டிமாண்ட்டி-ன்னு பேரைக்கேட்டதும் கலர்ல டிம்மா இருக்கும் ஆண்ட்டின் -னு ( டிம் + ஆண்ட்டி = டிமாண்ட்டி) நீங்களா ஒரு முடிவுக்கு வந்தா உங்களுக்கு ஒரு பல்பு ., டிமாண்ட்டி என்பது ஒரு பிரிட்டிஷ் இளவரசர் பேரு . நம்ம ஊரு ஜமீன் கணக்கா அந்தக்காலத்தில் வாழ்ந்தவரு . அவரோட சம்சாரத்தை எவனோ ஒரு பாவிப்பய கச முச பண்ணிடறான். சம்சாரம் காய்ச்சல் ல கிடைக்கு . இவரு கடுப்பில் இருக்காரு.
மனநிலை பாதிக்கப்பட்ட தன் சம்சாரத்தை சீரழிச்சது அரண்மைனை ல வேலை பார்க்கும் விளங்காத பயல் தான்னு முடிவு பண்ணி அங்கே இருக்கும் எல்லாரையும் ஷுட் பண்றாரு .( கடைசி வரை அந்த விளங்காதவன் யார்னு காட்டவே இல்ல ) வேலையாட்கள் அரண்மனைக்கு நெருப்பு வைக்கறாங்க . தப்பிக்க வழி இல்லாம பிரிட்டிஷ் இளவரசர் தன் மனைவியோட ஜீவசமாதி ஆகிடறாரு.( ஜீவ சமாதின்னா என்னனு ஜீவ சுசி கிட்டே தான் கேட்கனும்) அப்பேர்ப்பட்ட ஜமீன் பங்களாவுல யாருமே போகாம இருக்காங்க .
இது முன் கதை
ஹீரோ கோக்குமாக்கான ஆளு . புருசன் அவுட்டிங் போனா அந்த வீட்டு சம்சாரம் விரும்பினா பணம் வாங்கிக்கிட்ட்டு கில்மா சேவகம் பண்ணும் சேவகன் ( இந்த மாதிரி சேவை செய்ய எல்லாருக்கும் ஆசைதான் ) அப்பேர்ப்பட்ட உத்தமன் ஹீரோவுக்கு 3 ஃபிரண்ட்ஸ் . அதுல ஒரு வீணாப்போனவன் அந்த பங்களாவில் ஜமீன் நகை இருக்கு . இளவரசர் தன் மனைவிக்குப்பரிசாக்குடுத்த நெக்லஸ் இருக்கு , அது பல கோடி தேறும்னு சொல்லி பங்களாவுக்குள் கூட்டிட்டுப்போறான் .
அவங்க 4 பேருக்கும் என்ன ஆச்சு ? யாராவது உயிரோட மீண்டு வந்தாங்களா? என்பதுதான் திரைக்கதை
சும்மா சொல்லக்கூடாது , அருள்நிதிக்குக்கிடைச்ச முதல் செம ஹிட் படம் இது
அவர் பியூட்டி பார்லர் எல்லாம் போய் தனுஷ் , சிவகார்த்திகேயன் மாதிரி முகத்தில் ஷைனிங் ஏற்றி நடிச்ச முதல் படம் .முன் பாதியில் வழக்கமான ஹீரோவாக வருபவர் பின் பாதியில் மிரட்டி விட்டார் . அதில் பாதி பங்கு இசை அமைப்பாளருக்கு .
படத்தில் பெரிய அதிர்ச்சி , ஹீரோயின் கிடையாது . அவ்வளவு ஏன்? லேடீஸ் கேரக்டரே அதிகம் இல்லை . ரெண்டே பெர் தான் 2 நிமிடம் தான் அதுவும் .
படத்தில் வரும் மீதி 3 நண்பர்களும் பிரமாதமான நடிப்பு .ஒருவருக்கொருவர் சளைக்காமல் அட்டாகசப்படுத்தி இருக்காங்க
படத்தில் மெயின் ஹீரோ இசை அமைப்பாளர் தான் . பின்னணி இசையில் கலக்கி இருக்காரு . ஆங்காங்கே மனோஜ் கியான் பாதிப்பு உண்டு .
திரைக்கதையில் வாய்ப்பு இருந்தும் ஹீரோயின் சேர்க்காமல் விட்டது இயக்குநர் புத்திசாலித்தனம்
மனதைக் கவர்ந்த வசனங்கள்
1 சிங்கம்புலி = கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்னா சீப்பா நினைக்காதீங்க.ஒரு பாம்பு படம் எடுத்து கொத்த 15 லட்சம் ரூபா அவுட் # டி கா
2 நேத்து வரை புட்டிப்பால் குடிச்ட்டிருந்த பசங்க எல்லாம் இன்னைக்கு ஒயின் ஷாப் வந்துட்டாங்க சரக்கு அடிக்க.உருப்புட்டாப்லதான் # டி கா
படம் பார்க்கும்போது அப்டேட்டட் ட்வீட்ஸ்
1 அருள் நிதி விஷால் போலவே டான்ஸ்.ஆகா # டி கா
2 தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக ஆன்ட்டியை திருப்திப்படுத்தும் பேயிங் கெஸ்ட் ரோலில் ஹீரோ. # டி கா
3 சந்திரமுகி ,பீட்சா பட சாயல்களுடன் யாவரும் நலம் பாதிப்பில் இடைவேளை ட்விஸ்ட்டுடன் பர பரப்பான முன் பாதி # டிமான்ட்டி காலனி
4 மனோஜ் கியான் இசை அமைத்த ஊமை விழிகள் தீம் இசையை ஆங்காங்கே தூவி இருக்கார் பிஜி எம்மில். # டி கா
5 புதுமொழி.பேய்க்கதையை நம்பினார் கை விடப்படார் # டி கா
இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்
1 நறுக் சுருக் படமாக ஒரு திகில் கதையை 2 மணி நேரத்தில் சொன்னமைக்கு ஒரு ஷொட்டு
2 சுவடி ஜோதிடர் எம் எஸ் பாஸ்கர் ஃபோனில் ஹீரோவுக்கு சொல்லும் அதிர்ச்சி தகவல் நல்ல ட்விஸ்ட் , அது பின் பாதியில் தான் தெரிய வருவது பிளஸ்
3 காமெடி டிராக் என மொக்கை போடாதது , நாயகியே இல்லாதது படத்தின் பிளஸ்
4 பிஜிஎம் கலக்கல் ரகம் , பல இடங்களீல் அதுதான் படத்தைத்தாங்கிப்பிடிக்கிறது
இயக்குநரிடம் சில கேள்விகள்
1 ஃபிளாஸ்பேக் கதையில் பல குழப்பங்கள் . சம்சாரத்தை ரேப்பிய ஆள் யார்னே தெரியலை . பேய் ஆன பின்புமா தெரியலை ? சம்சாரத்தை கேட்டா சொல்லி இருகுமே? 2 பேரும் இப்போ பேய் தானே? அடையாளம் காட்டசொல்லி டைரக்டா அக்யூஸ்ட்டை கொலை பண்ணி இருக்கலாமே?
2 இளவரசர் சுடப்போறார் என தெரிஞ்சதும் அ\ந்த வேலையாள் ஏன் ஓடாம நெஞ்சைக்காட்டிட்டே நிக்கறான் ? உயிர் பயம் இருப்பவன் ஓடி தப்பிச்சு இருக்கலாமே?
3 இளவரசர் தரைல கீழே உக்காந்திருக்காரு . அவர் தன் மடில துப்பாக்கியை வெச்சு எதிரே நிக்கும் ஆள் க்கு நெஞ்சில் சுடறாரு , இது எப்படி சாத்தியம் ? துப்பாக்கி கோணம் சரி இல்லையே?
4 ஜோசியர் எதுக்காக கொலை செய்யப்படனும் ? அந்த ட்விஸ்ட்டை சொல்லக்கூடாதுன்னா? அதான் ஃபோன்ல சொல்லிடறாரே? அது கூடவா பேய்க்கு தெரியலை ?
5 யாவரும் நலம் பட பாணியில் வரும்ம் அந்த டி வி செல்ஃப் கதை ட்விஸ்ட் எதுக்கு ? கெட்ட பேருதான் , உல்டா அடிக்கறாங்கன்னு .அது இல்லாமயே படம் நல்ல சஸ்பென்ஸாத்தானே போகுது ?
6 க்ளைமாக்சில் பெட்டிக்கடை ஆளிடம் பேய் முறையிடுவதும் பின் அவனை அடிப்பதும் எப்படி ? பேய் பேசுவது அவனுக்கு கேட்காதே ?
7 காஞ்சனா பாதிப்பில் முன் பாதி 2 ரீலுக்கு எதுக்கு காமெடி ? தேவையே இல்லை , குறிப்பா ஹீரோ ஆம்பளை டிக்கெட் என்பது போல் காட்சி அமைத்திருப்பது அவசியம் இல்லாதது
சி பி கமெண்ட் =டிமான் ட்டி காலனி - லோ பட்ஜெட்டில் உருவான மிரளவைக்கும் ஹை க்ளாஸ் பேய்ப்படம், பிஜிஎம் பட்டாசு - விகடன் மார்க் = 43 , ரேட்டிங் = 3 / 5
பெண்கள் குழந்தைகள் எல்லாரும் பார்க்கலாம் , கசமுச ரத்தம் , முகம் சுளிக்க வைக்கும் வன்முறை காட்சிகள் எதுவும் இல்லை
ஆனந்த விகடன் மார்க் ( கணிப்பு) - 43
குமுதம் ரேங்க் ( கணிப்பு) = நன்று
ரேட்டிங் = 3 / 5
diSki =திறந்திடு சீசே - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2015/ 05/blog-post_98.html
diSki =திறந்திடு சீசே - சினிமா விமர்சனம்
http://www.adrasaka.com/2015/
Demonte Colony | |
---|---|
Directed by | R.Ajay Gnanamuthu |
Produced by | M.K.Tamilarasu |
Written by | R.Ajay Gnanamuthu |
Starring | Arulnithi |
Music by | Keba Jeremiah |
Cinematography | Aravinnd Singh |
Edited by | Bhuvan Srinivasan |
Production
company |
Sri Thenandal Films
Mohana Movies |
Release dates
|
|
Country | India |
Language | Tamil
Erode sandika
|
1 comments:
இயக்குனரிடம் சில கேள்விகள் (6வது பாய்ண்ட்) ஹீரோ அவர்களிடம் உதவி கேட்கும்போது அவர்கள் ஏதோச்சையாக முதல் நாள் சம்பவத்தை பேசிக்கொண்டு இருக்கின்றார்கள் அவ்வளவுதான் இது ஏன் உங்களுக்கு புரியாமல் போனது என்பதுதான் நான் உங்களிடம் கேட்கும் கேள்வி
நன்றி
Post a Comment