Monday, September 14, 2015

சகாயம் ஐ ஏ எஸ் -தனி ஒருவன் -சவாலே சமாளி - மக்கள் கருத்து

இடது - மேலே: மயானத்தில் கட்டில் இட்டு உறங்கிய சகாயம் | இடது கீழே: காலையில் நடைபெற்ற தோண்டும் பணி | வலது: எலும்பு ஒன்றை எடுத்து அளித்த ஊழியர் | படங்கள்: ஜேம்ஸ், அசோக்
இடது - மேலே: மயானத்தில் கட்டில் இட்டு உறங்கிய சகாயம் | இடது கீழே: காலையில் நடைபெற்ற தோண்டும் பணி | வலது: எலும்பு ஒன்றை எடுத்து அளித்த ஊழியர் | படங்கள்: ஜேம்ஸ், அசோக்
மதுரை அருகே கிரானைட் குவாரிக்காக நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் மயானத்தில் சட்ட ஆணையர் சகாயம் விடிய விடிய முகாமிட்டிருந்தார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சந்தேகத்துக்குரிய அந்த இடத்தில் இருந்து எலும்புகள் தோண்டியெடுக்கப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து சட்ட ஆணையர் சகாயம், பல கட்டங்களாக விசாரணை நடத்தி வருகிறார்.
கீழவளவைச் சேர்ந்த சேவற்கொடியோன் என்பவர் பிஆர்பி கிரானைட் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக 1999-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை பணியாற்றினார். இவர் சகாயத்திடம் அளித்த புகாரில், மனநலம் பாதித்தவர்களை அழைத்து வரும்படி நிறுவனத்தினர் உத்தரவிட்டபடி செயல்பட்டேன். அதில் 2 பேரை, மேலூர் அருகே இ.மலம்பட்டியில் நரபலி கொடுத்து புதைத்ததை பார்த்ததாகத் தெரிவித்திருந்தார்.
பிஆர்பி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நரபலி கொடுக்கப்பட்டு, சின்ன மலம்பட்டியில் புதைக்கப்பட்டதாக பிஆர்பி நிறுவன முன்னாள் ஓட்டுநர் சேவற்கொடியோன் என்பவர் சகாயத்திடம் புகார் அளித்தார். இதையடுத்து, நரபலி கொடுக்கப்பட்டவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டி உண்மையை கண்டறிய சகாயம் முடிவு செய்தார். இது தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும், மதுரை அரசு மருத்துவமனை டீனுக்கும் தகவல் அளித்தார்.
1999-ம் ஆண்டில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் சின்ன இ.மலம்பட்டி மணிமுத்தாறு ஓடைக்கு சகாயம் நேற்று சென்றார். சேவற்கொடியோன் அடையாளம் காட்டிய இடத்தை இயந்திரம் மூலம் தோண்ட அதிகாரிகளுக்கு சகாயம் உத்தரவிட்டார். இயந்திரத்தை தவிர்த்து ஆட்களை வைத்து தோண்டலாம் என மாவட்ட எஸ்பி தகவல் தெரிவித்தார்.
மாலையில் மீண்டும் இ.மலம்பட்டிக்கு சகாயம் திரும்பும்வரை தோண்டும் பணி நடக்கவில்லை. கிராம நிர்வாக அதிகாரி புகார் அளித்து, வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆட்சியர் அல்லது, மருத்துவக்கல்லூரி முதல்வர் உத்தரவின்பேரிலேயே மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்தில் உடல் பரிசோதனையில் ஈடுபடுவர் என சகாயத்திடம் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாலை 6 மணிக்குப்பின்னர் உடல் பரிசோதனை செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த சகாயம், திட்டமிட்டே பல்வேறு துறையினரும் சேர்ந்து காலம் தாழ்த்துவதாக குற்றம்சாட்டினார். குறிப்பிட்ட இடத்தைத் தோண்டும் வரை சம்பவ இடத்தை விட்டு செல்ல மறுத்து அங்கேயே அமர்ந்தார்.
விடிய விடிய மயானத்தில்...
இதனிடையே, நரபலி மரணம் குறித்து சேவற்கொடியோன் கிராம நிர்வாக அலுவலர் அழகுராஜாவிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரை கோட்டாட்சியர் செந்தில்குமாரி கீழவளவு போலீஸாருக்கு அனுப்பினார். உடனடியாக, அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வளவு நடைபெற்றும் மயானத்துக்கு மருத்துவக்குழு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அரசு மருத்துவமனை டீன் ரேவதியை தொடர்பு கொண்டு, மருத்துவக்குழு வராதது குறித்து சகாயம் தெரிவித்தார். அதற்கு டீன், தனக்கு போலீஸாரிடம் இருந்து முறைப்படி தகவல் வரவில்லை என்றார். பின்னர் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.
அந்தக்குழு, நேற்று பகல் 3 மணிக்கு மேலூர் வந்தது. இருப்பினும், அந்தக் குழுவை சின்னமலம்பட்டிக்குள் போலீஸார் உடனடியாக அனுமதிக்கவில்லை. மருத்துவக் குழுவை மேலூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், சுமார் 3 மணி நேரம் இருக்கச் செய்து பின்னர் மயானத்துக்கு அனுப்பினர். அவர்களுக்காக சகாயம் அங்கேயே காத்திருந்தார்.
ஆட்சியர் உத்தரவிட்டால்தான் பணிகளை மேற்கொள்வோம் என மருத்துவக் குழு தெரிவித்தது. அதற்கு, நான் உயர் நீதிமன்றம் நியமனம் செய்த சட்ட ஆணையர், நான் எழுத்துபூர்வமாக உத்தரவு பிறப்பிக்கிறேன், நீங்கள் பணியை மேற்கொள்ளலாம் என்றார். அதையேற்க மருத்துவக்குழு மறுத்துவிட்டது. இதை டீனிடம் சகாயம் தெரிவித்தார்.
இருள் சூழத் தொடங்கியதால் ஜெனரேட்டர் கொண்டுவந்து விளக்குகளை அமைக்குமாறு வட்டாட்சியரிடம், கிராம நிர்வாக அதிகாரியிடமும் சகாயம் தெரிவித்தார். ஆனால், அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் தனியே ஒரு இடத்தில் போய் நின்று கொண்டனர். அவர்களிடம் சகாயம் மீண்டும் கேட்டபோது, ஆட்சியரிடம் கேட்டுத்தான் செய்ய முடியும் என்றனர். பின்னர் போலீஸாரும் அங்கிருந்து செல்லத் தொடங்கினர். சகாயம் குழுவினர் மட்டும் செய்வதறியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.
வேகமாக பரவிய தகவல்...
இந்நிலையில், எந்தவித பாதுகாப்பும் இன்றி மயானத்தில் சகாயம் குழுவினர் நிற்கும் தகவல் வேகமாகப் பரவியது. இதையடுத்து, அரிட்டாபட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ஜெனரேட்டருடன் ஆபரேட்டர் ஒருவரையும் சின்னமலம்பட்டிக்கு அனுப்பினார். கீழையூரில் அவர்களை வழிமறித்த போலீஸார், ஜெனரேட்டர் பிளக்கை பறித்துக் கொண்டு அனுப்பினர். ஒருவழியாக ஜெனரேட்டர் மயானத்துக்கு வந்து சேர்ந்தது. ஆனால், பிளக் இல்லாததால் ஜெனரேட்டரை இயக்க முடியவில்லை.
இதையடுத்து, இரவு 7 மணிக்கு மதுரை மாவட்ட எஸ்பி விஜயேந்திரபிதாரி மயானத்துக்கு வந்தார். அவரிடம், போலீஸார் தனக்கு ஒத்துழைக்கவில்லை என சகாயம் பகிரங்கமாக புகார் தெரிவித்தார்.
அதற்கு எஸ்பி, போலீஸார் ஒத்துழைப்பு தராமல் இல்லை. இப்போது இருட்டிவிட்டது. காலையில் தோண்டலாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். மருத்துவக்குழுவினர், போலீஸார் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இங்கிருந்து சென்றுவிட்டால் இரவோடு இரவாக மயானத்தை தோண்டி சடலங்களை எடுத்துச் சென்று விடுவார்கள் என நினைத்த சகாயமும், அவரது குழுவினரும் மயானத்தை விட்டு செல்லாமல் அங்கேயே இருந்து விட்டனர். ஒரு கட்டிலை வரவழைத்து மயானத்திலேயே சகாயம் படுத்துக் கொண்டார். அவரது குழுவினர் காரில் காத்திருந்தனர்.
இந்நிலையில், மயானத்தில் எவ்வித பாதுகாப்பு இல்லாமல் சகாயம் குழுவினர் இருக்கும் தகவல் பரவியதால் பலர் சகாயத்தை தேடி வரத் தொடங்கினர். இரவு 1 மணிக்கு ஆம் ஆத்மி, சட்டப் பஞ்சாயத்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மயானத்துக்கு வந்தனர். தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்களும் சகாயத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
எலும்புகள் தோண்டியெடுப்பு...
இந்த நிலையில், இன்று காலை விடிந்ததும் சகாயம் குழுவினர் 3 பேர் மயானத்தில் இருக்க சகாயம் மற்றும் இருவர் அங்கிருந்து சென்று குளித்துவிட்டு திரும்பி வந்தனர். அதன்பின் காலை 9 மணியளவில், மருத்துவக் குழுவினர் மயானத்துக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து, சேவற்கொடியோன் அடையாளம் காட்டிய இடத்தை ஆட்கள் தோண்டினர். அப்போது அங்கு வந்த சகாயம், சில உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
பின்னர், 10 அடி ஆழம் தோண்டப்பட்டு அடுத்தடுத்து சுமார் ஏழு மாதக் குழந்தை உட்பட 4 சடலங்களின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. அவை ஆம்புலன்ஸில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாலை 5 மணியளவில் சகாயம் குழுவினர் சின்ன மலம்பட்டியில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.

  • B R  
    நீதி மன்றம் தான் எத்தகைய தருணங்களில் விசாரணை அதிகாரியின் உத்தரவின் படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும் என நியமனத்தில் குறிபிடுவது நல்லது . இதற்க்கு மற்றைய மேலதிகாரியின் உத்தரவு தேவையற்றது என குறிப்பிட்டால் தான் விசாரணையில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க முடியும்
    Points
    260
    5 minutes ago
     (0) ·  (0)
     
    • RSR Sundaram  
      இந்த நிகழ்ச்சிகள் அரசு அதிகாரிகளுக்கும் கிரானைட் உரிமையாளருக்கும் இடையே உள்ள நல்லுறவு புரிதலை தெளிவாக்குகிறது. நல்ல வேளையாக சஹாயத்தின் பாதுகாவலர்கள் அவரை அமாவசை இருட்டில் அம்போ என்று விட்டு விடாமல் கூட இருந்தார்களே.
      Points
      7980
      about an hour ago
       (0) ·  (0)
       
      • BBaskar  
        Salute.........100000 sagayam.... Thangalin utharavukkaga kaathirukirom ....ilangarkalaahiya naangal.....endrum ungal pinnaal...
        about an hour ago
         (0) ·  (0)
         
        • Vivek Vivek  
          ஒரு nermaiyana சிறந்த உயர் அதிகரிகே எந்த ஒரு நிலைமை என்றால் பாருங்கள்....இந்திய அரசியல் அமைம்பின் இலட்சணத்தை.....
          about an hour ago
           (0) ·  (0)
           
          • Jagath Venkatesan  
            இதைத்தான் கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதைன்னு சொல்லறாங்களோ ...
            Points
            1195
            about an hour ago
             (0) ·  (0)
             
            • RRama  
              we are with you ... real hero ... !! we won't forget you continue your hard and transparent work . I Request The Hindu to follow up his work and publish to people so that everyone aware of what's going on and sagayam's safe .
              about an hour ago
               (1) ·  (0)
               
              baskar Up Voted
              • KKamarajan  
                இந்த ஆட்சியின் லட்சணம் எப்படி நடக்கிறது என்று தெரிகிறது. அதிகாரிகள் கூடவா இப்படி நடந்து கொள்வார்கள்? கோர்ட் நடவடிக்கை எடுத்தால்தான் உண்டு
                Points
                140
                about 2 hours ago
                 (0) ·  (0)
                 
                • SKSundar Kurumpanai  
                  சகாயத்தின் பணியை பாராட்ட வார்த்தைகள் இல்லை , இந்த அரசு நிர்வாகம் அவ௫க்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அவ௫க்கு தீமை செய்யாமல் இ௫ந்ததாலே போதும், உண்மைகள் அனைத்தும் வெளிவ௫ம்.
                  Points
                  180
                  about 4 hours ago
                   (0) ·  (0)
                   
                  • Shanmugam Sankaralingam  
                    சந்தேகமென்ன சகாயம் கண்டுபிடித்தது மைனிங் மாப்பியா கும்பலைத்தான்.புரையோடிப்போன நிர்வாக சீர்கேடு. எமெர்ஜென்சி போடலாம் சட்ட ஒழுங்கு போச்சு.
                    Points
                    1835
                    about 6 hours ago
                     (0) ·  (0)
                     
                    • SGs. Gokarnesan  
                      சகாயம் நிச்சயம் ஊழலுக்கு சகாயம் செய்யமாட்டார் எனபது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.
                      Points
                      3390
                      about 6 hours ago
                       (1) ·  (0)
                       
                      ram Up Voted
                      • Ssundar  
                        கண்ணீர் வரவைக்கும் காட்சிகள். திரு. சகாயம் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இனிமேலாவது அரசு இவ்விசயத்தில் தலையிட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். Salute சகாயம் சார் !!!
                        Points
                        320
                        about 6 hours ago
                         (2) ·  (0)
                         
                        ram · karthick Up Voted
                        • PPrabhu  
                          அவர் கோர்ட்டு நியமித்த கமிஷனர். அரசு தலையிட்டதால் தான் பிரச்சனை. இது புரியாம பேசிக்கிட்டு.
                          about 3 hours ago
                           (0) ·  (0)
                           
                        • Ssenthamillselvan  
                          மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம். அதிமுக அரசு நிர்வாகம் ஒத்துழைக்காததை பார்த்தால் சந்தேகம் வலுக்கிறது.
                          Points
                          48700
                          about 7 hours ago
                           (3) ·  (0)
                           
                          Karthikeyan · ram · RMManoharan Up Voted
                          • PP.Padmanabhan  
                            இந்தசெயல்கள் எல்லோருக்குமே அவமானம் அரசு எப்படி நீதியை மறைக்க முயற்சிக்கிறது !
                            Points
                            24430
                            about 7 hours ago
                             (3) ·  (0)
                             
                            ram · RMManoharan Up Voted
                            • Balagan Krishnan  
                              மரண தண்டனை என்ன எந்த தண்டனையும் வேண்டாம் இந்த நாட்டிற்கு. இந்திய வில் பணத்திற்கு மனிதன் அடிமையாய் உள்ளன்.மேலை நாடுகள் இப்படி இல்லை.
                              about 8 hours ago
                               (0) ·  (0)
                               
                              • RRamani.N  
                                granite முறைகேடு ஏதும் நடந்ததா, இழப்பின் மதிப்பீடு என்ன என்பது போன்ற விவகாரங்களை ஆராயப் போனவர் "நரபலி' விவகாரத்தில் இப்படி நடந்து கொண்டதால், Stunt Sagayam என பெயரெடுத்துவிடப்போகிறார்!
                                Points
                                1195
                                about 8 hours ago
                                 (0) ·  (4)
                                 
                                jose · Baskaran · ram · RMManoharan Down Voted
                                • R.M.Manoharan Manoharan  
                                  நரபலியும் கிரிமினல் குற்றம்தானே? அதற்கும் ஒத்துழைக்காமல் போலீஸ் ஏன் ஸ்டன்ட் அடித்தது?
                                  about 2 hours ago
                                   (0) ·  (0)
                                   
                                • KKarthikeyan  
                                  சகாயம் அவர்களுக்கு மதுரை இறைவன் துனை நிற்பார். ஆனால் இது போன்ற நேர்மையான அதிகாரிகளை தமிழன் ஒரு போதும் ஆதரிக்க மாட்டான்.
                                  about 8 hours ago
                                   (1) ·  (0)
                                   
                                  jose Up Voted
                                  • AMAnupriya Murugesan  
                                    ஒரு அரசு அதிகாரிக்கே அரசிடமிருந்து முழுமையான ஒத்துழைப்பு இல்லை எனில் சராசரி மனிதராகிய நம் ஒவ்வொருவரும் இந்த அரசினை சிறு சிறு தேவைகளுக்காக, நியத்திர்க்காக அணுகுவது பயனற்றதே........இது அல்லவா மக்களாட்சி.............................
                                    about 8 hours ago
                                     (1) ·  (0)
                                     
                                    ram Up Voted
                                    • AArunkumar  
                                      நாடே ஊழல் வசம் இருக்கும் பச்சத்தில் தனி ஒருவனாக நாட்டுக்காக உழைக்கும் மாமனிதர் ...... உங்களை போல் மற்ற அதிகாரிகள் கிடைத்தால் தமிழ்நாடு தன்னிகரற்று விளங்கும் .......
                                      about 8 hours ago
                                       (1) ·  (0)
                                       
                                      ram Up Voted
                                      • JJAGADISAN  
                                        ஐயா சகாயம் அவர்களே IAS படித்தவன் எல்லாம் பல கோடி பல ஆயிரம் கோடி சம்பாதிக்கும் இந்த காலத்தில் நீங்கள் இப்படி இருந்தால் நல்லது இல்லை உங்களுக்கு காரணம் நன்றிகெட்ட தமிழக மக்கள் கெட்டவர்களுக்கு தலை வணங்கி பழக்கப்பட்டு விட்டோம்
                                        Points
                                        505
                                        about 8 hours ago
                                         (0) ·  (0)
                                         
                                        • GJ Suresh  
                                          என் தாய் நாடு் என்ன பாவம் கண்டதோ! தெரியவில்லை,நல்ல மனிதரை என் தாய் நாடு உன்னை முதல்வராய் ஆக்காமல் ஊனமாய் போனதே!...
                                          Points
                                          165
                                          about 8 hours ago
                                           (0) ·  (0)
                                           
                                          • Ssimeon  
                                            திரு சகாயம் போன்ற பல அதிகாரிகல் தமிழகத்தில் முளைகனும் ,உண்மையான "தனி ஒருவன் " அவர் மட்டும் தான் , வாழ்க தமிழகம் .......
                                            about 8 hours ago
                                             (0) ·  (0)
                                             
                                            • RSR Sundaram  
                                              சட்ட ஆணையர் சகாயம் அவர்களின் விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்ட / ஒத்துழைக்க மறுத்த சம்பந்தப் பட்ட எல்லா அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படுமா. .
                                              Points
                                              7980
                                              about 9 hours ago
                                               (0) ·  (0)
                                               
                                              • Palaniyappan Karthik  
                                                ஓர் அர்ப்பணிப்பு, ஓர் துனிச்சல் , ஓர் கடமை உணர்வு . மொத்தத்தில் உண்மையின் ஓர் உருவம் .
                                                Points
                                                160
                                                about 9 hours ago
                                                 (0) ·  (0)
                                                 
                                                • MM.Jagannathan  
                                                  நேர்மையான ஆட்சியாளர்களுக்கு ,எந்த ஆணையமும் தேவை இல்லை .நீதி கிடைக்கும் அவ்வாறு நேர்மையற்ற ஆட்சியாளர்க்களுக்கு எத்தனை ஆணையம் வந்தாலும் நீதி என்பது கிடைக்காது என்பது uruthi.
                                                  Points
                                                  1620
                                                  about 9 hours ago
                                                   (0) ·  (0)
                                                   
                                                  • Vivek N  
                                                    ஒருவர் நேர்மையா இருந்தா அவனவன் பேண்ட்லையே உச்சா போறான்.இதான் உண்மையின் பலம்
                                                    about 9 hours ago
                                                     (0) ·  (0)
                                                     
                                                    • Ggopi  
                                                      அம்மா தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தாரோ ?
                                                      Points
                                                      170
                                                      about 9 hours ago
                                                       (0) ·  (0)
                                                       
                                                      • சNசேரமான் nadunilai  
                                                        தோட்டம் காக்க போட்ட வேலி பயிரை தின்பதோ ! அதை கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ !
                                                        Points
                                                        14530
                                                        about 10 hours ago
                                                         (0) ·  (0)
                                                         
                                                        • GJ Suresh  
                                                          என் தாய் நாடு் என்ன பாவம் கண்டதோ! தெரியவில்லை,நல்ல மனிதரை என் தாய் நாடு உன்னை முதல்வராய் ஆக்காமல் ஊனமாய் போனதே!...
                                                          Points
                                                          165
                                                          about 10 hours ago
                                                           (0) ·  (0)
                                                           
                                                          • CChokkappa  
                                                            எப்போதும் நடைபெறும் வழக்கமான ஒத்துழையாமை. அரசின் மோசமான நடவடிக்கை.சகாயத்தின் நேர்மைக்கு நல்ல பரிசு; அரசால் அங்கீகரிக்கப்பட்டு எல்லா துறைகளாலும் ஊகுவிக்கபட்ட பட்டவர்த்தமான மோசடி.
                                                            Points
                                                            150
                                                            about 10 hours ago
                                                             (0) ·  (0)
                                                             
                                                            • Mmurugesan  
                                                              நாம் இருப்பது ஜனநாயக நாடு தானா?
                                                              about 10 hours ago
                                                               (0) ·  (0)
                                                               
                                                              • MM.Jagannathan  
                                                                சட்ட ஆணையர் சகாயம் அவர்களுக்கு அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்பது தொடர் நிகழ்வு நீதிமன்றம் நியமித்த விசாரணை ஆணையத்துக்கு இந்த நிலை என்றால் மக்கள் வாழ தகுதி அற்ற மாநிலமாக உள்ளது ,என்பதை காட்டுகிறது மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் அதற்கே இந்த நிலை.என்ன சொல்வது.சட்ட மன்றத்திலும் சரி நீதி மன்றத்திலும் சரி நான் வைப்பதே சட்டம் என்கிரார முதல்வர் .விளக்கம் அளிப்பது யார்!.
                                                                Points
                                                                1620
                                                                about 10 hours ago
                                                                 (1) ·  (0)
                                                                 
                                                                Baskaran Up Voted
                                                                • BBalakrishnan.  
                                                                  மதுரையில் கிரானைட்முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக திரு.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களின் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப் பட்டது. உயர்நீதி மன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது. தமிழக அரசு இவ்விசாரணையை விரும்பவில்லை.துவக்கத்திலிருந்தே விசாரணையை முடக்குவதற்கு பெரும் முயற்சியை செய்தது. அந்த விசாரணை அலுவலகத்துக்கு வாடகை கூட கொடுக்காமல் முடிந்தவரையில் இடையூறுகளை செய்தது. இத்தனை தடைகளையும் மீறி திரு.சகாயம் அவர்கள் வெற்றிகரமாக தனதுவிசாரணையை மேற்கொண்டார். அவ்விசாரணை இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் குவாரியில் நடத்தப்பட்ட நரபலிகள் குறித்து ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அவர் பிணங்கள் புதைக்கப்பட்ட இடத்தையும் காட்டியிருக்கிறார் அந்த இடத்தில் ஆய்வு நடத்த அவர் செல்லும்போது அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை. உண்மையை வெளிக்கொண்டுவரும் உத்வேகத்தில் அவர் இரவு முழ்ய்வதும் சுடுகட்டிலேயே தங்கி விட்டார். இன்று காலை அந்த இடத்தில் சில எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. தமிழக அரசின் ஒத்துழையாமைக்கு காரணம் புரிகிறது. யாரை காப்பாற்ற அரசு இந்த முயற்சிகளை செய்கிறது?
                                                                  Points
                                                                  6730
                                                                  about 10 hours ago
                                                                   (1) ·  (0)
                                                                   
                                                                  Baskaran Up Voted
                                                                  • சமசரவணகுமார் மு  
                                                                    இப்படியும் ஒரு மனிதனா,தமிழனின் தலை நிமிரும் அது உங்களால் ..........திமுகவும் அதிமுகவும் மாறிமாறி செய்த பித் தலாடங்கள் வெளிவர தொடங்கியுள்ளன ............இரண்டு கட்சிகளுக்கும், மக்களின் கைவிரலால் சமாதிகட்டும் நாள் தொலைவில் இல்லை .........
                                                                    Points
                                                                    625
                                                                    about 10 hours ago
                                                                     (0) ·  (0)
                                                                     
                                                                    • SAsridhar Arumbakam  
                                                                      This the fate of Us. My prayers to Lord Krishna to go along with Shri Sagayam as his shadow so as to save him as HE saved so many in kaliug
                                                                      about 10 hours ago
                                                                       (0) ·  (0)
                                                                       
                                                                      • CJcrimson jeba  
                                                                        இவ்வளவு கேவலமாக தமிழ் நாடு போலிஸ் செயல்படுவது, அனைவருக்கும் வெட்ககேடு. ஒரு பெருந்தவறை மறைக்க பார்க்கும் பொலிசாரும் குற்றவாளிகளே. இவர்கள் குற்ற வாளிகளை பிடிக்க சம்பளம் பெறுகிறார்களா அல்லது குட்ட்ரங்க்ளை மறைக்க பெறுகிறார்களா என தெரியவில்லை. அனால் ஒன்று மட்டும் உண்மை அதாவது மேலிட உத்தரவின்றி இவர்கள் இப்படி செயல் படுவது இல்லை. சகாயத்திற்கு ஆதரவு தந்த மக்களுக்கு நன்றி. கிரிம்சன், லிப்யா
                                                                        Points
                                                                        750
                                                                        about 10 hours ago
                                                                         (1) ·  (0)
                                                                         
                                                                        Baskaran Up Voted
                                                                        • JJ  
                                                                          Dear Sir, Only you have published this in a daring manner! Other tamil dailies are scared ! People like Sahayam will get great co operation and admiration in some other States! Where is Tamilnadu going?????
                                                                          Points
                                                                          325
                                                                          about 10 hours ago
                                                                           (0) ·  (0)
                                                                           
                                                                          • PPremanand  
                                                                            பாராட்டுகள் சகாயதிற்கும் மற்றும் அவருக்காக ஒரு மணிக்கு மயானத்திற்கு சென்று ஆதரவளித்த அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்!!
                                                                            about 10 hours ago
                                                                             (0) ·  (0)
                                                                             
                                                                            • MManickam  
                                                                              மயானத்தில் நடைபெற்ற உண்மை சம்பவகளை முழுமையாக படத்துடன் தெரிவித்த தி ஹிந்துவுக்கு முதல் நன்றி .மேலும் திரு .சகாயம் அவர்களின் குழுவினருக்கு ,மாவட்ட நிர்வாகம், காவல் துறை ,உதவாதது ,சந்தேகத்திற்கு இடமளிப்பதாக உள்ளது .நீதிமன்றம் உத்தரவிட்ட பணிய செய்ய இவளவு தடங்கல் என்றல் ,அரசாங்கம் இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறது ."தன் கடமையா செய்ய சுடுகாட்டில் காவலிருந்த திரு .சகாயம் குழுவினரின் கடமையா போற்றுவும் .
                                                                              Points
                                                                              3335
                                                                              about 10 hours ago
                                                                               (0) ·  (0)
                                                                               
                                                                              • NNarmadha  
                                                                                இந்த பாவம் யாரைச் சேரும்?
                                                                                Points
                                                                                720
                                                                                about 10 hours ago
                                                                                 (1) ·  (0)
                                                                                 
                                                                                Baskaran Up Voted
                                                                                • SJS Jayabalan  
                                                                                  எப்படியாவது உண்மை வெளிவரவேண்டும்.
                                                                                  Points
                                                                                  915
                                                                                  about 10 hours ago
                                                                                   (0) ·  (0)
                                                                                   
                                                                                  • YYuvaraj  
                                                                                    போதுமான பாதுகாப்பு தராமல் காவல் துறை இப்படி செய்வது மிகவும் கண்டனத்துக்குரியது. அனைவருக்கும் இந்த குற்றத்தில் பங்கு இருப்பதால் தான் தாமதத்தை ஏற்படுத்துகிறார்கள். அனைவரையும் தண்டிக்க வேண்டும் அதும் கடுமையாக தண்டிக்க வேண்டும்.
                                                                                    about 11 hours ago
                                                                                     (0) ·  (0)
                                                                                     
                                                                                    • Rranjith  
                                                                                      காவல் துறை,அரசு அதிகாரிகளும் மெத்தனபொக்குடன் செயல் படுவதை கவனிக்கத்தக்கது.
                                                                                      Points
                                                                                      23205
                                                                                      about 11 hours ago
                                                                                       (0) ·  (0)
                                                                                       
                                                                                      • RRamakrishnan  
                                                                                        Nermaiyana athikarikalukku ella idathilum prachanaithan...
                                                                                        Points
                                                                                        405
                                                                                        about 11 hours ago
                                                                                         (0) ·  (0)
                                                                                         
                                                                                        • Tthudupathichinnaiyan  
                                                                                          இங்கு என்னதான் நடக்கிறது ? சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து போயி உள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு .உயர் நீதி மன்றத்தால் சட்ட ஆணையராக நியமனம் செய்யபட்ட ஒருவருக்கு ஒத்துழைக்க மறுப்பது நீதி மன்ற அவமதிப்பு இல்லையா?
                                                                                          Points
                                                                                          645
                                                                                          about 11 hours ago
                                                                                           (1) ·  (0)
                                                                                           
                                                                                          Baskaran Up Voted
                                                                                          • NNathan  
                                                                                            இது தான் அரசு எந்திரம் செயல் படும் நிலைமை. அதிகாரம் மிக்க அரசு அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பொதுமக்களின் நிலைமை ?
                                                                                            Points
                                                                                            1105
                                                                                            about 11 hours ago
                                                                                             (0) ·  (0)
                                                                                             
                                                                                            • Jjoe  
                                                                                              நியாயத்திற்கு காலமே இல்லை
                                                                                              about 11 hours ago
                                                                                               (0) ·  (0)
                                                                                               
                                                                                              • TST. siva  
                                                                                                முன்னாள் ஆட்சியர் மற்றும் சட்ட ஆணையர் சகாயத்திற்கு வேண்டுமென்றே ஒத்துழைப்பு தராமல் அப்பட்டமாக இழுத்தடிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. எனவே இதில் தொடர்புடைய வருவாய் துறை, காவல் துறை மற்றும் மருத்துவ அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

                                                                                              நன்றி = த  இந்து

                                                                                              0 comments: