ஒவ்வொரு பெற்றோரும் தன் மகன் ராஜா மாதிரி வரனும்னு தான் ஆசைப்படறாங்க , ஆனா பாருங்க விதி விளையாடும்போது அவன் ஆ ராசாவா , பெரிய திருடனா ஆகிடறான். அப்பேர்ப்பட்ட திருடன் தான் ஹீரோ.இதயத்தை திருடறவன் காதலன் , நாட்டின் செல்வத்தை திருடுபவன் நாட்டின் தலைவன் , இதுதான் இப்போ நடக்குது?
ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர் வீட்லயே திருடுறாரு/ ஆஃபீசருக்கு பயங்கர ஆச்சரியம். அவரு திறமையை மெச்சி போலீசால் கண்டு பிடிக்க முடியாத ஒரு கேசை டீல் பண்ண உளவாளியா நியமிக்கறாரு. அந்த கேசை டீல் பண்ணிட்டா ஹீரோ மேல இருக்கும் எல்லா கேசையும் குமார சாமியின் உதவி இல்லாமயே தள்ளுபடி பண்ணிடறதாவும் , போலீஸ் டிபார்ட்மெண்ட்லயே வேலை போட்டுத்தர்றதாவும் டீலிங். இதென்ன லாஜிக்கே இல்லாத டீலிங்கா இருக்குன் னு யாரும் ஜெர்க் ஆகவேணாம், நமக்கு இதெல்லாம் பழக்கம் ஆனதுதானே?
திருடன் கையிலே வீட்டு சாவியை ஒப்படைப்பதும் , கொள்ளைக்காரங்க கையில் தமிழ் நாட்டின் பொறுப்பு மிக்க பதவியை மாறி மாறி ஒப்படைக்கறது ம் புதுசா என்ன?
ஹீரோ எப்படி அந்த கேசை டீல் பண்றாரு என்பதுதான் மிச்ச மீதி திரைக்கதை
ஹீரோவா காமெடிப்புயல் வடிவேலு., தமிழ் சினிமாவில் இப்போதையை கால கட்டத்தில் இவர் போல் பாடி லேங்குவேஜும் அசத்தல் ஆன டயலாக் டெலிவரியும் உள்ள காமெடியன்ஸ் யாருமே இல்லை என்பது இவரது பெரிய பிளஸ் .
இவரது ஹேர் ஸ்டைல் பார்த்தாலே சிரிப்பை வர வைக்குது , தேளுக்கு ஹேர் கட் பண்ணி விட்டா மாதிர் ஒரு மீசை செம கலக்கல் தலைவா .படம் முழுக்க முழுக்க வடிவேல் ராஜ்ஜியம் தான் . சீன் பை சீன் அவரை நம்பியே திரைக்கதை எழுதப்பட்டிருக்கு . இது ஒரு மினிமம் கேரண்டி ஹிட் படம்னு அசால்ட்டா சொல்லலாம்
ஹீரோயினா சதா . போய்யா போ என அவர் கை நீட்டி ஜெயம்ல சொன்னப்போ அவரோட ரேஞ்ச் என்ன? இப்போ தொப்;பையோட அவரை பார்க்கும்போது மனசுக்கு கஷ்டமா இருக்கு ( டேய் , நாயே ., தொப்பையை பார்க்க கஷ்டமா இருந்தா பார்க்காத , பார்த்தே ஆகனும்னு கண்டிஷன் பண்ணாங்களா?).இடைவேளைக்குப்பின் தான் வர்றார், 2 பாட்டு சீன் , 8 சீன் ( சாதா சீன் ) இருந்தா போதுமா? காமெடி படத்துக்குப்போதும். இது போக அவருக்கு 3 லோ கட் சீன்கள் 4 லோ ஹிப் சீன்களும் இருக்கு இது போதாதா?
வடிவேலு கூடவே இருக்கும் மொட்டை காமெடியன் நல்லா எக்ஸ்பிரசன் காட்றார்
வில்லனா கஜினி மொட்டை வில்லன் அய்யோ பாவம் , பரிதாபமா இருக்கார்
ஆர்ட் டைரக்சன் ஓக்கே . நாடக செட்டிங்ஸ் போல் அப்பட்டமா அட்டை எல்லாம் தெரியுது .தோட்டா தரணி . 1960 நிகழ்வு கால கட்டத்தில் காட்சிகளை நல்லா அமைச்சிருக்கார்
இசை நல்லாருக்கு , 3 பாட்டு , 3 பாட்டுமே கேட்கும்படி இருக்கு, மேரி சப்னோ ஹிந்திப்பாட்டுக்கு தியேட்டரில் ஆரவாரமான வரவேற்பு அதுக்கு வடிவேலுவின் பாடிலேங்குவேஜ் கலக்கல் ரகம் , வித்யா சாகர் பல காசிகளில் பிஜிஎம்மில் உணர்ச்சி வசப்பட்டு ஓவர் சவுண்ட் கொடுப்பது ஏனோ?
படத்தில் வசனங்கள் ஓக்கே ரகம் தான் , கலக்கல் என சொல்லிட முடியாது . ஆனால் சாதா மொக்கை ஜோக்குக்கே மக்கள் வடிவேலுவின் பர்ஃபார்மென்சுக்காக கை த ட்டி ரசிக்கறாங்க . ஃபேமிலி ஆடியன் ஸ் தியேட்டரில் நல்லா எஞ்சாய் பண்றாங்க
மனதைக் கவர்ந்த வசனங்கள்
1 நகை வேணும்னா நகைக்கடைல கொள்ளை.அடிக்கனும்.பணம் வேணும்னா பேங்க்ல. கொள்ளை அடிக்கனும்.பப்ளிக்கை டிஸ்ட்டர்ப் பண்ணப்படாத்.#,எலி
2 நீங்க சாதா சிங்கம் இல்ல.ஷேவிங் செஞ்ச சிங்கம்
அய்யோ.ஷேவிங் பண்ண.சிங்கமா?,அசிங்கம் மா இருக்காது? #,எலி. பஞ்ச் டூ சூர்யா?
3 எனக்கு 2 சம்சாரம்.1,பாமா 2 பத்மா
2,மாவையும் வெச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன் # எலி
5 சாகும் வரை உண்ணா விரதம்னு எதுக்கு போர்டு?
இப்பவெல்லாம் எல்லாரும்தான் உண்ணா.விரதம் இருக்காங்க.அது ஒரு பேஷன் #,அட்டாக் டூ கலைஞர் @ எலி
7 பெட்ரோல் விலை ஏறும் இறங்கும்.ஆனா எப்பவும் விலை ஏறிக்கிட்டே இருப்பது சிகரெட் தான் #,எலி
படம் பார்க்கும்போது அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 தேவன் /ன் துப்பறியும் சாம்பு போல் 1970 காலகட்டத்தில் நிகழும் காமெடி / டிடெக்டிவ் கதை தான் வடிவேலுவின் எலி
2 எலி = இம்சை போல் சூப்பர் இல்லை.இ லோ அழகப்பன் ,தெனாலி ராமன் போல் மொக்கை இல்லை.காமெடி மெலோ டிராமா வாம்.சுமார் என தகவல்
3 துப்பாக்கி யை தப்பாக்கி ட்டீங்க னு ஒரு வசனம் #,குறியீடு.புலி க்கு எலி பஞ்ச்.அய்யகோ !
5 நல்லவன் வேணாம்.வல்லவனும் வேணாம் #,அட்டாக் டூ சிம்பு? # எலி
6 அரை நொடி கோபத்தை அடக்க முடியாதவன் ஆயுள் முழுக்க ஜெயிலில் காலத்தை கழிக்கறான் #,பாடல் வரி @எலி
7 உடன்பிறப்பு,உளுத்தம்பருப்பு ,பாசிப்பருப்புன்னு என்னய்யா கதை விடறீங்க.#,எலி .அம்மாவை ஐஸ்.வைக்க?
8 இவன் சாதாரண ஆள் இல்லை.குருவி (மொட்டை ராஜேந்திரன்) யையே குமுறகுமுற அடிச்சவன். #,குருவி குறியீடு.@ எலி
9 மொக்கையான திரைக்கதை ,வடிவேலுவின் கலக்கலான பாடிலேங்குவேஜ் பேலன்ஸ் ஆகும் எலி இடை வேளை
10 இப்பவெல்லாம் குடிக்கற பசங்க படிக்க.ஆரம்பிச்ட்டாங்க.படிக்கற பொண்ணுங்க குடிக்க ஆரம்பிச்ட்டாங்க.#,3ஷா இல்லைன்னா.9தாரா ட்ரெய்லர்
11 தட்டில் முழுக்க தமிழ் எனும் சாதம் நிறைய இருக்கும்போது இங்க்லீஷ் எனும் ஊறுகாயை ஏன் பாட்டில் பாட்டிலா சாப்பிடனும்? #,எலி
12 இவனை.அடிக்க அடியாளுக்கு எதுக்கு.10,000 ரூபா?10,ரூபா குடுத்தா இவனே இவனை அடிச்சுக்குவான் #,எலி
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1 இளைய தளபதியின் புலிக்குப்போட்டியாக டைட்டிலை எலி என ரைமிங்கா வெச்சு நக்கல் அடிச்சது , போஸ்டர் டிசைன் , மார்க்கெட்டிங் டெக்னிக் எல்லாம் கனகச்சிதம் ( மே மாசம் வந்திருந்தா இன்னும் நல்லா ஹிட் ஆக்கி இருக்கலாம் )
2 ஓப்பனிங்கில் பேங்க் கொள்ளைக்காட்சி கலக்கல் காமெடி. ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்காக மிரட்டல் கடிதம் தருவதும் , பேங்க் ஆஃபீசர் ரூல்ஸ் படி மிஸ்டேக் இல்லாம மிரட்டல் லெட்டர் தந்தாதான் கொள்ளை அடிக்க அனுமதிப்பேன் என்பதும் செம காமெடி ரகம்
3 போலீஸ் ஆஃபீசர் வீட்டில் கொள்ளை அடிக்கும்போது அங்கே வரும் இன்னொரு போலீஸ் ஆஃபீசரை வடிவேல் சமாளிக்கும் காட்சி , போலீஸ் ஆஃபீசர் வீட்டைக்காலி பண்ணிட்டுப்போய்ட்டாரே என சமாளிப்பதும் கலக்கல் காட்சி
4 வடிவேல் இங்கிலீஷ் வசனத்தை தப்பு தப்பாக பேசும் காட்சிகள் எல்லாம் கலக்கல் ரகம். துப்பறியும் சாம்பு லெவலில் வரும் பல காட்சிகள் நல்லாருக்கு , சில காட்சிகள் போர்
5 இளையராஜா தன் பாடலை பயன் படுத்தினால் கோர்ட்டில் கேஸ் போடுவேன் என மிரட்டிவிடதால் நைசா 1969ல் ரிலீஸ் ஆன ஆராதனா ஹிந்திப்பாட்டை ( மேரே சப்னோ கி ராணி ) அப்டியே ஜெராக்ஸ் எடுத்தது . தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்
6 மொட்டை ராஜேந்திரன் தற்செயலான விபத்தில் இறப்பதும் அந்த சீனில் வடிவேலு கொலை காரராக மாட்டுவதும் நல்ல காமெடி
7 பாண்டியன் , போக்கிரி , மீகாமன் படங்களின் கதை யையே வடிவேலுக்கு தகுந்தாற்போல் மாற்றியது
7 பாண்டியன் , போக்கிரி , மீகாமன் படங்களின் கதை யையே வடிவேலுக்கு தகுந்தாற்போல் மாற்றியது
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 வடிவேல் பெண் கேரக்டரில் வில்லன் இடத்தில் உலா வரும்போது எதுக்காக அப்படி சுத்திட்டு இருக்காரு? என வில்லன் கேட்கவே இல்லை
2 படத்தில் ஹீரோயின் கேரக்டர் படம் போட்டு 1 1/4 மணி நேரம் கழிச்சு வர்றாரு . இது தமிழனை ஆயாசப்படுத்துது . ஓப்பனிங்கிலேயே வர விட்டிருக்கலாம்
3 க்ளைமாக்ஸ் ல வில்லன் ஹீரோயினை ஸ்லீவ்லெஸ் டிரஸ் ல கை ரெண்டையும் மேலே தூக்கி கட்டி இருக்காரு . பார்க்க ற நமக்கே ஒரு மாதிரியா இருக்கும்போது வில்லன் ஹீரொயினை டச் பண்ணாத ராவணன் வில்லன் போல் இருப்பது ஏமாற்றம் ( காமெடி படத்துல கற்பழிப்பு சீனா வைக்க முடியும் ? ராஸ்கல்ஸ் )
4 படத்தில் முன் பாதி யில் முதல் 45 நிமிஷம் காமெடியாப்போகும் படம் மெயின் கதைக்கு எண்ட்ரி ஆனதும் விறுவிறுப்பு , சுவராஸ்யம் எக்சிட் ஆகிடுது . இது திரைக்கதையின் பெரிய பலவீனம்,
5 ஆல்ரெடி தெனாலி ராமனில் சொதப்பிய இயக்குநருக்கே வடிவேல் வாய்ப்பளித்தது ஆச்சரியம், ஆனா அதை உணர்ந்து இயக்குநர்ப் பட்டாசைக்கிள்ப்பவில்லை , ஆனால் அதை விட இது பெட்டர் என்ற லெவலில் இருக்கு
சி பி கமெண்ட் -எலி = குழந்தைகளுக்கான ,சி சென்ட்டர் ரசிகர்களுக்கான மொக்கை காமெடி மெலோ டிராமா ,விகடன் மார்க் 40, மெத்தப்படித்த நகர மக்கள் , ஐ டி கைஸ் ,
வாழும் ஏ செண்ட்டர்களில் இது சுமாராதான் ஓடும் , நடுத்தர மக்கள் வாழும் பி சென்ட்டர்களில் , ஏழை மக்கள் வாழும் சி செண்ட்டர்களில் இது மீடியமா ஓடிடும்
ரேட்டிங் = 2 .5/ 5
ஆனந்த விகடன் மார்க் ( கணிப்பு) - 40
குமுதம் ரேங்க் ( கணிப்பு)= சுமார்
ரேட்டிங்=2 .5/ 5
ஈரோடு அபிராமியில் படம் பார்த்தேன்
டிஸ்கி = FDFS பார்க்க ஆஃபீசுக்கு லீவ் போட்டுட்டு பார்க்கும் அளவுக்கு ஒர்த் இல்லாத அல்லது ஒரு நாள் சம்பளம் பிடிச்சா பிளாக் ஹிட்ஸ் மூலம் வரும் வருமானம் அந்த சம்பளத்துக்கு சமம் செய்யும் என் றால் மட்டும் தான் லீவ் போட்டு படம் பார்ப்பேன் . இல்லைன்னா செக்ண்ட் ஷோ தான்.
1 comments:
தியேட்டர் போய் பாக்கரமாதிரி படம் இல்ல↩
Post a Comment