Thursday, September 17, 2015

புலிக்கு சென்சார்ல ஏ கிடைச்சிருந்தா என்ன ஆகி இருக்கும்?

1சிகைக்காய்தேய்த்து அருவியில் குளிக்கக்கூடாதுனு போர்டு வெச்சா தமிழன் போலீஸ் கிட்டே எனக்கு படிக்கத்தெரியாதுங்கறான்



========



2பாரீன் பிகர்ங்க எல்லாம் மலையாளப்படம் பார்ப்பாங்க போல.டி சர்ட் மேல டர்க்கி டவல் கட்டிட்டு குளிக்கறாங்க.உங்க புத்திசாலித்தனத்தின் மேல் இடி விழ




============



3குற்றால அருவி மேல உச்சிக்குப்போய் ஒருத்தன் துணி.துவைச்சு அலாசிட்டு இருக்கான்.போலீஸ் டியூட்டி டைம் 8am தானாம்.அடேய்



==============



4அருவியில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது வீழ்ச்சியில் கூட பிறருக்கு உதவியாக இருப்பதே! # நீர் வீழ்ச்சி தத்ஸ்




===========



5நம்ம ஊர்ல 5 ரூபாக்கு விற்கும் ஒரு டம்ளர் பதநீர் (தெளுவு) குற்றாலத்தில் 40 ரூபாய்.அடேய்.இது ஆ ராசா கொள்ளையை விட மோசம்டா




==============



6தென் காசி டூ குற்றாலம் 5 கிமீ.டவுன் பஸ் ல போனா 5,ரூபா.மினிபஸ் 6,ரூபா.சர்வீஸ் பஸ் 7 ரூபா.நடந்தே போனா 50 நிமிசம்.




=================



7பழைய பஸ் ஸ்டேன்ட் புது பஸ் ஸ்டேன்ட் னு பிரிச்சது போல் பழைய குற்றாலம் ,புதுக்குற்றாலம்னு பிரிச்ட்டாங்க போல




===============

8 நெட் தமிழன் பொண்ணு ஏதாவது குட்மார்னிங் சொன்னா டக்னு வணக்COME DM னு கூட்டிட்டுப்போய்டறான்



=============



9நெட்தமிழன் கோயிலுக்குப்போகும்போது கூட பக்தியோட போகாம இதோ இப்போ கோயிலை நோக்கி போய்க்கிட்டு இருக்கேன்னு அப்டேட் பண்றான்(ர்)




==============



10 லைலா நல்ல நடிகை தான், ஆனால் உலகின்  சிறந்த நடிகை  எனச்சொல்லுவது LIE லா




===================




11 டார்லிங்க்-கற செல்லப்பேரை  மரியாதைச்சொல்லா  மாத்தனும்னா டார்ஜிலிங்க்-னு கூப்பிடனும்னு நான் இங்கே வந்துதான்  கத்துக்கிட்டேன்




=====================





12 அசைவம்  உடல் நலனுக்குக்கேடு-ன்னு எண்ணிப்பார்க்காம  ஹோட்டல்ல ஆர்டர் செஞ்ச  பிரியாணிலலெக்பீஸ்  சரியா  இருக்கா?ன்னு எண்ணிப்பார்ப்பான் தமிழன்




===============




13 யாராவதுஒரு பொண்ணு  ஒரு நல்ல  கருத்தை சொன்னா டக்னு மென்சன் போட்டு அடடா, நானும் இதையே தான் நினைச்சேன், நனைச்சேன், துணி துவைச்சேன்பான் தமிழன்




====================




14 வயசு ஏற  ஏற  இளமை , அழகு, மினுமினுப்பு, ஏறுவது  தமிழ் சினிமாவில்  இளைய தளபதி, த்ரிஷா, நயன் தாரா வுக்கே




===============




15 நெட்தமிழன்   பேங்க்ல  பணம்  போட்டு  சேவ்  பண்றானோ  இல்லையோ  டிராஃப்ட்டில்  ட்வீட்ஸ் சேவ் பண்ணி  வைக்கறான், ஷேவிங் வசதி காணோம்னா பதறிடறான்




====================




16  தான் ஃபாலோ பண்ற   378  பெண்  ட்வீட்டர்கள்கிட்டேயும் டி எம்ல  போய் செல்லம் இங்க இருக்குறவள்களயே நீதான் அழகி-னு  அடிச்சுவிடுவான் நெட்தமிழன்




=================





17 7    மணிக்கு   லேட்டா எந்திரிக்கும் தமிழன் விடிஞ்சிடுச்சுன்னு கண்டு  பிடிச்சு ஸ்டேட்டஸ்ஸா அதை FB லபோடறான்




======================




18 பொண்ணுங்க  ஏதாவது  சமையல்  குறிப்பு  சொன்னா  ஊடால  புகுந்து    ஏதோ டவுட்  கேட்பது போலவே ஆஜர்  ஆவான்  நெட் தமிழன்




=====================




19 சித்ரா5291க்கும் சித்ரா4476க்கும் என்ன வித்யாசம்?இன்ட்டர்வ்யூல கேட்டுட்டாக்கூட நெட் தமிழன் கரெக்டா பதில் சொல்லிடுவான்


===============

20நல்ல வேளை.புலி (P"U"LI) க்கு சென்சார்ல U கிடைச்சுது.ஏ கிடைச்சிருந்தா (P"A"LI) பலி ஆகி இருக்கும்

==============

0 comments: