Friday, November 27, 2015

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 27/11// 2015 ) 3 படங்கள் முன்னோட்ட பார்வை

1 இஞ்சி இடுப்பழகி
2 உப்புக்கருவாடு
3 144 # 27/11/2015



1 இஞ்சி இடுப்பழகி
ஆர்யா, அனுஷ்கா நடித்திருக்கும் 'இஞ்சி இடுப்பழகி' திரைப்படம் தெலுங்கில் 'யு/ஏ' சான்றிதழுடனும், தமிழில் 'யு' சான்றிதழுடனும் வெளியாக இருக்கிறது.


ஆர்யா, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'இஞ்சி இடுப்பழகி'. பிரகாஷ் கோவலமுடி இயக்கி இருக்கும் இப்படத்துக்கு கீரவாணி இசையமைத்திருக்கிறார். பி.வி.பி. சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இப்படம் நாளை (நவம்பர் 27) வெளியாக இருக்கிறது.


இப்படம் இரண்டு சென்சார் சான்றிதழ்களுடன் வெளியாக இருக்கிறது. தெலுங்கில் இப்படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள். 'யு/ஏ' சான்றிதழ் இருந்தால் வரிச்சலுகை கிடையாது என்ற சட்டம் ஆந்திராவில் கிடையாது என்பதால் இதுகுறித்து படக்குழு கவலைப்படவில்லை.


அதே வேளையில், தமிழில் இப்படத்தை சென்சார் செய்தபோது இங்கும் 'யு/ஏ' சான்றிதழ் கொடுத்தார்கள். ஆனால் 'யு/ஏ' சான்றிதழ் என்றால் வரிச்சலுகை கிடைக்காது என்பதால் படத்தில் உள்ள முத்தக் காட்சியைக் குறைத்து 'யு' சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள்.


இப்படத்தில் நாகார்ஜூன், ஜீவா, பாபி சிம்ஹா, ராணா, ஹன்சிகா, தமன்னா, ஸ்ரீதிவ்யா, ரேவதி, காஜல் அகர்வால், உள்ளிட்ட நட்சத்திரங்கள் கெளரவ வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.


உடல் அமைப்பிலோ, தோற்றப் பொலிவிலோ இருப்பது அழகு அல்ல; நல்ல எண்ணம் தான் உண்மையான அழகு என்பது தான் இப்படத்தின் மையக் கருவாகும். அழகாக இருப்பதற்கு இயற்கையான முறைகளே போதும், செயற்கையான முறைகள் வேண்டாம் என்றும் இப்படத்தின் மூலமாக வலியுறுத்தி இருக்கிறார்கள்.


பிரகாஷ் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் படம் இஞ்சி இடுப்பழகி. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகிறது. தெலுங்கில் சைஸ் ஜீரோ என பெயரிடப்பட்டுள்ளது.


இந்தப் படத்தில் குண்டான தோற்றம் கொண்ட பெண்ணாக அனுஷ்கா நடித்துள்ளார். அதன் புதிய போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. உடனே சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றது.



முதலில் வெளியிடப்பட்ட போஸ்டர்:



2 உப்புக்கருவாடு

மொழி’, ‘அபியும் நானும்’ ஆகிய படங்களை இயக்கியவர் ராதா மோகன். வித்தியாசமான கதையும் திரைக்கதையும் கொண்டு வெளியான இவ்விரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வணிக ரீதியிலும் வெற்றியடைந்தது. அதன் பிறகு நாகார்ஜூனாவை வைத்து ‘பயணம்’ படத்தை இயக்கினார்.

இவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த ‘கௌரவம்’ படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. இப்படத்தையடுத்து அடுத்ததாக படம் இயக்க தயாராகிவிட்டார். இவர் இயக்கவிருக்கும் படத்திற்கு ‘உப்பு கருவாடு’ என்று பெயர் வைத்துள்ளார்.
இப்படத்தில் டான்ஸ் மாஸ்டர் மற்றும் நடிகரான சதீஷ், நந்திதா ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் இடம் பெறும் மற்ற கதாபாந்திரங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் கூடிய விரைவில் வெளியிட உள்ளனர்.

அறிமுக இசையமைப்பாளர் பிரபல கிடார் இசைக்கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறாராம். பர்ஸ்ட் காபி பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராம்ஜி நரசிம்மனுடன் இணைந்து உப்புக்கருவாடு படத்தை தயாரிக்கிறார் ராதாமோகன்.

கடல் வாழ் மக்கள் கடல்சார்ந்த பகுதிகளில் முழுவதுமாக படமாக்கப்படும் ‘உப்புக்கருவாடு' அங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் கதை என்கிறார் ராதாமோகன்.

நகைச்சுவை கதை உப்புக்கருவாடு முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக எடுக்கப்பட்டுள்ளதாம். லட்சியம் உள்ளவர்கள் சமரசம் ஆகக்கூடாது. இந்த சமரசமே நம்மை லட்சியப் பயணம் மேற்கொள்ள விடாமல் தடுக்கும் என்கிறார் ராதாமோகன் இதை அடிப்படையாக வைத்தே உப்புக்கருவாடு படத்தினை இயக்கியுள்ளாராம்.

இந்தப்படத்தில் ஜிகர்தண்டா, ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் நடித்த கருணாகரன் ஹீரோவாக நடிக்கிறார். நந்திதா ஜோடியாக நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, புதுமுகம் ரக்ஷிதா, டவுட் செந்தில், ஆகியோர் நடிக்கின்றனர்.
3 144


சிவா நடித்த கலகலப்பு தவிர்த்து சமீபத்திய எந்தப் படமும் ஓடவில்லை. அதனால் சிவாவை வைத்து படம் தயாரிக்க பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
 
மூன்று ஹீரோக்களில் ஒருவராக சிவா நடிக்கும் மசாலாப் படம் என்ற ஒரேயொரு படம் மட்டுமே தற்போது அவர் கைவசம் உள்ளது. இந்நிலையில் 144 என்ற புதிய படத்தில் சிவா ஒப்பந்தமாகியுள்ளார்.
 
அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கும் இந்தப் படத்தை சி.வி.குமார் தனது திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிக்கிறார். இதில் சிவா திருடனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் சி.வி.குமாரின் படங்களுக்கு ரசிக மட்டத்திலும் சரி, விமர்சகர்களிடத்திலும் சரி ஆரோக்கியமான எதிர்பார்ப்பு உண்டு. குறும்பட இயக்குநர்கள் பலரைப் பெரும்பட இயக்குநர்களாக்கிய பெருமை சி.வி.குமாருக்கு உண்டு.
அந்த வகையில் அடுத்த ஆச்சரியமாக இதுவரை குறும்படம்கூட இயக்காத ஜி.மணிகண்டனுக்கு தன் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஒரு படம் இயக்க வாய்ப்பு வழங்கியிருக்கிறார். அந்தப்படம் ‘144’.
மிர்ச்சி ஷிவாவும், அசோக்செல்வனும் நாயகர்களாக ஓவியாவும், ஸ்ருதி ராமகிருஷ்ணனும் நாயகியராகியிருக்கும் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். சி.வி.குமாருக்கு எப்படி ஜி.மணிகண்டன் மீது நம்பிக்கை வந்தது. மணிகண்டன் விளக்கினார்.
“சிறிய வயதிலிருந்து சி.வி.குமார் என் நண்பர். ஒன்றாகவே படித்தோம். அப்போதெல்லாம் சின்னச் சின்னதாக நிறைய கதைகள் டிஸ்கஸ் செய்திருக்கிறோம். நான் எந்த இயக்குநரிடமும் அஸிஸ்டண்டாக இருந்ததில்லை. குறும்படம் கூட இயக்கியதில்லை. சி.வி.குமாரின் ‘அட்டகத்தி’ படத்தில் சில கிராபிக்ஸ் காட்சிகள் செய்து கொடுத்தேன்.
144-Audio-Launch-Stills-3
ஆனால், என் மீது நம்பிக்கை வைத்து நான் அவரிடத்தில் சொன்ன 144 கதையைப் படமாக திடீரென்று அறிவித்துவிட்டார். எனக்கே என் மீது நம்பிக்கை இல்லாதபோது “உன்னால் முடியும்…” என்று நம்பிக்கை வைத்தது மட்டுமல்லாமல் படப்பிடிப்பில் எனகு முழு சுதந்திரம் கொடுத்தார். அவர் இல்லாமல் நான் இயக்குநராக ஆகியிருக்க முடியாது..!”

144 படம் பற்றி சி.வி.குமார் சொன்னது…
“நான் நிறைய புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறேன். அவர்களிடம் உள்ள பொதுவான குறை, எவ்வளவு புட்டேஜ் தேவையோ அந்த அளவுக்கு எடுக்காமல் நிறைய எடுத்துவிடுவது. என் படங்கள் பெரும்பாலும் ஐந்து மணிநேரம் ஓடக்கூடியவையாக இருந்திருக்கின்றன. அவற்றை சிதையாமல் வெட்டி ஒரு முழுமையான படமாக அளிப்பதில் முதல் இடம் வகிப்பவர் எங்கள் எடிட்டர் ‘லியோ ஜால்பால்’தான்.
144 படம் கூட கொஞ்சம் அதிகமாகத்தான் வந்தது. அதைக்கூட இரண்டேகால் மணிநேரத்தில் தந்தது ‘லியோ’தான். ஆனால், மணிகண்டன் என் நண்பர். எங்கள் வீட்டுக்கு அருகில்தான் அவர் வீடும் இருக்கிறது. அவர் திறமை மீது உள்ள நம்பிக்கையால் இந்தப்படத்தை அவருக்குத் தந்தேன். 144 வரும் 27ம் தேதியன்று திரைக்கு வருகிறது..!”
சி.வி.குமார் பாராட்டிய லியோ என்ன சொல்கிறார்..?
“படம் எத்தனை நீளமாக வந்தாலும் பரவாயில்லை. நமக்குக் கதையில் நாட்டம் இருந்தால் போதுமானது. இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் எனக்குப் பிடித்திருந்தது. சின்ன கதைதான். ஆனால், பத்து நிமிடத்துக்கு ஒரு திருப்பமாக பல கிளைக்கதைகள் இருக்கும்.
கிட்டத்தட்ட நாற்பது கேரக்டர்கள் படத்தில் வருவார்கல். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும். அந்த வகையில் வித்தியாசமான கதைக்களம். அது சிதைந்து விடாமல் படத்தைத் தொகுப்பது ஒரு சவால். அந்த வகையில் அதை ரசித்துதான் செய்கிறேன்..!”
சி.வி.குமாரின் படங்கள் பெரும்பாலும் வெற்றியடைவதன் ரகசியம் சரியானவர்களின் தேர்வும், இந்த படைப்பாளிகளின் ஈடுபாடும்தான்..!
-webduiya
























0 comments: