சிவகங்கை அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக் கில் தந்தை, சகோதரர், போலீஸ் காரர் உட்பட 8 பேர் கைதான நிலையில், போலீஸ் உயர் அதிகாரி கள், மருத்துவர், வழக்கறிஞர் களுக்கு தொடர்பு உள்ளதா? என காப்பகத்தில் உள்ள சிறுமியிடம் கூடுதல் எஸ்பி விசாரணை நடத்தி வருகிறார்.
சிவகங்கை அருகே வைரவன்பட் டியைச் சேர்ந்தவர் முத்துப் பாண்டி(53). இவர், 15 ஆண்டுக ளுக்கு முன் சிஆர்பிஎப் போலீஸாக வட மாநிலத்தில் வேலை பார்த்தார். அப்போது தனது 3 வயது மகளை மாமனார் வீட்டில் விட்டுச்சென்றார். தன்னுடன் தங்கியிருந்த மனைவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் முத்துப்பாண்டி பணி நீக்கம் செய்யப்பட்டார்.
அதைத் தொடர்ந்து 8 ஆண்டு களுக்கு முன் சொந்த ஊர் திரும்பிய முத்துப்பாண்டி 10 வயதான மகள், மகன் கார்த்திக்குடன்(12) சிவகங்கையில் மஜீத் சாலையில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். சிவகங்கை அரசுப் பள்ளியில் கடந்த ஆண்டு சிறுமி பிளஸ் 2 படித்து முடித்தார்.
கல்லூரி படிப்பு தொடர்பாக கோவையில் உள்ள தனது அத்தை தாமரைச்செல்வியுடன் ஆலோ சனை நடத்தினார். அப்போது தந்தை, சகோதரர் உட்பட பலர் பல ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்வது குறித்து சிறுமி தெரிவித்ததை கேட்டு அத்தை அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜுன் 4-ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. ஆய்வாளர் அமிர்தம் வழக்கு பதிவு செய்து முத்துப்பாண்டி, சகோதரர் கார்த்திக் ஆகிய இருவரை மறுநாளே கைது செய்தார்.
காரைக்குடி மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்த மாணவி, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதுவரை 28 பேர் பாலியல் தொந் தரவு கொடுத்ததாக தெரிவித்துள் ளார். இது குறித்து போலீஸார் விசாரித்தபோது கிடைத்த அதிர்ச்சி தகவல்கள்:
பாட்டி வீட்டில் வளர்ந்த சிறு மிக்கு 10 வயதுக்கு முன்னரே தாத்தா மூலம் பாலியல் தொந்தரவு இருந் துள்ளது. பின்னர் சிறுமியை தந்தை அழைத்துச் சென்று தன்னுடன் வளர்த்துள்ளார். அப்போது தினசரி மது அருந்தி, பிரியாணி சாப்பிடு வதை வழக்கமாக்கிக் கொண்டுள் ளார். மது அருந்திய பின் போதையில் மகளிடமே அத்துமீறி நடந்துள்ளார். தொடர்ந்து மிரட்டி, வலுக்கட்டாயமாக மதுவை சிறுமிக்கு ஊற்றியுள்ளார். என்ன நடக்கிறது என்பதே தெரியாத நிலையில், சிறுமியான மகளுடன் அத்துமீறலை தொடர்ந்துள்ளார்.
தந்தையுடன் சகோதரரும் மதுப் பழக்கத்துக்கு ஆளானார். பின்னர் தந்தை பாணியிலேயே போதையில் சகோதரியிடம் அத்துமீறி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டார். ஓய்வூதி யமும் கிடைக்காத நிலையில், மதுவுக்காக நண்பர்கள், உறவி னர்கள் பலரை அவ்வப்போது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார்.
நாளடைவில் என்ன நடக்கிறது என்பதையே அறியாத வகையில், போதைப்பழக்கத்துக்கு மகளை ஆளாக்கி அடிமையைப்போல் தந்தை நடத்தி வந்துள்ளார்.
சிறுமியின் வாக்குமூலம் குறித்து விசாரித்த போலீஸார் 2 பேரை மட்டும் கைது செய்தனர். அப்போதே போலீஸார் பலருடைய தொடர்பு இருந்த தகவல் கிடைத்தாலும் அது குறித்து விசாரிக்கவில்லை. வேலூர் அருகே ஏலகிரியில் தங்கியுள்ள சிறுமியிடம் காப்பக நிர்வாகிகள் நடத்திய விசாரணையில் போலீஸார் உட்பட பலர் பாலியல் பலாத்காரம் செய்திருந்தது தெரிந்தது.
இந்த தகவல் அடிப்படையில் வழக்கறிஞர் வின்சென்ட் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில் போலீஸார் உட்பட பலரது தொடர்புகளை தெரிவித்திருந்தார். நீதிமன்றத்துக்கு பிரச்சினை சென்றதால், மீண்டும் விசாரணையை வேகப்படுத்தினர் அப்போது சில போலீஸாரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது.
கடந்த 7-ம் தேதி சிவகங்கை நகர் காவல் நிலைய எஸ்ஐ சங்கர்(55), சிவகங்கையைச் சேர்ந்த முனியாண்டி மகன் சுரேஷ் குமார்(32), ராமமூர்த்தி மகன் செந்தில்குமார்(36), துரைமணி மகன் அரவிந்த்(25) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அரசுப் பேருந்து நடத்துநர் நமச் சிவாயம், சிவகங்கை நகர் திமுக பொருளாளர் முத்துராக்கு ஆகிய இருவரையும் 8-ம் தேதி கைது செய்தனர். இவ்வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் அனைவர் குறித்தும் முழுமையாக அறிய சிறுமியிடம் விசாரிக்க கூடுதல் எஸ்பி வந்திதா பாண்டே தலைமையிலான போலீஸார் காப்பகம் சென்றுள்ளார். சிறுமியின் மனநிலையை பொறுத்து 3 நாட்கள் வரை விசாரணை நடைபெறலாம். வழக்கறிஞர், சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ஒருவரின் தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் உண்மையா எனவும் விசாரணை நடந்து வருகிறது.
வழக்கறிஞர் காயம்
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை நடத்திவரும் வின் சென்ட்டை சென்னை உயர் நீதி மன்றம் அருகே மர்ம நபர்கள் நேற்று தாக்கியதாக செய்தி பரவி யது. இதை மறுத்த அவர் ‘‘ஆட்டோ மோதியதால் கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
உயர் அதிகாரிகளை சிக்க வைக்க முயற்சி?
காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்கச் சென்றபோது சிறுமியை எஸ்ஐ சங்கர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமி அளித்த வாக்குமூலத்தில் போலீஸ்காரர்கள் ராஜாராம், சிவக்குமார், சங்கர் மற்றும் 2 பேர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், உயரதிகாரிகளுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. சிலர் வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்புகின்றனர். வழக்கை திசை திருப்ப சிலர் செய்யும் சூழ்ச்சியா என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
நன்றி-தஹிந்து
- GGதமிழச்சிகளே ! டாஸ்மாக் உங்கள் குடியையும் ஒருநாள் கெடுக்கும் ! அடுத்தவன் குடியை கெடுத்து தமிழ்நாடு அரசு தரும் கலர் டிவி , மிக்சி கிரைண்டர் தேவையா ?Points2455
- Aஅந்த பெண்மணி சொல்வது உண்மை என்றால் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் முன் அறிவிப்புடன் நடு தெருவில் நிற்க வைத்து பொது மக்களால் உயிர் போகும் வரை கல்லால் அடித்து கொன்றால் தான் இது ethu போன்ற குற்றங்கள் குறையும்.
- Bஒரு பெண்ஆளும் மாநிலத்தில் சாராய அரக்கனின் அட்டூழியம் பெண்ணினமே துகிலுறியபடுகிறது வெட்க கேடு இவர்கெல்லாம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு சபைக்கு வருகிறார்களோPoints125
- தஒரு பெண்மணி ஆளும் மாநிலம் இது பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இங்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும்.இங்கு இப்போது நீதி கிடைக்காவிட்டால் பின் வேறெங்கும் எப்போதும் கிடைக்காது...Points565
- பஇதில், உயரதிகாரிகளுக்கு எவ்வித தொடர்பும் இல்லை. சிலர் வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்புகின்றனர். வழக்கை திசை திருப்ப சிலர் செய்யும் சூழ்ச்சியா என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். ------ இவர்கள் விசாரணைக்கு முன்பே உயரதிகாரிகளுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றால் எப்படி விசாரணை நேர்மையாக நடைபெறும்? அம்மா ஆட்சி என்பது வெறும் பெயருக்காகவா? போலிஸ், முன்னாள் சிஆர்பிஎப் காமுகர்கள் கடும் தண்டனை பெறுவார்களா?Points40415
0 comments:
Post a Comment