ஹாலிவுட்டில் நாவல்கள் மற்றும் வாழ்க்கைச் சரிதங்களைச் சுடச்சுடத் திரைப்படமாக்கி விடுவார்கள். ஒரு புத்தகம் அடையும் வெற்றியையும் புகழையும் உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதும் காரணம். அடுத்த 12 மாதங்களுக்குள் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு 13 படங்கள் வெளிவரவுள்ளன. அவற்றில் ஸ்டீவ் ஜாப்சின் சுயசரிதையும் ஒன்று. இங்கே முதலில் வரப்போகும் மூன்று படங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
தி மார்டியன்
ஆண்டி வியர் எழுதிய ‘தி மார்டியன்’ திரைப்படத்தை இயக்குபவர் ரிட்லி ஸ்காட். மட் தமான் நாயகனாக நடிக்கிறார். கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய இன்டர்ஸ்டெல்லார் திரைப்படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட அதே விண்வெளி வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இம்முறை அவர் மாட்டிக்கொள்வது செவ்வாய் கிரகத்தில். டிரைலரும் இயக்குநரின் பெயரும் படம் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளன.
ஸ்டீவ் ஜாப்ஸ்
வால்டர் ஐசக்சன் எழுதிய ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கைச் சரிதம் உலகம் முழுவதும் பரபரப்பாக வாசிக்கப்பட்ட நூல்களில் ஒன்று. ‘தி சோஷியல் நெட்ஒர்க்’ படத்திற்கு திரைக்கதை அமைத்த ஆரோன் சோர்கின் திரைக்கதையெழுத டேனி பாயல் இயக்கிவரும் படம் இது. மைக்கேல் பாஸ்பெண்டரும், கேட்வின்லட்டும் நடித்துள்ள னர். நவீன கால மேதமையும், சர்வாதிகார மனோபாவமும் கொண்டு வாழ்ந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் மறைந்துபோன ஸ்டீவ் ஜாப்சின் கதாபாத்திரத்தை அப்படியே திரையில் கொண்டுவர வேண்டிய சவால் இயக்குநருக்கு உள்ளது. லியார்னடோ டிகாப்ரியோ நிராகரித்த ஸ்டீவ் ஜாப்ஸ் கதாபாத்திரத்தில் மிக்கேல் பாஸ்பெண்டர் நடிக்கிறார்.
தி ரெவனான்ட்
மிக்கேல் புன்கே எழுதிய பழிவாங்கும் நாவலான இதன் திரைவடிவத்தை இயக்குபவர் அலேஜெண்ட்ரோ கோன்சாலெஸ் இனரிட்டு. லியனார்டோ டிகாப்ரியோ நாயகன். இந்தப் படம் மூலம் டிகாப்ரியோ, பல முறை தட்டிப்போன ஆஸ்கரை குறிவைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அற்புதமான நடிகரான டாம் ஹார்டியும் டிகாப்ரியோவுடன் சேர்ந்துள்ளார். வெஸ்டர்ன் வகைத் திரைப்படம் இது கடும் பனிப் பிரதேசம் ஒன்றில் கரடியால் தாக்கப்பட்டு மரணத் தறுவாயில் சகாக்களால் கைவிடப்படும் நாயகனின் கதை இது. டிகாப்ரியோ எப்படித் தப்பிக்கிறார் என்பதே கதை.
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment