
சென்னை: ஊழலின் ஊற்றுக் கண் திமுக என்றால் அதிமுக ஊழல் சுனாமி என்று சாடியுள்ள பாமக தலைவர் ஜி.கே.மணி, 'ஊழலை திமுக ஒழிக்க போகிறதா?' என்று தமிழ் நாட்டு மக்கள் சிரிக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"
கன்னியாகுமரியிலிருந்து நமக்கு நாமே சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் ஒழிக்கப்படும் என கூறி வருகிறார். அவரது இப்பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை... சிரிப்பைத்தான் ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்கள்தான் இப்போது ஸ்டாலினின் நண்பர்களாகவும், படைத் தளபதிகளாகவும் இருக்கிறார்கள். இவர்களை வைத்துக் கொண்டு ஊழலை ஒழிப்பேன் என்று மு.க. ஸ்டாலின் கூறுவதைப் பார்க்கும் போது, ‘‘ யோக்கியர் வருகிறார்... சொம்பைத் தூக்கி உள்ளே வையுங்கள்’’ என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. தி.மு.க. ஊழலின் ஊற்றுக்கண் என்றால், அ.தி.மு.க. ஊழல் சுனாமி. இந்த இரு கட்சிகளாலும் ஊழலை ஒழிக்க முடியாது; இந்த இரு கட்சிகளையும் ஒழித்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்" என்று கூறியுள்ளார்.
- Venkat Bala
இவருடைய முகத்தை பார்த்தாலே தெரியுது...எந்த கட்சியிலிருந்து வரார் என்பது. நாட்டை ரத்த ஆறால் மூழ்கடிச்சு அதில் அரசியல் செய்யும் ஒரு கேடு கேட்ட தலைவரின்...Points3295
Manoharan SK
சின்ன மருத்துவரும் , பெரிய மருத்துவரும் 2 ரூபாய்க்கு வைத்தியம் பார்த்தா இவ்வளவு சொத்தை சேர்த்தார்கள் ? அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா ..Points5600
- MAMohamed Ali
ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே, கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே. யார் யோக்கியம் என்று ஊர் அறியும்Points665
Rajkumar Hariharan ASIC Verification
மு.க.ஸ்டாலின், சென்ற இடங்களில் எல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் ஒழிக்கப்படும் என கூறி வருகிறார். அவரது இப்பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை... சிரிப்பைத் தான் ஏற்படுத்தியுள்ளது. ----> விடுங்க சார், ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் வசிக்கும் குடிசைகளை எரிப்பவர்கள் எல்லாம் சமத்துவம் பேசுவதில்லையா? மரத்தை வெட்டியவர்கள் எல்லாம் பசுமை தாயகம் என்ற அமைப்புகளை நடத்துவதில்லையா? அது மாதிரி தான் இதுவும்..Points2985
thanx-viata
0 comments:
Post a Comment