1 முகூர்த்தம் 7 மணிக்கு.நீங்க 8 மணிக்கு வந்தாப்போதும்.
சு சாமி = ஏன்?
தாலி கட்றப்ப குழப்பம் வந்துடக்கூடாதில்ல?
============
2 ஜட்ஜ் = மணமகளுக்கு தாலி கட்டி கலாட்டா பண்ணீங்களா?
கைதி = கலாட்டா பண்ணது நிஜம்.தாலி கட்ற கெட்ட பழக்கம் எங்க பரம்பரைக்கே இல்லீங்கோ
===========
3 டியர்.என் கண்ணுக்குக்கீழ் ஏதாவது கரு வளையம் தெரியுதா?
இல்ல.உனக்கு உன் தங்கைக்கு னு உன் சர்க்கிள் ல யாருக்கும் பிளாக் சர்க்கிள் இல்ல
=============
4 கல்யாண மாலையில்
அரசு வேலையில் உள்ள உலகம் பூரா டூர் அடிக்கும் ஜாலி மாப்ளை தேவை
ஓ. அதுக்கு நீங்க மோடியைத்தான் கட்டிக்கனும்
==============
5 ஜட்ஜ் = எதுக்காக உன் காதலனை ஊட்டி ல இருந்து தள்ளி கொலை செஞ்சே?
புஷ்பா = ஆசையா புஷ்-னு கூப்பிட்டாரு, கட்டளை வாக்கியம்னு நினைச்ட்டேன்
===============
6 டியர், உனது நினைவுகளை துவைத்துவிடவே எண்ணினேன் , முடியல
ஏம்மா, உன் துணியையே 10 நாளா துவைக்காம இருக்கே
===============
7 இந்தி யா வந்தா திணற திணற பிரியாணி செய்து போடணும் .
தமிழா,இங்க்லீஷா வந்தா?
==============
8 டியர், என் உடல் அழகைப்பார்த்தா என்னை காதலிச்சீங்க?
அதான் 8 கஜம் சேலைல இருக்கியே, எப்டித்தெரியும்? வேற யாரும் சிக்கலை
=================
9 ஜட்ஜ் = எதுக்காக ஆண்டவன் மீது ஆணையிட்டு சாட்சி சொல்றீங்க?
கைதி = சப்போஸ் ஏதாவது தப்புன்னா பாதிப்பு ஆண்டவனுக்குத்தானே?
==========
10 மிஸ்!,உங்களுக்கு போன் பண்ணா ஆப் னு வருதே?
ஆபீஸ்லயே வெச்ட்டு.வந்தா.OFFனு தான் வரும்.OFFICEன் சுருக் OF
==============
11 சார்."எமக்கட்டை"ன்னு துறுதுறுன்னு இருக்க சின்னப் பிள்ளைங்கள சொல்லுவாங்களா? மதுரைப் பக்கம்,
தெரிலீங்ளே.நமீதா வகையறாவை செம கட்டை ம்போம்
==============
12 கடவுளே! ஏன் கலக்கமா இருக்கீங்க?
நேர்மையா ஆட்சி நடத்துவேன்.இது ஆண்டவன் மீது ஆணைனு ஆளாளுக்கு என் தலையை உருட்றாங்க
===========
13 எனக்கு அடிக்கடி வீட்ல இருந்து மட்டும் கால் வரும்.
ஓஹோ! அப்போ நீங்க வீட்லயே இருக்க மாட்டீங்களா?
==============
14 மேடம்.தூங்காவனம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பத்தி கேட்டா எதும் பேச மாட்டேங்கறீங்களே?
த்ரிஷாவின் மம்மி = லிப் கிஸ்னு சொல்லி கடிச்சு வெச்ட்டாராம்
==============
15 என் படத்தோட கதையை தயாரிப்பாளருக்கு நான் சொல்லவே இல்லை.
ஆடியன்சுக்கே கடைசி வரை சொல்லலியே?
==============
16 எனக்கு தந்த விருதை ட்விட்டர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
ஓ.குட்.சம்பளத்தை?
அஸ்கு புஷ்கு.அது எனக்குத்தான்
===============
17 டாக்டர் ,கோபம் வரும் போதல்லாம் சாப்ட தோணுது இது என்ன வியாதி?
தெரியலையேம்மா, ஆனா ரொம்ப செலவு வைக்கும்வியாதி,ஹோட்டல் ஓனராப்பாத்து கட்டிக்கோ
====================
18 எதயோ மறந்துட்டோம்னு ரொம்ப நேரமா யோசிச்சு பாத்தா சோறு திங்க மறந்தது ஞாவகத்துக்கு வருது :-/"
ஏம்மா."திங்க"கிழமையே இப்டியா?
============
19 டியர், என் மொபைல் நெம்பரை ஏன் கரகாட்டக்காரன் -னு சேவ் பண்ணி வெச்சிருக்கே?
இந்த மான் எந்தன் சொந்த மான்-னு சிம்பாலிக்கா சொல்ல # மான்விழிலவர்
================
20 சார்! எனக்கு ஏன் இன்க்ரீமெண்ட் இல்ல?
உங்களுக்குத்தான் தம் அடிக்கும், பழக்கமே இல்லையே? எப்படி “ஊதிய” உயர்வு கேட்க முடியும்?
=================
0 comments:
Post a Comment