1 ஜூராசிக் வோர்ல்டு = VSP(11 6 2015)
2 ரோமியோஜூலியட் = ராயல் ,அன்னபூரணி ,சண்டிகா
3 இனிமே இப்படித்தான் =அபிராமி #12/6/2015
1 ஜூராசிக் வோர்ல்டு
ஜுராசிக் வோர்ல்டின் 4ம் பாகம் 11ந் தேதி ரிலீஸ்: தமிழிலும் வெளிவருகிறது:
31 மே,2015 - 12:32 IST
எழுத்தின் அளவு:
ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ஜூராசிக் பார்க் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்து அழிந்துபோன ராட்சத விலங்கான டைனோசர்களை கொண்டு இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த இரண்டு பாகங்கள் வெளிவந்தது.
தற்போது ஜூராசிக் பார்க்கின் 4வது பாகமாக ஜூராசிக் வோர்ல்ட் வருகிற 11ந் «தி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. தமிழிலும் வெளிவருகிறது. 2டி, 3டி, 3டி மேக்ஸ், 4டி தொழில்நுட்பங்களிலும் வெளிவருகிறது. கிரிஸ் பெராட், ப்ரைஸ் டல்லா ஹார்ட், டி சிப்கின்ஸ், உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். கோலின் டெரவோரோவ் இயக்கி இருக்கிறார். மைக்கேல் சியாச்சினோ இசை அமைத்திருக்கிறார் ஜான் ஸ்வர்த்மேன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். யுனிவர்செல் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.
2 ரோமியோஜூலியட்
'ரோமியோ ஜூலியட்' படத்தைப் பார்த்துவிட்டு டி.ஆர் சந்தோஷமாக பாராட்டி பேசி இருப்பதால், 'டண்டணக்கா' விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயம் ரவி - ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ரோமியோ ஜூலியட்'. இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தை லஷ்மன் இயக்கி இருக்கிறார். ஜூன் 12ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'டண்டணக்கா' பாடல் சர்ச்சையில் சிக்கியது. இப்பாடலில் டி. ராஜேந்தரின் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. சமூக வலைதளங்களில் பாடல் வைரல் ஹிட்டாக, இந்தப் பாடலை வைத்து டி.ராஜேந்தரை கலாய்த்து சில நெட்டிசன்கள் வீடியோக்களை பதிவேற்றினர்.
டி.ராஜேந்தரும் இப்பாடல் விவகாரம் தொடர்பாக 1 கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், இப்பிரச்சினை சுமூகமாக தீர்க்கும் முனைப்போடு, டி.ஆருக்கு 'ரோமியோ ஜூலியட்' படத்தை திரையிட்டு காட்டினார்கள். முழுப்படத்தையும் பார்த்த டி.ராஜேந்தர் மிகவும் சந்தோஷமடைந்து படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.
இதனால் 'ரோமியோ ஜூலியட்' படக்குழு மிகவும் சந்தோஷமடைந்து இருக்கிறது. உயர் நீதிமன்றத்தில் டி.ஆர் தாக்கல் செய்திருக்கும் மனு விசாரணைக்கு வரும் அன்று, அவ்வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து தடங்கல்களையும் தாண்டி ஜூன் 12ம் தேதி 'ரோமியோ ஜூலியட்' திரைக்கு வரவிருக்கிறது.
3 இனிமே இப்படித்தான்
இனிமே இப்படிதான் என்று பெயர் வைத்தபோதே குறிப்பிட்டோம். இனிமே ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்பதைத்தான் சந்தானம் இந்தப்படப் பெயரின் மூலம் சிம்பாலிக்காக சொல்கிறார் என்று. அதுதான் நடந்தது.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பக்கா பிளாப்பிற்குப் பிறகு சந்தானம் ஹீரோவாகியிருக்கும் படம், இனிமே இப்படிதான். இந்தப் படத்துக்குப் பிறகு காமெடி வேடங்களில் நடிக்க மாட்டேன், நட்புக்காக மட்டும் எப்போதாவது நடிப்பேன். மற்றபடி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என சந்தானம் அறிவித்தார்.
சந்தானத்துடன் ஆஷ்னா சரி, அகிலா கிஷோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ரஹ்மானின் உதவியாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் முடிந்துவிட்டதாகவும், படம் திட்டமிட்டபடி ஜுன் 12 திரைக்கு வரும்
டிஸ்கி 1 -
http://www.adrasaka.com/2015/ 06/jurrasic-world.html
2 இனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்
3 ரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2015/ 06/blog-post_68.html
2 இனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்
3 ரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2015/
thanx - the hindu ,http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/santhanam-s-innimey-ippadhithaan-release-date-115060100024_1.html, all cine websites
0 comments:
Post a Comment