நடிகர் : ஜேசன் கிளார்க்
நடிகை :கெய்ரா நைட்லி
இயக்குனர் :பல்தசார் கொர்மாகூர்
இசை :டேரியோ மரியாநெல்லி
ஓளிப்பதிவு :கென்ட் ஹார்வே
1996-இல், எவரெஸ்ட் சிகரத்தில் உண்மையில் நிகழ்ந்த உறைய வைக்கும் ஒரு விபத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள மிரட்டலான படம்.
‘அட்வென்ச்சர் கன்சல்டன்ட்ஸ்’ என தான் தொடங்கிய நியூசிலாந்து ட்ரெக்கிங் நிறுவனத்தின் சார்பாக, உலகின் ஏழு மலைச் சிகரங்களில் மிக உயரமான எவரெஸ்ட் சிகரமேற ராப் ஹால் எட்டுப் பேரை அழைத்துச் செல்கிறார். அந்தக் குழு எதிர்கொண்ட இயற்கைச் சீற்றத்தை முப்பரிமாணத்தில் படமாக்கி முதுகுத்தண்டை சில்லிட வைத்துள்ளனர்.
எவரெஸ்ட் குழுவை வழிநடத்தும் தலைவர் ராப் ஹாலாக ஜேஸன் க்ளார்க் நடித்துள்ளார். இவர், கடந்த வருடம் வெளிவந்த ‘டான் ஆஃப் த ப்ளேனட் ஆஃப் த ஏப்ஸ்’ படத்தில் நாயகன் சீஸரை கண்டு வியக்கும் மால்கம் வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொருவரையும் எவரெஸ்ட் சிகரத்திலேற்றி, அவர்கள் மகிழ்வதைக் கண்டு ரசிக்கும் பொறுப்பான வழிகாட்டியாக படத்தில் வலம் வருகிறார். இந்தக் குழுவின் மிகவும் பின்தங்கிய, மெதுவாக மலையேறும் டக் ஹேன்ஸனையும் எவரெஸ்ட் உச்சிக்கு அழைத்துச் சென்று ரசிக்கும் கதாப்பாத்திரத்தில் இவர் தோன்றுகின்றார். கடைசியில், அந்தப் பொறுப்புணர்ச்சியே அவரைச் சிக்கலில் ஆழ்த்திவிடுகிறது.
நைட் க்ராலர் படத்தில் நாயகனாக கலக்கிய ஜேக் க்லைன்ஹால், 17 ஆயிரம் அடி உயரத்திலுள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்ப்பில் சட்டை போடாமல் திடகாத்திரமான கதாபாத்திரமாக அறிமுகமாகிறார். பெக் வெதர்ஸ் எனும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ஜோஷ் ப்ரோலின் நடித்துள்ளார்.
அவ்வளவு சுலபத்தில் எட்டி விட முடியாத இமயத்தின் உயரங்களைத் தொட்டுவிடும் தூரத்தில் காட்டுயிருக்கிறார் இயக்குனர் பல்தசார் கொர்மாகூர். லுக்லா (9383 அடி), நம்ஸே பஜார் (12343 அடி), டெங்போச் மடம் (12687 அடி), தொக் லா மலையேறிகளின் நினைவிடம் (16000 அடி) என இமயத்தின் அழகை கண் முன் கொண்டு வந்துள்ளார்.
உயரம் அதிகம் ஆக ஆக, அழகான இமயம் அச்சுறுத்தக்கூடிய இயற்கைப் பொக்கிஷமாக உருமாறுகின்றது. குறிப்பாக 20000 அடி உயரத்திற்குப் பிறகு, வெள்ளை வெளேரென்று பனி சூழ்ந்த சிகரங்கள் பிரமிப்பையும் பயத்தையும் ஒருங்கே ஏற்படுத்துகின்றன. அதிலும், 27000 அடிக்கு மேலிருக்கும் செளத் ஈஸ்ட் ரிட்ஜ் பள்ளத்தாக்கு விளிம்பில் நம்மை நிறுத்தி பதைபதைக்க வைக்கின்றனர் (தவறாமல் பார்க்கவும்).
விஷுவலில் மிரட்டியிருந்தாலும், திரைக்கதையில் ஆழம் குறைவதால், 3-டியில் பார்க்கும்போது நிச்சயம், பயமுறுத்தும் உண்மை சம்பவத்தை நினைவுறுத்துவதாக இது அமையும்.
ஜாலியான சுற்றுலா போல் தொடங்கும் படம், கனத்த மெளனத்தை நம் மீது விட்டு விட்டுச் செல்கிறது. கற்பனைக்கு எட்டாத இயற்கையின் பிரம்மாண்டத்தையும், மனித வாழ்வின் மகத்துவத்தையும் எவரெஸ்ட் உணர்த்துகிறது.
மொத்தத்தில் ‘எவரெஸ்ட்’ திகில் பயணம்.

நன்றி-மாலைமலர்
0 comments:
Post a Comment