சவாலே சமாளி படத்தை 170 தியேட்டர்களில், திட்டமிட்டபடி திரையிடுவேன்'' என்று நடிகர் அருண்பாண்டியன் கூறினார்.
விஷால்-காஜல் அகர்வால் நடித்து, சுசீந்திரன் டைரக்ஷனில் வேந்தர் மூவீஸ் தயாரித்த 'பாயும் புலி'படத்துக்கு தியேட்டர் அதிபர்கள் தரப்பில் திடீர் தடை விதிக்கப்பட்டது. இதை கண்டித்து, ''4-ந் தேதி (நாளை) முதல் எந்த தமிழ் படமும் வெளியிட மாட்டோம்'' என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.
பாயும் புலி, சவாலே சமாளி, போக்கிரி மன்னன், பானு ஆகிய 4 படங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருவதாக இருந்தது. தயாரிப்பாளர்களின் போராட்டம் காரணமாக இந்த 4 படங்களும் இன்று திரைக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், 'சவாலே சமாளி'படத்தை தயாரித்துள்ள நடிகர் அருண்பாண்டியன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
''தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவு தன் உறுப்பினர்களுக்கே பாதிப்பாக அமைந்துள்ளது. 'பாயும் புலி'படத்துக்கு ஏற்பட்டிருப்பது தனிப்பட்ட பிரச்சினை. 24 மணி நேரத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, சக தயாரிப்பாளர்களுக்கு பாதகமான முடிவு.
நாங்கள் தயாரித்துள்ள 'சவாலே சமாளி'படம் எந்த சவாலையும் சமாளிக்கும். படம் திட்டமிட்டபடி இன்று திரைக்கு வரும். 170 தியேட்டர்களில் படம் திரையிடப்படும்.
படம் திரைக்கு வருவதை திடீர் என்று தள்ளி வைத்தால், வெளிநாடுகளில் எங்கள் நிறுவனத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து விடுவார்கள். மேற்கொண்டு எந்த படத்தையும் அங்கு திரையிட முடியாத நிலை ஏற்பட்டு விடும். எனவே திட்டமிட்டபடி, 'சவாலே சமாளி'படத்தை திரைக்கு கொண்டு வருவோம்.''
இவ்வாறு அருண்பாண்டியன் கூறினார்.
இதேபோல், ''பாயும் புலி படம் திட்டமிட்டபடி இன்று உலகம் முழுவதும் திரைக்கு வரும். கடின உழைப்புக்கு என்றுமே பலன் உண்டு'' என்று அந்த படத்தின் கதாநாயகன் விஷால் சமூகவலைத்தலங்களில் அறிவித்து இருக்கிறார்.
1.பாயும் புலி
2 சவாலே சமாளி
3 போக்கிரி மன்னன்
4 பானு# 4/9/2015
அதாவது, படத்தின் முக்கியமான திருப்புமுனை கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவரை நடிக்க வைத்திருக்கிறாராம். அது யார் என்பது படம் பார்க்கும் போது தெரியும் என்றார்.
படம் பார்த்த பிறகும் தெரியாமலிருக்க, அவர் ஒன்றும் இன்விசிபிள் மேன் இல்லையே.
சரி, பாயும் புலியின் கதை என்ன?
படத்தில் விஷால் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக வருகிறார். கெட்டவர்களை போட்டுத் தள்ளுவதுதான் இவர் டூட்டி. தன் மீது கை வைத்தால் சாதாரணமானவனே சும்மாயிருக்க மாட்டான்.
ஒரு போலீஸ்காரன் அதுவும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் மீது கை வைத்தால்...? இதுதான் பாயும் புலி படத்தின் கதை என்றார் சுசீந்திரன்.
பாஸ்... இதுக்கு பேரு கதையில்ல, பில்டப்.
0 comments:
Post a Comment