தனுஷ் நடிப்பில் 'தர லோக்கல்' படம் என்ற அறிவிப்பு, 'காதலில் சொதப்புவது எப்படி?', 'வாயை மூடி பேசவும்' படங்களுக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கும் மூன்றாவது படம் என்ற இந்த இரண்டு காரணங்களே மாரி படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.
'மாரி' ரசிகர்களின் மனதை மகிழ வைத்ததா? 'வேலையில்லா பட்டதாரி', 'அனேகன்' படங்களுக்குப் பிறகு ரிலீஸ் ஆகி இருக்கும் மாரி, தனுஷ் ரசிகர்களை திருப்திப்படுத்தியதா?
'மாரி' டைட்டில் போடும்போதும், தனுஷ் பெயரை போடும்போதும் தியேட்டரில் விசில் தெறிக்கிறது. எழுந்து நின்று ரசிகர்கள் கொடுக்கும் அப்ளாஸ் தியேட்டரையே அதிர வைத்தது.
சென்னையில் லோக்கல் டானாக இருக்கிறார் மாரி (தனுஷ்). சின்ன சின்ன அட்ராசிட்டிகள், அலப்பறைகள் செய்பவரை போலீஸ் முக்கிய குற்றவாளியாக கைது செய்கிறது. அதற்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வரும் தனுஷ் என்ன செய்கிறார்? என்பது 'மாரி' கதை.
லோக்கல் டான் 'மாரி' கேரக்டருக்கு தனுஷ் அவ்வளவு பொருத்தம். அறிமுகக் காட்சியில் டான்ஸ் பீட்டில் ஆடும்போது அதகளம் செய்கிறார்.
ஸ்லோமோஷனில் நடந்து வருவது, ரஜினி பாணி ஸ்டைல் காட்டுவது, டான்ஸில் பின்னிப் பெடல் எடுப்பது, ஏரியா ஜனங்களிடம் இம்சை செய்வது, சின்ன சின்ன சேட்டைகளில் ஈடுபடுவது, சண்டைக் காட்சியில் காட்டும் வேகம், புறாக்களிடம் காட்டும் பாசம், எமோஷன் காட்சிகள், என தன்னை ஒரு நடிகனாக நிரூபித்திருக்கிறார்.
''இவ்ளோ டிவி இருக்குது. ஒரு டிவில கூட ஏன் இந்தியா ஜெயிக்கலை?''
''கலப்படமான நல்லவனா இருக்குறதை விட, சுத்தமான கெட்டவனா இருக்குறதே மேல்.''
''ஒருத்தன் தூங்கிட்டு இருக்கும்போது ஒரு கொசு வந்து கடிச்சுதுன்னு வெச்சுக்கயேன். அந்த கொசு பெரிய ஆள் ஆகிடாது. ஒரு நாள் முழிச்சிக்கினு இருக்க சொல்ல கடிக்கும்போது, பட்னு அடிச்சா பொட்னு போய்டும். ஒரு நாள்...''
இப்படி பன்ச் பேசும்போது தனுஷ் ஸ்கோர் செய்கிறார்.
ரோபோ ஷங்கரை அருகில் அழைத்து கலாய்க்குறியா? என்று கேட்பது, விஜய் ஜேசுதாஸிடம் நல்லா பண்ற என்று சொல்வது, செஞ்சிருவேன் என்று கை நீட்டி விரல்களை திருப்பி சொல்வது என தனுஷ் தூள் கிளப்புகிறார்.
ரோபோ ஷங்கர் கிடைத்த இடங்களில் கேப்பில் கெடா வெட்டி வெடித்து சிரிக்க வைக்கிறார். காஜல் அகர்வால் போலீஸ் ஸ்டேஷன் போகப் போவதாக சொல்ல, அடுத்த கலெக்ஷனே அங்கேதான் என்கிறார்.
''அந்தப் பொண்ணுக்கு கரெக்ட் நீ இல்லைன்னு எங்களுக்குத் தெரியுது. அந்த பவுடர் மூஞ்சிக்கு தெரியலையே.''
''பார்த்தவே பிடிக்கலை. பார்க்க பார்க்க பிடிக்குமா?'' என்று தனுஷையே கலாய்க்கும் அளவுக்கு ஸ்கோர் செய்கிறார்.
தமிழும் ஆங்கிலமும் கலந்து ரோபோ ஷங்கர் கொடுக்கும் கவுன்டர்களுக்கும், உடல் மொழிக்கும் தியேட்டர் அதிக அளவில் குலுங்கியது.
முதல் பாதி முழுக்க ரோபோ ஷங்கருக்கு கொடுத்த முக்கியத்துவத்துக்காக இயக்குநரையும், அதற்கு இடம் தந்ததற்காக தனுஷையும் பாராட்டலாம்.
'பேர்ட்' ரவியாக வரும் மைம் கோபி, வேலுவாக வரும் சண்முக ராஜா, அடிதாங்கியாக வரும் கல்லூரி வினோத் ஆகியோர் பொருத்தமான தேர்வு.
சப் இன்ஸ்பெக்டர் அர்ஜூனாக அறிமுகம் ஆகியிருக்கும் விஜய் ஜேசுதாஸ் பேசும்போது மட்டும் வாயில் பாக்கை போட்டு கொதப்பிய மாதிரியே பேசுகிறார். இன்னும் நடிக்க முயற்சித்திருக்கலாம்.
காஜல் அகர்வாலுக்கு பெரிதாக ஏதும் வேலையில்லை. ஒரு காட்சி மூலம் படத்தை நகர்த்த உதவுகிறார். மற்றபடி வந்து போகிறார் அவ்வளவே.
அனிருத் இசையில் மாரி நல்ல மாரி, டானு டானு, தப்பாதான் தெரியும் ஆகிய மூன்று பாடல்கள் கவனம் ஈர்க்கின்றன. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் சென்னை ஏரியா முழுக்க பளிச்சிடுகிறது. பிரசன்னாவின் எடிட்டிங் கட்டிங் ஓஹோ என சொல்ல வைக்கிறது.
தர லோக்கல் படத்துக்கான எல்லா முகாந்திரங்கள் இருந்தும் படத்தின் கதையோ, திரைக்கதையோ பெரிய அழுத்தத்தைக் கொடுக்கவில்லை.
ஜாலியாக நகரும் முதல் பாதி, சரியான நேரத்துக்காக காத்திருந்து பழிவாங்கும் இரண்டாம் பாதி என்று வழக்கமான கமர்ஷியல் சினிமாவில் பேக்கேஜ் கொஞ்சம் குறைவு தான்.
தனுஷின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் ரசிக்க வைக்கிறது. அந்த ஸ்க்ரீன் பிரசன்ஸ் முன்னால் மெயின் வில்லன்கள் காணாமல் போய்விடுவதும் திரைக்கதைக்கு சுவாரசியத்தைக் கூட்டவில்லை.
எனினும், இந்த மசாலா 'மாரி'யை - தனுஷ் ரசிகர்கள் சூப்பர்னு தான் சொல்வாங்க. தனுஷ் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடிக்கலாம்; திருப்தியைக் கொடுக்கலாம். ஆனால், மற்றவர்களுக்கு..?
'காதலில் சொதப்புவது எப்படி?', 'வாயை மூடி பேசவும்' படங்கள் மூலம் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்ட இயக்குநர் பாலாஜி மோகனுக்கு..?
மாரி - கொஞ்சம் ஸாரி தான்!
நன்றி -த இந்து
- Venugopal Sரோபோ சங்கரை நன்றாக பயன் படுத்தி இருக்கிறார்கள். அவரும் அதில் ஸ்கோர் செய்கிறார். டிவி நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ள படக்குழுவினர் பாரட்டிற்கு உரியவர்கள்..இடைவேளைவரை இருந்த வேகம் அதற்க்குபின்பும் இருந்திருந்தால், திரு.பாலாஜி மோகன் "ஹாட்ரிக்" அடித்துப்பார்.என் செய்வது ? இருப்பினும் திரு.தனுஷின் பண்பட்ட நடிப்பிற்க்காக ஒருமுறை திரை அரங்கிற்கு சென்று பார்க்கலாம்.about 6 hours ago
- Andy Anduமாரி படம் டைரக்ட் பண்ணது பாலாஜி மோகனா இல்ல தனுசா.....தமிழ் நாட்ல ஹீரோ க்கு பில்டப் வேணும் தான்... ஆனா ஓவரா பில்டப் பண்றது தேவ இல்ல ...என்ன தனுஷ் சார் .. நல்ல படம் பண்ற நீங்க ...சீன் க்கு சீன் .. நான் சூப்பர் ஸ்டார் மருமகன் .. னு prove பண்றீங்களே ...நான் உங்க நல்ல படத்துக்கு ரசிகன் ...இது மாதிரி படத்துக்கு உங்கள் அறிவுரையாளன் ...நன்றி .. (பி.கு: இது தனுசின் தீவிர ரசிகனுக்கு பொருந்தாது ..எனவே மன்னிக்கவும் நண்பா ...)
0 comments:
Post a Comment