Monday, September 14, 2015

யட்சன் - சினிமா விமர்சனம்(சி.பி)



ஒரு( இரு?) எழுத்தாளரின் திரைக்கதை  எந்த   அளவு பிரமாதமாக  அமையும்  என்பதற்கு சமீபத்திய உதாரணம்,  தனி  ஒருவன்,எந்த  அளவு   சொதப்பலாக அமையும் என்பதற்கும் உதாரணம் அதே  சுபாவின்  யட்சன். ஆல்ரெடி  ஆனந்த விகடனில்  தொடராக வந்த  கதை தான் , பட்டி  டிங்கரிங்க்  பண்ணி பஞ்சராக்கிட்டாங்க.


சிங்கிள்ட்ராக்ல    கதை  சொன்னாலே   தமிழன் 1008  சந்தேகங்களோட படம்  பார்ப்பான், இதுல 3  ட்ராக்ல  திரைக்கதை   வருது. என்னவெல்லாம்  திட்டிட்டே  தமிழன் படம்  பார்ப்பானோ?



ஹீரோ அடிதடி  வெட்டு  சீட்டாட்டம்னு இருப்பவர். எதிர்பாராதவிதமா   ஒரு  கொலை  செஞ்சிடறார்.தண்டனைல  இருந்து  தப்ப  சென்னை வர்றார். அவருக்கு ஒரு  கொலை  பிராஜக்ட்  ஒப்படைக்கப்படுது. ஒரு  ஃபிகரை  போட்டுத்தள்ளனும் ( ஐ மீன்  கொலை )


இன்னொரு  ஹீரோ   தன் அப்பா செய்யும் பிஸ்னெஸ்  பிடிக்காம   சினிமால  ஹீரோ ஆகனும்கற  உயர்ந்த  லட்சியத்தோட சென்னை  வர்றார். சான்ஸ்  கிடைக்குது.

ஆனா  2  ஹீரோவும்  இடம்  மாறிடறாங்க.கொலை  செய்யப்போகும்  ஹீரோ  சினிமா  ஹீரோ ஆகறார்,

ஹீரோயின்  அழகிய   தமிழ் மகன்  விஜய்  மாதிரி  பேராநார்மல்  ஆக்டிவிட்டி உள்ளவர், அதாவது  யாராவது   அவரைத்தொட்டா, அல்லது  இவர்   யாரையாவது  தொட்டா    தொட்டவரோட  எதிர்காலத்தில்  நடக்கும்  கெட்ட சம்பவம்  கண் முன் காட்சியாத்தெரியும். இவர்  அவரை  எச்சரிச்சுடுவார்.( என்னைத்தொட்டே  நீ  கெட்டே )


இந்த   3   ட்ராக்கும்  எப்படி  இணையுது? என்பதுதான்  கதை. சுவராஸ்யமாத்தான்  இருக்கு, ஆனா  திரைக்கதை  சரி  இல்லை .

ஹீரோவா ஆர்யா, வழக்கம்  போல்  அசால்ட்  நடிப்பு.அஜித் ரசிகரா    வரும்  காட்சிகள்  எல்லாம்  அப்ளாஸ் அள்ளறார்.ரொமான்ஸ்  காட்சிகளில்   ஹீரோயினுடன் தன்  முத்திரையைப்பதிக்கிறார்,


இன்னொரு ஹீரோவா  கிருஷ்ணா. இவரோட  டயலாக்  டெலிவரியும் , முக பாவனையும்   ரொம்பவே  சுமார்  ரகம். இன்னும்  வளரனும்  பாஸ் . 



ஹீரோயின்   தீபா சன்னிதி. பிரம்மாண்டமான டைட்  ஃபிட்டிங்  சுடியில்  எப்போதும்  வலம் வரும்  முதல்  தமிழ்  நாயகி. முகம் பாந்தமாகவும் , மனசு  மந்த்ராத்தனமாகவும்  தமிழனின்  இரு  வித  ரசனைக்கும்  பிடிக்கும்  தரத்தில். கேமராமேன் புத்திசாலித்தனமாக டைட்  க்ளோசப் ஆஃப் டைட்  ஃபிட்டிங் வைத்திருப்பது சபாஷ். கண்களும் , இதழ்களும்,ரொம்ப   சின்னதாக  இருந்தாலும்  தாராள மனசால் டாப் டென்னில்  முன்னுக்கு  வருவார்


இன்னொரு  நாயகி  ஆரஞ்சு  மிட்டாய்  உதட்டழகி  தெத்துப்பல் அழகி   கெத்து  நாயகி  ஸ்வாதி  ரெட்டி,ரோஸ்  நிற ரொமாலியன்  ரொட்டி  போல்  மின்னுகிறார்.6  இஞ்ச்  நீளத்துக்கு   சுடி  டாப்  ஜிப்பை அசால்ட்டாக  ஓப்பன்  செய்து  வெத்து  அதிரவைக்கிறார்,ஏதோ குறியீடு.ஆனால்  இவர்  தனது  நளினத்தை மென்மையை இதில்  இழந்து  விட்டார், சுட்டித்தனம்  என்றா சாக்கில்  இவர்  காட்டும்  தெனாவெட்டு ரசிக்கும்படீல்லை.


வில்லன் நடிப்பு  அருமை. அந்த  கேரக்டரில்  வரும்  க்ளைமாக்ஸ்  ட்விஸ்ட்டை  ரொம்பவே  நம்பி  இருக்காங்க  போல ,நான் என்ன  சொன்னேன்?  என  திரும்ப  திரும்ப  கேட்கும்  இடத்தில்  ரகுவரன் , பிரகாஷ் ராஜ் டச்


ஆர்  ஜே  பாலாஜியின்   டயலாக்  டெலிவரி , குரல்  இரண்டும்  பிரமாதம் . அவர் வரும்  காட்சிகள்   எல்லாம்  தியேட்டரில்  கை  தட்டல்கள்  தான் . வாய்ப்புக்கிடைத்தால்  முன்னணி  காமெடியன்  ஆவார் .


தம்பிராமய்யா   வழக்கம்போல்  தன்  ஓவர் ஆக்டிங்கால்கவர்கிறார்.


திரைக்கதை    ஆர்யா, கிருஷ்ணா  என  பேலன்ஸ்  பேஸ்டில்  அமைக்கப்பட்டிருந்தாலும்   ரொம்பவே  சலிப்படைய  வைக்குது. ஆரம்பம் படத்தில்  இயக்குநர்  காட்டிய புத்திசாலித்தனங்கள் இதில்  மிஸ்சிங்


பாடல்கள் , இசை   நார்மல்  ரகம் 


பல  இடங்களில்  அஜித்  புராணம்  வருவது  அஜித்  ரசிக்ர்களுக்கு  உற்சாகத்தை  அளிக்கக்கூடும் , ஆனால்  பொது  ஜனங்களுக்கு  அது  துருத்தித்தெரியக்கூடும் 







மனதைக் கவர்ந்த  வசனங்கள்


1இவன்  யாரையாவது  அடிச்சா  இவன்  தான்  அடிச்சான்னு யாருக்கும்  தெரியாது  # யட்சன்


2  நீ  என்னைக்குழப்பி குழம்பு வைக்கப்பார்க்கறே # யட்சன்

3  எதிர்லசாவு ஊர்வலம்  வந்தா நமக்கு நல்ல சகுனம்னு ஒரு சாங்கியம்  இருக்கு # யட்சன்


நான்  உள்ளே  போய் முதல்ல  யாரைத்தொடறனோ  அவன் தான் மார்க்

 எனக்கு  ஏற்கன்வே மார்க்கை  தெரியுமே?


அய்யோ, இது  வேற, மார்க்னா பார்ட்டி # ய


5  தோழி டூ  நாயகி =  பசங்களை  எப்பவும்  நாம  ஒரு பயத்தோடயே   வெச்சிருக்கனும், இல்லைன்னா  நம்மை  மதிக்க மாட்டானுங்க # யட்சன்


6  நீ  என்னை விட் டுப்போய்ட்டா  என் தைரியம், என் நம்பிக்கை எல்லாமே என்னை விட்டுப்போன  மாதிரி # ய


7  நாயகி  டூ நாயகன் =  நீ  ஜெயிச்சாலும்  , தோத்தாலும்   நான்  உன்னை நம்பறேன் # ய 


8  சினி  ஃபீல்டுல   ஜெயிக்க  டேலண்ட்  மட்டும்  முக்கியம்  இல்லை, டைமிங்கும்  ரொம்ப  முக்கியம் # ய





 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1காமெடிரோலிலேயே  பார்த்துப்பழக்கமான குண்டு ஆர்த்தியை குத்து சாங்கில் அதிரடியாய் ஆட வைத்தது


2 தீபாசன்னதி ,ஸ்வாதி இருவரையும்   ஹீரோயினாக புக் செய்து கதைக்கு தேவை இருக்கோ இல்லையோ  கிளாமராக  காட்டியது


3 ரேடியோ ஜாக்கி பாலாஜியின்  காமெடி டிராக்  , தம்பி ராமய்யா , ஃபைவ் ஸ்டார்  கிருஷ்ணா  காமெடி காட்சிகள்


4  வில்லனின் அசால்ட்  நடிப்பு,எஸ் ஜே  சூர்யா வின் கெஸ்ட்  ரோல்




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1 கொலை செய்த  ஹீரோ வின் ஃபோட்டோவை  போலீஸ்  பேப்பரில் விளம்பரம் கொடுத்து தேட மாட்டாங்களா? சென்னைக்கு வந்துட்டா  குற்றவாளி  தப்பிடுவாரா?



2 யட்சன்  விகடன்  தொடரில்  இருந்த  ஈர்ப்பு  படத்தில்  இல்லை. சினிமாவுக்காக  மாற்றுகிறேன் பேர்வழி என நல்ல  கதையை  சொதப்பியது  ஏனோ?


3 பொன்வண்ணனின் கேரக்டர்    ஆரம்பத்தில் சீரியசாக  வருவதும் திடீர் என  காமெடிக்கு  யூஸ்  செய்வதும்  மைனஸ்



4 ஆள் மாறாட்டம்  காட்சி படத்தின்  முக்கிய சீன். முன் பின் அறிமுகம் இல்லாத ஆளை  ரிசீவ் பண்ண அடியாள் அனுப்புபவர்கள்  ஆளோட ஃபோட்டோ  தர மாட்டாங்களா? அல்லது ஆ ள்  ரிசீவ் பண்ணும்போது  ஃபோனில்  பேச வைத்து  ஆள்  இவர்  தான்  என கன்ஃபர்ம்  பண்ணமாட்டாங்களா?


5   சினிமா  ஹீரோவை அறிமுகப்படுத்தும் இயக்குநர்   விழா  நடக்கும்  நேரத்துக்கு  அரை மணி  நேரம்  முன்  தான்  ஹீரோவுக்கு  மேக்கப்  போட்டு விடுவாரா?



சி  பி  கமெண்ட்  =யட்சன்= கொஞ்சம்  கலகலப்பு,  கொஞ்சம் இளமை, அங்கங்கே கடுப்பு, சுமார் ரக படம் - விகடன் மார்க் = 40 , ரேட்டிங் = 2.5/ 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 40



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = சுமார்



 ரேட்டிங் = 2.5/ 5




இந்தப்படத்தை   தென் காசி  PSS மல்ட்டி பிளக்சில் பார்த்தேன். சுமார்  ரக  தியேட்டர் தான். ஆனால் டிக்கெட்  ரேட்  எல்லாம்  ஜாஸ்தி, 100, 150  எல்லாம்  ஓவரோ  ஒவர் . தியேட்டர்  ரூ75 க்கு தான் ஒர்த்  படம்   ரூ 50க்குத்தான் ஒர்த்

1 comments:

balaamagi said...

நல்ல விமர்சனம்
வாழ்த்துக்கள்,
எங்கே நம்ப பக்கம் ஆளைக்காணோம்,,,,,