Friday, July 17, 2015

மகாராணி கோட்டை (2015) - சினிமா விமர்சனம்

நடிகர் : ரிச்சர்டு
நடிகை :ஆனி பிரின்சி
இயக்குனர் :வினோத்குமார்
இசை :யுகே முரளி
ஓளிப்பதிவு :சந்திரன் சாமி
மகாராணி கோட்டை என்ற ஒரு ஜமீன் காலத்து பெரிய அரண்மனை ஒன்றின் உள்ளே மகாராணியின் ஆவி இருப்பதாக ஊர் முழுவதும் ஒரே பேச்சு. எனவே, அதன் உரிமையாளர் அதை குறைந்த விலைக்கு விற்றுவிட நினைக்கிறார். குறைந்த விலைக்கு வரும் அந்த அரண்மனையை ரிச்சர்டு வாங்குகிறார். 

அதைப் புதுப்பித்து தன் நண்பர்கள் மற்றும் குடும்பம் மற்றும் பெண் தோழிகளுடன் அங்கு வந்து தங்குகிறார். ஆனால், அந்த ஊர் மக்களோ, அந்த அரண்மனைக்குள் மகாராணியின் ஆவி இருப்பதாகவும், பவுர்ணமிக்குள் அந்த அரண்மனையை விட்டு அனைவரும் சென்றுவிடுங்கள். இல்லையென்றால், மகாராணி பேய் தனது கணவரின் ஆவியோடு சேர்ந்து உங்களை கொன்றுவிடும் என்று பயமுறுத்துகிறார்கள். 

ஆனால், குறைந்த விலையில் இந்த அரண்மனை விலை போவதால் இது வெறும் கட்டுக்கதை என்று ரிச்சர்டு நம்புகிறார். இறுதியில் பவுர்ணமி நாளும் வருகிறது. ஊர்மக்கள் சொன்னபடி அந்த மகாராணியின் பேய் இவர்களை கொன்றதா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை. 

படம் முழுவதும் ரிச்சர்ட் ஏதோ சோகம் வழிந்த முகத்துடனே காணப்படுகிறார். பேய் படம் அனைவருக்கும் கைகொடுத்துள்ள நிலையில், இவருக்கும் கைகொடுக்கும் என்று நம்பலாம். ஆனால், சரியான அக்கறை காட்டாமல் நடித்துள்ளார். கிளைமாக்ஸ் சண்டை காட்சிக்காக மட்டும் கொஞ்சம் முயற்சி செய்திருக்கிறார். 

கதாநாயகியான ஆனி பிரின்சி கவர்ச்சியில் கிளுகிளுப்பு காட்டியிருக்கிறார். செந்தில், இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ், கிங்காங் என நமக்கு அறிமுகமான முகங்கள் தங்களுக்குண்டான கதாபாத்திரங்களை செவ்வனே செய்திருக்கிறார்கள். மனோதத்துவ நிபுணராக வரும் பவர்ஸ்டார் சம்பந்தப்பட்ட காட்சிகள் கலகலப்புக்கு கியாரண்டி.

இயக்குனர் வினோத்குமார் ‘அரண்மனை’ பாணியிலான ஒரு படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், பெரும்பாலான காட்சிகள் நமக்கு திகிலை கொடுக்காமல் சிரிப்பைத்தான் வரவழைத்திருக்கின்றன. கிளைமாக்சில் பேய் பற்றி சொல்லும் விஷயம் பாராட்டுக்குரியது. 

யுகே முரளியின் பின்னணி இசை இரைச்சல். பாடல்களும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. சந்திரன் சாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு சற்று பலம் சேர்த்திருக்கிறது. 

மொத்தத்தில் ‘மகாராணி கோட்டை’ திகில் இல்லை.

நப்றி - மாலைமலர்

0 comments: