1.சார்.டைம் என்ன?
7.30 AM
புலி எப்டி?
அதுவும் ஏழரை தான்
==========
2.சார்.5 வருசமா ஏன் வருமான வரி கட்டலை?
வருமானம் இருந்தா கட்டி இருக்கமாட்டேனா?நஷ்ட ஈடு கட்டவே சம்பளம் சரி ஆகிடுது
===========
3.சார்.நீங்க சுமார்ன்ன படத்தை தினத்தந்தி ல நல்லாருக்குனு விமர்சனம் போட்டிருக்காங்க?
கவர்ல 2500 ரூபா வெச்சுக்குடுத்தா நான் கூட சூப்பர்ம்பேன்
==========
4.சார்.புதுப்பட டிவிடி 100 ரூபாயா? ஜாஸ்தியா இருக்கே?
ஒரு கிலோவே 100 ரூபா தான்
===============
5.சார்.படம் டப்பா னு எல்லாரும் சொல்றாங்க.நீங்க ஹிட்னு சொல்றீங்க,?
ட்ரெய்லர் ஹிட்.யூ ட்யூப் ல 100 கோடி பேர் பார்த்தாச்
================
6.சார்.முத நாள் வசூல் 10 கோடியை தாண்டிடுச்சு.
அணையப்போற விளக்கு எப்பவும் பிரகாசமாத்தான் எரியும்.வெயிட் &ஸி
=================
7.சார்.படத்துல நீங்க பேசுன பஞ்ச் டயலாக்குக்கும் ,கதைக்கும் என்ன சம்பந்தம்?
படத்துல கதை தான் இல்ல.பஞ்ச் டயலாக்காவது இருக்கட்டும்னுதான்
==============
8.சார்.நம்ம படம் வெள்ளி விழா காணும்.
வெள்ளி டூ வெள்ளி 8 நாள் ஓடிட்டா உங்க ஊர்ல வெள்ளி விழாவா?
=============
9.டாக்டர்.சூடான டீ டம்ளரை கன்னத்தில் ஒத்திக்கிட்டா பரு போய்டுமா?
ஆமா.கொப்பளம் வந்துடும்
===============
10.சார்.வீக் என்ட் (WEEK END) ரிலீஸ்ங்கறதால கலெக்சன் ஸ்ட்ராங்கா இருக்குமாமே?
திரைக்கதை படு வீக்கா (WEAK) இருக்கே?
============
11.டி ஆர் = உங்க படத்தைப்பாராட்டி ஒரு ஸ்பீச் கொடுக்கவா?
அட்லீ = அய்யய்யோ வேணாம் சார்.உங்க ராசி எப்டினு ஊருக்கே தெரியும்
============
12.டியர்.புலி படம் பார்க்கப்போலாமா?
டேய்.நான் உன் காதலி.கூட்டம் வராத தியேட்டருக்கு வர கள்ளக்காதலி இல்ல
==========
13.ஹீரோ சார்.இந்த சீன் ல விஷத்தைக்குடிச்ட்டு டான்ஸ் ஆடனும்.
சார்.லூசா நீங்க? விஷத்தைக்குடிச்ட்டா நிக்கவே முடியாது.டான்ஸ் எப்டி ஆட?
===============
14.படத்தோட முன் பாதி திமுக ஆட்சி மாதிரி.பின் பாதி அதிமுக ஆட்சி மாதிரி .2ம் விளங்கலை.
டோட்டலா எப்டி?
காங்கிரஸ் கட்சி மாதிரி கந்தரகோலம்
================
15.சார்.இது குழந்தைகளுக்கான படம்.
குழந்தைத்தனமான படம் னு சொல்லுங்க.சமாளிக்காதீங்க
=============
16.படம் பார்த்த
குழந்தைக முகத்துல அவ்ளோ சந்தோஷம்.
கண்ணா.புரொடியூசர்,் ,டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் முகத்தை நீ பார்க்கலியே? #ஜிங்"கிலி"யா
=============
17.சார்.அப்பா கேரக்டர் ல வரனும்னா கெட்டப்பை மாத்தனும்.உங்க அப்பாவை அந்த சீன் ல நடிக்க விட்ரலாமா?னு கேட்டா எப்டி?
=================
18.வண்டலூர் ஜூ வில் உங்களுக்கு எப்படி படுகாயம் ஆச்சு?
புலி சக்சஸ் மீட் வித்யாசமா கொண்டாடலாம்னு உள்ளே போய்ட்டேன்.புலி புகுந்து விளையாடிடுச்சு
================
19.குமுதம் விமர்சனத்துல ரேட்டிங் 4/5 வந்திருக்கே?படத்தை சரியா கவனிக்கலையோ?
விமர்சகரை சரியா "கவனிச்சிருப்பாங்க"
==============
20.குற்றாலம் புலியருவில ஏன் கூட்டமே இல்லை?
மெயின் பால்ஸ் ,ஐந்தருவில தான் கூட்டம் இருக்கும்.புலி அருவி "அவுட்"டர் ஏரியா ஆச்சே?
===================
0 comments:
Post a Comment