நடிகர் : ரஜாஜ்
நடிகை :வர்ஷா
இயக்குனர் :ராஜீவ் பிரசாத்
இசை :ரிஷல் சாய்
ஓளிப்பதிவு :மோனிக் குமார்
நாயகன் ரஜாஜ் ஒரு ஆட்டோ டிரைவர். இவருடன் ஒரே ஆட்டோ ஸ்டண்டில் காளி வெங்கட் மற்றும் அவருடைய நண்பர் ஆகியோர் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். ரஜாஜ் அதே ஊரில் ஒரு மருத்துவமனையில் வேலை பார்க்கும் வர்ஷாவை காதலிக்கிறார். ஆனால் வர்ஷாவோ ரஜாஜை கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் வர்ஷா வேலை பார்க்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நான்கு பேருக்கு ஒரு மர்ம நோய் தாக்கப்பட்டிருப்பதை அறிகிறார். இதை விஷயத்தை மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களிடம் சொல்லுகிறார். ஆனால், டாக்டர்கள் இதை பெரிதுபடுத்தாமல் அலைக்கழிக்கிறார்கள்.
இதனால், மருத்துவமனையின் டீனை அணுகி அவரிடம் இந்த விஷயத்தை சொல்ல முயற்சி செய்கிறார். ஆனால் பலனளிக்காமல் போகிறது. இதனால், மர்ம நோயால் பாதிக்கப்பட்ட நான்கு பேருக்கு போன் செய்து ஒரு இடத்திற்கு வரவழைத்து அவர்களிடம் மர்ம நோய் பற்றிய தகவல்களை கொடுக்கிறார் வர்ஷா.
இந்த நான்கு பேரில் ஒருவர் வராமல் இருக்கிறார். இதற்கிடையில், மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் கூலிப்படையினர் மூலம் நோய் பாதிக்கப்பட்ட நபர்களையும் வர்ஷாவையும் கொலை செய்ய திட்டமிடுகின்றனர். அதன்படி நான்கு பேரில் இரண்டு பேரை கூலிப்படையினர் கொலை செய்து விடுகின்றனர்.
மீதமுள்ளவர்களையும் நாயகி வர்ஷாவையும் கொலை செய்ய கூலிப்படையினர் முயற்சி செய்து வருகின்றனர். இறுதியில் கூலிப்படையினர் நோய் பாதிக்கப்பட்டவர்களையும், வர்ஷாவை கொலை செய்தார்களா? ரஜாஜ், வர்ஷாவை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ரஜாஜ் முந்தைய படத்தைவிட இதில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு ஆட்டோ டிரைவருக்கான தோற்றம் இவருக்கு கச்சிதமாக பொருந்திருக்கிறது. நாயகி வர்ஷா அழகாக இருக்கிறார். நோயாளிகளை காப்பாற்ற முயற்சி செய்யும் காட்சிகளிலும் நாயகனின் மீது வெறுப்பு காட்டும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
சிறிதளவே படத்தில் வந்தாலும் நடிப்பால் மனதில் பதிகிறார் காளி. கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். மற்றபடி படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் அவரவர் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
இயக்குனர் ராஜீவ் பிரசாத், சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய ‘பாட்ஷா’ படத்தில் அவருக்கு உதவியாளராக இருந்தவர். ‘பாட்ஷா’ படத்தைப் போலவே இந்த படத்திலும் நாயகனை ஆட்டோ டிரைவராக நடிக்க வைத்திருக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை, சிறப்பான திருப்பங்கள் ஆகியவை படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஆனால் கிளைமாக்ஸை சுருக்கியிருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
மோனிக் குமாரின் ஒளிப்பதிவும், ரிஷால் சாய்யின் இசையும் படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘சதுரன்’ சாதிப்பான்.

நன் றி-மாலைமலர்
0 comments:
Post a Comment