1 மேகலாப்ரியன்=
அய்யோ.நான் சொல்ல வந்ததே புலி ரிலீஸ் தேதி
பேசாம கிறுக்கிய லவ் பண்லாம்னு இருக்கேன்
ஏன் , பேசிக்கிட்டே லவ் பண்ணலாமே?டாக்டைம் ஃப்ரீ தானே? டி எம் ல
==================
2 சார், இந்தப்படத்துல ஸ்பை ஆஃபீசரா வர்றீங்க
ஓஹோ. அப்போ ஸ்பைடர் மேன் கெட்டப்பா?
=================
3 சார், பொட்டிபடுக்கைஎல்லாம்எடுத்துட்டுக்கிளம்பறமாதிரி ஒரு ஸ்டில் இருக்கே? வீட்டைக்காலி பண்ணப்போறீங்களா?
எனக்கு எதிரிங்களைக்காலிபண்ணித்தான் பழக்கம்
==============
4 டியர்,எதுக்கு பெட்ரூம் கதவை லாக் பண்ணிட்டே? நான் திண்ணை தானா?
ஆமா.உங்களை நான் பிளாக் பண்ணிட்டேன்
===============
5 F tv. ல எதுக்கு 10 பொண்ணுங்கள நடக்க விட்டுட்டு அத 100 பேர் உட்கார்ந்து பாத்துக்கிட்டு இருக்கீங்க?உங்க நோக்கம் என்ன?
எல்லாம் ஒரு ஏக்கம்தான்
==================
6 சார், இந்தப்படம் பூரா நீங்க சோளக்கருது சாப்ட்டுட்டே இருக்கீங்க.
எதுக்கு?
புலிக்கொடி சோழ மன்னனுது,அப்போ ஒரு அடையாளம் வேணாமா?
==================
7 மிஸ்! யூ ஆர் செலக்டட் அஸ் நர்ஸ்.ஒயிட் & ஒயிட் ல நாளை காலை வந்திடுங்க.
சாரி டாக்டர்.பிங்க் கலர் டிரஸ் தான் போடுவேன்.மை பேவரைட் கலர்
சாரி டாக்டர்.பிங்க் கலர் டிரஸ் தான் போடுவேன்.மை பேவரைட் கலர்
==============
8 சார்.உங்க படத்தை ஏன் 1 ந் தேதி ரிலீஸ் பண்றீங்க?
சம்பள நாள்.கல்லா கட்டலாம்னுதான்.மாசக்கடைசில ரிலீஸ் பண்ணா பலி ஆகிடுவோம்
============
9 சார்.நம்ம படம் ரிலீஸ் ஆகும் டைம் 4 நாள் லீவ் நாள்.வசூலை அள்ளிடலாம்.
நாலு நாமம் சாத்திடாம இருந்தா சரி.
=======
10 சார்.உங்க படத்தை வழக்கமா வியாழக்கிழமை ரிலீஸ் பண்ண மாட்டீங்களே?
அதெல்லாம் தெரியாதுங்க.லீடிங் ஹீரோ என்ன பண்றாரோ அதை ரீமேக்/பாலோ பண்ணுவேன்
=============
11 எந்திரன் ரிலீஸ் ஆன அதே நாள் ல என் படமும் ரிலீஸ்.ஆனா அதே போல் ஹிட் ஆகுமா?ஜோசியரே?
அதே ஹீரோ படம் வந்தா அதே போல் ஹிட் ஆகும்
=============
12 அய்யய்யோ.புலியை ஊரைவிட்டே தள்ளி வெச்ட்டாங்களா? ஏன்?
யோவ்.சும்மா ஜெர்க் ஆகாத.புலி ரிலீஸ்.தேதி தள்ளிப்போய் இருக்கு
===============
13 டியர்.நாள் தள்ளிப்போய்டுச்சு.
கள்ளி , சொல்லவே இல்லை.புலிக்குட்டி மாதிரி ஒரு பையன் பிறக்கப்போறானா?அய்யோ.நான் சொல்ல வந்ததே புலி ரிலீஸ் தேதி
================
14 டாக்டர், அன்னாசிப்பழம் சாப்ட்டா நாக்கு அரிக்குது
இதென்னம்மா புதுக்கதை, வழக்கமா சாப்ட்டது சீக்கிரம் செரிக்குதுன்னுதான் சொல்வாங்க
=====================
15 மிஸ்! உங்க லவ்வர் பேரே ஹாய், குட் மார்னிங்க் தானா? வித்தியாசமா இருக்கே?
இல்லையே?
என் காலைகளின் முதல் வார்த்தை நீதான்னு சொன்னீங்க்ளே?
============================
16 லேப் டெஸ்ட் வந்தாச்சு, உங்களுக்கு கொழுப்பு ஜாஸ்தியா இருக்கு
டாக்டர், அது எனக்கே தெரியுமே? இதைச்சொல்லவா 3000ரூபா ஃபீஸ்?
===================
17 எதுக்கு செல்ஃபோன் டவர் மேல ஏறினே?,தற்கொலை பண்ணி சாகறதுக்கு வேற இடம் கிடைக்கலையா?
நோ நோ ,செல் ஃபோன் சிக்னல் கிடைக்கலை
===================
18 எதுக்காக ஈ பி டவர் மேல ஏறுனே?
இன்ஸ்பெக்டர், செல் ஃபோன் டவர் ஒரே ரஷ். ஏகப்பட்ட பேரு தற்கொலை பண்ண க்யூவில், அதான் ஆல்டர்நேட்டிவ்வா..
=======================
19 கூவம் நதியை சுத்தப்படுத்த ஏதாவது வழி இருக்கா?
தலைவரே, நீங்க அதில் குளிக்காம இருந்தாலே 50% சுத்தம் ஆகிடும்
====================
20 டாக்டர், நீண்ட தூரப்பயணத்துல எலுமிச்சம்பழத்தை வாய்ல வெச்சுக்கிட்டா வாமிட் வராதாமே?நிஜமா?
பலாப்பழத்தைக்கவிக்குங்க.வர இடமே இருக்காது
=====================
0 comments:
Post a Comment