்கதை ஏற்படுத்தும் அயர்ச்சி படம் ஒரு அனுபவமாக மாறுவதைத் தடுத்துவிடுகிறது.
thanx = the hindu
0 comments:
Post a Comment