Friday, May 08, 2015

இந்தியா பாகிஸ்தான் - சினிமா விமர்சனம்


விஜய் ஆண்ட்டனி  முதல்  படமான  நான்  படத்தில்  வித்தியாசமான  க்ரைம்  த்ரில்லர்   திரைக்கதையின்  பலத்தில்  சிக்சர்  அடித்தார் . அடுத்து  வந்த  சலீம்  படத்தில்  ஃபோர்  அடித்தார் . படிப்படியாக  இறங்கு  முகம்  என்றாலும்  கவனிக்க வைக்கும்  வெற்றிதான் இதிலும். 

ஹீரோ , ஹீரோயின்  இருவரும் லாயர்ஸ் . இருவரும்  சந்தர்ப்ப  சூழ்நிலையால் ஒரே  வீட்டை  ஒன் பை டூ   ஷேர்  போட்டு  வாடகைக்கு  தங்கறாங்க. இருவரும்  எலியும்  , பூனையுமா , டாம் அண்ட்  ஜெர்ரியுமா அடிச்சுக்கிட்டாலும்  உள்ளூர  காதல்  இருவருக்கும் . ஆனா  ஈகோ  பிரச்னை  குஷி  படம்  மாதிரி 


இருவரும்  கேஸ்  பிடிக்க   அலைவதும்  , சந்திபுகளும்  ஒரு  டிராக் 

வில்லன்  என்கவுண்ட்டர்  எனும்  போர்வையில்  ஒரு  கொலை  பண்றார். போலீஸ்  ஆஃபீசரான அவர்  செய்யும்  கொலை  ஒரு  சிடி யில்  பதிவாகி  இருக்கு . அந்த   சி டி   ஹீரோயின் -ஹீரோ  கிட்டே மாட்டிக்குது.இரு  தரப்புக்கும் இடையே  நடக்கும்  சேசிங்கை  காமெடியா  சொல்ல  முயற்சி  பண்ணி  இருக்காங்க.


ஹீரோவா  விஜய் ஆண்ட்டனி . முதல்  படத்தில்  கேரக்டரே அப்படி  என்பதால்  இறுக்கமான  முகம்  ஓக்கே , எல்லா படங்களுக்கும், எல்;லா கேரக்டருக்கும்  ஒரே  மாதிரி போஸ்னா எப்படி  பாஸ்? இது  முழுக்க  முழுக்க  காமெடி  பேஸ்டு  ஸ்டோரி, அண்ணனுக்கு  சிரிப்பே  வர  மாட்டேங்குது .பாடல்  காட்சிகளில் , காதல்  காட்சிகளில்  சமாளிக்கிறார்.




 ஹீரோயின்  புதுமுகம் சுஷ்மா  ராஜ் .வெளுத்துப்போன  மெது வடை  மாதிரி கலர் . பஞ்சு  முட்டாய்  உதடு ( ஐ மீன்  பிங்க்  கலர்  லிப்ஸ்டிக் ) டிரஸ்சிங் சென்ஸ்  அபாரம் ,.  நஸ்ரியா , லட்சுமிமே்ணன்  வ்பரிசையில்  இவரும்  இடுப்பு  தெரியாமல்  இருக்க  துணி  போட்டு கவர்   பண்ணீக்கறார். அவரது எச்சரிக்கை  உணர்வில்க் இடி விழ . ஆனால் அதையும்  மீறி டூயட் காட்சியில்  இடை  தெரிகிறது  , ஒளிப்பதிவாளருக்கு  வந்தனம் . புதுமுகம் என் ற  அளவில்   ஓக்கே  ரகம் (  நாம நாட்  ஓக்கே அப்டினு எந்த  நடிகையைத்தான்  ரிஜக்ட் செஞ்சோம் ? 


படத்தில்  காமெடியனாக  விஜய்  டி வி  ஜெகன் . செம  மொக்கை  போடறார்.

காளி   க்ளைமாக்சில்  வெளுத்துக்கட்டும்  காமெடி 

 பசுபதி , எம் எஸ் பாஸ்கர்  , மனோபாலா  மூவரும் தான்  படத்தின்  உயிர் நாடி 

வீணடிக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்  ஊர்வசி . பன்னிமூஞ்சி வாயரையும் இன்னும்  நல்லா  யூஸ்  பண்ணி  இருக்கலாம்

  வில்லன்  நடிப்பு  குட் .

 இசை  சராசரி /  2  பாடல்கள்  தேறுது / பிஜிஎம் சுமார்தான் 








மனதைக் கவர்ந்த  வசனங்கள்

பூரி புஷ்னு இல்ல?
எத்தனை நாளுக்கு உப்பி இருக்கும்?
ஆ! பழசா?
PAST FOOD னு போர்டு இருக்கே பாக்கல?# இ பா



2 என்னய்யா?வடை ல நூல் இருக்கு?
பிஞ்சுடுச்சுனு தெச்சிருக்கோம் #,இ பா


3 ஜெகன் = இரு.அந்த ஒப்பாரி வாயன்ட்ட கேட்டு சொல்றேன் # இ பா

4 போட்டி எங்கே வேணா இருக்கலாம்.ஆனா பக்கத்துலயே இருக்கக்கூடாது # இ பா


5 சொந்தக்காசுல நான் சரக்கு அடிக்கறதில்லை.ஏன்னா கைல காசு இருக்கும்போதெல்லாம் அடிக்கத்தோணும்.அதனால ஓசி தான் # இ பா


6 லாயர் = மேடம்.நீங்க கேஸா?
டிக்கெட் = ஆமாய்யா
சரி.நான் டீல் பண்றேன்.அட்வான்ஸ் குடுங்க.
நீதான்யா குடுக்கனும்.5000 ரூபா.
அய்யய்யோ. #,இ பா

7 காபி ஏன் இவ்ளவ் கேவலமா இருக்கு?
ஒரே பிளாஸ்க்ல காபியும் டீ யும் வாங்கிட்டு வந்துட்டேன் # இ பா


8 நீ நீ நம்ம பாவாடை தானே?
ஜெகன் = நோ.என் பேரு ஹரிதாஸ்
பொய்.
டவுடனா செக்.பாவாடை என் கிட்டே இல்ல # இ பா

9 ஒரு பொண்ணைப்பத்தி அடுத்தவங்க கிட்டே தப்பா பேசறதே கேவலம் தான்.அதுவும் கூடவே பழகுன பொண்ணை #,இ பா

10 ஹலோ! நான் தான் மிஸ் மெல்லினா பேசறேன்.
ஏன்?கொஞ்சம் சத்தமா பேசறது?
ஹய்யோ.என் பேரே மெல்லினா தான் # இ பா

11 உனக்காக என் உயிரையும் கொடுப்பேன்.
ஜெகன் = நீ கொஞ்சம் பீர் கூட குடுக்க மாட்டே.உயிர் கொடுக்கவா போறே? # இ பா


12 பிறப்பு ,இறப்பு ,கல்யாணம் 3 ம் கடவுளால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது.எவ்ளவ் பக்கத்தில் இருந்தாலும் நம்மால கண்டுபிடிக்க முடியாது # இ பா


13 இந்த சிடி ல கொலை சம்பந்தப்பட்ட எவிடென்ஸ் இருக்கு.இதை ஒரு காபி போடனும்.
ஓ.சரி.நான் போய் பால் வாங்கிட்டு வரேன் # இ பா


14 வில்லன் = என்னோட காதலுக்கு மரியாதை டிவிடி எங்கே?
அப்ப அது விஜய்யோடது இல்லையா?# இ பா


15 உனக்கு அழகு னு பேர் வெச்சது யாருடா?
அது எங்க அப்பா வெச்சது.
அப்பா வைக்கலை.தப்பா வெச்ட்டாங்க #,இ பா




 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்

இந்தியா பாகிஸ்தான் (விஜய் ஆன்ட்டனி) = 157 நிமிடங்கள்


2 புதுமுகம் சுஷ்மாராஜ் கர்லிங் ஹேர் (கூந்தல்)கட்டழகி # இ பா





4 அனுஷ்கா முகச்சாயல் ,ஷாலினி பாடி லேங்குவேஜ் ,இதயத்தை திருடாதே கிரிஜா பாவனை = சுஷ்மாராஜ் # இ பா


5 ஒரு பொண்ணு பாத்தேன் மாமா.அவ என்னைக்கொன்னு போட்டா ஆமா - விஜய் ஆன்ட்டனி குத்தாட்டம்.ஆ!! # இ பா

6 ஹீரோயின் பேசிக்கலி ஜமீன் பரம்பரை போல.சுடி ல துப்பட்டாவை ஒன் சைடா அங்கவஸ்திரம் போல் போட்டிருக்கு.அதுவும் கிக்காதான் இருக்கு # இ பா

கமல் நடிக்க இருந்து பின் ட்ராப் ஆன கண்டேன் சீதையை கதைக்கரு + வணக்கம் சென்னை திரைக்கதை = இந்தியா பாகிஸ்தான்


8 வாடி குட்டி லேடி உனக்கு போண்டா டீ வாங்கித்தாரேன்
வந்தா உன்னை நானும் பொண்டாட்டி ஆக்கப்போறேன் - விஜய் ஆண்ட்டனி குத்தாட்டம் # இ பா


ஒருத்தன் 3 பொண்ணுங்களோட வந்திருக்கான்.3 பேருக்கும் கேன்ட்டீன் ல என்னென்னமோ வாங்கித்தாரான்.500 ரூபா ஆகிடுச்சு இதுவரை


10 பல கோடிப்பெண்களில் உன்னைத்தேடி காதலித்தேன் குட் மெலோடி # இ பா.






இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  ஹீரோ  ஈ ஓட்டும்  காட்சி 

2 கோர்ட்  வளாகத்தில்  ஐயிட்டம்,  என  தெரியாமல்   ஹீரோ  கேஸ்  என  நினைத்து  உரையாடும்   ஏ  கிளாஸ்  காமெடி


3 ஹீரோ - ஹீரோயின்  எதேச்சையாய்  காதலுக்கு மரியாதை டிவிடி  எடுப்பதும்  அது  பின்ன்னால்  திரைக்கதையில்  கொலைக்கான எவிடென்ஸ் ஆவதும்  


4  பசுபதி  எம் எஸ்  பாஸ்கரின் கலக்கலான காமெடி  எபிசோட் அது  படமாக்கப்பட்ட விதம்  அனைவரின்  நடிப்பும்  





இயக்குநரிடம்  சில கேள்விகள்


1   ஹீரோ  ஹீரோயின்  ஒரே  வீட்டில்   வாடகைக்கு எடுத்து ஷேர்  செய்வது  இப்போதானே  வணக்கம்  சென்னை  யில்  வந்தது? 2  பேரும் ஒரே  டிவிடியைப்பார்த்து சுட்டுட்டீங்களா? 



2  ஒரு  போலீஸ்  ஆஃபீசர்   ஆள்  அனுப்பாமல்  தானே   வீட்டில்  போய்  சாட்சி  டிவிடி  எடுக்க  போவாரா? 


3   ஓப்பனிங்  சீனில்  ஷாப்பிங்  காம்ப்ளெக்ஸ்  பணியாட்கள்  எல்லோரும்  கழுத்தில்  டேக்  மாட்டி ஐ டி கார்டு  வெச்சிருக்காங்க .ஆனா  அது  இல்லாமல் இருக்கும்  ஹீரோவை   வீடியோ  கடை  ஆள் என  நினைத்து  ஹீரோயின் எப்படி  பேசறார்? 


4   காதலியைப்பத்தி  நண்பர்கள்  தப்பா பேசுனதும்  எந்தக்கூமுட்டையனாவது  அப்படி  ஒரு  ஆசிட் டெஸ்ட்  ஹீரோயினுக்கு  வைப்பானா?  அவனுக்குத்தெரியாதா> 




சி  பி  கமெண்ட்  -இந்தியா பாகிஸ்தான் - விஜய் ஆண்ட்டனியின் ஹாட்ரிக் ஹிட்- பி செண்ட்டர் ரசிகர்களுக்கான காமெடி மெலோ டிராமா - விகடன் = 40, ரேட்டிங் =2.75 / 5



ஆனந்த விகடன்  மார்க் ( கணிப்பு) -  40




குமுதம்  ரேங்க் ( கணிப்பு) = ஓக்கே



 ரேட்டிங்  =2.75 / 5

ஈரோடு விஎஸ் பி யில் படம் பார்த்தேன்



0 comments: