Monday, July 13, 2015

பாகுபலி -சினிமா விமர்சனம்

கடைவீதி போய் பல ஃபிகர்களை பார்க்காத வரை பக் வீட் பரிமளா தான் பக்கா ஃபிகர்னு நினைப்போம். 4 இடம் போய் 40   பேரை  சைட்  அடிச்ச பின் தான்  மற்ற அழகிகள் பற்றித்தெரிய வரும். அது போல்  இது நாள்  வரை  சந்திரலேகா , டி ஆர்  செட்டிங்ஸ் , எஸ்  தாணு  படங்களின்  விளம்பரங்கள் , ஷங்கரின்  மேக்கிங்  என  பிரம்மாண்டங்களை மட்டுமே  கொண்டாடி வந்த  நாம்  ராஜ்மவுலியின்  அட்டகாசமான  பிரம்மாண்டத்தைக்கண்டு  வாய்  பிளந்து  நிற்கிறோம்.


கதைன்னு  பார்த்தா அந்தக்கால  எம் ஜி ஆர்  பட ராஜா ராணிக்கதைதான்.ஆனால் அதைக்காட்சிப்படுத்திய  விதத்தில்   மேக்கிங்  ஸ்டைலில்  ஒரு கலக்கு கலக்கி  பலர் வயிற்றில்  புளியைக்கரைத்து  ஊற்றி  இருக்கார். 


ஒரு  ராஜ்ஜியம். அதுல  அண்ணன்  , தம்பி 2 பேரு  அழகிரி , ஸ்டாலின்  போல் . பங்காளிங்க  2 பேரில்  யாருக்கு கைய் மகுடம்  சூட்டுவது  என்ற  கேள்வி வருகையில்   போர் நடக்கும்  அபாயமும்  வருது. போரில் எதிரி  தலைவனை  யார்  போட்டுத்தள்ளறாங்களோ  அவங்க தான் ராஜான்னு  முடிவு  செய்யப்படுது. என்ன ஆச்சு ? என்பதே  மிச்ச மீதித்திரைக்கதை.


படத்தின்  முதல்  ஹீரோ சத்யராஜ் தான், அட்டகாசமான  கெட்டப் , ஆண்மை  மிளிரு.ம்  நடிப்பு ,சாண்டில்யன்  கதைகளில்  வரும்  குணச்சித்திர கதாபாத்திரம்  போல்

 அடுத்து  படையப்பா நீலாம்பரி  ரம்யா  கிருஷ்ணன், ராணியாக அவர்  ஒரு நடை  நடந்து  வர்றாரே. வாவ் ... 


ஹீரோ பிரபாஸ்   ஓப்பனிங்  சீனில்  6  பேக்ஸ்  எல்லாம்  காட்டி  கலக்கறார். விக்ரம்க்கு சரியான சவால் தான். பெண்கள்  கொண்டாடும்  கட்டழகன். அவருக்கு  நடிப்பில்  பெரிய வாய் ப்பில்லை. ஆர்ம்ஸ்  மட்டும் காட்டுங்க,நடிப்பைக்காட்ட ஆளுங்க ஏகப்ட்ட பேர்  படத்தில்  இருக்காங்கனு சொல்லிட்டார்  போல 


ஹீரோயினா   சரும நிறத்தில்   லெமனா ஜொலிக்கும்  ஜமுனா  தமனா. தேவ்தை  போல்  கெட்டப்  கலக்கல்.  இவர்  ஜான்சி  ராணி  டைப்பில்   ஆக்ரோஷம் காட்டுவது , ஃபைட்  போடுவது  எல்லாம் ஓக்கே  ரகம்.


அனுஷ்கா  ஓல்டு  கெட்டப்பில் வர்றார் .ரசிக்க  முடியலை . காதலிக்கும்போது கோதுமை அல்வா போல்  பார்த்துட்டு  10 வருசம்  கழிச்சு  வேற  ஒருத்தன் கூட  ஜோடியா  தோலில்  சுருக்கங்களோட பார்க்கும்  போது  மனசுக்கு  எப்படி  இருக்கும்? ஆனாலும்  நடிப்பில்  குறை  சொல்ல  முடியவில்லை .


த்ரிஷாவின்  முன்னாள்  காதலர்  ராணா வுக்கும்  நல்ல வாய்ப்பு . காளையை அடக்கும் காட்சியில்  சி ஜி ஒர்க்கையும்  மீறி  அவரது  உழைப்பு  தெரிகிறது


காக்கத்தீய  தலைவனாக வரும்  வில்லன்  மிரள வைக்கும்  நடிப்பு. கேப்டன்  பிரபாகரன்  மன்சூர் அலிகான்  போல் அநாயசாமான  பாடி லேங்குவேஜ் . அவர்  வசனம்  பேசும்போது  நாக்கை சப்புக்கொட்டுவது  செம ஸ்டைல்.



