வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 24/7/ 2015 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை
நன்றி - த இந்து , மாலைமலர் , ஆல் சினி வெப்சைட்
நன்றி - த இந்து , மாலைமலர் , ஆல் சினி வெப்சைட்
A village comedy film
1 நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்
ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் படத்துக்குப் பிறகு அருள்நிதி நடித்துவரும் படம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்
படத்தின் பெயரிலிருந்தே இதுவொரு நகைச்சுவைப் படம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
எந்த குற்றமும் நடக்காத ஒரு கிராமத்தில் ஒரு காவல் நிலையமும், நாலு போலீசாரும் இருக்கிறார்கள். நாலில் ஒருவர் நாயகன் அருள்நிதி. எந்த குற்றமும் நடக்காத அந்த ஊரில் பிரச்சனை ஒன்று வரும்போது என்னாகிறது நிலைமை என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
அறிமுக இயக்குனர் என்.ஜே.ஸ்ரீகிருஷ்ணா எழுதி இயக்குகிறார். அருள்நிதியுடன் நடிப்பது ரம்யா நம்பீசன். இசையமைப்பாளர் ரஜின் என்ற புதுமுகம். சிங்கம்புலி, ராஜ்குமார் இவர்களுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பகவதி பெருமாளும் நடித்துள்ளார்.
சமீபத்தில் படத்தின் டைட்டில் டிசைனை வெளியிட்டனர். இந்த டிசைனே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
C centre movie
3 குரு சுக்ரன்
குரு கமலம் அசோசியேட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக குமுதவள்ளி ராஜேந்திரன் தயாரிக்கும் படம் ‘குரு சுக்ரன்’. கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆனந்த் இயக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவை செல்லத்துரையும், இசையை சந்தோஷ் சந்திரபோஸும் கவனிக்கிறார்கள். இந்தப் படத்தில் குரு, கமல்நாத் இருவரும் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள். கதாநாயகிகளாக திரிபுரா, சாத்னா டைட்டஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் ரவிராகுல், சிங்கமுத்து, சண்முகராஜன், ஆடுகளம் நரேன், அருள்மணி, சென்ராயன், சுதாசந்திரன், ஸ்ரீ ரஞ்சனி, கருத்தம்மா ராஜஸ்ரீ,அவன் இவன் ராமராஜன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் குரு, கமல்நாத் என்ற இரட்டையர்கள் அறிமுகமாகிறார்கள். சமீபத்தில் வில்லன் அருள்மணியுடன் குரு மோதும் சண்டைகாட்சி ஒன்று மீனம்பாக்கத்தில் உள்ள பின்னிமில்லில் செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. 48 மணி நேரம் தொடர்ந்து இடைவிடாமல் இந்த சண்டைக் காட்சி படமாக்கப்பட்டதாம். சினிமா அனுபவம் இல்லாத ஒரு புதுமுகம் 48 மணி நேரம் ஸ்டன்ட் காட்சியில் பங்குபெற்றது ஆச்சர்யமான விஷயம் என்று பாராட்டு தெரிவித்துள்ளார்கள் இயக்குனர் ஆனந்தும் ஸ்டன்ட் இயக்குனர் மிரட்டல் செல்வாவும்.
A gilma film for c centre audience
4 காம பிசாசு
5 ANT MAN
Action thriller
ஸ்பைடர்மேன் , எக்ஸ்-மேன், அயன் மேன், சூப்பர் மேன் என ஹாலிவுட்டில் கில்லியாடிய மார்வெல் ஸ்டூடியோ, அடுத்ததாகக் கையில் எடுத்திருக்கும் படம் ஆன்ட்-மேன். எறும்பு மனிதனாக அரிதாரம் பூசி தீயவர்களை அழிக்கும் சூப்பர் ஹீரோவின் கதை இது. ஹாலிவுட் படங்களில் சாகசத்துக்கும் பிரம்மாண்ட கிராபிக்ஸ் காட்சிகளுக்கும் பஞ்சமே இருக்காது. ஆன்ட்-மேனில் கிராபிக்ஸ் காட்சி அமைப்புகள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது.
உலகை அழிக்கும் வில்லன்களைத் துவம்சம் செய்ய எறும்பு அவதாரம் எடுத்து உலகைக் காக்கிறார் நாயகன் பெளல் ரூட். எறும்பு உடையை அணிந்ததும் எறும்பு போலவே மாறி விடுகிறார் ஹீரோ ரூட். அதன் பின் நடக்கும் காட்சிகள் எல்லாம் அதிரி புதிரியாக திரையில் விரிகிறது.
நிஜ எறும்பு போலவே மாறி யானை சைஸ் வில்லன்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு சாய்க்கிறார் எறும்பு ஹீரோ. எறும்பு புற்றில் குதித்து ஆயிரக்கணக்கான எறும்புகளுடன் ஒன்றோடு ஒன்றாகக் கலந்து எறும்பு மனிதன் ஓடும் காட்சியில் கிராபிக்ஸ் மிரட்டல் ரகமாக உள்ளது.
எறும்பு மனிதனை அழிக்க, வித்தியாசமான உருவத்தில் வில்லனைக் களமிறக்கிச் சண்டை போட வைத்திருக்கும் காட்சிகள் பிரம்மாண்டத்தின் உச்சம். இதுவரை ஹாலிவுட் படங்களில் உலகை அழிக்க வரும் வில்லன்களை அழிக்க விதவிதமான உருவத்தில் வந்து வெற்றி கொள்ளும் சூப்பர் ஹீரோ கதைகள் வரிசையில், ஆன்ட்-மேன் வித்தியாசமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
காட்சி அமைப்பில் படத்தின் இயக்குநர் பீட்டன் ரீட்டின் உழைப்பு தெரிகிறது. ‘நான் ஈ’ படம் பார்த்த வியந்த தமிழ் ரசிகர்களுக்கு ஆன்ட்-மேன் இன்னொரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்பது நிச்சயம். குறிப்பாகக் குழந்தைகளை மிகவும் கவரும் என்று எதிர்பார்க்கலாம்.
படத்தின் ட்ரெய்லருக்கே அமெரிக்காவில் பலத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. லாஸ் ஏஞ்சலீஸ், கலிபோர்னியாவில் மட்டும் இப்படம் ஜூன் 29-ம் தேதி வெளியாகிவிட்டது. அமெரிக்காவின் பிற பகுதிகள் உள்பட உலகெங்கும் ஜூலை 14-ம் தேதி முதல் வெளியாக உள்ளது. இந்தியாவில் ஜூலை 17-ம் தேதி வெளியாகிறது.
A neet ghost story
2 ஆவி குமார்
0 comments:
Post a Comment