Wednesday, September 30, 2015

'புலி' -20 ரகசியங்கள்

'புலி' படத்தில் விஜய்

'புலி' படத்தில் விஜய்
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், பிரபு, விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'புலி'. தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன்ஸ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அக்டோபர் 1ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
படத்தைப் பற்றிய விஷயங்களை மிகவும் ரகசியமாக வைத்திருக்கும் படக்குழு கூறிய 20 விஷயங்கள் இதோ..
* இக்கதையை எழுதும் போதே, நாயகனாக விஜய்யை மனதில் வைத்து எழுதியிருக்கிறார் இயக்குநர் சிம்புதேவன். கதையை விஜய் கேட்டவுடன், "சூப்பராக இருக்கிறது. கண்டிப்பாக பண்றேன். இதை முழுமையாக அப்படியே பண்ணிவிடுங்கள். அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கக் கூடிய கதையாக இருப்பதால் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.
* ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் முதலில் பெரிய இடத்தில் இரண்டு ஸ்டூடியோ அமைத்து, அதற்குள் அரங்குகள் அமைத்திருக்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அரங்குகள் அமைக்கும் பெரிய ஸ்டூடியோ சென்னை, ஹைதராபாத் எங்குமே இல்லை.
* கலை இயக்குநர் முத்துராஜ் இப்படத்தில் தயாரிப்பு வடிவமைப்பில் முழுக்க பணியாற்றி இருக்கிறார். படத்தின் துவக்கத்தில் இருந்து, இறுதி வரை இப்படம் எப்படி தயாரிக்கலாம் என்பதில் தொடங்கி உடைகள், அரங்குகள் என அனைத்துமே முத்துராஜின் கைவண்ணம் தான்.
* 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தைத் தொடர்ந்து நிறைய கதைகள் கேட்டேன், எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு பிடித்திருந்தால் பண்ணுகிறேன் என்று கூறிவிட்டு தான் சிம்புதேவனிடம் கதையைக் கேட்டிருக்கிறார் ஸ்ரீதேவி. 'புலி' கதையைக் கேட்டவுடன் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
* ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் இருவருமே நாயகிகளாக நடித்திருந்தாலும் முதன்மை நாயகி ஸ்ருதிஹாசன் தான். காட்டுக்குள் படப்பிடிப்பு நடந்த போது உடல்நிலை சரியில்லாமல், மலை மீது ஏறி படப்பிடிப்பில் பங்கேற்று படக்குழுவை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார்.
* ஹன்சிகா ஒரு இளவரசி பாத்திரத்தில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு 9 மணிக்கு என்றால், இளவரசிக்கான மேக்கப் போட மூன்று மணி நேரம் ஆகும். ஆகையால் 6 மணிக்கே படப்பிடிப்பு வந்து மேக்கப் பணிகள் எல்லாம் முடித்து 9 மணிக்கு படப்பிடிப்பு தயாராக இருப்பாராம் ஹன்சிகா.
* தம்பி ராமையா, சத்யன், ரோபோ சங்கர், வித்யூ, இமான் அண்ணாச்சி என காமெடி கூட்டணிகள் விஜய்யோடு இணைந்து பண்ணியிருக்கும் காமெடி கண்டிப்பாக ரசிகர்கள் பிடிக்கும் என்கிறது படக்குழு
* 'பாகுபலி' படத்தோடு 'புலி'யை ஒப்பிட வேண்டாம். ஏனென்றால் இப்படத்தில் போர் காட்சிகள் எல்லாம் கிடையாது. அப்படத்தின் கதைக்களம் வேறு, 'புலி'யின் கதைக்களம் வேறு என்கிறது படக்குழு
* தன்னுடைய அடுத்த நாள் காட்சிக்கான வசனங்களை முந்தைய நாளே வாங்கி சென்று விடுவாராம் விஜய். நிறைய நடிகர்களுடன் நடிப்பதால், தன்னால் எதுவும் தாமதமாகி விடக்கூடாது என்பது தான் இதற்கு காரணம் என்கிறார்கள்.
* இப்படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக பிரத்யேகமாக வாள் பயிற்சியை கற்று நடித்துக் கொடுத்திருக்கிறார் விஜய்.
* வில்லன் வேடங்கள் நடிப்பதில்லை, கதையைக் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று கதையைக் கேட்டிருக்கிறார் சுதீப். கதையைக் கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் சுதீப்புக்கு உலோகத்தால் உருவான உடையை அணிந்து நடித்திருக்கிறார். அந்த உடை அணிந்தால் அவரால் படப்பிடிப்பில் உட்கார முடியாது. காலையில் படப்பிடிப்பு தொடங்கினால், படப்பிடிப்பு முடியும் வரை நின்றுக் கொண்டே நடித்துக் கொடுத்திருக்கிறார்.
* விஜய், ஸ்ருதிஹாசன் பாடியிருக்கும் 'ஏண்டி ஏண்டி' என்ற பாடலை தாய்லாந்து மற்றும் கேரளா ஆகிய இரண்டு இடங்களில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
* கலை இயக்குநர் முத்துராஜ் மற்றும் கிராபிக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர் கமலக்கண்ணன் இருவருமே இணைந்து இப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பணியாற்றி இருக்கிறார்கள். கிராபிக்ஸ் காட்சிகளுக்காக சில படப்பிடிப்பு என்று முன்பே சரியாக திட்டமிட்டு இருக்கிறார்கள். அதுமட்டுமன்றி கமலக்கண்ணன் இப்படத்திற்கான பணிகளைப் படப்பிடிப்பு துவங்குவதற்கு 8 மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டார்கள்.
* 'புலி' படத்தில் மொத்தம் 2400 கிராபிக்ஸ் ஷாட்ஸ் இருக்கிறது என்கிறார் கமலக்கண்ணன். 'நான் ஈ' படத்தில் 1200, 'மஹாதீரா' படத்தில் 1400, 'பாகுபலி' படத்தில் 2000 கிராபிக்ஸ் ஷாட்ஸ் தான். அப்படங்களோடு ஒப்பிட்டால் 'புலி'யில் கிராபிக்ஸ் ஷாட்ஸ் அதிகம்.
* இப்படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகளில் ஸ்ரீதேவி மட்டுமே தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் சொந்த குரலில் டப்பிங் பேசியிருக்கிறார்.
* சித்தரக்குள்ளனாக விஜய் நடித்திருக்கிறாரா போன்ற விஷயங்கள் எல்லாம் சஸ்பென்ஸ். நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.
* 'ஜிங்கிலியா' பாடலை ஆதித்யாராம் ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்து படமாக்கி இருக்கிறார்கள். அப்பாடலை நீங்கள் திரையில் பார்க்கும் போது, அரங்கின் பிரம்மாண்டம் தெரியும் என்கிறார்கள்.
* விஜய் ரசிகர்கள் விரும்பும் வண்ணம் கதையோட்டத்துடன் பன்ச் வசனங்கள் இருக்கிறது என்கிறார் இயக்குநர் சிம்புதேவன்.
* தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளையும் இணைத்து சுமார் 3000 திரையரங்குகளுக்கும் அதிகமாக வெளியிட இருக்கிறது. ஜப்பான் மற்றும் சீனாவில் இப்படத்தை வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
* 'துப்பாக்கி' படத்தில் இருந்தே தனது படங்களைப் பற்றியே பேட்டி அளிக்காத விஜய், இப்படத்துக்கும் அந்த திட்டத்தில் தான் இருக்கிறார். பட வெளியீட்டுக்கு முன்பு ட்விட்டர் தளத்தில் ரசிகர்களோடு கலந்துரையாடும் திட்டம் இருக்கிறது என்கிறார்கள்


thanx-thehindhu

மண்ணுளி முதல் ஈமு வரை! ( மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் - 10)

த்தாவது வாரத்தை எட்டி விட்டது இந்த தொடர். இருந்தாலும் தோண்டத் தோண்ட வந்துகொண்டிருக்கும் அளவுக்கு கொங்கு மண்டலத்தில் ஏகப்பட்ட ஏகப்பட்ட மோசடிகள் ஓடிக்கொண்டே இருக்கிறது. மோசடிகள் கற்றுத்தரும் பாடமோ, விழிப்புணர்வு முயற்சிகளோ எதுவும் மக்களிடம் பலனளிக்கவில்லை. மாறாக மக்கள் ஒரு வழியில் அலர்ட் ஆனால், மறுவழியில் புகுந்து அவர்களை ஏமாற்றி, ஆசையை தூண்டி பணத்தை பறித்துச் சென்றுவிடுகிறது கும்பல். அப்படி மிச்சம் இருக்கும் சில மோசடிகளை இந்த வாரமும் பார்த்து விடலாம்.

புதுக்கல்லூரி துவங்கப்போறோம்...

ஒரு புதுக்கல்லூரி துவங்குவதாக ஒரு அறிவிப்பு வருகிறது. அந்த அறிவிப்பின் பின்னணியில் ஒரு மிகப்பெரிய மோசடிக்கான அறிவிப்பும் மறைந்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? உங்களுக்கு வேறு வழியில்லை. நீங்கள் நம்பிதான் ஆக வேண்டும். ஏனென்றால் இது ஏதோ கதை அல்ல. உயர் கல்வி நிறுவனங்களுக்கு புகழ்பெற்ற இடம் கோவை என்பது உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். இங்கு கல்லூரி என்பது மிகப்பெரிய வருவாய் ஈட்டித்தரும் தொழில். 

அதேபோல் கல்வி நிறுவனர் என்பது மிகப்பெரிய மரியாதையை பெற்றுத்தருவதாகவும் உள்ளது. கை நிறைய பணம், பெரிய அளவில் பேர் என ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் என்ற ரீதியில் சொல்லி பணக்காரர்களை வலையில் வீழ்த்திய சம்பவம்தான் இது. அப்படி கோவை அருகே பணம், பேர், புகழுக்காக பெரும் பணத்தை இழந்த சம்பவத்தை இப்போது பார்க்கவிருக்கிறோம்.

கோவை அருகே ஒரு குறிப்பிட்ட இடத்தை குறிப்பிட்டு இந்த இடத்தில் கல்லூரி துவங்கப்போகிறோம் என்ற அறிவிப்பு வருகிறது. ஜாய்ன்ட் வென்ச்சர் எனும் அடிப்படையில் கல்லூரி துவங்குகிறோம் ரீதியில் இருந்தது அந்த விளம்பரம். அதைப்பார்த்து ஏராளமானோர் அந்த விளம்பரத்தை கொடுத்தவர்களை தொடர்பு கொள்கிறார்கள். அவர்களோடு பிரபலமான நட்சத்திர விடுதியில் சந்திப்புகள் நிகழ்கிறது. 'மிகப்பெரிய பொறியியல் கல்லூரி கட்டப்போகிறோம். இன்ஜினியரிங் ஸீட் இத்தனை லட்சத்துக்கு போகும், கல்லூரியின் இயக்குனர்களில் ஒருவராக நீங்கள் இருக்கலாம். உங்களுக்கு வருஷத்துக்கு 10 ஸீட் ப்ரீ. கல்லூரி இயக்குனர் என்ற பெயரும், அதன் மூலம் புகழும் வரும்' என வந்திருந்தவர்களின் ஆசையை கிளப்பி, அவர்களுக்கு தூண்டில் போடுகிறார்கள்.

பெயர் பலகை மட்டுமே முதலீடு

இதில் அவர்கள் விழாமல் போக வாய்ப்பு குறைவு என்றே சொல்லலாம். அந்தளவு சாதூர்யமாக பேசினார்கள். இந்த சந்திப்பின் போது பணப்பசை கொண்டவர்கள் யார் என்பதை உணர்ந்துகொள்ளும் மோசடியாளர்கள், பணப்பசை இல்லாதவர்களை கைகழுவிவிட்டு மீதமுள்ளவர்களிடம் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்தனர். 'முதல்ல நீங்க கொடுக்க வேண்டியது வெறும் 10 லட்சம்தான். மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் என சொன்னார்கள். எந்த இடத்துல காலேஜ் வருது. அந்த இடத்தை நாங்க பாக்கணுமே என பணத்தை முதலீடு செய்பவர்கள் கேட்கும் முன்னரே, இடத்தை நாளைக்கு பாத்துடலாமா? என பேசினர் மோசடியாளர்கள்.

அடுத்த சந்திப்பு கல்லூரி அமையப்போவதாக சொல்லப்படும் இடத்தில் நடக்கும். புறநகரில் விவசாயத்தை மறந்து போன நிலப்பகுதி. கரடு முரடனான வழிப்பாதையில் சில கிலோ மீட்டர் துாரத்தில் ஆள் அரவமற்ற பகுதி, அந்த ஏரியாவின் பிரபலமான கடவுளரின் பெயரில் கல்லூரி பெயர் பலகை ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது. கல்லூரி கட்டுமானம் துவங்குவதற்கு அடையாளமாய் கற்களும், மணலும் கொட்டப்பட்டிருந்தது. 

இவ்வளவு தூரத்துல காலேஜ் இருந்தா சரியா வருமா என முதலீடு செய்பவர்கள் கேட்க, 'எந்த காலேஜ் ஊருக்குள்ள இருக்கு நீங்க சொல்லுங்க பார்ப்போம்...!' என பதில் கேள்வியால் மடக்கிய மோசடியாளர்கள், 'அது எல்லாம் நல்லா வரும் சார்... 10, 15 பஸ்சை விட்டா போகுது. கொஞ்சம் வருஷத்துல இந்த இடம் நடு ஊரா இருக்கும் பாருங்க' எனச்சொல்ல, உடனே சில லட்சங்கள் கை மாறியது.

வெளிநாட்டு பேராசிரியர்கள் (?) வருகை!

அடுத்தடுத்த சந்திப்புகள் நடக்கும். 'கல்லூரியை வெளிநாட்டு பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்போகிறோம். அந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் வர இருக்கிறார்கள்' என அடுத்தடுத்த ஆசை வலைகள் விரிக்கப்படுகிறது. தமிழக வீதிகளில் சுற்றித்திரிந்த வெளிநாட்டு ஆசாமிகள், டிப்டாப் ஆடையுடன் வரவழைக்கப்படுகிறார்கள். எது கேட்டாலும் தலையை மட்டும் ஆட்டும் அந்த வெளிநாட்டினர், டைரக்டர்களிடம் எதுவும் பேசுவதில்லை. பேசக்கூடாது என்பதுதான் அவர்களுக்கு போடும் கண்டிஷன்.

அடுத்த சந்திப்பு, கல்லூரி அமையும் இடத்தில். பூமி பூஜை விழா நடக்கிறது. பரபரப்பாய் பலர் வருகிறார்கள். கல்லூரி பற்றி பலர் பேசுகிறார்கள். அவை எல்லாம் அன்றோடு முடிவடைகிறது. அதன் பின்னர் கல்லூரி பற்றிய எந்த பேச்சும் இல்லை. கல்லூரி கட்ட அனுமதி பெறுவதில் தாமதம், அதிகாரிகள் ஆய்வுக்கு வர வேண்டும் என காரணங்களை அடுக்கி பல மாதங்கள் ஓட்டுகிறார்கள். 

இந்த நேரத்தில் 100க்கும் மேற்பட்டோரிடம் பல கோடிகளை வாரிக்கொண்டு தலை மறைவானது அந்த மோசடிக் கும்பல். சிறிது இடைவெளி விட்டு மீண்டும் துவங்குகிறது மோசடி. அதே கல்லூரி போர்டு, அதே ஆசாமிகள் ஆனால் இடம் மட்டும் வேறு. புதிய முதலீட்டாளர்கள், வெளிநாட்டு கல்லூரி பேராசிரியர்கள் வருகை என அதே மோசடி மற்றுமொரு இடத்தில் சத்தமில்லாமல்  அரங்கேறத்துவங்கியது.

மெத்தப் படித்தவர்களும் தப்பவில்லை

இன்னும் ஏராளமான மோசடிகள்  நிரம்பிக்கிடக்கிறது. இந்த முதலீடு மோசடிகளாவது பராவாயில்லை. அரசு வேலை, பெரிய நிறுவனத்தில் வேலை, வெளிநாட்டில் வேலை என வேலை வாங்கித்தருவதாக சொல்லி நடந்த மோசடிகள் எக்கசக்கம். 

படித்தவர்களை மையப்படுத்தி நடந்த மோசடிகள் என பெரிய பட்டியலே போடலாம். அப்படி கம்ப்யூட்டர் படிப்பு படித்த இளைஞர்களை குறிவைத்து நடத்தப்பட்ட மோசடி தான் இது. 

''நாங்கள் அமெரிக்காவின் பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்துக்கு புரோகிராம்களை அனுப்புகிறோம். இதில் உங்களை யும் இணைத்துக்கொள்ளலாம்' என்ற அடிப்படையில் வரும் அந்த விளம்பரம். புரோகிராம் பேப்பர்கள்ல இருக்குற வரிகளை டைப் பண்ணி, அதை சிடியில கொடுத்தா மாசம் 15 ஆயிரம் எனச்சொல்வார்கள். 

டெபாசிட்டாக ஒரு லட்சம் கட்ட வேண்டும் என்பார்கள். டெபாசிட் திரும்ப வழங்கப்படும் என்றும் சொல்வார்கள். முதல் மாத தவணை சரியாய் வரும். அதோடு சரி. அதற்கு அடுத்த மாதம் செக் எதுவும் வராது. சில மாதங்களுக்கு பின்னரே ஏமாற்றப்பட்டது உங்களுக்கு தெரியவரும்.

இது போன்ற மோசடியில் ஈடுபட்ட நிறுவனங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ஏமாந்தவர்களும் கொஞ்ச நஞ்சமல்ல. கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் அதிகம்? நாம் கடந்த பத்து வாரங்களாக பார்த்த இந்த மோசடிகள் மட்டுமல்ல. இன்னும் ஏராளமான மோசடிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. வெவ்வேறு உருவில் அவை தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. 

ஏமாற்றியவர்கள், ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். அதேபோல் ஏமாறியவர்கள், ஏமாறுபவர்களும் ஏமாறிக்கொண்டே தான் இருக்கிறார்கள். இவை எல்லாம் கொங்கு பெல்ட்டில் தான். 

அது சரி...கொங்கு பெல்ட்டில் மட்டும் ஏன் இது மாதிரியான புதுப்புது மோசடிகள் நடக்கின்றன என நினைக்கிறீர்களா?. அதை பற்றி விரிவாக அடுத்தவாரம் பார்க்கலாம்.

- ச.ஜெ.ரவி

நன்றி-ஆனந்தவிகடன்

சுஜாதா என்கிற நான்...

60 களின் மத்தியில் எழுதத்துவங்கி, இறக்கும் காலம் வரை எழுத்தில் மழுங்கல் இன்றி வாசகர்களை தன் எழுத்தினால் கட்டிப்போட்டவர் எழுத்தாளர் சுஜாதா. எழுத்து என்றால் இலக்கியம் என்ற வரையறைக்குள் சிக்காமல், நவீனத்தை தன் எழுத்திலும் சிந்தனையிலும் ஏற்றி, இளைய தலைமுறையினரின் ஆதர்ஷ எழுத்தாளராக திகழ்ந்தவர்.
இந்நிலையில் எழுத்தாளர் என்று மட்டும் வெகுஜன உலகில் அறியப்பட்ட சுஜாதா என்கிற ரங்கராஜனின் தனிப்பட்ட குணங்களை பகிர்ந்து கொள்கிறார் அவரது மனைவி சுஜாதா.

சுஜாதாவிற்கு முன், அவருடன், அவருக்குப்பின் என உங்களைப் பற்றி   மூன்று வார்த்தைகளில் சொல்லுங்களேன்.....

சுஜாதாவிற்கு முன்-களிமண் ...
அவருடன் -முதலில் சாது, பின் கொஞ்சம் தைரியம் ,பின் அனுசரிப்பு
இப்போது- தனிமை, வெறுமை ..பின் முதுமை.

சுஜாதாவின் எழுத்துக்களில் உங்களுக்குப்பிடித்த கதை? 

அவரது ஒரு குறுநாவல். பெயர் நினைவில்லை. அது என்னை ரொம்ப ஈர்த்த நாவல். ஆனால் அது அவருக்கு பிடித்திருக்குமா என்பது தெரியாது. அவரைப் பொறுத்தவரையில் தனக்குள்ளேயே வாழ்ந்தவர். உணர்ச்சிகளை பெரும்பாலும் வெளியே காட்டாதவர். அவர் எழுதிய கதைகளைப் பொறுத்தவரை ஒரு கர்த்தாவாக மட்டுமே பேசுவார். விருப்பு வெறுப்புகளை நம்மிடம் பகிரந்துகொள்ளமாட்டார்.

அவர் உங்களிடம் பேசிய முதல் வார்த்தை நினைவிருக்கிறதா?


அவர் என்னிடம் பேசிய முதல் வார்த்தையைவிட என்னிடம் அவர் அணுகிய விதம்தான் அதிர்ச்சி ரகம். 'டி' என்ற வார்த்தையுடன் ஒருமையில் பேசினார். எனக்கு 'டி' போட்டு பேசுவது பிடிக்காது. வீட்டிலும் அப்படி யாரும் என்னிடம் பேசிப் பழக்கமில்லை. அதனால் உடனே அவரிடம் அப்படி அழைப்பது பிடிக்கவில்லை என்று சொன்னேன்.  சரி என்றவர், அதற்குப் பிறகு ஒருநாளும் என்னை அப்படி அழைத்தில்லை . 

பெரும் எழுத்தாளர்... உங்களது பெயரையே புனைப்பெயராக சூட்டிக்கொண்டார். இது எப்போதாவது உங்களுக்கு பொறாமை ஏற்படுத்தியது உண்டா?
இல்லை!  நான் அப்படிப்பட்டவளும் அல்ல. என் தங்கை என்னைவிட அழகு. அவளை எல்லாரும் சிலாகித்து சொல்வார்கள். எனக்கு உள்ளுர அதில் சந்தோஷமே தவிர, பொறாமை இருக்காது. அதேபோல் அவருக்கு கிடைத்த பெருமைகள், புகழ் எல்லாம் எனக்கு சந்தோஷம் தந்ததே தவிர, பொறாமை ஏற்படுத்தியது இல்லை. 

ஒருவகையில் வீட்டில் இரண்டு எழுத்தாளர் இருந்தால் வீண் சண்டைதான் வந்திருக்கும். அவரும் கூட இம்மாதிரி விஷயங்களில் கிட்டத்தட்ட என்னைப்போலதான். எந்த உணர்ச்சியையும் வெளிகாட்டியதில்லை. எதற்காகவும், என்றும் யார்மீதும் பொறாமைப்பட்டிருக்கமாட்டார். 

There is a woman behind every successful man என்பார்கள். அவர் எழுத்துப் பணியில் உங்கள் பங்களிப்பு என்னவாக இருந்தது? அவருக்கு நீங்கள் உதவியதுண்டா? 

அவர் வெற்றிக்கு நான் காரணம் என்று நினைததில்லை. அவர் நினைத்தாரா என்பதும் தெரியவில்லை. காரணம் அவர் ரொம்ப private person. எதையும், எப்போதும் வெளியே சொல்லமாட்டார். கதை பற்றிய விஷயமும் அது போல்தான். என்ன எழுதுகிறார், எதை படமாக எடுக்கிறார்கள், எதையும் பகிர்ந்து கொள்ளமாட்டார். 

எழுத்தாளரின் மனைவி என்ற முறையில் அவரது எந்த படைப்பும் உங்கள் பார்வைக்குதான் முதலில் வந்திருக்கும். படித்துவிட்டு அதுபற்றி அவரிடம் விமர்சனம் செய்திருக்கிறீர்களா?

உண்மையில் என் சிந்தனையும், அவர் கதை சித்தரிப்பும் ஒத்துப்போனதில்லை. காரணம் கதைகளில் புதுமையான சிந்தனை இருக்க வேண்டும் என விரும்புபவர் அவர். நான் அப்படி இல்லை. மிகவும் பழமையான சிந்தனை கொண்டவள்.
திருமணமான புதிதில் அவரது கதையை விமர்சனம் செய்ததுண்டு. பின்னாளில் அதைவிட்டுவிட்டேன். கரையெல்லாம் செண்பகப்பூ என்ற அவரது நாவலில், முதலில் அந்த கதையின் நாயகியான அந்த கிராமத்துப் பெண், நகரிலிருந்து வந்தவனுடன் ஓடிப் போவதாகத்தான் முடிவு வைத்தார். 

எனக்கு அது நெருடலாக இருந்தது. எந்த கிராமத்துப் பெண்ணும் அவ்வாறு செய்யமாட்டாள். முடிவு சரியில்லை என்றேன். அப்புறம் அந்த முடிவை மாற்றி எழுதினார். அது ஒன்றுதான் எனக்கு நினைவிருக்கிறது.

பெண் குழந்தை இல்லை என்று எப்போதாவது நீங்களோ, அவரோ எப்போதாவது ஏங்கியதுண்டா?

எனக்கு முதலில் பெண் குழந்தைதான் பிறந்தது. பிறந்து நாலு நாட்களில் இறந்துவிட்டது. இறந்த அந்தக் குழந்தையை எண்ணி வருந்தியதுண்டு. அவர் தனது சில கதைகளில் கற்பனையாக இதுபற்றி எழுதி தன் வருத்தத்தை போக்கிக்கொண்டார் என்றே நினைக்கிறேன். 

முதல் கோபம், முதல் சிரிப்பு, முதல் பிரிவு என அவருடனான உங்கள் மூன்று தருணங்கள் நினைவிருக்கிறதா?

அப்போது நாங்கள் டெல்லியில் வசித்து வந்தோம். இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டன. ரொம்ப நாட்களாக என் உறவினர் ஒருவர் வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். இவரும் இந்த வாரம், அடுத்த வாரம் என்று தள்ளி போட்டுக்கொண்டே வந்தவர்,  ஒருநாள் நல்ல மூடு போல, 'வா... போய் வரலாம்!' என்றார். கிளம்பும் போதே மணி ஐந்து. அவர்கள் வீட்டிலேயே குழந்தைகள் சாப்பிட்டு விட்டன. நாங்கள் வேண்டாம் என்று சொல்லி கிளம்பிவிட்டோம்.
அப்போதே மணி ஒன்பது. ஸ்கூட்டர் கிடையாது. பஸ் அதிக நேரத்திற்குப் பின் வந்தது. நிறுத்தத்தில் இறங்கி நடந்தோம். பசி எரிச்சல், கோபத்தில் விறு விறு என்று இவர் முன்னாடி போக, இரண்டு குழந்தைகளும் தூங்கிப்போய் விட்டன. தூக்கிக்கொண்டு பின்னால் நான். அப்போது அவர் என் மீது காட்டிய கோபம் இன்னமும் பதறச் செய்கிறது.

முதல் பிரிவு, முதல் சிரிப்பு இரண்டும் ஒரே சம்பவத்தில் நடந்தது. கல்யாணம் முடிந்த ஐந்தாம் நாளே டெல்லி சென்றுவிட்டார். இது முதல் பிரிவு.
மூன்று மாதத்திற்க்குப் பின் என் மாமனார் என்னை டெல்லி அழைத்துச் சென்றார். ஸ்டேஷன் வந்துவிட்டது. 'இவன் இருக்கானா பார்' என்றார். நானும் பார்த்தேன். பார்த்துவிட்டு, 'இல்லையேப்பா...' என்றேன். கடைசியில், இவர் என் கோச்சுக்கு எதிரேதான் அவ்வளவு நேரம் நின்றுகொண்டு இருந்திருக்கிறார். எனக்குத்தான் அடையாளம் தெரியவில்லை. பலமாக சிரித்தோம் எல்லோரும். 

பிரபலமான எழுத்தாளரின் மனைவி என்ற வகையில் உங்கள் சுயம் பறிபோனதாக என்றாவது நினைத்ததுண்டா?


நிறைய சந்தர்ப்பங்களில் பொது நிகழ்ச்சி, வீட்டு விசேஷம், அவர் வீட்டு ஃபங்ஷன்....எங்கே போனாலும் சுஜாதா... சுஜாதா... சுஜாதா...தான். எனக்கு இது கூட வருத்தமில்லை. ஆனால் சில சொந்தக்காரர்கள், என்னவோ எனக்கு தெரியக்கூடாத ரகசியம் போல், நானும் இவருடன் இருக்கும்போது, என்னை தனியே அமரவைத்து, இவரை மாடிக்கு அழைத்துச் சென்று பேசும்போது அப்போது வருவது கோபமா..சுய பச்சாதாபமா, எரிச்சலா...இல்லை இவை எல்லாவற்றிலும் ஆன ஒரு கலவையா எனத் தெரியவில்லை?

ஒரு முறை இப்படி நடக்கப்போக, நான் எழுந்து வீட்டுக்கு வந்துவிட்டேன். தன் தவறை உணர்ந்து அவர்களே அப்புறம் மன்னிப்பு கேட்டார்கள். ரகசியம் பேசட்டும். என்னை அழைக்க வேண்டாமே.

சுஜாதாவின் கதைகளில் அவருக்கு நிகழ்ந்த அனுபவம் அல்லது நீங்கள் அறிந்தவர் அல்லது அவருக்குத் தெரிந்தவர் இவர்களைப்பற்றி எழுதியது உண்டா? 


நிறைய! ஆனால் அடையாளங்களை மாற்றி விடுவார். யாரைப்பற்றி எழுதுகிறார் என்று எனக்குத்தெரிந்து விடும். ஆனால் நான் கேட்க மாட்டேன். அவரது எழுத்தில் தலையீடு செய்வது எனக்கும் பிடிக்காது, அவருக்கும் பிடிக்காது.

உங்களை வைத்து ஏதாவது கதை எழுதியிருக்கிறாரா?

ம்…ஒரு சிறுகதை. 1964  அல்லது  65 என்று நினைக்கிறேன். புதிதாக கல்யாணமான பெண்; அவளை அழைத்துக்கொண்டு காவேரிக்கரைக்கு போவதாக ஆரம்பிக்கும் கதை. அதில் அந்தப்பெண் பாத்திரம் என்னை வைத்துத்தான் எழுதினார். கதையில் அது நடந்தது இங்கே பீச்சில்.


என்றாவது தனது எழுத்துப் பணியில் அவர் சலித்துக்கொண்டதுண்டா?


இல்லவே இல்லை! எழுத ஆரம்பித்துவிட்டால் அவருக்கு சாப்பாடு, தூக்கம் எதுவும் வேண்டாம். எழுதுவது , படிப்பது, இவை இருந்தால் போதும் அவருக்கு. சாகும் வரை எழுதிக்கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அது போலத்தான் நடந்தது. 

உணவு விஷயங்களில் சுஜாதா எப்படி?

வெந்தயக்குழம்பு, கீரை மசியல், சுட்ட அப்பளம் அவருக்கு மிகவும் பிடித்தவை.

சுஜாதாவின் கண்ணாடி, அவரின் மேஜை,  புத்தக அலமாரி, அவருடைய பரிசுப் பொருட்கள் ஆகியவற்றுடன் குறிப்புகளும், கவிதைகளுமாக நிரம்பிக்கிடக்கின்றன அவரது டைரி
.

-
குப்பை பொறுக்கும் 
சிறுமியின் கையில் 
ஃப்ளாப்பி டிஸ்க்
-
கடை வாசலில்
உடையில்லாத பெண்கள்
பொம்மைகள் 
-
பால் நிலாவில் 
களங்கங்கள்
எறும்பு
-
வானத்தில் விமானத்திற்கு
'டாடா' காட்டும் சிறுமி.
-
மற்றவர் நினைவிருக்கும்
எனக்கு மட்டும்
மறந்து போன
பிறந்த நாள்.
            
சந்திப்பு: லதா ரகுநாதன் அ

நன்றி-ஆவி

Tuesday, September 29, 2015

ஷூவில் கேமிரா பொருத்தி பெண்களை ஆபாசமாக படம் பிடித்த வழக்கறிஞர் கைது:அதிர்ச்சித் தகவல்கள்!

புதுடெல்லி:  ஷூ வில் ரகசிய கேமிரா பொருத்தி இளம்பெண்களை ஆபாசமாக படம் பிடித்த வழக்கறிஞர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.  

சென்ற சனிக்கிழமை டெல்லியில் உள்ள சாகத் டிஎல்எப் என்ற இடத்தில் உள்ள வணிக வளாகத்தில் இளைஞர்  ஒருவர் ஒவ்வொரு பெண்களையும் பின் தொடர்ந்து செல்வதும் பின்னர் திரும்பி வருவதுமாக இருந்தார்.  

இதைப்  பார்த்து சந்தேகம் அடைந்த  அந்த வணிக வளாக மேலாளர்  அவரைப்  பிடித்து விசாரித்தார். ஆனால் அவர் அங்கிருந்து தப்பிச்  செல்ல முயற்சி செய்தார் மேலாளர்  பாதுகாவலர்கள் துணையுடன் அவரைப்  பிடித்து போலீசிடம் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

இளைஞர்  தனது வலது கால் ஷூவில் கேமிராவை மறைத்து வைத்து குட்டை பாவாடை அணிந்து வரும் பெண்கள் பின்னாடி சென்று ஆபாசமாகப் படம் எடுத்தது தெரியவந்தது. அவர் நொய்டாவை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக உள்ளார் என்பதும் அவரது பெயர் ஆஷிஸ் சர்மா என்றும்  தெரியவந்துள்ளது. ஆஷிஸ் சர்மா பரிதாபாத்தை சேர்ந்தவராவார்.

ரகசிய கேமிராமூலம் எடுத்த இந்த வீடியோக்களை அவர் தனது மொபைல் போனிலும்  சமூக வலைதளங்களிலும் பதிவு செய்து உள்ளார். அவரிடம் இருந்து ரகசிய கேமிராக்களையும், 16 ஜிபி மெமரி கார்டையும் போலீசார் கைப்பற்றினர். மேலும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

thanx-vigatan

மு.க.ஸ்டாலின்VSஎம்.ஜி.ஆர்

1உவகை வெற்றி

தாரா
நீனா மாணிக்கம்
நானா கபாலி
என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா



=============

2கோயில், கோவில் எது சரி ?

ஊர் பெயரில் மட்டும் கோவில்னு வருதே. கோவில்ப்பட்டி, சங்கரன்கோவில்
எழுத்து நடையில் கோவில் ,பேச்சு வழக்கில் கோயில்



============

3உயர் பதவியில் இருக்கும் போலீஸ் அதிகாரி முக்கியவழக்கு விசாரணையில் இருக்கும்போது தற்கொலை செய்து கொண்டார் என செய்தி வந்தால் நம்பமுடியவில்லை


================
4ஒரு பொண்ணு ஹேண்டில்ல 10 டிஜிட் நெம்பர் வெச்சிருந்துது.44 வது காம்பினேசன் ல அது அவங்க போன் நெம்பர்னு கண்டுபிடிச்ட்டமில்ல?

==============

5விழித்து எழுந்தவுடண் கிடைப்பது அபூர்வ வெற்றி.
பல முறை விழுந்து எழுந்தபின் கிடைப்பதே அபார வெற்றி


============

6புலி ரிலீசை முன்னிட்டு குற்றாலம் புலி அருவியில் குளிக்க கட்டணம்.ரூ 100,இந்த அபராதம் அஜித் ரசிகர்களுக்கு மட்டும் - சுற்றுலாத்துறை


=============

7த்ரிஷா இல்லன்னா நயன் தாரா= முதலீட்டைப்போல் 3 மடங்கு லாபம் சம்பாதிக்கும்.ஜிவி பி அனிரூத்க்கு டப் பைட் கொடுப்பார் (ஹீரோயினை கரெக்ட் பண்றதில்்)

==============

8இன்னைக்காவது அடைமழை பெய்யுதே! னு மழைக்காதலர்கள் சிலாகிச்சா பாரீன் நெட் தமிழச்சி சட்னி சாம்பார் இருந்தா தொட்டு அடையை சாப்ட்ரலாம்குது.ஹூம்


============

9எதிரி உங்களை கொசுவா நினைச்சு அலட்சியப்படுத்துனா அதைரியப்படேல்.உலகையே வென்ற மாவீரன் அலெக்சாண்டர் இறந்ததே கொசு கடிச்சு காய்ச்சல் வந்ததால்தான்


===========

10நெல்லை ராம் சினிமாஸ் ல் அக்டோபர் 1 அதிகாலை 5 am ஷோ டிக்கெட் 400 ரூபாயாம்.அடேங்கப்பா.எங்க ஊர்ல 8 பேர் புல் மீல்ஸ் சாப்பிடலாம் (8*50=400)

==============


11எப்டி இருக்கே மச்சி?ங்கற பார்மாலிட்டி நலம் விசாரிப்பில் கூட கடவுள் கருணைல நல்லாருகேன் னு கருணை மலர் க்கு கவுன்ட்டர் கொடுப்பான் நெட்தமிழன்


==============

12சிவகார்த்திகேயன் பட டைட்டில் ரஜினி முருகன் என்பதால்தான் தாக்கப்பட்டிருக்கார்.பரிகாரமா கமல் வி"நாயகன்" னு படம் பண்ணா சரி ஆகிடும்


==


13வேதாளம் ஆன் த வே

============

14சார்.உங்க படத்துக்கு ரெட் கார்டு போட்ருவாங்களாமே?


ரெட் க்கே ரெட் டா? அல்ட்டிமேட்க்கே செக் மேட்டா?


===============

15பணம் பாதாளம் வரை பாயும்.ஏ,பி,சி ன்னு வேதாளம் எல்லா சென்ட்டர்லயும் வெற்றிகரமா ஓடும் # வேதாளம் ப்ரமோ ஐடியா


===============

161 குற்றம் கடிதல்

2 திருட்டு விசிடி
3 கிருமி
4 உனக்கென்ன வேணும் சொல்லு
5 ஜிப்பாஜிமிக்கி
7 காதல் அகதி # 24/9/2015
6 ராம்லீலா(தெலுங்கு)



=============

17ON THE WAY "THALA"M


===========

18கமல் ஒரு தீர்க்கதரிசி.அஜித் எதிரிகளை தீபாவளி 2015க்கு சூரசம்ஹாரம் செய்ய வருவார் என அன்றே தெரிந்துதான்
"வேதாளம்",வந்து நிக்குதுன்னு பாடினார்

================

19தமிழ் சினிமாவில் இது வில்லனுக்கான காலம்.

எதிரில் எதிரி வந்தா இவருக்கு எகத்தாளம்.
வெரைட்டியா வருது வேதாளம்


==============

20மு.க.ஸ்டாலின் கிட்டத்தட்ட எம் ஜி ஆரா மாறிட்டார்.வயசானவங்களை சந்திக்கறார்.குழந்தைகளை கொஞ்சறார்.இது கலைஞரோட ஐடியாவாத்தான் இருக்கும்


=============

குற்றம் கடிதல்-திரை விமர்சனம்:

எந்தக் கதாபாத்திரத்தையும் மையப் படுத்தாமல் ஒரு சம்பவத்தை அல்லது பிரச்சினையை மையப் படுத்தும் படங்களின் வகையைச் சேர்ந்தது பிரம்மாவின் இயக்கத்தில் வந்துள்ள ‘குற்றம் கடிதல்’. யதார்த்தத்தைச் சமரசம் செய்துகொள்ளாமல் விறுவிறுப்பாக இதைக் கையாண்டுள்ள பிரம்மாவின் முயற்சி பாராட்டத்தக்கது.
லாரியில் பயணம் செய்யும் அந்த இளம் ஜோடியின் முகத்தில் பெரும் கலவரம். குறிப்பாக அந்தப் பெண்ணின் முகத்தில். அதற்கான காரணத்தைச் சொல்வதாக விரிகிறது படம்.
தனியார் பள்ளியொன்றில் ஆசிரியை யாகப் பணியாற்றுபவர் மெர்லின் (ராதிகா பிரசித்தா). திருமண விடுப்பு முடிந்து பள்ளிக்குச் செல்கிறார். சக ஆசிரியையின் வேண்டுகோளை ஏற்று அவரது வகுப்பை கவனித்துக்கொள்ளச் செல்கிறார். அங்கே மெர்லின் செய்யும் ஒரு சிறு தவறு ஒரு பையனைக் கடுமை யாகப் பாதித்துவிடுகிறது. மெர்லினையும் பெரும் சிக்கலில் தள்ளி விடுகிறது.
அந்தப் பையன் என்னவானான்? ஆசிரியைக்கு என்ன நடக்கிறது? இந்த இருவரையும் சுற்றியிருப்பவர்கள் இந்தப் பிரச்சினையை எப்படி அணுகு கிறார்கள்? பிரச்சினையின் வேர் எப்படிப் பார்க்கப்படுகிறது? இந்தக் கேள்விகளுக்கான பதிலாகப் பரபர வென்று நகர்ந்து செல்கிறது படம்.
ஒரு சம்பவம் அதனோடு சம்பந்தப் பட்டவர்களாலும், காவல் துறை, ஊடகம், பொதுமக்கள் ஆகியோராலும் எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதை யதார்த்தமாகவும் அழுத்தமாகவும் காட்டி யிருக்கிறார் இயக்குநர். பார்வையாளர் களைப் பதற்றத்துக்கு உள்ளாக்கும் இச் சம்பவங்களையொட்டிப் பல தரப்பட்ட மனிதர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு வரின் கோணமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எல்லாருடைய பின்னணிகளும் முறையான பிரதிநிதித் துவம் பெறு கின்றன. அசம்பாவிதம் நிகழக் காரணமான ஆசிரியையின் உணர்வு, பள்ளி நிர்வாகத்தின் அணுகுமுறை, பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய்மாமனின் கோபம், அம்மாவின் கையறு நிலை, என எல்லாமே அடர்த்தியானவை.
காட்சிகளால் கதை சொல்லும் கலை பிரம்மாவுக்குக் கைகூடியிருக்கிறது. பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் ஆசி ரியையின் கால் செருப்பில் ஒரு பிளாஸ்டிக் உறை ஒட்டிக்கொள்கிறது. அது தெரியா மல் அவர் நெடுந் தூரம் நடந்து வருவது அவரது பதற்றம் அவரை எந்த அள வுக்கு ஆட்கொண்டிருக்கிறது என்பதைக் காட்டி விடுகிறது.
24 மணிநேரத்தில் நடக்கும் சம்பவங் களினூடே வேகமாக நகர்கிறது படம். வேகமான திரைக்கதை என்றாலும் பல்வேறு நுட்பங்களையும் தவறவிடாமல் பதிவுசெய்திருப்பது சிறப்பு. மனிதன் என்னதான் சூழ்நிலைக் கைதியானாலும், எல்லாருமே பதற்றத்தில் மனித நேயத் தைத் தொலைத்துவிட மாட்டார்கள் என் னும் உண்மையையும் படம் காட்டு கிறது. கோபத்தின் உச்சியில் இருக்கும் தாய்மாமன் பள்ளியின் முதல்வரைச் சொற்களால் வறுத்தெடுக்கிறார். அதற் குப் பதிலாக முதல்வரின் மனைவி சொல்லும் சில வார்த்தைகள் அவர் மனதைத் தொடுகின்றன. “நாங்க விட்ற மாட்டோம் தம்பி” என்று அந்த அம்மையார் மெய்யான உணர்வுடன் சொல்லும்போது தாய்மாமனின் மனம் நெகிழ்வதை உணர முடிகிறது. பாதிக்கப்பட்ட அன்னையை ஆசிரியை சந்திக்கும் இடம் அற்புதமான கவிதை. மனித இயல்பின் மகத்தான பரிமாணத்தை அழகாகக் காட்டும் காட்சிகள் இவை.
சிறுவனின் தாய்மாமன் பொது வுடமைச் சித்தாந்தம் பேசும் தோழராக வருவது யதார்த்தம். ஆனால் அரசியல் கோட்பாடு பேசப்படும் இடங்கள் இயல்பாக இல்லை. ஆசிரியையின் கிறிஸ்துவத் தாயார் தன் மகள் ஒரு இந்துவைத் திருமணம் செய்துகொண்டது குறித்துக் காட்டும் வெறுப்பும் நம்பும்படி இல்லை. பள்ளிக்கூடக் காட்சிகளும் பள்ளிக்கு அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியின் காலைநேரக் காட்சிகளும் இயல்பாக இருக்கின்றன.
பாலியல் கல்வி குறித்த விவாதம் தேவைக்கதிகமாக நீள்வதைத் தவிர்த் திருக்கலாம். ஊடகங்களின் போக்கைச் சொல்லும் காட்சிகள் கூர்மையாக இருந்தாலும் திரைக்கதையில் கச்சித மாக ஒட்டவில்லை. சில காட்சிகள் துருத்திக்கொண்டிருக்கின்றன. குறிப் பாகப் பையனின் தாய்மாமனின் சமூக உணர்வைக் காட்டுவதற்கான காட்சிகள்.
நடிகர்கள் தேர்வு திரைக்கதையின் நம்பகத்தன்மைக்குப் பெரிதும் உதவி யிருக்கிறது. பாத்திரங்கள் நிஜ வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட எல்லாருமே புதுமுகங்கள். ஒவ்வொரு நடிகரையும் கதாபாத்திரமாகவே மாற வைத்திருப்பதில் இயக்குநரின் ஈடுபாடும் உழைப்பும் தெரிகின்றன. ராதிகா பிரசித்தா வின் நடிப்பு அபாரம். குற்றவுணர்வும் பீதியும் பதைபதைப்பும் அவர் முகத்தில் தத்ரூபமாகப் பிரதிபலிக்கின்றன. பல சமயம் அவர் கண்களே எல்லாவற்றையும் சொல்லி விடுகின்றன.
சங்கர் ரங்கராஜனின் இசையில் பாடல் கள் இனிமையாக உள்ளன. பின்னணி இசை திரைக்கதையின் ஆழத்தைக் கூட்டுகிறது. மணிகண்டனின் ஒளிப்பதிவு படத்துக்கு இயல்புத் தன்மையைத் தருவதில் பெரும் பங்கு வகிக்கிறது. பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலைப் படமாக்கிய விதம் அற்புதம். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்னும் வரியைக் காட்சிப்படுத்திய விதமும், அடுத்த வரியைப் பாடாமல் இசையால் இடைவெளியை நிரப்பிய விதமும் படத்தின் அடிநாதத்துக்கு பொருத்தமாய் அமைந்து மனதை நெகிழச் செய்கின்றன.
சி.எஸ். பிரேமின் படத்தொகுப்பு அருமை. லாட்ஜுக்கு அருகே நடக்கும் கட்டைக் கூத்து கதாபாத்திரத்தின் நிலையைப் பிரதிபலிக்கிறது. ஆனால் இந்தப் பொருத்தத்தை நீட்டிமுழக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்திக்கொள்கிறார் எடிட்டர். கடைசிக் காட்சியில் தோழர் உதயன் ஊடகத்திடம் பேசுவார் என்று எதிர்பார்க்கிறபோது அவர் கேமராவைக் கையால் மறைத்துத் திரையில் கருப்பு வண்ணைத்தை படரவிடுவதோடு காட்சியை முடித்துக்கொள்கிறார் எடிட்டர். இப்படித்தான் பல காட்சிகளில் எடிட்டிங் கூர்மையாக இருக்கிறது.
ஒரு சம்பவத்தை முன்வைத்துச் சமூக யதார்த்தத்தையும் மனித இயல்பு களையும் அழுத்தமாகக் காட்டியிருக்கும் ‘குற்றம் கடிதல்’ தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வரவு. மனித மனம், பழிவாங்க மட்டுமல்ல; மன்னிக்கவும் தயாராக இருக்கும் என்னும் உண்மையைக் கவித்துவமாகக் கூறும் ஆரோக்கியமான படம் இது.

thanx-thehindu

கிருமி-திரை விமர்சனம்:

காவல் துறையின் பச்சோந்தித் தனத்தைத் தோலுரித்துக் காடும் படம் கிருமி. கதிர் (‘மதயானைக் கூட்டம்’ கதிர்) வேலை யில்லாத, ஆனால் மணமாகிக் குழந்தை யுள்ள இளைஞன். வீட்டுக்கு எப்போதா வது வரும் அவன் நண்பர்களுடன் அறையில் தங்கிப் பொழுதைப் போக்குகிறான். குடி, சீட்டாட்டம் என நகர்கிறது அவன் வாழ்க்கை. போலீஸ் இன்ஃபார்மர் பிரபாகரன் (சார்லி) கதிர் மீது பிரியம் கொண்டவர். கதிரும் பிரபாகரன் உதவியுடன் போலீஸ் இன்ஃபார்மராக மாறுகிறான்.
இது பொருளாதார ரீதியாக அவனை உயர்த்துகிறது. ஆனால் முன்னெச் சரிக்கையின்றி அவன் செய்யும் சில காரியங்கள் அவனைச் சிக்கலில் மாட்டி விடுகின்றன. காவல் துறை ஆய்வாளர் கள் இருவருக்கு நடுவே நடக்கும் பனிப் போரிலும் அவன் மாட்டிக்கொள் கிறான். இந்தச் சிக்கல்களிலிருந்து அவன் தப்பித்தானா என்பதே கதை.
திரைக்கதையை இயக்குநர் அனு சரணும் ‘காக்கா முட்டை’ இயக்கு நர் மணிகண்டனும் சேர்ந்து எழுதியிருக் கிறார்கள். புதிய களமும் புதிய காட்சி களும் படத்தின் பலம். காவல் துறை இன்ஃபார்மர்களின் உலகம் தமிழ்த் திரையில் முதல் முறையாகக் காட்டப் படுகிறது. காவல்துறையின் அழுக்கு களை அப்பட்டமாக்கியிருக்கிறது கிருமி. சட்ட விரோத நடவடிக்கை களுக்கு காவல்துறை அதிகாரிகள் துணைபோவது, துறைக்குள் நடக்கும் பனிப்போர்கள், துறைக்குள் நடக்கும் விசாரணை, இன்ஃபார்மர்களை அவர் கள் பயனபடுத்திக்கொள்ளும் விதம் ஆகியவை மிகவும் தத்ரூபமாகக் காட்டப்படுகின்றன. காவல் துறையின் சந்தர்ப்பவாதமும் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது.
பாத்திர வார்ப்பில் இயக்குநர் மிக வும் கவனம் எடுத்துக்கொண்டிருக் கிறார். போலீஸாரின் குணநலன்களை அனுபவத்தால் அறிந்த காரணத்தால் அவர்களிடம் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக் கூடாது என்ற நாசூக்கு பிரபாகரனுக்குத் தெரிந்திருக்கிறது. அளவாகப் பேசுகிறார். எல்லாவற்றிலும் நிதானம் காட்டுகிறார். இள ரத்தம் என்பதால் கதிருக்கு இந்த நிதானம் இல்லை. அதனால் சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். இரண்டு ஆய்வாளர் களின் இயல்பு, நடத்தை ஆகியவற்றி லும் இதே துல்லியம் வெளிப்படுகிறது.
ரெய்டு செய்த பிறகு சுந்தர பாண்டி யனுக்கும் மதியரசுவுக்கும் இடையே நடக்கும் உரையாடலும் உயர் அதிகாரி இவர்கள் இருவரிடமும் பேசும் வார்த்தைகளும் வசனத்தின் வலிமை யைப் பறைசாற்றுகின்றன. பிரபா கரன் குடும்பத்துக்கும் கதிர் குடும்பத் துக்குமிடையே இருக்கும் பந்தம் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.
பணம், அதிகாரம் என்று வரும்போது காவல்துறை, ரவுடிகளின் துணை கொண்ட நிழல் உலக வியாபாரிகள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துவிடும் யதார்த்தத்தைத் திரைக்கதை துல்லிய மாகக் காட்டிவிடுகிறது. இந்தக் கூட்டணி யைத் தனிநபர்களால் எதிர்கொள் ளவே முடியாது என்பதை உணர்த்தி விடுவதில் படம் நிஜ உலகுக்கு நெருக்கமாக வந்து நிற்கிறது. தமிழ்த் திரைப்படங்கள் பொதுவாக நாயக பிம்பத்தைத் தூக்கிப் பிடிக்கும் இடங்களில் துளியும் சமரசமின்றி யதார்த்தத்துக்கு அழுத்தம் கொடுப்பது பாராட்டத்தக்கது.
ஆனால், ஒதுங்கிப்போவது என்று தனிநபர் முடிவெடுத்தாலும் மற்றவர் கள் சும்மா விடுவார்களா என்ற கேள்வி யும் எழுகிறது. இந்த இடத்தில்தான் படம் பலவீனமாகத் தெரிகிறது. மிகைத் தன்மை அற்ற கிளைமாக்ஸ் துணிச்சலா னது. ஆனால் முழுமையானதல்ல.
துக்கிரித்தனமாக ஆட்டம்போடும் இளைஞர் பாத்திரத்தை முடிந்த அளவு நன்றாகக் கையாண்டிருக்கிறார் கதிர். தெனாவட்டான பேச்சு, காதல் குறும்பு, விடலைத்தனம், பொறுப்பான இன்ஃபார்மர், ரிஸ்க் எடுக்கும் இளமை வேகம் எனக் கச்சிதம் காட்டுகிறார்.
அவருடைய மனைவியாக வரும் ரேஷ்மி மேனன் அழகு. பெரிய வேலை யில்லை என்றபோதும் கிடைத்திருக் கும் வாய்ப்பை நன்கு பயன்படுத்தி யிருக்கிறார். வெளியே கிளம்பும் நேரத் தில் வீட்டில் இருக்கும் கணவனின் மனம் அறிந்து தாமதமாகச் செல்ல முடிவெடுக் கும் சமயத்தில் அவர் முகத்தில் மலரும் புன்சிரிப்பு அழகிய கவிதை.
யோகி பாபு/அப்புக்குட்டி வரும் காட்சிகள் கலகலப்புக்கு உத்திரவாத மளிக்கின்றன. சார்லி, தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்தின் தன்மையை நன்கு உள்வாங்கி நடித்திருக்கிறார்.
கிருஷ்ணகுமாரின் இசை படத் தின் விறுவிறுப்புக்குத் துணை செய் கிறது. ஆனால் பாடல்கள் படத்துக்குப் பலம் சேர்க்கவில்லை. அருள் வின்சென் டின் ஒளிப்பதிவு காட்சிக்குத் தேவைப் படும் ஒளியையும் இருட்டையும் கோணத்தையும் தந்து நிறைவான உணர்வேற்படுத்துகிறது. காட்சிகளுக் கேற்ற வசனங்கள். வனிதா, தென்னரசு, மாரிமுத்து போன்றவர்களிடம் யதார்த்த நடிப்பு என படம் வழக்கமான படங்களிலிருந்து சிறிது தள்ளியே நிற்கிறது.
இயக்குநர் அனுசரண் முதல் படத்தில் தன் திறமையை நன்கு வெளிப் படுத்தியிருக்கிறார். அவரது முயற்சி யில் முழுமை கூடவில்லை என்றாலும், புதிதாக ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு அதை நேர்த்தியாகவும் வலு வாகவும் கையாண்டிருக்கும் அவரை நம்பிக்கை தரும் இளம் இயக்குநர் களில் ஒருவர் என்று தயங்காமல் சொல்லலாம்.


thanx-thehindu

ஃபேஸ்புக்ல போடுறது எல்லாம் உங்க கருத்துதானா? ஸ்டாலினிற்கு ் ஜெ கேள்வி

1குண்டு' பெண்களுக்கு வேலை இல்லை.. ஊழியர்களை மிரட்டும் 'ஏர் இந்தியா'.# குண்டான பொண்ணு ,உண்டான பொண்ணு யாருக்கும் நோ வேக்கன்சி


=======



2தி.மு.க.வுக்கு போக யாருக்கெல்லாம் விருப்பமோ போங்க... வாழ்த்தி அனுப்புகிறேன்: வைகோ விரக்தி # நீ முன்னால போனா நான் பின்னால வாரேன்



============



3ராஜஸ்தானில் லஞ்ச வழக்கில் IAS. அதிகாரி கைது ரூ.4¼ கோடி பணம் சிக்கியது.# தமிழக பார்முலாபடி அந்த 41/4 கோடியை திருப்பிக்கொடுத்துட்டா போதுமா?




============



4நான் ஒரு பெரியார்வாதி - குஷ்பூ # திமுக ,காங்கிரஸ் னு அப்பப்ப கட்சி மாறிட்டதால சந்தர்ப்பவாதினு வேணா சொல்லலாம்




============



5தாலி அணிவதும், அணியாமல் இருப்பதும் பெண்களின் சுதந்திரம்-குஷ்பூ # தாலி அணியாட்டி பரவால்ல.டிரஸ்சையாவது நல்லா கவர் பண்ற மாதிரி அணியசொல்லுங்க




=============



6தற்கொலை முயற்சியில் யாரும் ஈடுபட வேண்டாம்’’ தொண்டர்களுக்கு விஜயகாந்த் # சகாப்தம் படம் ரிலீஸ் ஆகி இத்தனை நாள் கழிச்சு டூ லேட் அறிக்கை




===============



7மு.க.அழகிரி லண்டன் பயணம் # அப்பாடா.தலைவர் கொஞ்ச நாள் நிம்மதியா உடன்பிறப்புக்கு கடிதம் எழுதுவார்



===============



8‘2 வாரம் கருப்புச்சட்டை அணிந்து பிரசாரம்’’ தொல்.திருமாவளவன் அறிவிப்பு# கருப்புசட்டைக்காரன் ,கலவரத்தை தூண்டுவதில் கெட்டிக்காரன்




===============



9மன்மோகன் சிங் 10 ஆண்டுகளை வீணடித்துவிட்டார்; மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி# நம்ம மோடி தான் ஒரு நாள்.கூட வீணாக்காம ரவுண்ட்ஸ்ல



===========



10மதிமுகவிலிருந்து ஆட்களை இழுக்க திமுக 200 கோடி ரூபாய் பிளான் - செய்தி

சும்மா 1கோடி கொடுத்தா வைகோ வே வந்துடுவாரே?

===========

11மற்ற கட்சிகளை உடைக்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை-ஸ்டாலின் # நம்ம கட்சி உடையாம இருக்கவே அண்ணனை அமெரிக்கா டூர் அனுப்பவேண்டி இருக்கு


==========

12யமுனை நதியில் குப்பை, பூஜை பொருட்களை எறிந்தால் ரூ.5 ஆயிரம் அபராதம். # 5 மாசம் ஜெயில்ல போட்டா ஒரு பயம் வரும்.

================

13பெண்கள் இரவில் வெளியில் செல்லக்கூடாது’ மத்திய மந்திரியின் பேச்சு # நைட் கிளப் ,செகன்ட் ஷோ எல்லாம் வெறிச்சோடிப்போய்டுமே?


=================

14மோடி தனது வீழ்ச்சிக்கு தானே வழி அமைத்து வருகிறார்.-ராகுல்# ஆமா.அடுத்த ட்ரிப் நயாகரா நீர்வீழ்ச்சி.அதுக்கு ரூட் மேப் போட்டுட்டு இருக்கார்
==================


15எனக்கு நடிக்க வசனம் பேசத் தெரியாது.-அன்புமணி # இல்லையே.நேச்சுரலா இருக்கே?

===============

16ஐ.டி.ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்குவதில் இந்தியாவிற்கு 7-வது இடம் # தனியார் ஊழியர்கள் பெரும்பாலும் கம்மி சம்பளம் தான் வாங்கறாங்க

===================

17கலைஞரின் கபட எண்ணம் தெரியாமல் ஏமாந்து விட்டேன் - வை.கோ # சும்மா படம் போடக்கூடாது.கலைஞர்னாலே கபடம்னு உங்களுக்குத்தெரியாதா?

===============

18------------3 ஆண்டுகளாக தேடப்பட்ட 'அட்டாக்' பாண்டி சிக்கினாா:சுற்றிவளைத்தது போலீஸ் # ஆளைப்பாத்ததும் அட்டாக் னு கத்தி இருக்காங்க.டக்னு நின்னிருக்கார்


================

19பா.ம.க.-வின் வரைவு தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடிக்கிறது... அன்புமணிு # காப்பி அடிச்சவன்தான் இப்பவெல்லாம் பர்ஸ்ட் மார்க் வாங்கறான்

=============

20ஃபேஸ்புக்ல போடுறது எல்லாம் உங்க கருத்துதானா? ஸ்டாலினிற்கு ் ஜெ கேள்வி # டி எம் மட்டும் அவருது சி எம்


=================