போர்க்களக்காட்சிகள்  தான்  படத்தின்  பெரிய  பலம்.  கல்கி யின் நாவல்கள்  , சாண்டில்யன்  நாவல்களில் மட்டுமே வாசித்த  நம் கண்கள்  திரையில்  உரு கொள்ளும்  போர்  காட்சிகள்  பிரமிப்பை  ஏற்படுத்துது.



மனதைக் கவர்ந்த  வசனங்கள்


இந்த உலகத்தின் சிறந்த விடுதலை மரணம் தான் # பாகுபலி ( நான் கடவுள் ல பாலா ஆல்ரெடி டோல்டு)


2 நீ என்னோட ஆள்.அப்போ உன் லட்சியமும் இனி என்னோட லட்சியம் # பாகுபலி


3 அரசன் அற்ற அரியாசனம் நயவஞ்சகத்தின் கருவூலம் # பாகுபலி


4 அதிகாரத்தைக்கைப்பற்றுவதுதான் சத்ரிய லட்சணம் #,பா ப

5 என் இரு மகன் களில் யார் வீரனோ யார் மக்கள் மனம் கவர்பவனோ அவனே நாட்டை ஆள்வான் #,பாகுபலி ( அழகிரி ,ஸ்டாலின்?)


6 100 பேரைக்கொன்றால் அவன் வீரன் எனில் ஒரே ஒரு உயிரைக்காப்பாற்றுபவன் கடவுள் #,பாகுபலி

7 எத்தனை பேரைக்கொன்றான் ?என்பதில் இல்லை ஒரு அரசனின் பெருமை.எத்தனை பேரைக்காப்பாற்றினான் என்பதில் தான் பெருமை








 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  தியேட்டர் ஓனர் லேடினு நினைக்கறேன்.உள்ளே ஜிகினா லைட்ஸ் எல்லாம் போட்டு டெக்ரேட் பண்ணி இருக்காங்க.தேர்த்திருவிழா கரகாட்ட மேடை எபக்ட்.# மதுரை


2 தியேட்டடர் ல 75% பேர் ஜோடியோட வந்திருக்காங்க.அதெப்டி எல்லாருக்கும் ஒரு ஜோடி சிக்கிக்குது?


3 158 நிமிஷம் # பாகுபலி U/A ( thamanaa ல 4 ஏ இருக்குல்ல)


4 ஷங்கரையே மிரள வைக்கும் பிரம்மாண்டமான ஓப்பனிங் அருவி சீன்


5 சிம்ரன் இலியானா வரிசையில் தமிழகத்தின் 3 வது இடை அழகி லெமனா சரும நிறம் கொண்ட தமனா


6 அஸ்கா உதட்டழகி அனுஷ்கா வை ஓல்டு கெட்டப்ல காட்றாங்க.ரசிக்கலாமா?,வேணாமா?னு குழப்பமா இருக்கு


7 கட்டப்பா.அரியாசனத்தின் அடிமை ! னு ஒரு டயலாக்.நம்ம தமிழ் இனத்தலைவரை சொல்றாங்களா?

8 கேமரா ஆங்கிள் பாதிக்குப்பாதி ஹெலிகாப்டர் ஷாட் தான்.பிரமாதம்.லொக்கேஷன் செலக்சன் அட்டகாசம்

9 ஹிரோயின் த்ரிஷானு நினைச்ட்டு ஹீரோ டாட்டு வரைஞ்சு விட்டுட்டு இருக்காரு.யோவ்.அது தமனாய்யா


10 அந்தக்கால எம் ஜி ஆர் பட கதை தான்.ஆனால் பிரம்மாண்டமான படமாக்கம் கலக்கல் தொழில்நுட்ப உழைப்பு .இடை வேளை வரை படம் டாப் #,பாகுபலி

11 ஒரு கட்லட் 65 ரூபாயாம்.டேய்.இந்தக்காசுக்கு ராகிமாவுல பக்கோடா போட்டா குடும்பமே உக்காந்து சாப்பிடலாம்


12 சாண்டில்யன் நாவல்களில் மட்டுமே படித்த போர்க்காட்சிகள் பிரம்மாண்டமாய் ஹாலிவுட் படத்துக்கு நிகராய் # பாகுபலி


13 மதுரை சுகப்ரியா வில் பாகுபலி செகண்ட் ஷோ.சரக்குஅடிச்சிருக்காங்களா?னு செக் பண்ணி அனுப்பறாங்க.சபாஷ் மதுரை


14 சரித்திரப்படத்தில் பானுமதி டூயட் சீனில் வெட்கப்பட்டு ஓடும்.MGR துரத்துவார்.பாகுபலில தமனா தானா முன் வந்து ஹீரோவை தர்ணா பண்ணி கில்மா பண்ணுது

15 பாகுபலி யில் நான் கத்துக்கிட்டது என்னான்னா காதலி தூங்கிட்டு இருக்கும்போது .அது முகத்துல ,தோள்ல எதுனா ஸ்கெட்ச் ல வரைஞ்சு விட்ரனும்.


16 பாகுபலியால பாதிக்கப்பட்டது ஷங்கர் இமேஜ்.பாதிக்கப்படப்போவது புலி யின் இமேஜ்






இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  டைட்டிலில்  தொழில்  நுட்பக்கலைஞர்களுக்கு  முதல் மரியாதை செய்தது


2  ஓப்பனிங்  சீனில்  சிவ லிங்கத்தை  ஹீரோ தோளில் சுமந்து  வரும்  காட்சியிலேயே  தான்  ஒவ்வொரு  பாலிலும்  சிக்சர்  அடிக்கும்  டோனி  என  உலகுக்கு  உணர்த்துவது 


3  பிரம்ம்மாண்டத்துக்குப்பேர்  போன் ஷங்கரையே மிரள  வைக்கும்  ஓப்பனிங்  சீன்  அட்டகாச  அருவி  சீன் 


4   தமனாவின்  காதல்  காட்சிகள் செம  கிளு  கிளு . கேமராவை அப்படியே  கொண்டு  போய்  பூரான் போல்  தமனா வின்  உடம்பில்  ஊற  விட்டுட்டார்  கேம்ரா  மேன் 


5 அதரப்பள்ளி  நீர் வீழ்ச்சியில் ஒளிப்பதிவாளர்  செந்திகுமாரின்  கேமரா  விளையாடிஇருக்கு. 


6   சண்டைப்பயிற்சியாளர்  பீட்டர்  ஹெய்ன்,அட்டகசமான  போர்க்காட்சிகளை , வெறித்தனமான   ஃபைட் சீன்ளை எடுத்த  விதம் 


7    படத்தில் வரும் 22  நிமிட்   போர்க்காட்சிக்காக 6  மாதங்கள் உழைத்த   எடிட்டர்   கோத்தகிரி வெங்கட் க்கு ஒரு ஷொட்டு


8    பாடல்  இசையை விட  பின்னணி  இசையில்  கலக்கிய  அழகன் , மகதீரா  புகழ்  மரகத மணி 


9  அத்தனை  தொழில்  நுட்ப  வல்லுனர்களையும்  ஒருங்கே  இணைத்து அட்டகசமான  ஜாலம்  காட்டிய  இயக்குநர்  ராஜ்மவுலியின்  உழைப்பு 



இயக்குநரிடம்  சில கேள்விகள்




1   ஓப்பனிங்  சீனில்  பிரம்மாண்டமான  சிவ லிங்கத்தை  தோளில்  சுமக்கும்  காட்சியில்  ஓரளவு  வெயிட்  உள்ள லிங்கத்தை வெச்சிருக்கலாம்.  அட்டை  ஆடுவது  ஆங்காங்கே  காட்டிக்குடுக்குது


2  அருவியில்  ஏதோ ஒரு முகமூடி  வந்ததும் அதை நாயகியின்  முகமாக கற்பனை செய்து காதல்  கொள்வதெல்லாம் ஓவர்.


3  நாசரின் கதாபாத்திரம்  மாற்றுத்திறனாளியாக  காட்டப்பட்டது  எதுக்கு? பொதுவாகவே  பலரும்  வில்லன்  ரோலை  மாற்றுத்திறனாளியாகவோ , திருநங்கையாகவோ  காட்டுவது  எதுக்கு?  அவர்கள் மேல் வெறுப்பை  ஏற்படுத்தாதா?


4  ஒரு  பிரம்மாண்டமான  படத்துக்கு பின்னணி இசை  எவ்வளவு  பிரமாதப்படுத்தி  இருக்க  வேண்டும்? இதில்  ஓக்கே ரகம்  தான்


5  அனுஷ்காவின்  மேக்கப்  எடுபடவில்லை . தசாவதாரம்  கமல்  , சிட்டிசன்  அஜித் , ஃபிரண்ட்ஸ்  விஜய் மேக்கப்  போல்  நாடக மேக்கப்  போல்  காட்டிக்கொடுக்குது


6 திரைக்கதையில்  அடிமைப்பெண்  , மகதீரா  சாயல்  அடிக்கடி வந்து  போவது  ஏனோ?




சி  பி  கமெண்ட் =பாகுபலி - ஹாலிவுட் படத்துக்கு இணையான பிரம்மாண்டமான சரித்திரப்படம் ஆல் சென்ட்டர் ஆடியன்சும் ரசிக்கும் தரத்தில்.ரேட்டிங் = 3.25 / 5


பாகுபலி ரேட்டிங் 4/5 கொடுக்காதற்குக்காரணங்கள்
1 முழுமை பெறாத கதை ( தொடரும்) 2 பழைய கதை
3 வன்முறை


பாகுபலி ஒரே நாளில் ரூ.76 கோடி வசூல் செய்து புதிய சாதனை.. # அடேங்கப்பா! இந்திய அளவில் இது நெ 1,வசூல்.ஆல் டைம் ரெக்கார்டு


ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 50  (ஆனால்  டப்பிங்  படத்துக்கு  மார்க்  போட மாட்டாங்க )



குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = சூப்பர் 



 ரேட்டிங் = 3.25 / 5


a





Madurai cinipriya complex

1 comments:

Unknown said...

idhu dubbing padam illa.. neradi tamil padam dhan....