Friday, September 04, 2015

அதிபர் - திரை விமர்சனம்:

ரியல் எஸ்டேட் தொழிலின் பின்னால் இயங்கும் நிழலுலகின் இருண்ட பக்கங் களை வெளிச்சம் போட்டுக்காட்ட முயல்கிறது ‘அதிபர்’.
உள்நாட்டுப் பிரச்சினை காரணமாக இலங்கையிலிருந்து கனடாவுக்குப் புலம் பெயர்கிறது ஜீவனின் குடும்பம். அங்கே படித்து வளரும் அவர், ஒரு சின்னப் பிரச் சினையில் சொந்த ஊருக்கு அனுப்பப்படு கிறார். இலங்கை செல்ல வேண்டிய அவர், அங்கே நிலவரம் சரியில்லாததால் சென் னைக்கு வந்து கட்டுமானத் தொழில் தொடங்குகிறார். இவருக்குச் சட்ட ஆலோ சகராக இருக்கும் ரஞ்சித், அவரது கட்டு மானத் தொழிலை அபகரித்துக்கொள் கிறார். ஜீவன் இதனால் கீழே விழுகிறார். விழுந்த அவர் எப்படி எழுகிறார் என்பது தான் எஞ்சிய கதை.
நேர்மை, நாணயம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பதுதான் இந்தத் துறையின் தொழில் ‘தர்மம்’ என்று துணிச் சலாக காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர் சூர்யப்பிரகாஷ். அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட ஜீவன் வாங்கும் இடம், எளிய, அப்பாவி மனிதர்களிடமிருந்து ரவுடிகளால் எவ்வாறு திட்டமிட்டு அபகரிக் கப்படுகிறது என்பதில் தொடங்கி, அடுக்கு மாடிக் குடியிருப்புகள் வாங்கும்போது கருப்புப் பணம் எப்படி விளையாடுகிறது என்பது வரை எல்லாவற்றையும் அம்பலப்படுத்துகிறார்.
வில்லன் ரஞ்சித்துக்கு ரவுடிகள் கைகொடுப்பது போலவே, நாயகன் ஜீவனுக்குத் திருந்தி வாழ நினைக்கும் ரவுடி களான நந்தாவும், சமுத்திரக்கனியும் கைகொடுப்பது திரைக்கதைக்கு விறுவிறுப் பைக் கொடுத்திருக்கிறது. முதல் பாதியில் நந்தாவும் இரண்டாம் பாதியில் சமுத்திரக்கனியும் நட்சத் திர வெறுமை ஏற்படாத வண்ணம் ரசனையாகப் பூர்த்தி செய்கிறார்கள். சமுத்திரக்கனியின் திருநெல்வேலி வட்டார வழக்குப் பேச்சுக்கும் அவரது நக்கலான நகைச்சுவைப் பஞ்ச்களுக்கும் கைதட்டல் கிடைக்கிறது.
ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் நடிக்க வந்திருக்கும் ஜீவன், தனது வழக்கமான வசன உச்சரிப்பைத் தவிர்த்து யதார்த்தமாக நடிக்க முயன்றிருக் கிறார். அவரது வழக்கமான ஹேர் ஸ்டைல் உறுத்துகிறது. ஆனால் சண்டைக் காட்சி களில் அலட்டல் இல்லாமல் அபாரமாக ஸ்கோர் பண்ணுகிறார். இவருக்கான சண்டைக் காட்சிகளை வடிவமைத்த கனல் கண்ணன் பாராட்டுக்குரியவர். “நீ என்னோட தம்பிடா” என்று சொல்வதற் காகவே ரஞ்சித் சொல்வதை வேத வாக்காக எடுத்துக்கொள்வது ஜீவன் கதாபாத்திரத்தில் இருக்கும் பெரிய ஓட்டை.
இதற்கு மாறாக ஜீவன் கட்டுமானத் தொழிலில் செய்யும் முதலீடு, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பணம் என்று அவரை சிபிஐயிடம் போட்டுக்கொடுக்கும் வில்லன் கதாபாத்திரம் பல காட்சிகளில் அழுத்தமாக அமைக்கப்பட்டிருக்கிறது. ரஞ்சித்தின் பாத்திரம் வழக்கமான வில்லன்தான் என்றாலும் அவர் தன் வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறார். அவரது ஒட்டு தாடியும் மீசையும் அவரது முகத்தை அலங்கோலமாகக் காட்டுவதை இயக்குநர் உட்பட யாரும் கவனிக்காதது ஏன் என்று தெரியவில்லை.
ஜீவனின் வழக்கை விசாரிக்கும் நேர்மையான சிபிஐ அதிகாரியின் பாத்திர வார்ப்பு கவனிக்கவைக்கிறது. படத்தில் பரிதாபகரமான ஒரு ஜீவன் கதாநாயகி வித்யா. நாயகனுடன் ஒரு டூயட் பாடிவிட்டு கணவனின் கஷ்டத்தில் தனக்குப் அதிக பங்கில்லை என்பதுபோல ஒதுங்கிக்கொள்கிறார். ரஞ்சித்தின் தம்பி யாக வரும் ரிச்சர்ட்டுக்கும் அதிக வேலை யில்லை. திரைக்கதை நகர வேண்டிய இடங் களில் பாடல்கள் வந்து அந்தரத்தில் தொங்கு கின்றன. இது போன்ற குறைகளைத் தவிர்த் திருந்தால், இன்னும் விறுவிறுப்பான படமாக மாறியிருக்கும் அதிபர்.


நன்றி- த இந்து

0 comments: