Friday, June 12, 2015

ரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்

ஹீரோயின் ஒரு அனாதை, மிடில்கிளாஸ். ஆரம்பத்தில்  இருந்தே  சிரமமான  சூழலில்  வளர்ந்ததால் வசதியான  வாழ்வுக்கு ஆசைப்படறார்.ஹீரோவும்மிடில் கிளாஸ் தான்.அவரோட நண்பர்  பைக்ல, கார்ல அவர்  போகும்போது  அதைப்பார்த்து  ஹீரோயினோட  3  தோழிகள் ஹீரோயினை  உசுப்பேத்தி  விடறாங்க. 

ஆனானப்பட்ட சிம்மராசிக்கே  தோழியால  இடைஞ்சல்  வரும்போது சாதா ராசிக்கு  ஆபத்து  வராதா?ஹீரோ  பணக்காரர்னுநம்பி  லவ்வறார்.ஹீரோவும் லவ்விங். ஆனா  எப்போ  ஹீரோ பணக்காரர்  இல்லைனு  தெரியுதோ அப்பவே  லவ் பிரேக்கப்  பண்றார்.

கன்வின்ஸ்  பண்ற ஹீரோவைக்கடுப்பேத்த  ஒரே நாளில்  அவருக்கு லட்சம் ரூபா  செலவு  வைக்கறார்.ஹீரோ செம  கடுப்பாகறார்.

ஹீரோயினுக்கு வேற  மாப்ளை கூட மேரேஜ்  ஃபிக்ஸ்  ஆகுது.ஹீரோ அங்கே  வந்து  எனக்கு  வேற  ஃபிகர்  செட்  பண்ணிக்கொடுத்துட்டு மேரேஜ்  பண்ணிக்கோ  அப்டிங்கறார்.  தனுஷ்  -ன்  தேவதையைக்கண்டேன்  பட சாயலில்  நிகழும்

இவங்க  லவ்  என்ன  ஆச்சு? என்பதே  மிச்ச  மீதிக்கதை



ஹீரோவா ஜெயம் ரவி..கதைத்தேர்வில்  கவனம்  தேவை.ஜிம் கோச்சரா  வரும்  ஹீரோ கனகச்சிதமாக  பாடி லேங்குவேஜில்  நடிச்சு  அப்ளாஸ்  வாங்கறார். சிம்புவை கடுப்பேத்த  ஹீரோயின் கூட  செம நெருக்கமா  நடிச்சிருக்கார்.


ஹீரோயினா  மிடி ஸ்பெஷலிஸ்ட்  லேடி, குட்டி கவுனு போட்ட 55 கிலோ பவுனு ,சிம்புவின் முன்னாள்  காதலி  ஹன்சிகா. பிரமாதமான  காஸ்ட்யூம். எல்லாம் துக்ளியூண்டு.ஐ  லைக் இட்.ஹீரோ  இவர்  நெஞ்சில்  தலை சாய்த்து  தலையணையா படுத்திருக்கும்போது  பாப்பா கண்டுக்கவே  இல்லையே? சிம்புக்கு செம  எரிச்சல்  ஏற்படுத்தும்  சீன்

இன்னொரு ஹீரோயினா கண்  மட்டும்  சின்னதா  இருக்கும் பூனம் புஜ்வா   சாரி பூனம்  பஜ்வா , அழகான  தேவதைகளைப்பார்க்கும்போது   எனக்கு  நாக்கு குழறும் , கைதடுமாறும், இவர்  நடிப்பில்  பிரமாதமா  எதும்  செய்யலைன்னாலும்  கிளாம்ர்  போர்ஷனை நல்லா  பண்ணி  இருக்கார்  ,அதானே  நமக்கு  முக்கியம்?





பாடல்கள்  செம  கலக்கல்  டப்பாங்குத்து.  டண்டணக்கா  நக்கா நக்கா  பாட்டுக்கு  தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்


ஆண்களை  திருப்திப்படுத்த  , அவர்களிடம்  கை தட்டல் வாங்க  காட்சி  அமைப்புகள் செயற்கையா அமைச்சது  சலிப்பூட்டுது


ஒளிப்பதிவு , இசை  பின்னணி இசை  எல்லாம்  நல்லா தான்  இருக்கு





மனதைக் கவர்ந்த  வசனங்கள்


ஹன் சிகா = அவனை எப்டி கரெக்ட் பண்றது?

தோழி = சரக்கு வாங்கிக்குடு.புல் மப்புல இருக்கும்போது மேட்டரை முடிச்சுடு


2 விடிவி கணேஷ் = பணத்துக்காக லவ் பண்றவ பொண்ணு இல்லை.அயிட்டம்

3
ஹன் = என் ரூம் க்கு நைட் டைம்க்கு ஏன் வந்தே?கலாட்டா பண்ண வந்தியா?
இல்லை.உன்னை கழட்ட வந்திருக்கேன்



4 ஹன் = உனக்கு நல்ல பொண்ணு கிடைப்பா.

ரவி = ஆனா உனக்கு நல்ல பையனே கிடைக்க மாட்டான்



5 பசங்களை ஏமாத்தும் பொண்ணுங்களே! நீங்க நாசமாப்போவீங்க.

சின்சியரா லவ் பண்ற எவனுக்கும் காதலி கண்ணியக்குறைவா டிரஸ் பண்ணி இருந்தா பிடிக்காது # ரோ ஜூ

7 கதைக்கருவில் காதலை /பெண்களை கேவலப்படுத்துவதால் ஏமாற்றமான முன் பாதி முடிந்த இடைவேளை # ரோமியோ ஜுலியட்

8 சின்சியரா  லவ் பண்ற பொண்ணுக்காக உயிரைக்கூடக்கொடுக்கலாம், ஆனா  பணத்துக்காக லவ்வும்  பொண்ணுக்கு -----ரைக்கூடக்குடுக்கக்கூடாது#ரோ ஜூ








 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்


1  சி சென்ட்டர் ரசிகர்களின் ஆக்ரோசமான கை தட்டல்களுடன் டன்டனக்கா நக்கா நக்கா # ரோஜூ

2 பாடல் இசை நடன இயக்குநர் போட்டி போட்டு கலக்கும் டண்டணக்கா


3 ஹ்ன்சிகா ரொம்ப மெல்லிசானட்ரான்ஸ்பாரன்ட்டான கவுனுடன் சுத்துது.லைட்டா தலை சுத்துது நமக்கு

4 ஹன்சிகா 10 நிமிசமா ஜாகிங் போய்க்கிட்டு இருக்கு.ஆஹா.அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ்.பிரமாதம்.நல்ல சீன் யோசிங்கய்யான்னா பிரமாதமான சீன்


5 இளையராஜா பாடல்களை சகட்டுமேனிக்கு யூஸ் பண்ணி இருக்காங்க.கேஸ் நிச்சயம்

6 ஹீரோவோட பைக் ,கார் ,பங்களா எதுவும் அவரோடது இல்லைனுதெரிஞ்சதும் ஹீரோயின் லவ் பிரேக்கப் பண்ணுது.தெய்வீகக்காதல் போல.


7 அடியே அடியே இவளே.என் வாழ்க்கையைப்பாழாக்கப்பொறந்தவளே தர டப்பாங்குத்து

8 சிம்புவைக்கடுப்பேத்தவே ஹன்சிகா தாராஆஆஆளமா நடிச்சிருக்கு

லாபம் தமிழனுக்கும் ஜெயம் ரவிக்கும்

9 அடிக்கடி ஹன் சிகா பேசும் "உனக்கும் எனக்கும் செட்டே ஆகாது." வசனம் சிம்புவுக்கான அறைகூவல்?


10 இயக்குநர் பெண்களைக் கேவலப்படுத்தறாரா? காதலைக்கொச்சைப்படுத்தறாரா?


11 ஹன் = இப்போ நான் பிகரு.இன்னும் 5 வருசம் போனா ஆண்ட்டி # ஏம்மா இப்போவே அப்டித்தான் இருக்குனு மக்கள் பேசிக்கறாங்க


12 பொதுவா பவுர்ணமி அன்னைக்கு பொண்ணுங்களுக்கு லவ் ஃபீல்  ஜாஸ்தியா  இருக்கும் # ரோ ஜூ. ( இந்த  மேட்டர்  இத்தனை  நாளா  தெரியாம  போச்சே?)


13 ஹன்சிகா= ஏண்டா, நான்  உனக்கு லவ் தியரி கிளாஸ்  எடுக்கறேன், நீ  என்னை வெச்சு  பிராக்டிகல் கிளாஸ் எடுக்கப்பார்க்கறியா? # ரோ ஜூ


14  ஹீரோயின் = ஆக்சுவலா  நான்  எதுக்குமே  வெட்கப்படமாட்டேன் # ஹிஹி













இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்,


1 போஸ்டர் டிசைன் , மார்க்கெட்டிங்  எல்லாம் குட். ஓப்பனிங்  ஷாங்   டண்டணக்கா  டி ஆர் ரை நக்கல் அடிக்குதா?  பாராட்டுதா?னு கடைசி வரை தெரியலை ( ஒரு  கோடி நட்ட  ஈடு  கேட்ட  டி ஆர்க்கு 1 லட்சம்  ரூ  கொடுத்து  செட்டில்டாம்)


2 ஹ்ன்சிகாவுக்கு 25 லட்சம்  ரூபா சம்பளம் கொடுத்துட்டு 50  லட்சம் ரூபா கிளாமரை யூஸ்  பண்ணிக்கிட்டது ( பதறாதீங்க, படத்தில் தான் )


3  ஆண்களை  ஏமாற்றும் பெண்களை  நக்கல் அடிக்கும்  காட்சிகள் வசனங்களெல்லாம்  பிரமாதம்

4  ஹன்சிகா , பூஜம்  பாஜ்வா  என இரு ரவா லட்டுகளையும்  முடிஞ்ச வரை  நல்லா  யூஸ் பண்ணிக்கிட்டது





இயக்குநரிடம்  சில கேள்விகள்


1 சின்ன  வயசில்  இருந்தா  அம்மா அப்பா  அன்பில்லாமல்  வளரும் பெண்ணிடம் அன்பிற்கான  தேடல் தான்  இருக்கும். அதை  எதிர்பாராமல்  பணம், வசதியை  ஏன்  அவர்  எதிர்பார்க்கிறார்?

2 வசதி  இல்லாத  ஹீரோயின்  காதலனிடம் தனக்கான  பொருள்கள் வாங்கிகொள்ளாமல் லட்சக்கணக்கில்  பார்ட்டிக்கு தண்டமாக  ஏன்  செலவு  செய்ய  வைக்கனும்?  காதலனைக்கடுப்பேத்தனும்னா தனக்கும் யூஸ்  ஆவது போல்  ஏதாவது  வாகனம், டிவி இப்டி  வாங்கி  டூ இன் 1  ஆகி இருக்கலாமே?


3 முன்  பாதியில்   எப்படி எல்லாம்  ஹீரோயின்  ஹீரோவை  அலைக்கழிச்சாரோ  அதே  போல்  பின்  பாதியில் ஹீரோ  ஹீரோயினை  அலைக்கழிப்பது போல்  காட்சிகள் இருப்பதால்  கை  தட்டல்  வாங்கினாலும்  சீன்  பை சீன்  பார்த்த  காட்சிகளே  வருவது  போல்  பிரமை


4 தனக்கு  நிச்சயிக்கப்பட்ட பணக்கார  மாப்ளையிடம்  நாயகி  ஏன்  எதுவும் சொல்லலை. என் முன்னாள்  பாய்  ஃபிரண்ட்  தொந்தரவு  பண்றான்னு  ஒரு  வார்த்தை சொன்னாப்போதுமே.ஏன்   சொல்லலை?


5 ஹீரோக்கு  ஆள் செட்  பண்ணிக்கொடுக்கும்  மாமா வேலை பார்க்கும்  ஹீரோயின்  லூஸ்  போல்  நடிப்பது  நடந்துகொள்வது செம  கடுப்பு

6 ஹீரோயினுக்கு நிச்சயம்  ஆன  மாப்ளை  தன் வருங்கால மனைவிக்காக யோகா  டீச்சர்  ரெடி  பண்ணுவது  சரி. ஜிம் மாஸ்டராக  ஒரு  ஆம்பளையை ஃபிக்ஸ்  பண்ணுவது  எப்படி?  லேடி ஜிம் மாஸ்டர்  இல்லையா?எந்த  ஆம்பளையாவது  தன்  பங்களாவில்  மனைவிக்கு  பயிற்சி அளிக்க  ஆம்பளை  ஜிம்  மாஸ்டரை  நியமிப்பானா?






சி  பி  கமெண்ட் = ரோமியோ ஜூலியட் - பெண்களை தாக்கும்  திரைக்கதை. சராசரி முன் பாதி , பின் பாதி சராசரிக்கும் கீழ் - விகடன் மார்க் = 40 , ரேட்டிங் = 2.5/ 5





ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) - 40





குமுதம்  ரேங்க் ( கணிப்பு) -சுமார்





 ரேட்டிங் = 2.5 / 5


ஈரோடு  ராயலில்  ப்டம்  பார்த்தேன்


a



http://www.adrasaka.com/2015/06/jurrasic-world.html


2  இனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்



http://www.adrasaka.com/2015/06/blog-post_32.html


0 comments: