இம்சை அரசன் திரைப்படம் வடிவேலுக்கு தனி மரியாதையை அளித்தது. மாஸ் காமெடியனிலிருந்து ஹீரோவாக அவரது தரத்தை உயர்த்தியது. அதனைத் தொடர்ந்து வந்த தெனாலிராமன் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.
அப்படி இருக்கையில், சினிமா ட்ராக்கிலிருந்து விலகி இருந்த வடிவேலு அளிக்கும் ரீ-என்ட்ரீ மற்றும் ஹீரோவாகவும் நிலைக்க வேண்டும் என்ற பல அழுத்தங்களோடு வெளியாகி இருக்கும் படம் 'எலி'. அதே போல ரசிகர்களின் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகம்.
அந்த வகையில் வெளியாகி இருக்கும் 'எலி' ரசிகர்ளின் எதிர்பார்ப்பை கவனித்து எடுக்கப்பட்டதா? வடிவேலு விட்ட இடத்தை பிடித்துவிட்டாரா, இல்லை மீண்டும் கோட்டை விட்டாரா? என ஆராய்ந்து வருகிறது ரசிகர் கூட்டம்.
படத்தை பார்த்த ரசிகர்களின் எண்ணம் பல்வேறு விதமாக இருக்க, அவற்றை அலசும் கருத்துக்களில் சிலவற்றை ட்வீட்டாம்லேட்டுக்காக திரட்டியுள்ளோம். அவற்றில் சில....
கழுகார் @advlogu - வடிவேலு சார் நமக்கு எல்லாம் காமெடி ட்ராக் தான் சார் சரி, ஹீரோ எல்லாம் வேண்டாம் சார். # மொத்தத்தில் ‘எலி’ சேட்டை கம்மி.
Raju N @naaraju - எலி-பலி, எலி-வலி, எலி-காலி. இதுல இப்ப வரைக்கும் எந்த ரைமிங் லீடிங்ல இருக்கு..?! :-)
Dr Narathan MS ® @mpgiri - எலி படத்த தியேட்டர்ல போய் பார்த்துட்டு மரணகடின்னு திட்டுவோம். ஏன்னா வடிவேலு நமக்கு தந்த எண்ணற்ற வசனங்களுக்கு நன்றியா இருந்துட்டுப் போகட்டும்.
பாலமன் ஆப்பையா @mp_samy - வடிவேல் ஒரு தீர்க்கதரிசியா.... அப்பவே சொல்லிருக்கார் "சொந்தகாசுல சூனியம் வச்சுக்கிறது இதுதானா"-னு #எலி
பரிசல்காரன் @iParisal - எலி படம் பார்த்தேன். டைரக்டர் கொன்னுட்டார்! நான் செத்துட்டேன்!
The Protagonist @arvinfido - போலிஸ் உத்தரவின்படி டான் கூட்டத்துல உளவாளியா போன 'எலி' வடிவேலுக்கும் பில்லா அஜித்துக்கும் இருந்த ஒற்றுமை ரெண்டு பேருமே தங்கள ஹீரோன்னு நம்பினது.
Antony ♚ @antony_tweetz - வடிவேலு லெஜன்ட் ஆயிட்டாருனு யாராவது அவருகிட்ட சொல்லுங்கயா.. முடியல..:-(( #எலி.
ஜனா (Che Guevera) @janathanalfred - மற்ற நகைச்சுவை நடிகர்கள் பேசினால் தான் சிரிப்பு வரும்.. வடிவேல பாத்தாலே ஹெக்கபக்க தான்.. :) என்றும் அதே உற்சாகம் #எலி
தரலோக்கலு லேஜிபாய்» @TharaLocal - அந்த ஹிந்தி பாட்டுல காது கிழிஞ்சிரும் போலயே.... கொடுமடா #எலி
புகழ் @mekalapugazh - அப்படியே விட்டிருந்தா.... இந்நேரம் காணாமப் போயிருப்பாரு வடிவேலு... தெனாலி, எலிக்கெல்லாம் வேலை இருந்திருக்காது.
ஆல்தோட்டபூபதி @thoatta - நாம வடிவேலு படம் பார்த்து வருசமாச்சு தான், ஆனா இப்ப தான் புரியுது, வடிவேலுவே தமிழ் படமெல்லாம் பார்த்து நாளாச்சுன்னு # வலி.
Sri @Sricalifornia - எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும் என்கிறார் வடிவேலு. தலையில் விழுந்த அடியை தாங்கியபடியே. ப்ளான் பண்ணி பண்ணாலும் தலைல அடி உழுதே வாட் டு டூ.
நன்றி- த இந்து
0 comments:
Post a Comment