நடிகர் : அர்ஜுன் விஜயராகவன்
நடிகை :அஞ்சனா கீர்த்தி
இயக்குனர் :ரமேஷ் வெங்கட்ராமன்
இசை :சமந்த் நாக்
ஓளிப்பதிவு :ஸ்ரீனிவாசன்
சமூகத்தில் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்க போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்ற ஆசையில் இருந்து வருகிறார் நாயகன் அர்ஜூன் விஜயராவன். இவர் எதற்கும் கோபப்பட்டுக் கொண்டே இருப்பதால், அதுவே, அவருக்கு ஐ.பி.எஸ். அதிகாரியாகும் வாய்ப்பை நழுவ செய்கிறது.
என்றாலும், தமிழ்நாடு போலீசில் சேர்ந்து ஒரு சாதாரண போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதற்கிடையே இவரது முறைப்பெண்ணான நாயகி அஞ்சனா கீர்த்தியை இவரது பெற்றோர்களின் வற்புறுத்தலின் பேரில் திருமணம் செய்துகொள்கிறார்.
இந்நிலையில், சூரிய மின் சக்தி உற்பத்தி திட்டத்துக்கு அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெருமளவு கமிஷன் வாங்கிக் கொண்டு அனுமதி கொடுக்கிறார். இதற்காக பேரம் பேசி ரூ.300 கோடி வாங்குகிறார். இந்த முறைகேட்டுக்கு நேர்மையான போலீஸ் அதிகாரி ஒருவரையும் பயன்படுத்துகிறார்.
அந்த பணத்தை கொண்டு போகும் வழியில் போலீஸ் அதிகாரி மர்மமான முறையில் மரணம் அடைகிறார். பின்னர், அவர் கொண்டு சென்ற பணமும் மாயமாகி போகிறது. இதற்கிடையில், டாக்டர் ஒருவரின் மகனை மர்ம கும்பல் ஒன்று கடத்தி வைத்துக்கு கொண்டு 10 லட்சம் கேட்கிறார்கள்.
இது ஒருபக்கம் நடந்து கொண்டிருக்கும்போது, பணத்தை அபகரித்தவர்கள் அமைச்சரின் உதவியாளரை கொன்றுவிடுகிறார்கள். இந்த வழக்கு நாயகன் அர்ஜூன் வசம் வசருகிறது. பணத்தை மீட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் களமிறங்குகிறார்.
இறுதியில், நாயகன் அந்த பணத்தை மீட்டாரா? குற்றவாளிகள் யார் என்பதை கண்டுபிடித்தாரா? டாக்டரின் குழந்தையை கடத்திய மர்ம நபர்கள் யார்? என்பதே மீதிக்கதை.
நாயகன் அர்ஜூன் விஜயராகவன் உயரமான தோற்றத்தில் இளம் போலீஸ் அதிகாரியாக மிரட்டுகிறார். மனைவியைவிட கடமைதான் முக்கியம் என்று இவர் நடந்து கொள்வது போலீசார் தன்னலம் இல்லாமல் செயல்பட வேண்டும் என்பதற்கு பாடமாக அமைந்துள்ளது.
அஞ்சனா கீர்த்தி அழகான நாயகியாக வலம் வந்திருக்கிறார். தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, கோபப்படுவது என அனைத்தையும் சிறப்பாக செய்திருக்கிறார்.
அமைச்சராக வரும் பூவிலங்கு மோகன் மிரட்டலான அரசியல்வாதியாக அசத்தியிருக்கிறார். இவருடைய கதாபாத்திரம் இன்றைய அரசியலை வெளிச்சம் போட்டும் காட்டும்படி அமைந்துள்ளது. நிழல்கள் ரவி, சேத்தன், மோகன்ராமன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
காவல்துறை பணி புனிதமானது. அதை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதை லாவகமாக சுட்டிக் காட்டி இருக்கிறார் இயக்குனர் ரமேஷ் வெங்கட்ராமன். ஆரம்பத்தில் விறுவிறுப்புக்கு தடை போடும் சில காட்சிகளை தவிர்த்து இருக்கலாம். என்றாலும் பின்பாதியில் வேகத்தை அதிகமாக்கி முன்பாதியை மறக்க வைத்திருக்கிறார்.
சமந்த் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டிலும் சமத்தாக செயல்பட்டிருக்கிறார். சுந்தரேசன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு அந்தாதிக்கு அர்த்தம் கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘அந்தாதி’ அர்த்தம் கொடுக்கிறது

நன் றி-மாலைமலர்
0 comments:
Post a Comment