Friday, July 17, 2015

சம்பவி - சினிமா விமர்சனம்

நடிகர் : சௌந்தர்
நடிகை :சுருதி
இயக்குனர் :எஸ்.ஆர்.எஸ்
இசை :ஸ்ரீதர்
ஓளிப்பதிவு :மித்ரன்- பகவதிபாலா
நாயகன் சௌந்தரும், நாயகி சுருதியும் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராய் காதலிக்கிறார்கள். ஆனால், நாயகன் சௌந்தரோ, அவளை அனுபவிக்க வேண்டும் என்று ஆசையுடன் அலைகிறார். ஒருகட்டத்தில், அவளை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவளை கற்பழித்து விடுகிறான். 

பிறகு, காதலி, நாயகனை திருமணத்திற்கு வற்புறுத்தவே, அவளையும் அவளது குடும்பத்தை உயிரோடு எரித்து கொலை செய்துவிடுகிறான். தன்னை நம்ப வைத்து மோசம் செய்த காதலனை பழிவாங்க, நாயகி அடுத்த தலைமுறையில் பேயாக வந்து காதலனையும், அவனது குடும்பத்தையும் துன்புறுத்துகிறாள். 

இதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா? அல்லது பழிவாங்கப்பட்டார்களா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை. 

நாயகனாக நடித்திருக்கும் சௌந்தர், காதல் காட்சிகளில் எல்லாம் சுமாராக நடித்திருக்கிறார். ஆனால், பேயைக் கண்டு அலறும் காட்சிகளில் அழகாக நடித்திருக்கிறார். நாயகி சுருதி சற்று வயதான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார். இருப்பினும், சிறப்பாக நடித்திருக்கிறார். 

மற்றபடி, படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்து போயுள்ளனர். அனைவரும் தங்கள் கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்கள். 

இயக்குனர் எஸ்.ஆர்.எஸ்., ஒரு திகில், சஸ்பென்ஸ், திரில்லர் கலந்து படமாக எடுத்துள்ளார். ஆனால், பேய் படத்துக்குண்டான திகிலை கொடுத்திருக்கிறார். நிறைய கதாபாத்திரங்கள் ரொம்பவும் செயற்கையாக நடிப்பதுபோல் இருக்கிறது. அதை மட்டும் கவனித்திருந்தால் கொஞ்சம் கூடுதலாக ரசித்திருக்கலாம். 

ஸ்ரீதரின் பின்னணி இசை படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. மித்ரன் ஒளிப்பதிவு இரவு நேரங்களிலும் அழகாக பளிச்சிட்டிருக்கிறது. 

மொத்தத்தில் ‘சாம்பவி’ பயமுறுத்துகிறாள்.

நன்றி - மாலைமலர்

0 comments: