Saturday, August 01, 2015

ஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம் ( சி.பி)

தமிழ் சினிமா  வில்  மாறுபட்ட பயணத்திரைக்கதை என்று பார்த்தால் நந்தலாலா, அன்பே சிவம்  போன்றவற்றை சொல்லலாம்.2 மே  வர்த்தக ரீதியாக  தோல்விதான்.இருந்தும்  துணிச்சலாக அந்தபாணி  கதையை தேர்வு செய்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் ஒரு ஷொட்டு


ஹீரோ  ஆம்புலன்ஸ்  எமெர்ஜென்சி மெடிக்கல் டெக்னீஷியன். அவருக்கு ஒரு உதவியாளர்  கம் டிரைவர். இன்னொரு  ஹீரோ  60  வயசு  பெரியவர்.முதல்வர் இருந்தும் இல்லாத தமிழகம் போல் மகன் இருந்தும் இல்லாமல்  தனிமையில்  வசிக்கும் அவர்  ஆம்புலன்சை பயணம் செய்யும் தேராக  பயன்படுத்திக்கொள்ளும்  ஜாலி கெத்து  கேரக்டர்.


அவருக்கு  ஹார்ட் அட்டாக் என  அலைபேசி  அழைப்பு வருது. அவரை அவரோட வீட்டில் இருந்து ஹாஸ்பிடல் அழைத்துச்செல்கையில் நடக்கும்  நிகழ்வுகளே  கதை.


 மிகச்சாதாரணமான , ஆனால்  வித்தியாசமான  ஒன் லைன் கதை  தான். மிகச்சிறப்பான  பதிவாக  வந்திருக்கவேண்டியது, திரைக்கதை அடர்த்தி  பற்றாமையால்  முழுமையாகப்பூர்த்தி அடையாத அழகிய கோலம் ஆகி விட்டிருக்கு


 ஹீரோவா   விஜய் டிவியில் கனாக் காணும் காலங்கள்  சீரியலில் வந்த  ரமேஷ் திலக். இந்தப்படம்  அவருக்கு நல்ல ஒரு எண்ட்ரி. பாடி  லேங்குவேஜ், டயலாக் டெலிவரி , நடிப்பு  என  எல்லாம் இடங்களிலும்  ஸ்கோர்  செய்கிறார்.


இன்னொரு  ஹீரோவா தமிழ்  சினிமாவின்  முக்கியமான ஹீரோ , கமல் , விக்ரம் க்குப்பின்  கலை ஆர்வம் கொண்ட ஆதர்ச நாயகன்  விஜய் சேதுபதி.படத்தின் தயாரிப்பு , வசனகர்த்தா, பாடல் ஆசிரியர்   என பல  பொறுப்புகளுடன். இவரது நடிப்பு பிரமாதம் என்றாலும்  ஒப்பனை  சுமார்தான்.


 சும்மா  நரை  முடியை  மட்டும்  காட்டினால்  போதாது. முகத்தில்  சுருக்கங்கள் , பாடி லேங்குவேஜில்  வயோதிகத்துக்கான  தள்ளாட்டம்  வேண்டும்.


ஹீரோவுக்கு  உதவியாளர்  கம்  டிரைவரா வரும்  ஆறுமுகம்  பாலா அசத்தலான  பாடி லேங்குவேஜ் , காமெடி ஆக்டிங்  என  கவனம்  கவர்கிறார் . தமிழ்  சினிமாவில்  காமெடியன் இல்லாத  குறையை  ரோபோ சங்கர், பாலா போன்றவர்கள் தீர்த்து வைப்பார்கள்  என எதிர்பார்க்கலாம்.


 நாயகியா ஆஷ்ரிதா. சில காட்சிகளே வந்தாலும்  அழகிய அறிமுகம்.மசு மருவில்லாத வெண்ணெய் முகம், கண் , புருவம், உதடு  எல்லாமே  சின்னது.


கருணாகரன் கூட  கெஸ்ட்  ரோலில்  முத்திரை பதிக்கிறார்.


ஒளிப்பதிவு , எடிட்டிங் , இயக்கம்  எல்லாமே  பிஸூ விஸ்வநாத்.பாராட்ட வேண்டிய பங்களிப்பு . திரைக்கதையில்  கவனம் , பயிற்சி தேவை 


ஜஸ்டின்  பிரபாகரன்  இசை  அருமை . பல இடங்களில்  பின்னணி இசை கலக்குது



மனதைக் கவர்ந்த  வசனங்கள்

மாமனார் பேர் சொல்லிக்கூப்ட்டாத்தான் மாப்ளை கெத்து # ஆ மி



2 ஊர்ல இருக்கற ஆண்ட்டிக்கெல்லாம் போன் ரீ சார்ஜ் பண்ணியே உன் சம்பளம் காலி ஆகிடுது #,ஆ மி



3 சார்.இதுக்கு முன்னாடி ஹார்ட் அட்டாக் வந்திருக்கா?

ம். 27 டைம் #,ஆ மி


4 லவ் பண்ற பொண்ணை 24 மணி நேரமும் நம்ம கண் பார்வைலயே வெச்சிருக்கனும்.இல்ல எவனாவது கொத்திட்டுப்போய்டுவான் #,ஆ மி


=============



5 எப்பவும் எதுவும் நமக்கு சாதகமாத்தான் இருக்கும்னு நினைக்கறது மனித பலஹினம்.முட்டாள்தனம் # ஆ மி




 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  ராஜபாளையம் மினி சாந்தி தியேட்டரில் ஆரஞ்சு மிட்டாய் செகண்ட் ஷோ.10 30 PM ஷோ. சூப்பர் தியேட்டர்.படம் எப்டி?னு பார்ப்போம்


2 கமல் ,விக்ரம் ,தனுஷ் வரிசையில் தமிழ் சினிமாவின் வித்தியாசமான நடிகர் விஜய் சேதுபதி படம் போட்டு 20 நிமிஷம் கழிச்சு என்ட்ரி # ஆ மி


3 40 நிமிசத்தில் இடை வேளை.ரசிகர்கள் அதிர்ச்சி.படம் பிரமாதம்னு சொல்ல முடியாது.மீடியம் ரகம் தான்.ஏ சென்ட்டர் பிலிம். # ஆ மி





இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  எந்தவிதமான  மசாலாத்தனமும் இல்லாமல்  ஆர்ட்  ஃபிலிமுக்கே  உண்டான அசால்ட் கெத்துடன்  திரைக்கதை பயணிப்பது


2  வயோதிகரா வரும்  ஹீரோ திடீர்  என  நடு வழியில்  அடியே  மனம்  நில்லுன்னா நிக்காதடி  பாட்டை  போட்டு  செம  குத்தாட்டம்  போடுவது. அந்த  டான்சில்  ஹீரோ   நெ 2 பாடி  லேங்குவேஜ்  பிரமாதம்


3  ஹீரோ    1   காதல்  எபிசோட்  கன கச்சிதம்.  டூயட்  இல்லாமல்   , மசாலாத்தனமோ  பாசாங்கோ  இல்லாமல்  அழகிய  படமாக்கம்


4  எம் சசிகுமார்  ரசிகராக  வரும் ஆட்டோ  டிரைவர்  நடிப்பு , நாயகியின் அப்பா  கேரக்டரின் எதார்த்தமான   தோற்றம்   நடிப்பு  அருமை


  

இயக்குநரிடம்  சில கேள்விகள்


1  படத்தின்  முதுகெலும்பான  கேரக்டரான  விஜய் சேதுபதி  கேரக்டர்  டீட்டெய்லிங் பத்தலை. அவர்  மேல்  அனுதாபம்  ஏற்படுத்தும்  காட்சிகள்  வைக்கலை. சரியான  விளக்கம்  இல்லை. இது  மிகப்பெரிய  மைனஸ் 


2  திரைக்கதையில்   ரொம்பவே அசால்ட்டுத்தனம்.


3  படத்தின்  நீளம்  ரொம்ப  கம்மி.100  நிமிடங்கள்  தான். ஃபுல்  மீல்ஸ்   சாப்பிட  75 ரூபாக்கு  டோக்கன்  வாங்கி  உட்கார்ந்தா சும்மா லெமன் சாதம் மட்டும்  பரிமாறினா  எப்படி?


4 ஆம்புலன்சைப்பார்த்ததும்  போலீஸ்  அது  டெட் பாடி என  தீர்மானிப்பது  எப்படி?  பேஷண்ட்டாக  இருக்கலாமே? 


5  பெரியவரான  விஜய் சேதுபதி  செய்யும் அடாவடித்தனத்தைப்பார்த்து  போலீஸ்  தேமேன்னு  வேடிக்கை  பார்ப்பது நம்பவே  முடியலை. 4  சாத்து  சாத்தி  இருக்கனும் . தயாரிப்பாளர்  என்பதால் அப்படி  காட்சி  வைக்கலை  போல


6  ஹார்ட்  அட்டாக்  வந்த  பேஷண்ட்டுக்கு  அதுக்கான  முதல் உதவியே  செய்யாமல்  பேசிக்கிட்டே  இருப்பது  செம  கடுப்பு 




சி  பி  கமெண்ட் -ஆரஞ்சு மிட்டாய் - முழுமை பெறாத அழகிய இகோலம்.நல்ல முயற்சி.திரைக்கதை வறட்சி .விகடன் = 41 ரேட்டிங் =2.75 / 5


ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 41



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = ஓக்கே



 ரேட்டிங் =2.75 / 5


Embedded image permalink
Rajapaalaiyam mini shanthi theatre

0 comments: