![இடது - மேலே: மயானத்தில் கட்டில் இட்டு உறங்கிய சகாயம் | இடது கீழே: காலையில் நடைபெற்ற தோண்டும் பணி | வலது: எலும்பு ஒன்றை எடுத்து அளித்த ஊழியர் | படங்கள்: ஜேம்ஸ், அசோக் இடது - மேலே: மயானத்தில் கட்டில் இட்டு உறங்கிய சகாயம் | இடது கீழே: காலையில் நடைபெற்ற தோண்டும் பணி | வலது: எலும்பு ஒன்றை எடுத்து அளித்த ஊழியர் | படங்கள்: ஜேம்ஸ், அசோக்](http://tamil.thehindu.com/multimedia/dynamic/02546/saga_2546301f.jpg)
இடது - மேலே: மயானத்தில் கட்டில் இட்டு உறங்கிய சகாயம் | இடது கீழே: காலையில் நடைபெற்ற தோண்டும் பணி | வலது: எலும்பு ஒன்றை எடுத்து அளித்த ஊழியர் | படங்கள்: ஜேம்ஸ், அசோக்
மதுரை அருகே கிரானைட் குவாரிக்காக நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்படும் மயானத்தில் சட்ட ஆணையர் சகாயம் விடிய விடிய முகாமிட்டிருந்தார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சந்தேகத்துக்குரிய அந்த இடத்தில் இருந்து எலும்புகள் தோண்டியெடுக்கப்பட்டன.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடுகள் குறித்து சட்ட ஆணையர் சகாயம், பல கட்டங்களாக விசாரணை நடத்தி வருகிறார்.
கீழவளவைச் சேர்ந்த சேவற்கொடியோன் என்பவர் பிஆர்பி கிரானைட் நிறுவனத்தில் வாகன ஓட்டுநராக 1999-ம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை பணியாற்றினார். இவர் சகாயத்திடம் அளித்த புகாரில், மனநலம் பாதித்தவர்களை அழைத்து வரும்படி நிறுவனத்தினர் உத்தரவிட்டபடி செயல்பட்டேன். அதில் 2 பேரை, மேலூர் அருகே இ.மலம்பட்டியில் நரபலி கொடுத்து புதைத்ததை பார்த்ததாகத் தெரிவித்திருந்தார்.
பிஆர்பி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நரபலி கொடுக்கப்பட்டு, சின்ன மலம்பட்டியில் புதைக்கப்பட்டதாக பிஆர்பி நிறுவன முன்னாள் ஓட்டுநர் சேவற்கொடியோன் என்பவர் சகாயத்திடம் புகார் அளித்தார். இதையடுத்து, நரபலி கொடுக்கப்பட்டவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தைத் தோண்டி உண்மையை கண்டறிய சகாயம் முடிவு செய்தார். இது தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகளுக்கும், மதுரை அரசு மருத்துவமனை டீனுக்கும் தகவல் அளித்தார்.
1999-ம் ஆண்டில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படும் சின்ன இ.மலம்பட்டி மணிமுத்தாறு ஓடைக்கு சகாயம் நேற்று சென்றார். சேவற்கொடியோன் அடையாளம் காட்டிய இடத்தை இயந்திரம் மூலம் தோண்ட அதிகாரிகளுக்கு சகாயம் உத்தரவிட்டார். இயந்திரத்தை தவிர்த்து ஆட்களை வைத்து தோண்டலாம் என மாவட்ட எஸ்பி தகவல் தெரிவித்தார்.
மாலையில் மீண்டும் இ.மலம்பட்டிக்கு சகாயம் திரும்பும்வரை தோண்டும் பணி நடக்கவில்லை. கிராம நிர்வாக அதிகாரி புகார் அளித்து, வழக்கு பதிவு செய்ய வேண்டும். ஆட்சியர் அல்லது, மருத்துவக்கல்லூரி முதல்வர் உத்தரவின்பேரிலேயே மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்தில் உடல் பரிசோதனையில் ஈடுபடுவர் என சகாயத்திடம் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாலை 6 மணிக்குப்பின்னர் உடல் பரிசோதனை செய்ய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த சகாயம், திட்டமிட்டே பல்வேறு துறையினரும் சேர்ந்து காலம் தாழ்த்துவதாக குற்றம்சாட்டினார். குறிப்பிட்ட இடத்தைத் தோண்டும் வரை சம்பவ இடத்தை விட்டு செல்ல மறுத்து அங்கேயே அமர்ந்தார்.
விடிய விடிய மயானத்தில்...
இதனிடையே, நரபலி மரணம் குறித்து சேவற்கொடியோன் கிராம நிர்வாக அலுவலர் அழகுராஜாவிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரை கோட்டாட்சியர் செந்தில்குமாரி கீழவளவு போலீஸாருக்கு அனுப்பினார். உடனடியாக, அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வளவு நடைபெற்றும் மயானத்துக்கு மருத்துவக்குழு வருவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் அரசு மருத்துவமனை டீன் ரேவதியை தொடர்பு கொண்டு, மருத்துவக்குழு வராதது குறித்து சகாயம் தெரிவித்தார். அதற்கு டீன், தனக்கு போலீஸாரிடம் இருந்து முறைப்படி தகவல் வரவில்லை என்றார். பின்னர் மருத்துவக் குழு அமைக்கப்பட்டது.
அந்தக்குழு, நேற்று பகல் 3 மணிக்கு மேலூர் வந்தது. இருப்பினும், அந்தக் குழுவை சின்னமலம்பட்டிக்குள் போலீஸார் உடனடியாக அனுமதிக்கவில்லை. மருத்துவக் குழுவை மேலூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், சுமார் 3 மணி நேரம் இருக்கச் செய்து பின்னர் மயானத்துக்கு அனுப்பினர். அவர்களுக்காக சகாயம் அங்கேயே காத்திருந்தார்.
ஆட்சியர் உத்தரவிட்டால்தான் பணிகளை மேற்கொள்வோம் என மருத்துவக் குழு தெரிவித்தது. அதற்கு, நான் உயர் நீதிமன்றம் நியமனம் செய்த சட்ட ஆணையர், நான் எழுத்துபூர்வமாக உத்தரவு பிறப்பிக்கிறேன், நீங்கள் பணியை மேற்கொள்ளலாம் என்றார். அதையேற்க மருத்துவக்குழு மறுத்துவிட்டது. இதை டீனிடம் சகாயம் தெரிவித்தார்.
இருள் சூழத் தொடங்கியதால் ஜெனரேட்டர் கொண்டுவந்து விளக்குகளை அமைக்குமாறு வட்டாட்சியரிடம், கிராம நிர்வாக அதிகாரியிடமும் சகாயம் தெரிவித்தார். ஆனால், அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் தனியே ஒரு இடத்தில் போய் நின்று கொண்டனர். அவர்களிடம் சகாயம் மீண்டும் கேட்டபோது, ஆட்சியரிடம் கேட்டுத்தான் செய்ய முடியும் என்றனர். பின்னர் போலீஸாரும் அங்கிருந்து செல்லத் தொடங்கினர். சகாயம் குழுவினர் மட்டும் செய்வதறியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தனர்.
வேகமாக பரவிய தகவல்...
இந்நிலையில், எந்தவித பாதுகாப்பும் இன்றி மயானத்தில் சகாயம் குழுவினர் நிற்கும் தகவல் வேகமாகப் பரவியது. இதையடுத்து, அரிட்டாபட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் ஜெனரேட்டருடன் ஆபரேட்டர் ஒருவரையும் சின்னமலம்பட்டிக்கு அனுப்பினார். கீழையூரில் அவர்களை வழிமறித்த போலீஸார், ஜெனரேட்டர் பிளக்கை பறித்துக் கொண்டு அனுப்பினர். ஒருவழியாக ஜெனரேட்டர் மயானத்துக்கு வந்து சேர்ந்தது. ஆனால், பிளக் இல்லாததால் ஜெனரேட்டரை இயக்க முடியவில்லை.
இதையடுத்து, இரவு 7 மணிக்கு மதுரை மாவட்ட எஸ்பி விஜயேந்திரபிதாரி மயானத்துக்கு வந்தார். அவரிடம், போலீஸார் தனக்கு ஒத்துழைக்கவில்லை என சகாயம் பகிரங்கமாக புகார் தெரிவித்தார்.
அதற்கு எஸ்பி, போலீஸார் ஒத்துழைப்பு தராமல் இல்லை. இப்போது இருட்டிவிட்டது. காலையில் தோண்டலாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார். மருத்துவக்குழுவினர், போலீஸார் அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இங்கிருந்து சென்றுவிட்டால் இரவோடு இரவாக மயானத்தை தோண்டி சடலங்களை எடுத்துச் சென்று விடுவார்கள் என நினைத்த சகாயமும், அவரது குழுவினரும் மயானத்தை விட்டு செல்லாமல் அங்கேயே இருந்து விட்டனர். ஒரு கட்டிலை வரவழைத்து மயானத்திலேயே சகாயம் படுத்துக் கொண்டார். அவரது குழுவினர் காரில் காத்திருந்தனர்.
இந்நிலையில், மயானத்தில் எவ்வித பாதுகாப்பு இல்லாமல் சகாயம் குழுவினர் இருக்கும் தகவல் பரவியதால் பலர் சகாயத்தை தேடி வரத் தொடங்கினர். இரவு 1 மணிக்கு ஆம் ஆத்மி, சட்டப் பஞ்சாயத்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மயானத்துக்கு வந்தனர். தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்களும் சகாயத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
எலும்புகள் தோண்டியெடுப்பு...
இந்த நிலையில், இன்று காலை விடிந்ததும் சகாயம் குழுவினர் 3 பேர் மயானத்தில் இருக்க சகாயம் மற்றும் இருவர் அங்கிருந்து சென்று குளித்துவிட்டு திரும்பி வந்தனர். அதன்பின் காலை 9 மணியளவில், மருத்துவக் குழுவினர் மயானத்துக்கு வந்தனர். இதைத்தொடர்ந்து, சேவற்கொடியோன் அடையாளம் காட்டிய இடத்தை ஆட்கள் தோண்டினர். அப்போது அங்கு வந்த சகாயம், சில உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.
பின்னர், 10 அடி ஆழம் தோண்டப்பட்டு அடுத்தடுத்து சுமார் ஏழு மாதக் குழந்தை உட்பட 4 சடலங்களின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டன. அவை ஆம்புலன்ஸில் மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மாலை 5 மணியளவில் சகாயம் குழுவினர் சின்ன மலம்பட்டியில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
- B Rநீதி மன்றம் தான் எத்தகைய தருணங்களில் விசாரணை அதிகாரியின் உத்தரவின் படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும் என நியமனத்தில் குறிபிடுவது நல்லது . இதற்க்கு மற்றைய மேலதிகாரியின் உத்தரவு தேவையற்றது என குறிப்பிட்டால் தான் விசாரணையில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க முடியும்Points260
- RSR Sundaramஇந்த நிகழ்ச்சிகள் அரசு அதிகாரிகளுக்கும் கிரானைட் உரிமையாளருக்கும் இடையே உள்ள நல்லுறவு புரிதலை தெளிவாக்குகிறது. நல்ல வேளையாக சஹாயத்தின் பாதுகாவலர்கள் அவரை அமாவசை இருட்டில் அம்போ என்று விட்டு விடாமல் கூட இருந்தார்களே.Points7980
Vivek Vivek
ஒரு nermaiyana சிறந்த உயர் அதிகரிகே எந்த ஒரு நிலைமை என்றால் பாருங்கள்....இந்திய அரசியல் அமைம்பின் இலட்சணத்தை.....about an hour agoJagath Venkatesan
இதைத்தான் கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதைன்னு சொல்லறாங்களோ ...Points1195- SKSundar Kurumpanaiசகாயத்தின் பணியை பாராட்ட வார்த்தைகள் இல்லை , இந்த அரசு நிர்வாகம் அவ௫க்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அவ௫க்கு தீமை செய்யாமல் இ௫ந்ததாலே போதும், உண்மைகள் அனைத்தும் வெளிவ௫ம்.Points180
Shanmugam Sankaralingam
சந்தேகமென்ன சகாயம் கண்டுபிடித்தது மைனிங் மாப்பியா கும்பலைத்தான்.புரையோடிப்போன நிர்வாக சீர்கேடு. எமெர்ஜென்சி போடலாம் சட்ட ஒழுங்கு போச்சு.Points1835- SGs. Gokarnesanசகாயம் நிச்சயம் ஊழலுக்கு சகாயம் செய்யமாட்டார் எனபது எல்லோருக்கும் தெரிந்த உண்மை.Points3390
- Ssenthamillselvanமடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம். அதிமுக அரசு நிர்வாகம் ஒத்துழைக்காததை பார்த்தால் சந்தேகம் வலுக்கிறது.Points48700
- PP.Padmanabhanஇந்தசெயல்கள் எல்லோருக்குமே அவமானம் அரசு எப்படி நீதியை மறைக்க முயற்சிக்கிறது !Points24430
Balagan Krishnan
மரண தண்டனை என்ன எந்த தண்டனையும் வேண்டாம் இந்த நாட்டிற்கு. இந்திய வில் பணத்திற்கு மனிதன் அடிமையாய் உள்ளன்.மேலை நாடுகள் இப்படி இல்லை.about 8 hours ago- RRamani.Ngranite முறைகேடு ஏதும் நடந்ததா, இழப்பின் மதிப்பீடு என்ன என்பது போன்ற விவகாரங்களை ஆராயப் போனவர் "நரபலி' விவகாரத்தில் இப்படி நடந்து கொண்டதால், Stunt Sagayam என பெயரெடுத்துவிடப்போகிறார்!Points1195
R.M.Manoharan Manoharan
நரபலியும் கிரிமினல் குற்றம்தானே? அதற்கும் ஒத்துழைக்காமல் போலீஸ் ஏன் ஸ்டன்ட் அடித்தது?about 2 hours ago
- KKarthikeyanசகாயம் அவர்களுக்கு மதுரை இறைவன் துனை நிற்பார். ஆனால் இது போன்ற நேர்மையான அதிகாரிகளை தமிழன் ஒரு போதும் ஆதரிக்க மாட்டான்.about 8 hours ago
- AMAnupriya Murugesanஒரு அரசு அதிகாரிக்கே அரசிடமிருந்து முழுமையான ஒத்துழைப்பு இல்லை எனில் சராசரி மனிதராகிய நம் ஒவ்வொருவரும் இந்த அரசினை சிறு சிறு தேவைகளுக்காக, நியத்திர்க்காக அணுகுவது பயனற்றதே........இது அல்லவா மக்களாட்சி.............................about 8 hours ago
- RSR Sundaramசட்ட ஆணையர் சகாயம் அவர்களின் விசாரணைக்கு முட்டுக்கட்டை போட்ட / ஒத்துழைக்க மறுத்த சம்பந்தப் பட்ட எல்லா அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படுமா. .Points7980
Palaniyappan Karthik
ஓர் அர்ப்பணிப்பு, ஓர் துனிச்சல் , ஓர் கடமை உணர்வு . மொத்தத்தில் உண்மையின் ஓர் உருவம் .Points160- MM.Jagannathanநேர்மையான ஆட்சியாளர்களுக்கு ,எந்த ஆணையமும் தேவை இல்லை .நீதி கிடைக்கும் அவ்வாறு நேர்மையற்ற ஆட்சியாளர்க்களுக்கு எத்தனை ஆணையம் வந்தாலும் நீதி என்பது கிடைக்காது என்பது uruthi.Points1620
- சNசேரமான் nadunilaiதோட்டம் காக்க போட்ட வேலி பயிரை தின்பதோ ! அதை கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ !Points14530
- MM.Jagannathanசட்ட ஆணையர் சகாயம் அவர்களுக்கு அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்பது தொடர் நிகழ்வு நீதிமன்றம் நியமித்த விசாரணை ஆணையத்துக்கு இந்த நிலை என்றால் மக்கள் வாழ தகுதி அற்ற மாநிலமாக உள்ளது ,என்பதை காட்டுகிறது மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் அதற்கே இந்த நிலை.என்ன சொல்வது.சட்ட மன்றத்திலும் சரி நீதி மன்றத்திலும் சரி நான் வைப்பதே சட்டம் என்கிரார முதல்வர் .விளக்கம் அளிப்பது யார்!.Points1620
- BBalakrishnan.மதுரையில் கிரானைட்முறைகேடுகள் குறித்து விசாரணை செய்வதற்காக திரு.சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்களின் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப் பட்டது. உயர்நீதி மன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது. தமிழக அரசு இவ்விசாரணையை விரும்பவில்லை.துவக்கத்திலிருந்தே விசாரணையை முடக்குவதற்கு பெரும் முயற்சியை செய்தது. அந்த விசாரணை அலுவலகத்துக்கு வாடகை கூட கொடுக்காமல் முடிந்தவரையில் இடையூறுகளை செய்தது. இத்தனை தடைகளையும் மீறி திரு.சகாயம் அவர்கள் வெற்றிகரமாக தனதுவிசாரணையை மேற்கொண்டார். அவ்விசாரணை இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் குவாரியில் நடத்தப்பட்ட நரபலிகள் குறித்து ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அவர் பிணங்கள் புதைக்கப்பட்ட இடத்தையும் காட்டியிருக்கிறார் அந்த இடத்தில் ஆய்வு நடத்த அவர் செல்லும்போது அரசு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை. உண்மையை வெளிக்கொண்டுவரும் உத்வேகத்தில் அவர் இரவு முழ்ய்வதும் சுடுகட்டிலேயே தங்கி விட்டார். இன்று காலை அந்த இடத்தில் சில எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. தமிழக அரசின் ஒத்துழையாமைக்கு காரணம் புரிகிறது. யாரை காப்பாற்ற அரசு இந்த முயற்சிகளை செய்கிறது?Points6730
- சமசரவணகுமார் முஇப்படியும் ஒரு மனிதனா,தமிழனின் தலை நிமிரும் அது உங்களால் ..........திமுகவும் அதிமுகவும் மாறிமாறி செய்த பித் தலாடங்கள் வெளிவர தொடங்கியுள்ளன ............இரண்டு கட்சிகளுக்கும், மக்களின் கைவிரலால் சமாதிகட்டும் நாள் தொலைவில் இல்லை .........Points625
- SAsridhar ArumbakamThis the fate of Us. My prayers to Lord Krishna to go along with Shri Sagayam as his shadow so as to save him as HE saved so many in kaliugabout 10 hours ago
- CJcrimson jebaஇவ்வளவு கேவலமாக தமிழ் நாடு போலிஸ் செயல்படுவது, அனைவருக்கும் வெட்ககேடு. ஒரு பெருந்தவறை மறைக்க பார்க்கும் பொலிசாரும் குற்றவாளிகளே. இவர்கள் குற்ற வாளிகளை பிடிக்க சம்பளம் பெறுகிறார்களா அல்லது குட்ட்ரங்க்ளை மறைக்க பெறுகிறார்களா என தெரியவில்லை. அனால் ஒன்று மட்டும் உண்மை அதாவது மேலிட உத்தரவின்றி இவர்கள் இப்படி செயல் படுவது இல்லை. சகாயத்திற்கு ஆதரவு தந்த மக்களுக்கு நன்றி. கிரிம்சன், லிப்யாPoints750
- MManickamமயானத்தில் நடைபெற்ற உண்மை சம்பவகளை முழுமையாக படத்துடன் தெரிவித்த தி ஹிந்துவுக்கு முதல் நன்றி .மேலும் திரு .சகாயம் அவர்களின் குழுவினருக்கு ,மாவட்ட நிர்வாகம், காவல் துறை ,உதவாதது ,சந்தேகத்திற்கு இடமளிப்பதாக உள்ளது .நீதிமன்றம் உத்தரவிட்ட பணிய செய்ய இவளவு தடங்கல் என்றல் ,அரசாங்கம் இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறது ."தன் கடமையா செய்ய சுடுகாட்டில் காவலிருந்த திரு .சகாயம் குழுவினரின் கடமையா போற்றுவும் .Points3335
- RRamakrishnanNermaiyana athikarikalukku ella idathilum prachanaithan...Points405
- Tthudupathichinnaiyanஇங்கு என்னதான் நடக்கிறது ? சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்து போயி உள்ளது என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு .உயர் நீதி மன்றத்தால் சட்ட ஆணையராக நியமனம் செய்யபட்ட ஒருவருக்கு ஒத்துழைக்க மறுப்பது நீதி மன்ற அவமதிப்பு இல்லையா?Points645
நன்றி = த இந்து
0 comments:
Post a Comment