Tuesday, June 30, 2015

தமிழ் சினிமா 2015 வசூ'லிஸ்ட்'- டாப் 10 அல்ட்டிமேட் படங்கள் -ஸ்ரீதர் பிள்ளை

இந்த ஆண்டு ஜூன் 26 வரை தமிழில் 107 படங்கள் வெளியாகியுள்ளன. இது ஒரு சாதனை. ஆனால் இவற்றில் மொத்தம் 11 படங்களே ஹிட் என்று சொல்லக் கூடிய அளவில், தயாரிப்பாளர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளன. 4 படங்கள் தயாரிப்பு செலவை மட்டும் சம்பாதித்துள்ளன. இந்த அரையாண்டில் 13 சதவீதம் ஹிட் படங்களாக உள்ளன. கடந்த ஆண்டு இது வெறும் 8 சதவீதமாக இருந்தது.
அரையாண்டின் சிறப்பம்சங்கள்
# காக்கா முட்டை, 36 வயதினிலே, டிமாண்டே காலனி ஆகிய படங்கள் சம்பாதித்த லாபத்தைப் பார்க்கும்போது, 'சிறியதே அழகு' என்பதே வெற்றிக்கான மந்திரமாக இருக்கும் போல தெரிகிறது. பெரிய நட்சத்திரங்கள் இன்றி, குறைந்த பட்ஜெட்டில் (ரூ.2.5 கோடி முதல் ரூ.5 கோடி வரை) சிறப்பாக எடுக்கப்பட்ட படங்கள் வெற்றி பெற்றுள்ளன. இது ஒரு புதிய போக்காக உருவாகியுள்ளது.
# தயாரிப்பு செலவில் பாதியை சம்பளமாகப் பெறும் பெரிய நட்சத்திரங்களின் படங்கள் (உத்தமவில்லன், மாஸு என்கிற மாசிலாமணி) வசூலில் எடுபடாமல் போனது. இதன் மூலம், படங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் நட்சத்திர நடிகர்கள், இயக்குநர்களின் சம்பளம் குறையவேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
# ராகவா லாரன்ஸின் சம்பளத்துடன் சேர்த்து ரூ.18 கோடியில் எடுக்கப்பட்ட காஞ்சனா 2, மாபெரும் வெற்றிப் படமாக ஆனது.
# படத்துக்கான ஓப்பனிங் நன்றாக இருக்க வேண்டுமென்றால் சிறப்பாக விளம்பரப்படுத்த வேண்டியது கட்டாயமாகியுள்ளது. இதில் பெரிய ஹீரோக்களின் படங்களும், சிறிய பட்ஜெட் படங்களும் வெவ்வேறு முறையில் விளம்பரப்படுத்தப்பட வேண்டும். பாலிவுட்டைப் போல பெரிய நட்சத்திரங்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் படங்களை விளம்பரப்படுத்த வேண்டும்.
# தொலைக்காட்சி உரிமம் என்ற சந்தை முற்றிலுமாக பாதிப்படைந்துள்ளது. அதிக படங்கள் தயாரிக்கப்படுவதால் தொலைக்காட்சி நிறுவனங்கள் படங்களை வாங்குவதை நிறுத்தியுள்ளன. படங்களின் தொலைக்காட்சி உரிமம் அதிக விலைக்கு விற்கப்படுவதும், படங்களை ஒளிபரப்பினால் வரும் வருமானம் குறைந்துள்ளதுமே இதற்கு காரணங்களாகப் பார்க்கப்படுகின்றன. இந்த வருடம் வெற்றி பெற்ற 3 படங்களின் தொலைக்காட்சி உரிமம் இன்னும் விற்கப்படாமலேயே உள்ளன.
# அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் தமிழ் படங்களின் வெளிநாட்டு விநியோக சந்தை 10 - 15 சதவீதம் உயர்ந்துள்ளது. மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணிக்கு அமெரிக்காவில் கிடைத்த மிகப்பெரிய வசூல் இதற்கு ஓர் உதாரணம். அதே நேரத்தில், பெரிய நடிகர்கள் நடித்த படங்களின் தோல்விகளால், ஒரு காலத்தில் லாபகரமாக இருந்த தெலுங்கு டப்பிங் உரிமையும் தற்போது அடிவாங்கியுள்ளது. இந்த வருடம் தமிழிலிருந்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றியடைந்த ஒரே படம் காஞ்சனா 2
பாஃப்டா திரைக் கல்லூரியின் இணை நிறுவனர் ஜி.தனஞ்ஜயன் பேசும்போது, "இந்த ஆண்டின் முதல் பாதி நன்றாகவே இருந்ததாகத் தெரிகிறது. வெளியான 100 படங்களில் 15 படங்கள் லாபகரமாக அமைந்துள்ளன. கடந்த 3 வருடங்களில் இருந்ததை விட இது சிறந்த விகிதமாகும். காமெடி கலந்த பேய் படங்களைத் தாண்டி, சுவாரசியமான கதையமசம் உள்ள படங்களும் மக்களை ஈர்த்துள்ளன. ஆண்டின் இரண்டாம் பாதி இன்னும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்" என்றார்.
தேசிய விருது வாங்கிய காக்கா முட்டை மாபெரும் வெற்றி கண்டுள்ளது சிறந்த அறிகுறியாக இருக்கிறது. நடிகர் தனுஷும் இயக்குநர் வெற்றிமாறனும் இணைந்து தயாரித்த இந்தப் படம் ரூ.2.5 கோடிக்கு ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. அவர்கள் மேலும் ரூ. 2 கோடி செலவழித்து படத்தை விளம்பரப்படுத்தினார்கள். தற்போது காக்கா முட்டை திரையரங்கம் மூலமாக மட்டும் மூன்று வாரங்களில் ரூ.15 கோடியை வசூலித்துள்ளது.இதில் 80 சதவீதம் தமிழகத்தில் மட்டும் வசூலாகியுள்ளது.
காக்கா முட்டை படத்தின் தொலைக்காட்சி உரிமம் விஜய் டிவியால் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து போன்ற தமிழ் சினிமாவுக்கு அறிமுகமில்லாத சந்தைகளிலும் காக்கா முட்டை படத்தை வெளியிட ஃபாக்ஸ் ஸ்டார் முயன்று வருகிறது. சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளதால் இந்தப் படத்துக்கான சந்தைக்கு வானமே எல்லை.
2015-ஆம் ஆண்டின் முதல் பாதியில் வந்த முக்கியப் படங்களின் வசூல் விவரம்
1. ஐ (தமிழ் + தெலுங்கு + இந்தி) - ரூ.190 கோடி
2. காஞ்சனா 2 (தமிழ் + தெலுங்கு) - ரூ.98 கோடி
3. என்னை அறிந்தால் (தமிழ் + தெலுங்கு) - ரூ.78 கோடி
4. மாஸு (தமிழ் + தெலுங்கு) - ரூ.63 கோடி
5. அநேகன் (தமிழ் + தெலுங்கு) - ரூ.49 கோடி
6. காக்கி சட்டை (தமிழ் மட்டும்) - ரூ.47 கோடி
7. உத்தம வில்லன் (தமிழ் + தெலுங்கு) - ரூ.38 கோடி
8. ஓ காதல் கண்மணி (தமிழ் + தெலுங்கு) - ரூ.33 கோடி
9. கொம்பன் (தமிழ் மட்டும்) - ரூ.31 கோடி
10. ரோமியோ ஜூலியட் (தமிழ் மட்டும்) - ரூ.22 கோடி
அனைத்து புள்ளி விவரங்களும் தோராயமானவை ஆனால் படங்களின் உண்மையான வசூல் நிலையை பிரதிபலிப்பதே.
தகவல்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வியாபரத்தில் ஈடுபட்டுள்ள இன்ன பிற நபர்களிடமிருந்தும், tamilboxoffice1.com இணையதளத்திலிருந்தும் திரட்டப்பட்டவை.
© தி இந்து, ஆங்கிலம், 
தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா


thanx -the hindu


  • Saran  
    கார்த்தி படம் லிஸ்ட் லையே இல்ல. குட்
    about 5 hours ago
     (0) ·  (0)
     
    reply (0) 
       
    • Madhan  
      fake
      about 5 hours ago
       (0) ·  (0)
       
      • விக்கிபீடியா: என்னை அறிந்தால் 130 கோடி வசூல் அறிந்தால்
        about 5 hours ago
         (0) ·  (0)
         
        • Madhu  
          அநேகன் ஹிட்டுன்னு சொல்லி இருக்கீங்க? எப்படி யார் சொல்லுறத நம்புரதுனே தெரியல்ல?
          Points
          1635
          about 5 hours ago
           (0) ·  (0)
           
          • அப்படின்னா என்னை அறிந்தால் 130 கோடின்னு வடை சுட்டது என்னாச்சு அப்ப மறுபடியும் மங்காத்தா டா தானா
            about 6 hours ago
             (3) ·  (1)
             
            BharathKumar · anand · rajkumarUp Voted
            VikramDown Voted
            • Vikram  
              என்னை அறிந்தால் U /A . மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொகை வரி பிடித்தம் போக. வரி சதவீதம் 30%. என்னை அறிந்தால் 50 கோடியில் எடுக்க பட்டு 78 கோடி வசூல் என்றால் எப்படி flop ஆக முடியும். நாங்கள் எப்போதோ மங்காத்தா வில் இருந்து ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால் என வந்து விட்டோம். நீங்கள் தான் இன்னமும் துப்பாக்கி டா சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். முதலில் உங்கள் நடிகரை ஒரு பிலிம் பேர் விருதை வாங்க சொல்லுங்கள். அப்புறம் வந்து துப்பாக்கி டா என வழக்கம் போல 

          சிம்பு VS தனுஷ் - மன்மதன் - ட்ரீம் ஸ் , வல்லவன் - திருவிளையாடல் , வாலு - மாரி

          1சன் tv யில் ராசிபலன் சொல்லும் ரோசி கடல் நீலக்கலர் சேலைக்கு சம்பந்தமே இல்லாமல் பாசி பச்சைக்கலர் ஜாக்கெட் அணிந்திருப்பது அதிர்ச்சி தருது;-)



          ===========




          2 நெட்டில் பொண்ணுங்க அடிக்கடி ஹேண்டில் நேமை(யும்) மாத்திக்குவதன் உளவியல் என்னவோ?




          ============




          3 காலைல லேட்டா எந்திரிச்சு மேக்கால (மேற் கில் ) பாத்துட்டு இங்க சூரியனையே காணும். சோம்பேறி சூரியன் :)"னு அடிச்சு விடுவான் தமிழன்




          =============



          4 டயலாக் டெலிவரியின் டரியல் நாயக்ன் ,பணம் கொடுத்து நடிக்கும் பரிவட்டக்காரன் விமல் ன் காவல் இந்த வாரம் ரிலீஸ்



          ===========

          5 அதிகாலையில் கோழி (சேவல்) கூப்பிட எழுபவன் சுறுசுறுப்பாளி.
          தோழி கூப்பிடும் முன் எழுபவன் காதல் பொறுப்பாளி


          =========


          6 சர்வோதயா ஊதுபத்தி பாக்கெட்ல 10 இருந்தது.இப்போ 9 தான் இருக்கு.யாரை ஏமாத்தப்பார்க்கறீங்க.எண்ணிப்பார்த்து தீப்பெட்டி வாங்குவோர் சங்கம்

          ============

          7 இந்தப்பொண்ணுங்க வெங்காயம் அரிஞ்சுக்கிட்டே FB ல ஸ்டேட்டஸ் போடுவாங்க போல.எப்போ பாரு கண்ணீர் ,அழுகை னு சோகமயமா இருக்கு

          =========
          8 ஹெல்மெட் கட்டாய சட்டத்துக்கு  அரசு விளம்பரப்படம் எடுத்தா எந்த  ஹீரோவை அணுகுவாங்க?னு சொல்ல ஜோசியம் தெரிஞ்சிருக்கத் தேவை இல்லை # பைக் ஸ்டார்


          =================


          9  நாலு ஃபிகருக்கு நல்லதுன்னா  டிவிட்டர விட்டு போறது தப்பே இல்ல னு நெட் தமிழன் சொன்னா யாரும் பதறாதீங்க,பார்ட்டி FB  ல போய் கடலை போடும்


          ================


          10  ஹெல்மெட் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அஜித் ரசிகர்கள் மும்முரமாக இறங்கி இருப்பதால் விஜய் ரசிகர்கள் ஹெல்மெட்டே  போடாமல் இருப்பாங்களோ?



          =============



          11 கூந்தல் பின்னி ஜடை முடிய சோம்பேறித்தனப்பட்டு லூஸ் ஹேர் விட்டாலும் பெண்களின் சோம்பேறித்தனம் கொண்ஸாடப்படும்


          ==================

          12 ரஜினி ,கமல் ,அஜித் ,விஜய் டாப் ஹீரோக்களில் பேன்ட்டசி + சயின்ஸ் பிக்சன் ஆக்சன் படத்தில் நடிக்கும் முதல் ஹீரோ விஜய் தான்


          =============

          13 ரஜினி யின் அதிசயப்பிறவி பேன்ட்டசி பிலிம் தான்.சயின்ஸ் பிக்சன் அல்ல.அதே போல் கமல் ன் விக்ரம் ஆக்சன் பிலிம் தான்.பேன்ட்டசி பிலிம் அல்ல


          ==========

          14 அதிசயப்பிறவி
          விக்ரம்
          அலாவுதீனும் அற்புத விளக்கும்
          இவை எல்லாம் பேன்ட்டசி கேட்டகிரி.புலி தான் 2 வது டைம் மிஷின் கதை.முதல் இன்று நேற்று நாளை

          =================

          15 தமிழ் பேன்ட்டசி பிலிம்
          1 அலாவுதீனும் அற்புத விளக்கும்
          2 அதிசயப்பிறவி
          5 இரண்டாம் உலகம்
          3 ஆயிரத்தில் ஒருவன் 4 நியூ
          7 புலி
          6 இன்று நேற்று நாளை


          =============

          16 கால எந்திரத்தில் பயணித்து கடந்தகாலத்துக்கு செல்லும் கதை அம்சம் கொண்ட சயின்ஸ் பிக்சன் ஆக்சன் கதையில் நடிக்கும் முதல் தமிழ்ஹீரோ விஜய் தான்

          ============
          17 எலி விகடன் மார்க் =38
          அட்ராசக்க மார்க் =40 # வடிவேலு 40 க்கே சைக்கோன்னாரு.38 க்கு என்ன சொல்வாரோ?


          =============

          18

          நேத்து சாயங்காலம் 6 மணி க்கு ஒரு பொண்ணு தன் பேரை மட்டும் ஹேண்டிலா வெச்சிருந்தது.இன்னைக்கு காலைல மிசஸ் னு பேருக்கு முன்னால போட்டிருக்கு.


          =============

          19 சிம்பு தனுஷ் நேரடியாக முன்பு மோதியது மன்மதன் - ட்ரீம்ஸ்
          இப்போ மோதப்போவது வாலு - மாரி எது ஹிட் அடிக்குமோ?

          =========
          20 தொழிலாளர் நல சட்டப்படி 1 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை வேலை செய்தவருக்கு அடுத்த மாதம் 10 ம் தேதிக்குள் சம்பளம் தந்து விடவேண்டும்.


          ===========
          ==

          சன் டி வி ல ஏதோ நல்ல குடும்ப சீரியல்ல முதல் இரவு நடத்தறது பத்தி

          ஜெ வழக்குத் தீர்ப்பில் தவறுகள், கணிதப் பிழைகள்: அப்பீல் மனுவில் கர்நாடக அரசு பட்டியல் # 10% தான் தப்பு இருக்கு.வுட்ருங்க எஜமான்


          ==========



          2 பாகுபலியை விட பத்துமடங்கு சூப்பராக இருக்கும் புலி _ சிம்புதேவன் # இப்டித்தான் அஞ்சான் =10 பாட்சா ,லிங்கா =10 படையப்பா ன்னாங்க




          ==========



          3 கோவையில் பிரபல நிறுவனம் தயாரித்த அப்பளத்தில் புழு இருந்ததாக புகார்

          # இப்போ புழுவைத்தடை பண்ணுவாங்களா? அப்பளத்தையா?

          ==============

          4 நீதி வெல்லும் நியாயம் கிடைக்கும் - நாஞ்சில் சம்பத் # அம்மா நியாய விலைக்கடைல நியாயத்தை /நீதியை விலைக்கு வாங்கிடுவார்னு அர்த்தமா?


          ==============


          5 ஜெ. விடுதலை தீர்ப்பில் அப்பட்டமான கணிதப்பிழைகள்: கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனு!/"# இனிமே ஜட்ஜூங்க BABLபடிச்சா பத்தாது.BSc மேத்சும்

          ===========

          6 யோகாவை மேம்படுத்த ரூ. 500 கோடி நிதி: மத்திய அரசு முடிவு # யோகா செஞ்சா மக்களுக்கு பலன்.செய்யலைன்னா அரசுக்கு பலன்


          ===========


          7 அப்பாவுக்கே என் ஆதரவு: வரலெட்சுமி சரத்குமார் அறிவிப்பு # இந்தப்பொண்ணுங்களே இப்படித்தான்  புரிஞ்சுபோச்சுடா- விஷால்


          ==================


          விளையாட்டில் சாதித்தால் ரயில்வேயில் வேலைவாய்ப்பு- ஐ.ஜி. கருத்து  வாழ்க்கைல விளையாடிட்டு அரசுவேலை கேட்பானுங்க


          ==================


          9  யோகாவை எதிர்ப்பவர்கள் பாகிஸ்தானுக்கு போகலாம்: சாத்வி பிரச்சி சர்ச்சை கருத்து #,ஐ ஜாலி.அரசு செலவில் சானியா மிர்சாவைப்பாத்துட்டு வரலாம்


          =============



          10 சர்வதேச யோகாதினத்தில் ஆசனம் செய்யும் போது ரெயில்வே மந்திரி தூங்கியதாக பரவும் புகைப்படம் # நித்ராசனம் அதான் நித்திரைனு சமாளிப்பாரோ?




          ==============



          11 எமி ஜாக்சன் அப்பாவிற்கு மாரடைப்பு # பிரபு தேவா எமி லவ் மேட்டர் தெரிஞ்சிடுச்சு போல.



          =============



          12 சிம்புவுக்கு நேரம் ஒதுக்க தயார் ஹன்சிகா# அதான் காதல் வட்டத்தில் இருந்து ஒதுக்கிட்டீங்களே? இனி வாலு க்காக ஒதுக்கினா என்ன? ஒதுக்காட்டி என்ன?




          ==============



          13 சீட் இலக்கு தேவையில்லை.நாட்டுக்கு நல்லது செய்வதே இலக்கு.-சரத்குமார்# நடிப்பு , அரசியல்  என இரட்டை இலக்கு என்பது பொய்யா? அய்யா? விளக்கு!




          ====================



          14  மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை’- குஷ்பு # உலகம் முழுக்க இந்தியா பற்றி அறியவைப்போம்னு சொன்னபடி வோர்ல்டு டூர் போறாரே?


          ================


          15 சொகுசு கார் வாங்குவதாக.. வங்கியில் ரூ.37 லட்சம் ஏமாற்றிய ஆந்திரஅதிபர் கைது # சாதா கார் வாங்கி உள்ளே சதா ஏதோ ஒரு பொண்ணோட சொகுசா இருந்தாரோ?


          ==============


          16 என்னை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும்’-ஜெ # எதிரி இல்லாத இடத்துல உதிரி கூட ஜெயிப்பான் மேடம்


          ==================


          17

          இந்தியாவில்.100 ஸ்மார்ட் ஸிட்டி அமைக்க இருப்பதில் 12 தமிழ் நாட்டில் # தமிழகம் தவிர்க்க முடியாத ஒரு அங்கம்


          ==================

          18 என் ஓட்டு சரத்ுக்கு. விஷாலுக்கு வாழ்த்து மட்டும் - நடிகை ஷகீலா அதிரடி #,என்னம்மா இப்டி பண்றீங்களேம்மா.ஜிம் பாடி க்கு ஜம் பாடி சப்போர்ட்டா?


          =============


          19

          பாகுபலி,ருத்ரமாதேவி எல்லாவற்றையும் விட புலிக்கு எதிர்பார்ப்பு அதிகம் - ஸ்ரீ தேவி# ஆமா மேடம்.ஏகப்பட்ட பேர் புலியை ஓட்ட ரெடியா இருக்காங்க

          ===============


          20 தொடர் விடுமுறை ி: ‘டாஸ்மாக்’ கடைகளில் அலைமோதிய மதுப்பிரியர்கள் கூட்டம் # லீவ் வந்தா ஸ்டாக் வாங்கி வைப்பதில் தமிழன் முன் ஜாக்கிரதை மப்பண்ணா


          =================