Sunday, November 01, 2015

கதிர்வேல் காக்க (2015)- சினிமா விமர்சனம்

நடிகர் : மனோஜ்
நடிகை :வினிதா
இயக்குனர் :பிரேம் குமார்
இசை :ரவி விஸ்வநாதன்
ஓளிப்பதிவு :குகன்
ஊட்டியில் மனோஜ் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அங்கு நான்கு பேர் கொண்ட கும்பல் சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாக தகவல் வருகிறது. அந்த கும்பலை பிடிப்பதற்காக மனோஜின் நண்பரும் அவருடன் நான்கு போலீஸ் காரர்களும் செல்கின்றனர். அங்கு நடக்கும் துப்பாக்கி சூட்டில் போலீஸ் காரர்கள் கொல்லப்படுகிறார்கள். இதில் மனோஜின் நண்பர் மட்டும் அந்த மர்ம கும்பலிடம் மாட்டிக்கொள்கிறார்.

இந்த சமயத்தில் மனோஜ் அங்கு சென்று அந்த கும்பலைக் கொன்றுவிட்டு தன் நண்பரை காப்பாற்றுகிறார். அங்கு கிடக்கும் தடயங்களை வைத்து பார்க்கும் போது அவர்கள் பெரிய இயக்கத்தை தேர்ந்தவர்களாவும், பெரிய சமூக விரோத செயல்களில் ஈடுபட இருந்தவர்கள் என்பதையும் கண்டுபிடிக்கிறார். 

மேலும் இவர்களுக்கு பின்னால் இருக்கும் பெரிய கும்பலைப் பிடிக்க தீவிரம் காட்டுறார். இதற்கிடையில் மனோஜ், வினிதாவை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். ஆனால் வினிதா, மனோஜை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார்.

இறுதியில் சமூக விரோத கும்பலை மனோஜ் கண்டுபிடித்தாரா? மனைவி வினிதா, மனோஜை கொலை செய்ய நினைப்பதற்கான காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

மனோஜ் நடிப்பில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு படம் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். போலீஸ் கதாபாத்திரம் இவருக்கு ஓரளவிற்கு பொருந்தியிருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் மிகவும் சிரமப்பட்டு நடித்திருக்கிறார். இவருக்கு நண்பராக வருபவர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் வினிதாவிற்கு வில்லத்தனம் கலந்த கதாபாத்திரம். தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் படத்தில் இருந்தாலும் மனதில் நிற்கவில்லை.

போலீஸ் கிரைம் சம்மந்தப்பட்ட பல படங்கள் வெளிவந்திருந்தாலும், அதிலிருந்து மாறுபட்டு இப்படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பிரேம் குமார். ஆனால், வழக்கமான திரைக்கதை, லாஜிக் இல்லாத காட்சிகளை அமைத்திருப்பது படத்திற்கு பலவீனம்.

குகனின் ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. ஊட்டியின் அழகை இன்னும் கூடுதலாக காண்பித்திருக்கலாம். ரவி விஸ்வநாதனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்.

மொத்தத்தில் ‘கதிர்வேல் காக்க’ நிதானம்.


-மாலைமலர்

0 comments: