1 மது விலக்குப்போராட்டத்தை திசை திருப்ப ஈ வி கே எஸ் இளங்கோவனை ஒரு துருப்புச்சீட்டா பயன்படுத்திட்டாங்களோன்னு ஒரு டவுட் இருக்கு எனக்கு
===================
2 புலி ரிலீஸ் அன்னைக்கு டைரக்டர் சேரன் படம் ஏதாவது ரிலீஸ் ஆனா சேரனும் சோழனும் மோதும் தருணம்னு ஒரு பில்டப் கொடுக்கலாம்
===================
3 கூந்தல்அழகிகளே! ஒரு விண்ணப்பம். உங்க கூந்தலை ரசிக்கனும்னா நாங்க பின்னால எட்டிப்பார்த்துக்கறோம், முன்னால் எடுத்துப்போட்டு முகஅழகை மறைக்காதீர்
=================
4 சாமிகிட்டே ஏதாவது மன்னிப்புக்கேட்கனும்னாக்கூடநெட் தமிழன் ஸ்ட்ரெய்ட்டா கேட்பதில்லை. பொண்ணு கிட்டே சொல்லி என் சார்பா நீ சாரி கேட்டுடுங்கறான்
=================
5 புலி தான் ஆட்டை அடிச்சுசாப்பிடும்,ஆடு புலியை சாப்ட்டு பார்த்ததுண்டா?னு ஒரு வாட்சப்பில் ஒரு SMS. என்னானு பார்த்தா புலி போஸ்டரை ஆடு சாப்டுது
=================
6 வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வாழ்க்கை சலுகை எதையும் வழங்குவதில்லை. என சொல்வது தவறு.வழுக்கை டேமேஜர் வழிஞ்சிட்டே சலுகை தருவார்
===========
7 தீபாவளி பரிசு காத்திருக்கிறது DM வரவும்..
=============
8 எதிரில் நின்று வர்ணிக்க கூச்சப்பட வைக்குமளவுக்கு அழகி யாகஇருந்தால் உக்காந்த மேனிக்கு/குப்புறக்கா /மல்லாக்கா படுத்துட்டே வர்ணிக்கலாம்
==============
9 புலி ,பாயும் புலி எது முதல்ல வரும்?
சிம்ப்பிள் லாஜிக்.பாயும் புலி முந்திக்கும்.4.9,2015,,புலி பின் தங்கி 17.9,2015
============
10 வெளியே எதையோ தேடிக்கொண்டே இருக்கிறது மனது
ஆனால் அது தேடும் அனைத்தும் லேடீஸ் காலேஜ் ஹாஸ்டலுக்குுள்ளேதான் இருக்கிறது .. இது புரிவதேயில்லை"
=============
11 சாதாத்தமிழன் கார்ப்பரேசன் ஸ்கூல்ல படிச்சாலும் , புலிஉறுமும்னு சரியாச்சொல்றான், கான்வெண்ட் ஸ்கூல்ல படிச்ச நெட் தமிழன் புலி ROAR-ங்கறான்
==============
12 காட்டுல சுதந்திரமா இருக்கும்போதும் சரி,கூண்டில் அடைச்சு வெச்சாலும் சரி ,புலி என்னைக்கும் புலி தாண்டா.சீற்றம் குறையாது #புலி பஞ்ச்
=============
13 விஷால் = பாயும் புலி
விஜய் =பதுங்கும் புலி # செப்டம்பர்.4 ,அக்டோபர் 1
===========
14 ஹலோ புலியா? ஜிங்"கிலி"ஜிங்கிலியா?
=======
15 விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ சொக்கநாதர் .சுவாமி ஆலயத்தில் ஏதோ விசேசம் போல.பட்டாணி ,சுண்டல் ,சர்க்கரைப்பொங்கல் தர்றாங்க.பக்தர்கள் டோண்ட் மிஸ்
==============
16 அன்பே! என்காலைகளின்முதல்வார்த்தைஉன்பெயர்.
2 வது வார்த்தை உன் தங்கச்சியின் பெயர்
3 வது வார்த்தைஉன் அக்காவின் பெயர்
உன் குடும்பம்1கதம்பம்
==================
17 திறமைசாலிகள் திமிராக இருப்பதில் தவறு இல்லை என நினைப்பது தவறு.அடக்கமாக ,பணிவாக இருந்தால் அவர்கள் திறமை மேன் மேலும் சிலாகிக்கப்படும்
==============
18 அன்பே! செல்லக்குட்டி!
நீ சாதாரணமா சுவரில் சாய்ந்து நின்றாலே அது குட்டிச்சுவர் ஆகிடாதோ
================
19 FB ல ஒரு ஆண்ட்டி நைட் 8 மணிக்கு குட் நைட் சொல்லி கிளம்பப்பார்த்துது, அப்போ இருந்து விடாம வம்பிழுத்து கடலை போட்டுட்டு இருக்காங்க
=============
20 நீங்கள் நல்ல ஃபோட்டோகிராஃபர் ஆக முதல் படி உங்கள் முகத்தை ஃபோட்டோ எடுப்பதைத்தவிர்க்கனும்,சுற்றுச்சூழலை முன்னிலைப்படுத்தனும்
========================
0 comments:
Post a Comment