தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பில்லை என்பதை உணர்த்துவதுபோல் அடிக்கடி பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அதுவும், டெல்லியில் கால் டாக்ஸி பயணம் பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பற்றதாகவே இருக்கிறது என்று கூறலாம். அண்மையில் உபெர் கால் டாக்ஸியில் பயணித்த பெண் ஓட்டுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதன் தாக்கம் மறைவதற்குள் மற்றொரு சம்பவமும் நடந்துள்ளது.
மொபைல் ஆப் சேவை பல நேரங்களில் வரமாக இருந்தாலும், டெல்லி பெண்களுக்கு மொபைல் ஆப் மூலம் கார் புக்கிங் செய்வது வரமாக இல்லை.
கடந்த வாரம் ஜூலை 2-ம் தேதி தான் எதிர்கொண்ட அந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை சமூக வலைத்தளங்களில் விவரித்து நியாயம் கோரியிருக்கிறார் ஓர் இளம் பெண்.
'தேவேந்தர் குமார், தொலைபேசி எண் (மறைக்கப்பட்டிருக்கிறது). வெள்ளை நிற ஸ்விஃப்ட் டிசைர் ஓட்டுகிறார். உபெர், ஓலா, டாக்ஸி ஃபார் சூர் போன்ற நிறுவனங்களில் கார் புக் செய்யும்போது இந்த நபரை ஓட்டுநராக அனுப்பினால் காரில் ஏற வேண்டாம்'
இப்படித்தான் ஆரம்பிக்கிறது பாதிக்கப்பட்ட பெண்ணின் ஃபேஸ்புக் பதிவு.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
"எல்லா இரவைப் போலத்தான் அன்றைக்கும் நான் ஓலா கேப்ஸ் மொபைல் ஆப் மூலம் ஃபரிதாபாத் செல்ல ஒரு கார் புக் செய்தேன். காரும் வந்தது. ஆனால் 'டாக்ஸி ஃபார் சூர்' நிறுவனம் காரை அனுப்பிவைத்திருந்தது.
கார் நன்றாகவே இருந்தது. ஓட்டுநரும் பார்ப்பதற்கு எந்த நெருடலையும் ஏற்படுத்தாதவாரே இருந்தார்.
வழக்கமாக காரில் பயணிக்கும்போது நான் நிறைய தொலைபேசி அழைப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். நான் பேசிக் கொண்டிருந்தபோது காரில் அதிக சத்ததுடன் பாட்டு இசைக்கப்பட்டது. நான் அப்போது 3 முறை குறுக்கிட்டு சத்தத்தை குறைக்குமாறு கூறினேன்.
நான் செல்ல வேண்டிய இடம் நெருங்கிக் கொண்டிருந்தது. இன்னும் 25 நிமிடங்களில் இலக்கை அடைந்துவிடுவேன். அப்போதுதான் திடீரென கார் தாறுமாறாக ஓடத் தொடங்கியது. டிரைவர் ஏதோ முனகுவதுபோல் இருந்தது. உடனே தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டு ஓட்டுநரிடம் காரை மிதமான வேகத்தில் ஒழுங்காக ஓட்டுமாறு தெரிவித்தேன்.
அதை சொல்லிவிட்டு வேறு ஒரு தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள எத்தனித்தேன். அப்போது நான் பார்த்த காட்சி என்னை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
அந்த ஓட்டுநர் சுய இன்பத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரது முனகலும், முகத்தில் ஒருவிதமான புன்னகையும் அதிகரித்துக் கொண்டிருந்தது. பித்தம் தலைக்கேறியிருந்த அந்த நபர் எனக்குள் கிலி பரவச் செய்தார். இந்த மாதிரியான ஓட்டுநர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். நான் பார்த்த காட்சி என்னை இன்னும் பல நாட்களுக்கு நடுநிசியில் வேதனைப்படுத்தும்.
இரவுப் பயணம், தனியாக இருக்கிறேன், ஓட்டுநரோ ஆபத்தானவராக இருக்கிறார். செய்வதறியாது கார் ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டேன். வீடு நெருங்கும் நேரத்தை எண்ணிக் கொண்டு இருந்தேன். அந்த இரவில், தனிமையில் என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.
சில நிமிடங்களில் வீட்டை அடைந்துவிட்டோம். காரில் இருந்து இறங்கியதும் "ஏன் அப்படி நடந்து கொண்டாய்?" என அந்த ஓட்டுநரிடம் கேட்டேன்.
ஆனால், அவனோ "நான் ஒன்னும் செய்யவில்லை" என்றான்.
ஓலா கேப்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டேன் அவர்கள் டாக்ஸி ஃபார் சூர் நிறுவனத்தின் கால் சென்டருக்கு போன் அழைப்பை இணைத்தனர். மறுமுனையில் பேசிய பெண் வழக்கமான பதிலைச் சொன்னார் "உங்கள் புகார் மீது 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று.
இந்த பதிவுடன் ஒரு ஃபோட்டோவும் இணைத்துள்ளேன். அதில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் குறித்து விவரம் உள்ளது. தயைகூர்ந்து இந்த நபர் நீங்கள் புக் செய்யும் வாடகை காருடன் வந்தால், அதில் பயணிக்காதீர்.
அதுமட்டுமல்ல, என்னிடம் இன்னொரு வேண்டுகோளும் உள்ளது. அது டாக்ஸி நிறுவங்களுக்கானது.
டாக்ஸி ஃபார் சூர், ஓலா கேப்ஸ் நிறுவங்களே... வாகனத்தை புக் செய்த 15 நிமிடங்களில் வாகனத்தை அனுப்பி விடுவோம் என மார்தட்டிக்கொள்ளும் நீங்கள் எனக்கு நேர்ந்தது போன்ற அதிர்ச்சிகர சம்பவங்களை பயணிகள் பலரும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்து கொண்டீர்களா?
என் பயணத்தில் அந்த 15 நிமிடங்களில் நான் அடைந்த மன அழுத்தம் சொல்லி மாளாது. எனது துயரத்தை எடுத்துரைக்கும் இந்த பதிவை பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்"
என அந்தப் பெண் பதிவு செய்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "சம்பவத்துக்கு மறுநாள் டாக்ஸி ஃபார் சூர் நிறுவனத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நீங்கள் சொன்ன குற்றச்சாட்டை அந்த ஓட்டுநர் மறுக்கிறார். நீங்கள் அவரிடம் பேசுகிறீர்களா எனக் கேட்டனர். கோபத்தில் கத்தினேன். இருப்பினும் அந்த ஓட்டுநரை பணி நீக்கம் செய்துவிட்டோம் என்றனர்.
எனது கவலை இப்போது என்னவென்றால், அந்த நபருக்கு எனது வீடு தெரியும். அவரால் எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது என்பதே. என் பாதுகாப்புக்கு இப்போது உத்தரவாதம் இல்லை" என்றார்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் இன்னும் போலீஸில் புகார் செய்யவில்லை. காரை அனுப்பிய டாக்ஸி ஃபார் சூர் நிறுவனமே போலீஸில் புகார் அளிக்க வேண்டும் என அந்தப் பெண் வலியுறுத்தி வருகிறார்.
ஆனால் டாக்ஸி நிறுவனமோ ஓட்டுநர் மீது பாதிக்கப்பட்ட பெண்ணே புகார் தெரிவிக்க வேண்டும் எனக் கூறி வருகிறது.
பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. புகார் யார் அளிப்பது என்பதிலேயே தற்போது இழுபறி நீடிக்கிறது.
ஒரு நிர்பயா, உபெர் கால் டாக்ஸியில் ஒரு பெண் தற்போது டாக்ஸி ஃபார் சூரில் மற்றொரு சம்பவம்.
இன்னுமொரு சம்பவமும் நடக்காமல் தடுக்கப்படுமா? என்பதே பல்வேறு தரப்பினரும் முன்வைக்கும் கேள்வியாக இருக்கிறது.
நன்றி - த இந்து
- Arivu Therivuஇது ஒருவகை மன வியாதி .டிரைவர் செய்தது தவறே .ஆனால் இவர் அவரை எட்டி பார்த்து சே 'சே என்றதும் அவரால் ஆபத்து என்பதும் psycophobia 'மாதிரிதான்Points310
- Vakkeel Vandumuruganகால் டாக்ஸி நிறுவனங்கள் தங்கள் டிரைவர்களை கண்காணிப்பு காமரா மூலம் கண்காணிக்க வேண்டும். அப்போது இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழா வண்ணம் பாது காக்கலாம்.about 8 hours ago
- Ladyகுசும்பன் அவர்களுடைய பதிவு திகைப்பூட்டுகிறதாக இருக்கிறது."பிரபலமாவதற்கு இந்த பெண் பொய் சொல்கிறாளோ என்னவோ/அப்படியும் இருக்கக்கூடும்", என்று சொல்லியிருக்கிறார்.ஒரு பெண் இம்மாதிரி கீழ்த்தரமான முறையில் பிரபலம் ஆக விரும்பமாட்டாள். தவிர இம்மாதிரி விளம்பரங்கள் மூலம் பிரபலம் ஆவது ஒரு பெண்ணுக்கு பின்னடைவையே தரும்.ஆதலால் எந்த பெண்ணும் இம்மாதிரியெல்லாம் சிந்திக்கவே மாட்டாள். குசும்பன் அவர்களுடைய இந்த பதிவு ஒரு வக்கிர மனத்தின் பதிவாகவே தோன்றுகிறது..about 8 hours ago
- Kananபெண்களுக்கு எச்சரிக்கை டாக்சி ஆட்டோக்களில்ருந்து போன் பேசுவதையும் அப்போது உங்கள் வீட்டின் இருப்பிடத்தையும் பெயர்களையும் குரிப்பீட்ப் பேசுவதையும் தவிருங்கள் உங்கள் வீடுகளுக்கு 20 மீட்டர் தொலைவிலேயே இறங்கிவிட்டு டாக்சி போனவுடன் வீட்டுக்குள் நுழையுங்கள் அவர்களுக்கு அடையாளம் தெரிவது ஆபத்துPoints9995
- panneerselvamஇதையெல்லாம் கூட நீதி மன்றங்கள் தானாக முன்வந்து விசாரிக்கக் கூடாதா. பிறகு எதற்காகத்தான் நீதிமன்றங்களுக்கு அந்த அதிகாரம் இருக்கிறத் ?Points2555
- Govindasamy kalaimaniதனிமனித ஒழுக்கத்தில் நிறுவனங்கள் கவனம் செலுத்தாததால் வரும் சிக்கல். பொது மக்கள் சேவையில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்கு நல்லொழுக்கத்தை போதிக்க வேண்டும்...! அவர்களுடைய மனநிலையை அடிக்கடி பரிசோசனைக்கு உள்ளாக்க வேண்டும்!! தண்டனை கொடுப்பது மட்டுமே இதற்கு தீர்வாகாது...!!!Points550
- kusumbanகாவல்துறையில் புகார் செய்தால் ஆதாரம் கேட்பார்கள் உனக்கு ஏதேனும் நேர்ந்ததா என்று கேட்பார்கள் இரண்டுக்கும் அதாரம் இல்லாத நிலையில் கம்மென்று இருந்திருக்கவேண்டும் அல்லது வீட்டு வாசலுக்கு போலிசை அழைத்திருக்கவேண்டும் பிரபலமாவதற்கு இந்த பெண் பொய் சொல்கிறாளோ என்னவோ/அப்படியும் இருக்கக்கூடும்.Points3070
- அப்சர் சையத்எனது கவலை இப்போது என்னவென்றால், அந்த நபருக்கு எனது வீடு தெரியும். அவரால் எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படக்கூடாது என்பதே. என் பாதுகாப்புக்கு இப்போது உத்தரவாதம் இல்லை" என்றார். ஆம் சரிதான். அந்த பெண்ணிற்கு என்ன பாதுகாப்பு. இதற்கு பயந்து தான் பலர் அநியாயத்தை கண்டாலும் பார்த்தும் பார்ககததை போல் செல்கின்றனர். இப்படி செய்வதால் தவறு செய்பவர்களுக்கு வசதியா கிவிடுகிறதுPoints240
- hariகற்பழிக்கும் வெறி வந்தால் இந்த மாதிரி வெறியைத்தீர்த்துகொள்வோர் அருவருப்பானவர்களெ அன்றி ஆபத்தானவர் அல்ல என அந்த டாக்ஸி நிறுவனம் நினைத்திருக்கலாம்.
0 comments:
Post a Comment