படத்தில் ஒரு இடத்தில்கூட கட் இல்லை. புகை சம்பந்தமான விளம்பரம்கூட தேவையில்லை’ என தணிக்கை அதிகாரிகள் கொடுத்த பாராட்டாலும், ஃபர்ஸ்ட் லுக் புகைப்படங்களாலும் கோடம்பாக்கத்தின் கவனத்தை திருப்பி இருக்கிறது ‘கத்துக்குட்டி’ திரைப்படம்.
இதை இயக்கியிருக்கும் இரா.சரவணன் யாரிடமும் பணியாற்றாமல் நேரடியாக சினிமாவுக்கு வந்தவர். இனி அவருடன்..
எப்படி வந்திருக்கிறது ‘கத்துக்குட்டி’?
படம் பண்ணப்போறேன்னு சொன் னப்ப அக்கறையா திட்டினதும் ஆத ரவா நின்னதும் ரெண்டு அண்ணன்கள். மூத்த அண்ணன் அமீர். இளையவர் சசிகுமார். படம் தயாரானதும் சசி சாருக்கு மட்டும் போட்டுக் காட்டி னேன். என்ன சொல்லப் போறார்னு பயங்கர பதற்றம். கார்ல என்னைக் கூட்டிட்டுப்போய் அவர் கையால சாப்பாடு போட்டு இரவு ஒரு மணி வரைக்கும் உட்காரவைச்சுப் பேசி னார். ‘நல்ல கதைன்னு தெரியும். ஆனா, இவ்வளவு நுட்பமா, காமெ டியா நீ பண்ணியிருக்கிறது ஆச்சரியமா இருக்கு’ன்னார். சில சீன், வசனங்களைக் குறிப்பிட்டு சொல்லி, ‘இதையெல்லாம் நான் எதிர்பார்க் கவே இல்லை’ன்னு பாராட்டினார். சின்ன அண்ணன்கிட்ட பாஸாய்ட் டேன். பெரிய அண்ணன்கிட்ட காட்ட பயமா இருக்கு!
ஆக் ஷன், த்ரில்லர் என மிஷ்கின் தோட்டத்தில் உருவானவர் நரேன். கிராமம், காமெடி என அவரை எப்படி மாற்றினீர்கள்?
கதை ரொம்ப பிடிச்சதால, எனக் காக முழுசா கால்ஷீட் ஒதுக்கி னார் நரேன். தஞ்சாவூர் மண்ணுக்கே உரிய சேட்டையும் சில்லுண்டித்தன முமா நவரச நடிப்பில் விளையாடித் தீர்த்திருக்கார். சேறு, சகதின்னு புரண்டிருக்கார். ஒரு காட்சிக்காக ‘பாழடைஞ்ச கிணத்துக்குள்ள குதிக் கணும்’னு சொன்னேன். தயக்கமே இல்லாமல் குதிச்சார். ஆவேசமா வசனம் பேசுற ஒன்றரை நிமிஷக் காட்சியை ரவுண்ட் ட்ராலி போட்டு ஒரே ஷாட்டில் எடுக்கிற ப்ளான். ரொம்ப சிரமம்தான். நரேன் விடாம முயற்சி பண்ணினார். கடைசியில மொத்த யூனிட்டும் கைதட்டி ஆரவாரிக்கிற அள வுக்கு பக்காவா பேசிட்டார். அந்த ஒரு ஷாட்டுக்காக நாள் முழுக்க செலவு பண்ணினோம். நரேனோட அர்ப்பணிப்பு அவரை தஞ்சாவூர் இளைஞராவே மாத்திடுச்சு.
சூரிக்கு என்ன சொக்குப்பொடி போட்டீங்க.. எல்லா இடத்திலயும் ‘கத்துக்குட்டி’ புகழ் பாடுறாரே?
‘நான் நடிக்கிற படங்களிலேயே தனித்துவமானது கத்துக்குட்டி’ன்னு சூரி அண்ணன் கொடுத்த பேட்டி யைப் பார்த்துட்டு நானே அவர்கிட்ட ஆச்சரியமா கேட்டேன். ‘மீடியாக் கள்கிட்ட மட்டுமில்லாம, சிவகார்த்தி கேயன், விமல், சுந்தர்.சி, சுராஜ், மனோபாலான்னு கண்ணுல படுற அத்தனை பேர்கிட்டயும் கத்துக் குட்டியைப் பத்தி பெருமையா சொல்லிக்கிட்டிருக்கேன். இந்த படம் ஜெயிக்கணும்.. ஜெயிக்கும்!’னு சொன்னார். படத்துல ஜிஞ்சர்ங்கிற கேரக்டர்ல சூறாவளியா சுழன்று ஆடியிருக்கார் சூரி. பெரிய கம்பெனி களுக்கே தேதி கொடுக்க முடியாத அளவுக்கு பிஸியா இருக்கிறவர், ‘கத்துக்குட்டி’க்காக 32 நாட்களைக் கொடுத்தார். மறக்கவே கூடாத உதவி. இன்னிக்கு சினிமா எடுக்கிறது சுலபம். ரிலீஸ் பண்றது மரண அவஸ்தை. அப்படியொரு சூழலில் சூரி அண்ணன் செய்த உதவிதான் இந்தப் படத்தை இவ்வளவு தூரம் நகர்த்திட்டு வந்து, நாலு பேர் தேடிவந்து பிசினஸ் பேசுற அளவுக்கு கம்பீரமா நிறுத்தியிருக்கு.
யாரிடமும் உதவியாளராக இல் லாமல் நேரடியாக சினிமாவுக்கு வந் திருக்கீங்க. யாரிடமாவது வேலை பார்த்திருந்தால் நல்லா இருந்திருக் குமோன்னு நினைச்சீங்களா?
எடிட்டிங் ப்ளானோடு எழுதிய திரைக்கதை இது. அதனால, சிரமம் தெரியல. இன்றைய தொழில்நுட் பத்தை வைச்சு, ஷூட்டிங்கில் நாம தப்பு பண்ணினாலும் போஸ்ட் புரொடக் ஷன்ல சரிபண்ணிடலாம். எடிட் டிங், டப்பிங், மியூசிக்ல சரிபண்ண முடியாத தவறுகளைக்கூட டிஜிட்டல், கிராபிக்ஸ்ல சரிபண்ணிட முடியும். ஆனாலும், யாரிடமாவது வேலை பார்த்த அனுபவத்தோடு வந்திருந் தால் இன்னும் சீக்கிரமாவே படத்தை முடிச்சிருக்கலாம். மண் சார்ந்த படைப்பா வரணும்றதுக்காக தஞ்சை மக்களையே நடிக்க வைச்சேன். வட்டார வழக்கு நல்லா வரணுங்கிற தால, டப்பிங் மட்டும் 90 நாட்களைத் தாண்டி போச்சு. படம் முடிச்சுப் பார்க் குறப்ப தாமதமானது தப்பாத் தெரி யலை. அவ்ளோ நிறைவா வந்திருக்கு!
அடுத்த இலக்கு?
‘அடுத்த படத்துக்கும் இப்பவே ரெடி’ங்கிறார் நரேன். சூழல் சரியா வந்தால் ‘கத்துக்குட்டி-2’ பண்ணலாம் னார் சசி சார். 2-ம் பாகம் எப்படி இருக் கும்னு அவர் விவரிச்சப்ப அசந்து போயிட்டேன். நேர்ல அழைச்சுப் பேசிய கார்த்தி, ‘நல்ல போலீஸ் ஸ்க்ரிப் டோட வாங்க’ன்னார். முதல் படம் ரிலீ ஸாகுறதுக்கு முன்னாலேயே இதெல் லாம் கிடைக்கிறது பெரிய அங்கீகாரம்.
சினிமாங்கிறது பெரிய பாக்கியம். கோடி பேர்ல ஒருத்தருக்கு கிடைக் கிற வரம். ஆனா, சினிமாவுல தன் மானத்தைப் பறிச்சு, அழவைக்கிற விஷயங்கள் அதிகம். இங்கு பணம் தான் எல்லாத்தையும் தீர்மானிக்குது. பத்து ரூபாய்க்காக இழந்த மரி யாதை, லட்ச ரூபாய்ல கிடைச்சிடுமா? ஆனாலும், எல்லா சிரமங்களுக்கும் தயாராகித்தான் சினிமாவுக்கு வந்திருக்கேன். அமீர் அண்ணன் ஹீரோ, சமுத்திரகனி வில்லன். அதுதான் அடுத்த இலக்கு!
a
thanx - the hindu
0 comments:
Post a Comment