'த்ரிஷ்யம்' படத்தைப் பார்த்துவிட்டு, அப்படத்தில் ஏன் ரஜினி நடிக்கத் தயங்கினார் என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் தெரிவித்திருக்கிறார்.
கமல், கெளதமி, நிவேதா தாமஸ், ஆஷா ஷரத், ஆனந்த் மகாதேவன் உள்ளிட்ட பலர் நடிக்க ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் 'பாபநாசம்'. மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'த்ரிஷ்யம்' படத்தின் ரீமேக்காகும். ஜிப்ரன் இசையமைத்து இருக்கும் இப்படத்தை ராஜ்குமார் தயாரித்திருக்கிறார்.
'பாபநாசம்' படத்துக்கு விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால், இப்படத்தை முதலில் ரஜினியிடம் தான் திரையிட்டு காட்டியிருக்கிறார்கள்.
'த்ரிஷ்யம்' ரஜினிக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் அப்படத்தில் நடிக்க ரஜினியும் விருப்பம் காட்டவில்லை, இயக்குநரும் ரஜினியை நாயகனாக்க விரும்பவில்லை.
அதற்கான காரணம் என்ன என்று கேள்விக்கு, "ரஜினிக்கும் எனக்கும் இரண்டு காட்சிகள் சரியாக இருக்குமா என்று யோசிக்க வைத்தது. ஒன்று நாயகனை போலீஸ் ஸ்டேஷனில் அடிக்கும் காட்சி, ஒரு போலீஸ் நாயகனின் முகத்தில் ஷூவால் மிதிப்பார். அடுத்து க்ளைமாக்ஸ் காட்சி. இந்த இரண்டையும் ரஜினி ரசிகர்கள் ஏற்பார்களா என்ற பயம் எனக்கு வந்துவிட்டது. ரஜினிக்கும் அந்த தயக்கம் இருந்தது" என்று தெரிவித்திருக்கிறார்.
thanx - the hindu
- ரஜினி ஆரம்ப காலத்தில் செய்த கதையை தொட கூட தயங்கியவர் கமல்.இதை கமல் கூட ஒரு பேட்டியில் ஒப்பு கொண்டு இருக்கிறார்.அந்த நேரத்தில் 1980 வந்த மங்கம்மா சபதம்,எனக்குள் ஒருவன் போன்ற சுமாரான படத்திற்கு கூட சண்டை காட்சியில் டூப் போட்டு நடித்தவர் இந்த கமல். கமலுக்கு பதில் டூப் போட்டு எடுத்து இருப்பார்கள்.சந்தேகம் இந்த படத்தின் CD வாங்கி பார்க்கவும்.
- பாபநாசம் ஒரு ரீமேக் படம்.இந்த படம் அணைத்து மொழிகளில் ரீமேக் செய்து வெற்றி பெற்று இருக்கிறது.ஏதோ கமல் மட்டும் இந்த படத்தில் நடித்த தாள் இந்த படம் வெற்றி பெறுவதாக சொல்வது முட்டாள் தனம்.அப்படி என்றால் உத்தமவில்லன் ஒரு வாரம் கூட ஓட வில்லை.யார் நடித்தாலும் இந்த படம் வெற்றி பெற்று இருக்கும் காரணம் இந்த கதையின் கரு.இந்த படம் கேரளாவில் ஒரு வருடம் ஓடியது நினைவில் கொள்ளவும்.நாம் பெரிய நடிகனாக பேசி கொள்ளும் கமலுக்கு கூட ரீமேக் படம் தான் கைகொடுக்கிறது.
- தயவு செய்து பழியை ரசிகர்கள் மீது போடாதீர்கள்...SHAMITHAB...படத்தில் AMITHAB தை dhanush அடிப்பது போல் காட்சிகள் உள்ளது...அவர் தலையில் தட்டுவார்....காட்சிக்கு தேவை என்றால் ஒரு நடிகன் நடித்து ஆகா வேண்டும்.. ஆனால் நம் ரசிகர்களும் சில நேரங்களில் காட்டும் மடத்தனமான வெறி...படத்தின் pokkaiyeh மாற்றி விடும்....Points325
- நடிகன் என்பவர்,எந்த பாத்திரம் கொடுத்தாலும் அதுவாகவே மாறி நடிக்க வேண்டுமே தவிர,அது சரியாகாது,இது சரிப்பட்டு வராது என்பதெல்லாம்,நடன மங்கைக்கு மேடை கோணல் என்பது போல் உள்ளது.நடிகர் திலகம் இது போல் யோசித்து இருந்திருந்தால் நமக்கு ஒரு நவராத்திரி கிடைத்து இருக்காது.பல சரித்திர நாயகர்களின் வாழ்க்கை வரலாறு தெரியாதுபோய் இருக்கும்.
- ஒரு நடிகர் புகழின் உச்சிக்கு ஏற ஏற, அவருகேன்று ஓர் தனி வட்டம் இடப்படுகிறது. அந்த வட்டத்திலிருந்து அவராக நினைத்தால் கூட வெளியே வருவது கடினம். அவர்களுகென்ற பிரத்யோகமாக கதைகள், காட்சிகள் அமைக்கப்படுகின்றன. இதனால் ஓர் நல்ல நடிகர் அவரது இயல்பான நடிப்பை வெளிக்காட்ட முடியாது போய் விடுகிறது. ரஜனி எனும் ஒரு சூப்பர் ஸ்டாரை வைத்து ஓர் ஆறிலிருந்து அறுபது வரை படத்தை ஏ.எம்.நிறுவனத்தால் முடிந்தது. அது சூப்பர் ஸ்டாரின் வெற்றி படங்களில் ஒன்றாக இன்றும் திகழ்கிறது. அது போன்றதொரு இயல்பான நடிப்பை ரஜனியால் தர முடியும், ஆனால் ரஜனி அந்த வட்டத்தை விட்டு விலகாத வரை. அது சாத்தியமா?Points1320
- நிச்சயம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து இருந்தால் படம் BLOCKBUSTER தான். சந்தேகம் இல்லை. கமல் நடித்தால் தான் படம் ஒரு காட்சி கூட தமிழகத்தில் அரங்கு நிறையவில்லை.Points295
- அருள் lingaa மற்றும் கோச்சடையன் பாபா குசேலன் போன்று பிளாக் பஸ்ட்டர் தானே நீங்கள் சொல்ல வருகீறேர்கள்
- இல்ல ரகு. எந்திரன், சிவாஜி, சந்திரமுகி, படையப்பா, அருணாச்சலம், முத்து, பாட்ஷா, வீரா, அண்ணாமலை, எஐமான், தளபதி, மன்னன், தர்மதுரை, பணக்காரன், படிக்காதவன், தர்மத்தின் தலைவன், மனிதன், ராஜாதி ராஜா, ராஜா சின்ன ரோஜா, மாப்பிள்ளை, குரு சிஷ்யன், பொல்லாதவன், பாயும் புலி, நான் மகான் அல்ல, பில்லா, முரட்டுக்காளை, முள்ளும் மலரும், ஜானி, தில்லு முல்லு, ஊர்க்காவலன், தம்பிக்கு எந்த ஊரு..................... இந்த மாதிரி எனக்கு தெரிந்த ஜினியோட ஹிட் பட வரிசையில பாபநாசமும் சேர்ந்திருக்கும், ரஜினி நடிச்சிருந்தா,...
- ரஜினி நடித்த "சிவாஜி" படத்தில் போலீஸ் ரஜினியை அடித்து துவைத்து காயவைப்பார்கள். வில்லன் சுமன் வந்து வீரவசனம் பேசி கொலை செய்வார். ரஜினி தப்பித்து போவது வேறு விஷயம். அப்படத்தை மக்கள் வெற்றி பெற செய்த்தார்கள். நடிகன் என்றால் பாத்திர படிப்புக்கு என்ன தேவையோ அதை செய்யவேண்டும். செய்தி வரவேண்டும் என்று இந்த செய்தி பதிவு செய்யபட்டிருகிறது..
0 comments:
Post a Comment