Wednesday, July 08, 2015

பாலக்காட்டு மாதவன் -திரை விமர்சனம்:

கதாநாயகனுடன் இணைந்து நகைச் சுவை; கதையுடன் ஒட்டாத டிராக் நகைச்சுவை என இரண்டில் எதைச் செய்தாலும் அதில் செய்தி சொல்ல விரும்புகிறவர் விவேக். இந்தப் படத்தில் தனக்குப் பொருந்தக்கூடிய நகைச்சுவை நாயகன் பாத்திரம் ஏற்றிருக்கிறார். தவிர தனது பாணியுடன் அம்மா பாசத்தையும் கலந்து கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
மனைவி சோனியா அகர்வாலுடன் ஒரே அலுவலகத்தில் வேலைசெய்யும் விவேக்குக்கு இரு பெண் குழந்தை கள். நடுத்தரக் குடும்பத்தின் தலை வனான அவருக்கு தன்னைவிட மனைவி அதிக சம்பளம் வாங்குவது குறித்து மன உளைச்சல். “உன்னைவிட அதிக மாக சம்பாதித்துக் காட்டுகிறேன் பார்” என்று வீர வசனம் பேசிவிட்டு வேலையை விடுகிறார்.
ஆனால் வேலை கிடைக்காமல் அல்லாடும் அவர், மாதா மாதம் கணிசமான தொகை கைக்குக் கிடைக்கிறது என்பதற்காக முதியோர் இல்லத்திலிருந்து 60 வயது பெண்மணியை (செம்மீன் ஷீலா) அம்மாவாகத் தத்தெடுத்து வீட்டுக்கு அழைத்து வருகிறார். விவேக்கின் பிள்ளைகள் புதிய பாட்டியுடன் பழக வீட்டில் பாசமழை பொழிகிறது. ஆனால் விவேக்கின் நிலை மோசமாகிறது.
தத்தெடுத்த அம்மாவுக்குச் செல வாகும் தொகை அவருக்கு வரும் மாத வருமானத்தை விட அதிகமாக எகிற, வலியப்போய் வலையில் சிக்கிவிட்ட தாக நினைக்கிறார் விவேக். தத்து அம்மாவுக்கு விடை கொடுத்து அனுப்ப முடிவுசெய்கிறார். அவரால் அது முடிந்ததா என்பதுதான் மீதிக் கதை.
விவேக் வீராவேசமாக வேலையை விட்ட பிறகு அமைச்சரின் நேரடி உதவியாளர், எம்.எல்.எம் வணிகம் என்று பணத்துக்காகப் பல வழிகளில் இறங்கிப் படாதபாடு படுகிறார். போலித் தொழிலதிபர் சிங்கமுத்து, இமான் அண்ணாச்சி கூட்டணியுடன் இணைந்து அடிக்கும் எம்.எல்.எம். வணிக லூட்டி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரனை ஒரு வழி பண்ணுவது, செல்முருகனுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு செய்யும் மெசேஜ் நகைச்சுவை என்று விவேக்கின் முத்திரை நகைச்சுவை தொடர்கிறது.
ஆனால் மெதுவாகப் பயணிக்கும் முதல் பாதி திரைக்கதையும், பல படங் களில் பார்த்துச் சலித்த பல நகைச் சுவைக் காட்சிகளையும் கருணையே இல்லாமல் களைந்திருக்க வேண்டும்.
கொஞ்சமும் சுவாரஸ்யமில்லாத பாடல்கள் படத்துக்கு உதவவில்லை. ஆனால் நகைச்சுவை உணர்வைப் பிரதிபலிக்கும் பின்னணி இசையைக் கொடுத்துத் தப்பித்துக்கொள்கிறார் காந்த் தேவா. தனது முத்திரையைத் தொலைத்து விடாத விவேக், நகைச் சுவையோடு தரமான குணச்சித்திரமாக வும் மாற முடியும் என்பதைப் படத்தின் இறுதியில் நிரூபிக்கிறார்.
சோனியா அகர்வால் பொறுப்புள்ள குடும்பத் தலைவி கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்திருக் கிறார். மூன்றாவது முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்று நடித் திருக்கும் ‘செம்மீன்’ ஷீலாவின் நடிப்பு படத்துக்கு பெரும் பலம். முதியோர் இல்லத்திலிருந்து விவேக் வீட்டுக்கு வந்த பிறகு கண்டிப்பான மாமியாராகவும் பாசமான பாட்டியாகவும் மாறி இவர் அடிக்கும் லூட்டிகள் ரசிக்கும் வண்ணம் இருக்கின்றன.
முதியோரை நடத்தும் விதம் பற்றி சமூகத்துக்குச் செய்தி சொல்ல வேண் டும் என்று முனைப்புள்ள ஒரு கதையை நகைச்சுவையுடன் சொல்ல முயற்சித்துள்ளார் இயக்குநர் சந்திர மோகன்.
திரைக்கதையில் கோர்வை இல்லாமல் பல காட்சிகள் உதிரிகளாக உள்ளன. காட்சிகளில் சுவாரஸ் யம், திரைக்கதையின் கட்டமைப்பு, லாஜிக் முதலான அம்சங்களில் கவனம் செலுத்தியிருந்தால் ‘பாலக்காட்டு மாத வன்’ பார்வையாளர்களுக்கு இன்னமும் நெருக்கமாக இருந்திருப்பான்.


thanx - the hindu

0 comments: