![](http://tamil.thehindu.com/multimedia/dynamic/02562/kirumi_2562758f.jpg)
காவல் துறையின் பச்சோந்தித் தனத்தைத் தோலுரித்துக் காடும் படம் கிருமி. கதிர் (‘மதயானைக் கூட்டம்’ கதிர்) வேலை யில்லாத, ஆனால் மணமாகிக் குழந்தை யுள்ள இளைஞன். வீட்டுக்கு எப்போதா வது வரும் அவன் நண்பர்களுடன் அறையில் தங்கிப் பொழுதைப் போக்குகிறான். குடி, சீட்டாட்டம் என நகர்கிறது அவன் வாழ்க்கை. போலீஸ் இன்ஃபார்மர் பிரபாகரன் (சார்லி) கதிர் மீது பிரியம் கொண்டவர். கதிரும் பிரபாகரன் உதவியுடன் போலீஸ் இன்ஃபார்மராக மாறுகிறான்.
இது பொருளாதார ரீதியாக அவனை உயர்த்துகிறது. ஆனால் முன்னெச் சரிக்கையின்றி அவன் செய்யும் சில காரியங்கள் அவனைச் சிக்கலில் மாட்டி விடுகின்றன. காவல் துறை ஆய்வாளர் கள் இருவருக்கு நடுவே நடக்கும் பனிப் போரிலும் அவன் மாட்டிக்கொள் கிறான். இந்தச் சிக்கல்களிலிருந்து அவன் தப்பித்தானா என்பதே கதை.
திரைக்கதையை இயக்குநர் அனு சரணும் ‘காக்கா முட்டை’ இயக்கு நர் மணிகண்டனும் சேர்ந்து எழுதியிருக் கிறார்கள். புதிய களமும் புதிய காட்சி களும் படத்தின் பலம். காவல் துறை இன்ஃபார்மர்களின் உலகம் தமிழ்த் திரையில் முதல் முறையாகக் காட்டப் படுகிறது. காவல்துறையின் அழுக்கு களை அப்பட்டமாக்கியிருக்கிறது கிருமி. சட்ட விரோத நடவடிக்கை களுக்கு காவல்துறை அதிகாரிகள் துணைபோவது, துறைக்குள் நடக்கும் பனிப்போர்கள், துறைக்குள் நடக்கும் விசாரணை, இன்ஃபார்மர்களை அவர் கள் பயனபடுத்திக்கொள்ளும் விதம் ஆகியவை மிகவும் தத்ரூபமாகக் காட்டப்படுகின்றன. காவல் துறையின் சந்தர்ப்பவாதமும் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது.
பாத்திர வார்ப்பில் இயக்குநர் மிக வும் கவனம் எடுத்துக்கொண்டிருக் கிறார். போலீஸாரின் குணநலன்களை அனுபவத்தால் அறிந்த காரணத்தால் அவர்களிடம் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்ற நாசூக்கு பிரபாகரனுக்குத் தெரிந்திருக்கிறது. அளவாகப் பேசுகிறார். எல்லாவற்றிலும் நிதானம் காட்டுகிறார். இள ரத்தம் என்பதால் கதிருக்கு இந்த நிதானம் இல்லை. அதனால் சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். இரண்டு ஆய்வாளர் களின் இயல்பு, நடத்தை ஆகியவற்றி லும் இதே துல்லியம் வெளிப்படுகிறது.
ரெய்டு செய்த பிறகு சுந்தர பாண்டி யனுக்கும் மதியரசுவுக்கும் இடையே நடக்கும் உரையாடலும் உயர் அதிகாரி இவர்கள் இருவரிடமும் பேசும் வார்த்தைகளும் வசனத்தின் வலிமை யைப் பறைசாற்றுகின்றன. பிரபா கரன் குடும்பத்துக்கும் கதிர் குடும்பத் துக்குமிடையே இருக்கும் பந்தம் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.
பணம், அதிகாரம் என்று வரும்போது காவல்துறை, ரவுடிகளின் துணை கொண்ட நிழல் உலக வியாபாரிகள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துவிடும் யதார்த்தத்தைத் திரைக்கதை துல்லிய மாகக் காட்டிவிடுகிறது. இந்தக் கூட்டணி யைத் தனிநபர்களால் எதிர்கொள் ளவே முடியாது என்பதை உணர்த்தி விடுவதில் படம் நிஜ உலகுக்கு நெருக்கமாக வந்து நிற்கிறது. தமிழ்த் திரைப்படங்கள் பொதுவாக நாயக பிம்பத்தைத் தூக்கிப் பிடிக்கும் இடங்களில் துளியும் சமரசமின்றி யதார்த்தத்துக்கு அழுத்தம் கொடுப்பது பாராட்டத்தக்கது.
ஆனால், ஒதுங்கிப்போவது என்று தனிநபர் முடிவெடுத்தாலும் மற்றவர் கள் சும்மா விடுவார்களா என்ற கேள்வி யும் எழுகிறது. இந்த இடத்தில்தான் படம் பலவீனமாகத் தெரிகிறது. மிகைத் தன்மை அற்ற கிளைமாக்ஸ் துணிச்சலா னது. ஆனால் முழுமையானதல்ல.
துக்கிரித்தனமாக ஆட்டம்போடும் இளைஞர் பாத்திரத்தை முடிந்த அளவு நன்றாகக் கையாண்டிருக்கிறார் கதிர். தெனாவட்டான பேச்சு, காதல் குறும்பு, விடலைத்தனம், பொறுப்பான இன்ஃபார்மர், ரிஸ்க் எடுக்கும் இளமை வேகம் எனக் கச்சிதம் காட்டுகிறார்.
அவருடைய மனைவியாக வரும் ரேஷ்மி மேனன் அழகு. பெரிய வேலை யில்லை என்றபோதும் கிடைத்திருக் கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்தி யிருக்கிறார். வெளியே கிளம்பும் நேரத் தில் வீட்டில் இருக்கும் கணவனின் மனம் அறிந்து தாமதமாகச் செல்ல முடிவெடுக் கும் சமயத்தில் அவர் முகத்தில் மலரும் புன்சிரிப்பு அழகிய கவிதை.
யோகி பாபு/அப்புக்குட்டி வரும் காட்சிகள் கலகலப்புக்கு உத்திரவாத மளிக்கின்றன. சார்லி, தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தின் தன்மையை நன்கு உள்வாங்கி நடித்திருக்கிறார்.
கிருஷ்ணகுமாரின் இசை படத் தின் விறுவிறுப்புக்குத் துணை செய் கிறது. ஆனால் பாடல்கள் படத்துக்குப் பலம் சேர்க்கவில்லை. அருள் வின்சென் டின் ஒளிப்பதிவு காட்சிக்குத் தேவைப் படும் ஒளியையும் இருட்டையும் கோணத்தையும் தந்து நிறைவான உணர்வேற்படுத்துகிறது. காட்சிகளுக் கேற்ற வசனங்கள். வனிதா, தென்னரசு, மாரிமுத்து போன்றவர்களிடம் யதார்த்த நடிப்பு என படம் வழக்கமான படங்களிலிருந்து சிறிது தள்ளியே நிற்கிறது.
இயக்குநர் அனுசரண் முதல் படத்தில் தன் திறமையை நன்கு வெளிப் படுத்தியிருக்கிறார். அவரது முயற்சி யில் முழுமை கூடவில்லை என்றாலும், புதிதாக ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு அதை நேர்த்தியாகவும் வலு வாகவும் கையாண்டிருக்கும் அவரை நம்பிக்கை தரும் இளம் இயக்குநர் களில் ஒருவர் என்று தயங்காமல் சொல்லலாம்.
thanx-thehindu
0 comments:
Post a Comment