1 இன்று நேற்று நாளை
2 காவல்
3 யாகாவாராயினும் நா காக்க
4 லொடுக்கு பாண்டி
6 DEMONIC (டெமானிக்)
5 மூணே மூணு வார்த்தை
7 INSIDIOUS-3 #26/6/15
Science fiction film
1 இன்று நேற்று நாளை
மக்களை மகிழ்விக்கும் ஜனரஞ்சகமான படங்களையும், சிறந்த கதை களம் உள்ள வெற்றி படங்களையும் உருவாக்குவதில் கைதேர்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் சீ.வீ.குமாரின் “திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்” மற்றும் கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்”. அட்டகத்தி, பிட்சா, சூதுகவ்வும், வில்லா (பிட்சா 2), மூண்டாசுப்பட்டி, சரபம், எனக்குள் ஒருவன் உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்” தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து பிரம்மாண்டமான முறையில் புதிய கதை களத்துடன் தயாரித்துள்ள படம் தான் “இன்று நேற்று நாளை”.
சொந்த தொழில் தான் செய்வேன் எவன் கிட்டயும் கைகட்டி வேலை செய்யமாட்டேன் என்ற கொள்கையில் வாழும் இளங்கோ கேரக்டரில் விஷ்ணுவும், அரைகுறை ஜோதிடனாக பிழைப்பு நடத்தும் புலிவெட்டி ஆறுமுகம் கேரக்டரில் கருணாகரன். இவர்கள் இருவரும் தங்கள் கையில் கிடைக்கும் டைம் மிஷினை வைத்துக்கொண்டு ஏற்படுத்தும் பிரச்சனையை அதே டைம் மிஷின் உதவியோடு தீர்ப்பதே “இன்று நேற்று நாளை” படத்தின் கதை. ‘விஷ்ணுவிற்கு ஜோடியாக ‘அமரகாவியம்’ படத்தில் நடித்த மியா ஜார்ஜ் நடிக்கிறார். இப்படத்தை ரவி இயக்கி வருகிறார். ஹிப்ஹாப் தமிழா புகழ் ஆதி இசையமைத்து வருகிறார். வசந்த் ஒளிப்பதிவை செய்கிறார். இப்படத்தின் இசை வெளியிடு இந்த மாதம் (ஜீன்) 12 அன்று நடைபெறவுள்ளது
Action film
2 காவல்
ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தைத் தொடர்ந்து தற்போது விமல் கைவசம் நான்கு படங்கள் இருக்கின்றன. சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் உருவான ‘ரெண்டாவது படம்’ மற்றும் பசுபதியுடன் விமல் இணைந்து நடித்திருக்கும் ‘அஞ்சல’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதுதவிர ‘நீயெல்லாம் நல்லா வருவடா’, ‘மாப்பிள்ளை சிங்கம்’ ஆகிய படங்களிலும் விமல் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
எஸ்.ஜி. ஃபிலிம்ஸ் நிறுவனமும், கிளாப் சினிமாவும் இணைந்து உருவாக்கிவரும் ‘நீயெல்லாம் நல்ல வருவடா’ படத்தின் தலைப்பை தற்போது ‘காவல்’ என மாற்றி வைத்திருக்கிறார்கள். சமுத்திரக்கனி போலீஸாக நடிக்கும் இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்கிறார். மேலும் கீதா, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, இமான் அண்ணாச்சி உட்பட பல நட்சதிரங்கள் நடிக்கும் இப்படத்தை நாகேந்திரன் இயக்குகிறார். வித்தியாசமாக உருவாகிவரும் இந்த ஆக்ஷன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஏப்ரலில் பாடல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது..
எஸ்.ஜி.பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘காவல்’. விமல் நாயகனாகவும், மலேசியாவைச் சேர்ந்த ‘புன்னகை பூ’ கீதா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் சமுத்திரக்கனி, தேவா, பார்பி ஹண்டா, பாஸ்கர், இமான் அண்ணாச்சி, நமோ நாராயணன், சிங்கமுத்து ஆகியோரும் உள்ளனர்.
நாகேந்திரன் இயக்கியுள்ளார். முதலில் இதற்கு ‘நீயெல்லாம் நல்லா வருவடா’ என பெயரிட்டு இருந்தனர். அந்த தலைப்பிலேயே படப்பிடிப்பும் நடந்து முடிந்துள்ளது. பின்னர் காவல்துறை அதிகாரிகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்குப் படத்தின் சிறப்புக் காட்சி திரையிட்டுக் காட்டப்பட்டது.
படம் பார்த்த எல்லோரும் சிறப்பாக இருப்பதாகப் பாராட்டினர். தலைப்பை மாற்றிவிட்டு வேறு பொருத்தமான தலைப்பு வைக்க அறிவுறுத்தினராம். பல தரப்பில் ஆலோசித்து இறுதியில் ‘காவல்’ என பெயரிடப்பட்டு திரை காண்கிறது. இது காதல், சண்டைக் காட்சிகள் நிறைந்த படம் என்கிறார் நாகேந்திரன். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
Crime thriller
3 யாகாவாராயினும் நா காக்க
மிருகம், ஈரம், அரவான் படங்களின் கதாநாயகன் ஆதி, டார்லிங் பட நாயகி நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள புதிய படம் ‘யாகாவாராயினும் நா காக்க’.
இந்த படம் நாளை மறுநாள்(26–ந் தேதி) ரிலீசாகிறது. இதையொட்டி ஆதி, நிக்கி கல்ராணி ஆகியோர் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். ஆதி கூறியதாவது:–
2000–ம் ஆண்டில் இருந்து 2001–ம் ஆண்டு பிறக்க இருந்த புத்தாண்டு தின கொண்டாட்டத்தின் போது சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 4 நண்பர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் தான் கதை.
டைரக்டர் சத்யபிரபாஸ் எனது அண்ணன். சிறு வயதில் இருந்தே என்னைப் பற்றி அவருக்கு நன்றாக தெரியும். இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் மட்டும் நடித்தேன். எனது தந்தை இப்படத்தை தயாரித்துள்ளார். எங்களது சொந்த படம் என்பதால் கடுமையாக உழைத்திருக்கிறேன். காமெடி, காதல், ஆக்சன், திரில்லர் கலந்து படமாக உருவாகி உள்ளது.
3 முறை தேசிய விருது பெற்றுள்ள இந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, நாசர், கிட்டி, பசுபதி என மூத்த நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரிச்சா பல்லோட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாடல்கள் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. இப்படத்தில் ஒரு பாடலை நான் பாடி உள்ளேன்.
எல்லா கதாநாயகர்களும் பாடுகிறார்கள் என்பதற்காக நான் பாடவில்லை. காதலி மீதான ஆதங்கத்தில் பாடும் பாடல் என்பதால் நானே பாடினால் நன்றாக இருக்கும் என்பதால் பாடினேன். இந்த படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என்றார்.
நிக்கி கல்ராணி கூறியதாவது:–
தமிழில் நான் நடித்த முதல் படம் இதுதான். ஆனால் ‘டார்லிங்’ படம் முதலில் வெளியாகி விட்டது. டார்லிங் எனக்கு பெயர் வாங்கித் தந்ததை போலவே இந்த படமும் நல்ல பெயரை பெற்றுத் தரும். இப்படத்தின் எனது கதாபாத்திரம் எனது நிஜ கேரக்டரை போலவே இருந்தது.
ஆனால் ஒரு காட்சியில் நான் டாஸ்மாக் பாருக்கு செல்வது போல இருக்கும். கதைக்கு தேவைப்பட்டதால் மட்டும் இந்த காட்சியில் நடித்தேன். நிஜத்தில் நான் எந்த பாருக்கும் செல்ல மாட்டேன் என்றார்.
Mokkai comedy film
4 லொடுக்கு பாண்டி
0 comments:
Post a Comment