முழு மதுவிலக்கு: ஸ்டாலினுக்கு அன்புமணி 10 கேள்விகள்
பலமுறை மீண்டும், மீண்டும் மதுவைத் திணித்து சீரழித்ததற்காக தமிழ்நாட்டு மக்களிடம் நீங்களும், அதிமுகவும் பாவமன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கூறுகையில், '' உங்கள் கட்சித் தலைமையின் கருத்தை வலுப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, ‘‘சொன்னதை செய்யும் கழக அரசு முழு மதுவிலக்கையும் நடைமுறைப்படுத்தும்’’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை முகநூலில் பதிவு செய்திருக்கிறீர்கள்.
அதைப் படித்ததும் திமுகவின் முரண்பட்ட நிலைகள் தொடர்பாக என் மனதில் எழுந்த 10 வினாக்களை இக்கடிதத்தில் வரிசைப்படுத்தியிருக்கிறேன்.
இவை மக்கள் மனதிலும் எழுந்துள்ள வினாக்கள் என்பதால் இவற்றுக்கு நீங்கள் விடையளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
1. தமிழ்நாட்டில் 4 வயது குழந்தை கூட மது குடிக்கும் அவல நிலை ஏற்பட்டதற்கு காரணம் யார்?
2. 1971 ஆம் ஆண்டில் ராஜாஜி கொட்டும் மழையில் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று, மதுவிலக்கை ரத்து செய்து விட வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட போதிலும், அதை பொருட்படுத்தாமல் 23 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மதுவிலக்கை ரத்து செய்தவர் யார்?
3. மது மூலம் கிடைக்கும் வருவாய் என்பது புழுத்துப்போன தொழுநோயாளி கையில் உள்ள வெண்ணெயை வாங்குவதற்குச் சமம் என்று அண்ணா கூறினார். மது கூடவே கூடாது என்று பெரியார் கூறினார். ஆனால், பெரியார், அண்ணாவின் கொள்கைகள் தேவையில்லை... வருமானம் தான் முக்கியம் எனக் கருதி மதுக்கடைகளை திறந்தவர் யார்?
4. புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளிப்பதில்லை என 30 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வந்த விதியை தளர்த்தி தங்கள் கட்சியைச் சேர்ந்த இரு முன்னாள் மத்திய அமைச்சர்கள், வேண்டிய இருவர் உட்பட 5 பேருக்கு புதிய மது ஆலைகளை நடத்த அனுமதி வழங்கியது யார்?
5. மது விலக்கை ஏற்படுத்தும் சிந்தனை கருணாநிதிக்கு ஏற்கெனவே ஏற்பட்டுவிட்டதாக கூறியிருக்கிறீர்கள். அப்படியானால், தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று 22.12.2008 அன்று ராமதாஸூக்கு வாக்குறுதி அளித்த கருணாநிதி, அதன்பிறகு 30 மாதங்கள் ஆட்சியில் இருந்தும் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தாதது ஏன்? அப்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத கருணாநிதி இப்போது மட்டும் நிறைவேற்றுவார் என எப்படி நம்புவது?
6. 1996 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் முழுமதுவிலக்கு மிகத் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்த கருணாநிதி அதன் பின்னர் 10 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தும் அதை நிறைவேற்றாதது ஏன்? தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 27.12.2008 அன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதன்பின் இரண்டரை ஆண்டுகள் பதவியில் இருந்த உங்கள் அரசு அதை செயல்படுத்தாதது ஏன்? இப்படிப்பட்ட உங்களை எப்படி மக்கள் நம்புவார்கள்?
7. தமிழகத்தில் நடைமுறையில் இருந்த மதுவிலக்கை நீக்கி கடந்த 44 ஆண்டுகளாக மதுவைக் கொடுத்து இரு தலைமுறைகளை சீரழித்தது யார்?
8. காமராஜர் முதலமைச்சராக இருந்த போது 12,000 புதிய பள்ளிகளை திறந்து அனைத்து மாணவர்களையும் படிக்க வைத்தார். ஆனால், அவருக்குப் பின் 7,000 மதுக்கடைகளை திறந்து மக்களை குடிக்க வைத்தது யார்?
9. அதிமுக தான் டாஸ்மாக் மதுக்கடைகளை திறந்ததாகவும், அதனால் தான் 10 ஆயிரம் பேருக்கு ஒரு மதுக்கடை என்ற நிலை ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டும் நீங்கள், உங்கள் ஆட்சியில் அந்த கடைகளை மூடாதது ஏன்?
10. மதுவின் மூலம் கிடைக்கும் வருவாய் முக்கியமல்ல, மக்கள் நலனே முக்கியம் என்று திடீரென அக்கறை காட்டுகிறீர்கள். 2006 ஆம் ஆண்டில் திமுக அரசு பதவியேற்ற போது ஆண்டுக்கு ரூ.6086 கோடியாக இருந்த மது வருவாயை 2011 ஆம் ஆண்டில் 150% அதிகரித்து ரூ.14,965 கோடியாக இலக்கு நிர்ணயித்து உயர்த்தினீர்களே.... இதனால் மக்கள் நலன் பாதிக்கப்படவில்லையா?
இந்த 10 கேள்விகளுக்கும் நீங்கள் விடை தருவீர்கள் என்று நம்புகிறேன். தமிழகத்தின் இன்றைய சீரழிவுக்குக் காரணம் உங்கள் கட்சியும், அதிமுகவும் தான். பெண்கள் மற்றும் குழந்தைகளும் மது அருந்தும் கலாச்சாரத்தை உருவாக்கிய உங்களையும், அதிமுகவையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். 44 ஆண்டுகளாக மதுவைக் கொடுத்து மக்களைக் கெடுத்த நீங்கள் இப்போது மது விலக்கு பற்றி பேசத் தொடங்கியிருப்பதற்குக் காரணம் கடந்த 30 ஆண்டுகளாக ராமதாஸ் மேற்கொண்ட மது எதிர்ப்பு மற்றும் மது ஒழிப்பு பணிகள் தான் என்பது எங்களுக்கு பெருமையளிக்கிறது.
மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதாக பலமுறை வாக்குறுதி அளித்த திமுக அத்தனை முறையும் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றியிருக்கிறது. இப்போது தேர்தலை மனதில் கொண்டு மீண்டும் ஒருமுறை வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்ற முயல்கிறீர்கள்.
பலமுறை மீண்டும், மீண்டும் மதுவை திணித்து சீரழித்ததற்காக தமிழ்நாட்டு மக்களிடம் நீங்களும், அதிமுகவும் பாவமன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.
நன்றி- த இந்து
- SSakthivelஅனைத்து கேள்விகளும் அருமை....... * பெரியவர் சேர்க்முடிய செல்வம் இட்டீவிட்டார் இனி சொத்து விவகாரம், ஊழல் பற்றி தூந்டுவதை மறைக்கவும், இன்னும் மீதமுள்ள கஜானவை துடைக்கவும் எப்பாடு பட்டு முதலமைசர் பதவி பிடிக்க கலம் இறங்க முழு மதுவிலக்கு என்று நாடகம் நடத்துகிறார்.அவர் பலமுறை முழு மதுவிலக்கு என்று கூரிுள்ளார் இனி கூறுவதும் கண் துடைப்பு என்ன நயம்........about 8 hours ago
- MM.Palaniveluகேள்வி 11 : டாஸ்மாக்கில் பணிபுரியும் ஆட்களில் யாருமே பாமக இல்லையா? கேள்வி 12 : பார் உரிமையாளர்களில் யாருமே பாமக இல்லையா? கேள்வி 13 : திமுகவிற்கு மட்டும் கேள்வி பட்டியல் வசிக்கும் பாமக ஏன் அதிமுகவை கேள்வி கேட்கவில்லை? பயமா?Points1725
- Rramaswamyபத்து கேள்விக்கு விடை நான் சொல்கிறேன். இதுக்கு ஏன் தலைவரை தொந்தரவு செய்ய வேண்டும் . பதில்கள் இதோ 1. குழந்தையின் பெற்றோர் 2. கலைஞர். 3. கலைஞர். 4. தமிழக அரசு. 5. நாங்க சொன்னதை செய்வோம் செய்றதை சொல்வோம். 6. நாங்க சொன்னதை செய்வோம் செய்றதை சொல்வோம். 7. தமிழக அரசு, ஆந்திரா , கர்நாடக , கேரளா பாண்டிச்சேரி அரசுகள் 8. கலைஞர், எம்ஜியார். ஜெயலலிதா. 9. நம் கடை மூடினால் ஆந்திரா , கர்நாடக , கேரளா பாண்டிச்சேரி கடைகளில் வியாபாரம் பெருகும் என்று. 10 இலவச டிவி கொடுத்து மக்கன் நலனை பாதுகாத்து விட்டோம். எனக்கு நூற்றுக்கு நூறு மார்க் கிடைக்க வேண்டும்.Points2640
- Vvigneshwarஎட்டாவது கேள்வி மிகவும் அற்புதம்........இதை நீங்கள் தஞ்சாவூர் கல் வெட்டில் எழுதிவைத்து இருந்தால் கூட இவர்கள் திருந்தமாட்டார்கள்.......about 8 hours ago
- Ssathyapriyanஇந்த கடிதத்துக்கும் ஸ்டாலின் அவர்கள் ஓடி ஒளிந்து கொள்ள pogirarPoints2280
- சசெ.இவரு கேப்பாராம். அவரு பதில் சொல்லனுமாம். தலைவிதியா என்ன? ஊழல் பெருச்சாளி விரிக்கும் வலையில் அன்புமணி விழுவதானால் யார் தடுப்பார்கள்? போய் விழு. அந்தக் குழியினுள் விழுந்த பல அணுசக்தி கப்பல்கள் காணாமல் போயின. நெடுஞ்செழியனே நெடுஞ்சான் கிடை. நீர் எம்மாத்திரம். விழத்தான் போகிறீர். நாங்கள் அன்புமணி எங்கே, பெரிய மருத்துவர் அய்யா எங்கே என்று தேடத்தான் போகிறோம். அந்த ஆழம் காணாத அகழியில் விழாத கலைஞர் வாழ்க!Points44510
- Ssathyapriyanஅவரு எங்க பதில் சொல்ல போறாரு , அவங்க நடத்துற நாடகம் வெல்ல தெரிஞ்சிடும் என்பதற்காக அவர்கள் இந்த கடிதத்தை வேறு வழியில் குட திசை திருபுவர்கள்Points2280
- AAbsalஅன்புமணி - க்கு என்னோட 5 கேள்விகள் 1, மதுவிலக்கு-க்கு எதிராக இவ்வளவுநாள் நீங்கள் ஏன் போராடவில்லை. 2, கடந்தகாலங்களில் கூட்டணி அமைக்கும் போது மதுவிலக்கு சம்மந்தமாக இடம்பெற்ற உங்கள் சரத்துக்கள் என்னன்ன. 3, உங்கள் கட்சியினருக்கு மட்டும் நீங்கள் மது சம்மந்தமாக ஆற்றிய உரைகள் என்ன? எத்தனை? 4, நீங்கள் நடத்தும் மாநாடுகளில் மட்டும் அதிக மது விற்பனை ஆஹா காரணம் என்ன. அது சம்மந்தமாக நீங்கள் உங்களது தொனடர்களை என்றைகாவது கண்டிததுவுண்ட ? 5, உங்கள் கட்சியில் இருந்து மது அருந்தியதுனால் நீக்கப்பட்ட உறுப்பினர்கள் எத்தினைபேர்.about 8 hours ago
- இரஇரா.இரெத்தினம் ராக்சன்அன்புமணி அவர்கள், யார் என்ன சொன்னாலும் மக்கள் என் பக்கம் என்ற கர்வத்தில் மது விற்பனையை டார்கெட் வைத்து விற்கும் ஜெயலலிதாவை கேள்வி கேட்க துணிவில்லாமல் (அல்லது பயந்துகொண்டு), ஆட்சியில் இல்லாத ஒரு கட்சிக்கு கேள்விக்கணைகள் தொடுப்பது, என் அரசியலை நீ எப்படி கையிலெடுக்கலாம் என்ற கோபம்தான் தெரிகிறது. மக்கள் நலன் தெரியவில்லை. மதுவுக்கு எதிரான கொள்கைக்கு ஆதரவு கூடிவிட்டது அதனால் மது விற்பனையைக் கட்டுப்படுத்துங்கள் என்று ஒரு கோரிக்கை கூட ஜெயலலிதா முன் வைக்க முடியவில்லை.about 8 hours ago
- Ssakthivelஅனைத்து கேள்விகளும் அருமை....... * பெரியவர் சேர்க்முடிய செல்வம் இட்டீவிட்டார் இனி சொத்து விவகாரம், ஊழல் பற்றி தூந்டுவதை மறைக்கவும், இன்னும் மீதமுள்ள கஜானவை துடைக்கவும் எப்பாடு பட்டு முதலமைசர் பதவி பிடிக்க கலம் இறங்க முழு மதுவிலக்கு என்று நாடகம் நடத்துகிறார்.அவர் பலமுறை முழு மதுவிலக்கு என்று கூரிுள்ளார் இனி கூறுவதும் கண் துடைப்பு என்ன நயம்........about 8 hours ago
- MM.Palaniveluகேள்வி 11 : டாஸ்மாக்கில் பணிபுரியும் ஆட்களில் யாருமே பாமக இல்லையா? கேள்வி 12 : பார் உரிமையாளர்களில் யாருமே பாமக இல்லையா? கேள்வி 13 : திமுகவிற்கு மட்டும் கேள்வி பட்டியல் வசிக்கும் பாமக ஏன் அதிமுகவை கேள்வி கேட்கவில்லை? பயமா?Points1725
- Karuppanasamy GobiKalinger will do it. Anbumani's questions unwarranted. Firstly Anbumani should rember his father what told earlier whether they folled and to avoid castisam. If Anbumani come to power he will post vanniers in govt.postings and against thilitabout 9 hours ago
- கஜகீழை ஜஹாங்கீர்அதிமுகவுடன் கூட்டணி வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள பாமக ஆடிவரும் ஆடு புலி ஆட்டம்தான் தற்போதைய மதுவிலக்கு தொடர்பான அறிக்கைப்போர்.ஏற்கனவே பாஜகவும் அதிமுகவுடன் நெருங்கி விட்டது.அத்துடன் பாமகவும் நெருங்க வேண்டுமென்று ஏதாவது சிக்னல் கொடுக்கப்பட்டதோ?என்னவோ?Points26945
- Ssruthibalajiஆக மொத்தம் உங்களுக்கு பதவி வேணும் , அதுக்காக எங்கள ஏனப்பா முட்டாளா ஆக்குறீங்க..........."தைலா புறத்து" தோட்டத்தின் மதிப்பும் , "கோபாலபுர நிதியும்" ,"போயஸ் கார்டனின் நீதியும்" மக்களுக்கு தெரியும்.ஜனவரிக்கு மேல உங்க கூத்த ஆரம்பிங்க இப்பவேயா ?Points1430
- PPulliyappanஎத்தனை கேள்வி கேட்டாலும் 5 சீட்டுக்கு மேல 1 கூட பெயராது .CM கனவு தகர்ந்துவிட்டதால் வெறுப்பில் 100 கேள்வி கூட அப்பாவும் மகனும் சேர்ந்து கேட்பார்கள்Points845
- RRathiநிச்சயமாக "அ தி மு க" உம் இதே மது விலக்கு வாக்குறிதியை தரும்..."அது காலத்தின் கட்டாயம்".............முடிவில், 2016 லில் யார் வென்றாலும், கொள்கை அளவில் வென்றது Dr அன்புமணி அவர்களே......... "தி மு க" வின் இந்த அறிவிப்பினால் Dr அன்புமணி அவர்கள் தன்னுடைய குறிக்கோளில் வென்று விட்டார்.......... இதுதான்....."மாற்றம் முனேற்றம்"...............அவர் இனி தேர்தலில் ஜெயிக்க வேண்டிய அவசியம் இல்லை.Points1805
- Bb.johnsonகுரங்குகள் போலே மரங்களின் மேலே தாவித்திரிந்தோமே மற்றவர்கள் 5வருடதிர்க்கு ஒரு முறை அடுத்த கட்சிக்கு தாவினார்கள் என்றால் நாங்கள் வருட வருடம் கூட்டணி விட்டு கூட்டணி தாவி தாவி விளையாடுவதை பொழுதுபோக்காகவே வைத்திரிக்கிறோம் என்பதை இந்த நேரத்தில் நினைவு படுத்த விரும்புகிறோம் .இதெல்லாம் மக்கள் கண்டுகளிப்பதர்க்காகவும் மக்களின் நலனுக்காகவுமே என்று கூறி கொள்ள ஆசைப்படுகிறோம் ஹி!ஹி !ஹி !Points265
- சசெ.இதனால் எல்லோருக்கும் அறிவிப்பது யாதெனில், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக அதிமுகவுடன் இணைந்து ஆட்சியைப் பிடிக்கும். முதல்வராக அன்புமணியும், அவைத் தலைவராக வன்னிய சிங்கம் மருத்துவர் அய்யா அவர்களும் டாஸ்மாக் இல்லாத தமிழகத்தை அமைப்பர். ............ ஜோரா கைத்தட்டுங்க............ராமா, போடுடா ஒரு குட்டிக்கரணம்!Points44510
- சசெ.இருநூற்றுக்கும் மேற்பட்ட தாலுகாக்களில் எலைட் மதுக்கடைகளைத் திறக்கப்போவதாக இன்று மாலையில் இன்னொரு அறிவிப்பு பூனை வந்ததே, அதன் கழுத்தில் மருத்துவர் அன்புமணி கட்டுவாரா? இன்று கலைஞர் என்ன முதல்வரா, ஆட்சியில்தான் இருக்கிறாரா? வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல், மதுவிலக்கை என்னமோ கலைஞர் அமலாக்கம் செய்யவிடாமல் அம்மனைத் தடுக்கும் சாமிபோல் செயல்படுவதாக அன்பு மணியடித்தார். மணியை கலைஞர் மருத்துவரிடமிருந்து பிடுங்கி தானே ஓங்கி அடிக்கத் தொடங்கிவிட்டார். இப்போ லபோ தொபோ என்று கேள்விகள் கேட்டால், அதை டாஸ்மாக் விற்பனை இலக்கு வைத்து நல்லாட்சி நடத்தும் நபரையல்லவா கேட்கவேண்டும்? நாயிலாத ஊரில் நரி அம்பலம் பண்ணுமாம். பெரிய மருத்துவர் அய்யா தன்னுடைய பிள்ளை மருத்துவருக்கு நல்ல வைத்தியம் செய்வது கட்டாயம். ஜோராக மது விற்பனை நாடெல்லாம் நடக்க, அதை இனிமேலாவது நிறுத்துவேன் என்று சொல்லும் கலைஞர் மீது பாய்கிறது நம் பாட்டாளி காளை. கலைஞருக்கு கூட மாட உதவி செய்வதை விடுத்து குறுக்குச் சால் ஓட்டினால், கலைஞர் காளை மாடுகளையும் கலப்பையையும் ஒரே அறிக்கையில் பிடுங்கிவிட்டார். இவரோ, டியூசன் வாத்தியார் போல் 10 கேள்வி கேட்கிறார்!Points44510
- R.M.Manoharan Manoharanஅன்புமணி அவர்களே! கேள்விகள் கேட்க நீங்கள் யார்? தவறுகள் செய்த அரசியல்வாதிகளைத்தண்டிக்க வாக்காளர்கள் இருக்கிறார்கள். நீங்களும் அரசியல்வாதிதானே? ஒன்றுமே இல்லாமல் கோட்டையைப்பிடிக்க கொக்கரிக்கும் கோமாளி அரசியல்வாதிகளில் ஒருவர். மதுக்கடீகள் திறந்த திமுக, அதிமுகவுடன் நீங்கள் கூட்டணி சேர்ந்து தேர்தலில் நிற்கவில்லையா? எம்பி தேர்தலில் கூட நீங்கள் கூட்டணி அமைக்கவில்லையா? தேர்தலில் நின்றால் தோற்றுவிடுவோம் என்று பயந்து ராஜ்ய சபை சீட் ஒன்றை திமுகவிடமிருந்து பிச்சை எடுத்து மத்தியில் அமைச்சராகவில்லையா? அப்போதெல்லாம் மது சாராயங்களின் நாத்தம் மூக்கில் ஏறவில்லையா? நிங்கள் மத்தியில் சுகாதார அமைச்சராக இருந்த கால கட்டத்தில் செய்யாத தவறுகளா? இந்தூர் கல்லூரி வழக்கு ஒன்று நிலுவையில் இருக்கிறதே? நீங்கள் உத்தம புருஷரா? பீடி, சிகரெட் இவற்றை ஒழிக்க ஆணைகள் பல வெளியிட்டீரே, அதில் வெற்றி கண்டீரா? பின் ஏன் மத்வை ஒழிப்பேன் என்று சொன்ன திமுகவை அந்தஸ்து, உரிமை ஏதுமில்லாத நீர் வீண் குடைச்சல் கொடுத்து குமுறுவதேன்? டாக்டருக்குரிய நாகரிகம் சிறிதுமில்லாத சிறுமதியாளன் நீர்! அடங்குக! நன்று உமக்கு!Points12335
- மமதிஅன்புமணி சார், 2008 ல கருணாநிதி உங்க அப்பா கிட்ட வாக்குறுதி குடுத்துட்டு நிறைவேத்தலை, அது தெரிஞ்சிருந்தும், 2011 ல அவங்க கூட கூட்டனிக்கு ஏன் போனீங்க. இத்தனை முறை அவர்களோடு கூட்டணியில் இருந்த நீங்கள் எத்தனை முறை மதுவிலகுகாக குரல் கொடுத்தீர்கள்? இதையெல்லாம் நாங்க மறந்துட்டு உங்கள நம்பணும்னு சொல்வீங்கன நாங்க ஏன் திமுக வையிய நம்ப கூடாது...
0 comments:
Post a Comment