பிரெஞ்சு மொழியில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற ‘ஸ்லீப்லெஸ் நைட்’ படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்தான் ‘தூங்காவனம்’.
போதைத் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் காவல் அதிகாரியாக கமல் நடித்திருக்கிறார். அந்த அதிகாரி போதைக் கும்பலால் கடத்தப்பட்ட தன் மகனை மீட்க, ஒரு நைட் கிளப்பில் போராடும் கதை என்று தெரிகிறது. த்ரிஷா கதாநாயகியாக கமலுடன் இரண்டாம் முறை ஜோடி சேர்ந்திருக்கும் ‘தூங்காவனம்’ ஆக் ஷன் திரில்லர் வகை என்பதை சமீபத்தில் வெளியாகியிருக்கும் படத்தின் ட்ரைலர் உணர்த்துகிறது.
இன்னொரு யதார்த்த சினிமா
’மதயானைக் கூட்டம்’ படத்தில் இயல்பான நடிப்பால் கவர்ந்த அறிமுக நாயகன் கதிர். இவரது நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘கிருமி’. கதிருக்கு ஜோடி ரேஷ்மி மேனன். அறிமுக இயக்குநர் அனுசரண் இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் கதையை இவருடைய நண்பரான ‘காக்கா முட்டை’ புகழ் மணிகண்டனுடம் இணைந்து எழுதியிருக்கிறார் இயக்குநர். வெளியீட்டுக்குப் பிறகு சர்வதேசப் படவிழாக்களுக்குப் பயணப்படப் போகிறதாம் இந்தப் படம். போலீஸுக்கு உதவ முன்வரும் இளைஞர் எப்படியெல்லாம் ஏமாற்றப்படுகிறார் என்பதுதான் கிருமி படத்தின் கதையாம்.
கிளாமர் ஷாம்லி
‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்’ நிறுவனம் சார்பில் எஸ். நந்தகோபால் தயாரிக்கும் படம் ‘வீரசிவாஜி’. இந்தப் படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஷாலினியின் தங்கை ஷாம்லி நடிக்கிறார். பாண்டிச்சேரியில் நடந்த பூஜைக்கு வந்திருந்த ஷாம்லி, ஒல்லியான தோற்றத்துடன் காணப்பட்டார். கதாநாயகிகள் ரேஸில் விரைவில் ஷாம்லியும் இணைவார் என்கிறார்கள். காரணம் ஷாம்லி க்ளாமர் நடிப்பிலும் துணிச்சலாகக் களமிறங்க இருக்கிறாராம்.
கார்த்தியுடன் இணைந்த நாகார்ஜுன்
பி.வி.பி. சினிமா நிறுவனம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாரித்துவரும் புதிய படத்தில் கார்த்தியும், நாகார்ஜுனாவும் இணைந்து நடிக்கிறார்கள். தமன்னா முதன்மைக் கதாநாயகி. தமிழ்ப் பதிப்புக்கு குக்கூ பட இயக்குநர் ராஜுமுருகன், பத்திரிகையாளர் முருகேஷ் பாபு ஆகியோர் இணைந்து வசனமெழுதுகிறார்களாம். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவிலுள்ள முக்கிய நகரங்களில் ஒரு மாதம் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் படத்தில் நாகார்ஜுன் ஏற்கும் கதாபாத்திரம் அவரது வாழ்நாள் கதாபாத்திரமாக அமையப்போவது உறுதி என்கிறார்கள்.
விறுவிறு வியாபாரம்
விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘பத்து எண்றதுக்குள்ள’. படத்தின் வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இப்படத்தைத் தமிழகமெங்கும் வெளியிடும் உரிமையைப் பிரபல சத்யம் சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‘ஐ’ படத்துக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வெளிவரவிருக்கும் இந்தப் படம், அவரது வசூல் ஏரியாவை மீட்டுத் தரும் என்கிறார்கள்.
அமிதாப் வழி
இந்தியில் 'சர்கார்' என்ற படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் அமிதாப் பச்சன். தற்போது 'கபாலி' படத்தில் அமிதாப் வழியைப் பின்பற்றி இருக்கிறார் ரஜினி. மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரன் என்ற பாத்திரத்தில் வயதான தாதா வேடத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினி. சின்ன தாதாக்களை எல்லாம் அழித்து பெரிய தாதாவாக வலம் வரும் ரஜினி, தன்னுடைய நண்பர்களின் மகன்களை மலேசியாவுக்கு வேலைக்காக அழைத்துச் சென்று ஏமாற்றியது தெரிய வருகிறது. தனது அதிரடியின் மூலம் அவர்களைப் பழிவாங்கி எப்படி மலேசிய தமிழர்களின் வாழ்க்கையைக் காப்பாற்றினார் என்பதுதான் ‘கபாலி' படத்தின் கதை

நன்றி-தஹிந்து
0 comments:
Post a Comment