Sunday, October 18, 2015

அதிரடி (2015)-சினிமா விமர்சனம்

நடிகர் : மன்சூர் அலிகான்
நடிகை :மௌமிதா சௌத்ரி
இயக்குனர் :பாலு ஆனந்த்
இசை :மன்சூர் அலிகான்
ஓளிப்பதிவு :தளபதி கிருஷ்
படம் ஆரம்பத்தில் ‘அதிரடி’ என்னும் படத்தை வெளியிடக் கூடாது என்று மக்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். மேலும் அரசியல் கட்சிகளும், மகளிரணி உள்ளிட்ட பல அமைப்புகள் இப்படத்தை எதிர்த்து போராட்டம் செய்கிறார்கள்.

இப்படி போராட்டங்கள் நடைபெறுவதால், அதற்கான காரணத்தை அறிய போலீசார் விசாரணை நடத்துகிறார்கள். அதன்படி, இப்படத்தின் தயாரிப்பாளரை தேடி கண்டுபிடித்து விசாரிக்கிறார்கள். போலீசிடம் தயாரிப்பாளர், நான் படம் தயாரிக்க நினைத்தேன். அதற்காக ஹீரோவை தேடினோம். அப்போது சிலம்பாட்ட பயிற்சியாளரும், சமூக சேவகருமான மன்சூர் அலிகானை கண்டுபிடித்தோம். இவருக்கு ஜோடியாக மீன் விற்கும் சஹானாவை தேர்வு செய்தோம். 

எங்களின் திட்டப்படி படத்திற்கான பாடல் காட்சியை முதலில் படமாக்கினோம். அதில் தினக்கூலி என்ற பெயரில் நான் வைத்திருந்த பணத்தை எல்லாம் செலவு செய்துவிட்டேன். இதற்குமேல் படத்தை எடுக்க என்னால் முடியவில்லை. இதனால் இப்படத்தில் இருந்து விலகிவிட்டேன் என்று கூறுகிறார்.

இதைகேட்ட போலீசார், பின்னர் படத்தை எப்படி உருவாக்கியிருப்பார்கள் என்று ஆராய தொடங்குகிறார்கள். இறுதியில் அதிரடி படத்தை எப்படி உருவாக்கினார்கள் என்று கண்டுபிடித்தார்களா? அதிரடி படத்தை மக்கள் எதிர்க்க என்ன காரணம்? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மன்சூர் அலிகான் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கே உரிய பாணியில் நடிப்பு, காமெடி, சண்டைக் காட்சிகள் என திறம்பட செய்திருக்கிறார். ஒரு சில காட்சிகள் மிக மிஞ்சிய நடிப்பாக எண்ணத்தோன்றுகிறது. நாயகியாக நடித்திருக்கும் சஹானா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால் இவருடைய பேச்சுக்கும் பின்னணி குரலுக்கும் சம்மந்தமே இல்லாமல் இருக்கிறது. வசனங்கள் ஒட்டாமல் இருக்கிறது.

படத்தில் சிறுசிறு வேடங்களில் நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். 

படத்தில் நடிப்பது மட்டுமில்லாமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இசையமைத்திருக்கிறார் மன்சூர் அலிகான். சினிமா தொழில் ஏற்படும் சிக்கல்கள், படப்பிடிப்பில் ஏற்படும் பிரச்சனைகள் ஆகிவற்றை கதையாக உருவாக்கி திரைக்கதை அமைத்திருக்கிறார். இவருடைய இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். இதுவரை பட வசனங்களுக்குதான் கிழே வரிகள் போடுவார்கள். ஆனால், இந்த படத்தில் பாடல் காட்சிகளில், பாட்டு வரிகளை போட்டிருக்கிறார்கள். இது ஒரு புது முயற்சி. 

மன்சூர் அலிகானின் திரைக்கதைக்கு ஏற்றாற்போல் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் பாலு ஆனந்த். முத்துகுமார் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘அதிரடி’ ஆக்சன் குறைவு.

ன்றி-மாலைமலர்


0 comments: