விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அளிக்கும் ‘அம்பேத்கர் சுடர்’ விருதை பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய், நிலச்சட்டம், இடதுசாரி அரசியல், முதலாளித்துவம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியது:
"இந்திய சமூகத்தில் ‘சாதி’ என்ற ஒன்றின் பங்கு குறித்து இடதுசாரிகள் அறிவார்த்தமாக தங்கள் நிலைப்பாடுகளை மறுமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும்.
இடதுசாரிகளின் அரசியல் வெறும் தலைமை மாற்றத்தினால் பெரிய மாற்றங்களைக் காணப் போவதில்லை. மதப்பிரிவைனைவாதத்துடன் கார்ப்பரேட் பொருளாதார வளர்ச்சிக் கனவில் சிக்கியுள்ள தற்போதைய ‘இந்து வலதுசாரி’ ஆட்சிக்கு மாற்றாக இடதுசாரிகள் திகழ முடியாது.
கர்வாப்ஸி போன்ற மதரீதியான திட்டங்களை வைத்துக் கொண்டே, அம்பேத்கர் போன்றவர்களையும் தங்களுக்குச் சாதகமாக இந்துத்துவ சக்திகள் வளைக்க முற்படுகின்றன.
சாதி என்பதை புரிந்து கொள்வதில் இடதுசாரிகள் அறிவார்த்த தோல்வி கண்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலமானாலும் சரி, கேரளாவாயினும் சரி, 'சாதி என்பது வர்க்கமே' என்று கூறுவதன் மூலம் தங்களுக்குத் தாங்களே ‘செக்மேட்’ வைத்துக் கொண்டனர். தங்களை தொடர்பற்றவர்களாக்கிக் கொண்டுள்ளனர்.
இது குறித்து பாம்பேயில் மில் தொழிலாளர்கள் உரிமைகள் குறித்து 1920-களின் பிற்பகுதியில் இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் மிக முக்கிய உறுப்பினரான ஷ்ரீபத் தாங்கேவுக்கும் டாக்டர் அம்பேத்கருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மிக முக்கியமாக கவனிக்கத்தக்கது. தலித்துகள் குறைந்த ஊதிய வேலைகளில் ஈடுபடுத்தப்படும் போது பாட்டாளி வர்க்கத்தினரிடையே சமத்துவம் எப்படி ஏற்படும் என்பதை அம்பேத்கர் மிகச்சரியாகச் சுட்டிக் காட்டினார். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி உருவான காலத்திலிருந்தே இதுதான் நிலவரம்.
தத்துவார்த்தமாகக் கூற வேண்டுமென்றால், அடித்தட்டு சாதிப்பிரிவினர் தங்கள் அடையாளத்தின் மீது கர்வம் கொண்டு அடக்குமுறைக்கு எதிராக செயல்படுவதன் மூலம் தங்கள் அடையாளத்தை உறுதி செய்தல் அவசியம்.
முஸ்லிம்களாகவும், கிறித்தவர்களாகவும் மதம் மாறிய தலித் உள்ளிட்ட அடக்கப்பட்ட சாதியினரை கர்வாப்சி மூலம் இந்து வலதுசாரிகள் அவர்களை பெரிய வீட்டுக்கு அழைத்துக் கொள்கின்றனர். ஆனால் பணியாட்கள் குடியிருப்பையே அவர்களுக்கு அங்கு வழங்குகின்றனர்.
கர்வாப்ஸி என்பது புதிதான விஷயம் ஒன்றுமல்ல. இது 19-ம், 20-ம் நூற்றாண்டுகளிலேயே, ஆர்ய சமாஜ், மற்றும் ஷுத்தி இயக்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கையே. மதம் மாறியவர்களை இந்து மதத்துக்குள் கொண்டு வரும் முயற்சி அப்போதிலிருந்தே தொடங்கியதுதான்.
உலகமயமாதலை உக்கிரப்படுத்தும் பொருளாதாரம் சாதிக்கு முற்றுப் புள்ளி வைக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு. முதலாளித்துவத்தைத் தழுவுவதன் மூலம் சாதிகள் உடைந்து சிதறி விடாது, மேலும் வலுப்பெறவே செய்யும்.
'21-ம் நூற்றாண்டில் முதலாளித்துவம்' என்ற தனது நூலில் தாமஸ் பிக்கெட்டி என்பவர், பரம்பரை பரம்பரையாக குவிக்கப்பட்டு வந்துள்ள செல்வம் முதலாளித்துவ பொருளாதாரத்தில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமுள்ளது என்பதை எடுத்துக் காட்டியுள்ளார்.
ஆகவே, சாதி என்பது முதலாளித்துவத்தின் தாய் ஆகிவிடும். ஏனெனில் பரம்பரைச் செல்வம் அல்லது சொத்துரிமை என்பது ‘கடவுளின் கட்டளை’ என்று பரப்பப்படுகிறது. சாதியும் முதலாளித்துவமும் நச்சுக் கலப்பு உலோகமாக பின்னிப் பிணைந்துள்ளது. தனியார்மயமும் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு வாயிலாக கிடைக்கும் கொஞ்சநஞ்ச நன்மைகளையும் சீரழித்து விடும்.
புதிய பொருளாதாரத்தின் அடிப்படை உந்துதலே நில அபகரிப்பு. தகவல் தொழில்நுட்பத் துறையாயினும், நிலக்கரித்துறையாயினும் முதலில் நிலத்தையும் நீராதாரத்தையும் அபகரிப்பதே குறிக்கோள். இவர்களை அனுமதித்தால் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது பொய். வேலைவாய்ப்பற்ற வளர்ச்சியையே நாம் கண்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
1960-70-ம் ஆண்டுகளை ஒப்பிடுகையில், நில மசோதா குறித்த விவாதங்கள் தற்போது நீர்த்துப் போயுள்ளன. அதன் தீவிரத்தை இழந்துள்ளன.
நக்சலைட்டுகள் இயக்கம் தொடங்கிய போது ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமை போராட்டங்கள் தொடங்கின. இந்திரா காந்தி மீதான விமர்சனங்கள் கடுமையாக எழுந்தன, அப்போது சமூக நீதி, நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைப்பது, உழுபவனுக்கே நிலம் சொந்தம் ஆகிய கோஷங்கள் ஆதிக்கம் செலுத்தின, ஆனால் இன்று மிகவும் தீவிர இயக்கங்கள் என்று கூறிகொள்பவை கூட ஆதிவாசிகளின் நிலத்தை அபகரிக்கக் கூடாது என்ற அளவில் தேங்கிப் போயுள்ளது.”
இவ்வாறு கூறினார் அருந்ததி ராய்.
thanx - the hindu
- Vittalanandஆமாம் தனியார் இடஒதுக்கீடு இல்லாமல் திறமை மிக்கவர்களை நியமிப்பதால் நாள் முன்னேற்றம் கண்டு செழிக்கிரார்கள். அரசு தரப்பில் தகுதியிள்ளதவர்களும் லஞ்சம் கொடுத்து நியமனம் பொஎருவதால் கொடுத்த லஞ்சத்தை திருப்பி பெறவும், தாங்களே செழிக்கவும் லஞ்சம் பெற்று, அரசு தாழ்வடையச்செய்து விடுகிறார்கள்.Points9875
- Jaya Palanஅமரிக்க தலையீடுகளாலும் சீனா என்கிற ராட்சச ஓடொபஸ்ஸின் சிவப்பு துதிக்கைகளாலும் சூழப்பட்ட நாடுகள் உள்ளார்ந்த பலத்தை வளர்ப்பதன் மூலம் தங்கள் இருப்பைக் காத்துக்கொள்ள முடியும். உள்ளார்ந்த சமத்துவத்தின் அடிப்படை சமூகவாரி சமத்துவமும் சமூக நீதியும் இனத்துவ மொழிவாரிச் சமத்துவ சூழலும்தான். தென்னாசிய நாடுகளில் இத்தகைய சூழலிலை உருவாக்கும் முயற்ச்சிகள் மெதுவாகவே இடம்பெறுகின்றன. கேரளாவிலும் கோவையிலும் இடம்பெறும் சம்பவங்களின் எச்சரிக்கை பக்கம் இதுதான். சாதி சமூக அநீதியின் தடைகளை உடைத்து நாடார் சமூகம் சாதிக்க துணை நின்ற சில்லறை வர்த்தகம் சிறு தொழில் விவசாய வாய்புகளைப் பாதுகாப்பதும் கடலோர சமூகங்களது பாரம்பரிய சமூக பொருளாதார உரிமைகளைப் பாதுகாப்பதும் மொழிச் சமத்துவத்தை ஏற்படுத்துவதும் நாட்டின் பாதுகாபு மூல உபாயத்தின் அடிப்படை அம்சம் என்பது உணரப்பட வேண்டும்Points1015
- Rajஇந்த துணை கண்டத்தில் சாதி அடையாளத்தை அழிப்பதே விளிம்பு நிலை மக்களின் முன்னேன்றதுக்கான முதல் படி மற்றும் சமநிலை அடையும் வாய்ப்புக்கான கதவு.Points37025jsriramPresident, Up Voted
- Vittalanandமுன்னேறியவர்கள், பிந்தன்கியுள்ளவர்கள் என்கிற சாதி அடிப்படை ஒதுக்கீட்டை ரத்து செய்தால் மட்டுமே.முன்னேற முடியும்.இடஒதுக்கீடு பெற்று பலன் களை அனுபவித்தவர்கள் 70 ஆண்டுகளாகியும் முன்னேறாமல் இருப்பது அவர்கள் எத்தனை ஆண்டுகளானாலும் உலகம் உள்ள வரை தகுதி பெறமாட்டார்கள் உண்டுக்ளித்து தான் இரூ ப்பர்கள்.about 2 hours ago · (0) · (0) · reply (0) ·
- Humanbeingஆரிய சமாஜம் சுதந்திரபோராட இயக்கம் என்று மாற்றப்பட்ட வரலாறு ஆனால் செய்தது மதவெறி வலது சாரி தீவிரவாதம். ஆரியர் வருகை, மொகலாயர் படையெடுப்பு என்று இரட்டை நிலைபாடுகளை வரலாறாய் புகுத்திய கைபர் போலன் பயரங்கவாதம் எல்லாவற்றையும் "மதத்தில்" மறைக்க பார்க்கிறது, பார்த்தது. இன்றும் இந்த நாட்டின் ஆணிவேரை அசைத்து பார்க்க தினமொரு தீவிரவாத முத்துக்கள் ஒருபுறம் (சர்ச்சை என்று பத்திர்க்கைகள் "செல்லமாக" பெயரிட்டிருக்கின்றன), ஒரு புறம் நாட்டை விற்கும் தந்திரம், மற்றொரு புறம் எல்லோரையும் அரவணைக்கும் சகோதரத்துவ விரும்பிகளை போல பேச்சு. தலித்துகள் கல்வி கற்றால் ஈயத்தை காய்ச்சு ஊட்று என்ற ஆர்.எஸ்.எஸ் பயன்றவாத இயக்கத்தின் கோல்வாக்கர் போன்ற "ஹிந்து நாட்டு பற்றாலனின்" தந்திர வலையில் தலித்துகள் சிலரும் விழுந்து கிடப்பது வேதனை. எழுத்தாளர் அருந்ததி ராஇகலின் வார்த்தை விழுதாகட்டும்.Points49290Indian Down Voted
- Panneerselvamநீண்ட நாளைக்குப் பின்னர் ஒரு அறிவார்ந்த கருத்துப் பகிர்வைப் படிக்க முடிந்தது. தி தமிழ் இந்துவுக்கு நன்றி.Points2050
- Panneerselvamஇடது சாரிகள் இதனை உணர வேண்டும் மேலும் இந்தக் கருத்துப் பகிர்வில் உள்ள ஒரு வரி மிகவும் முக்கியமானதும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டியதும் ஆகும் அந்த வரி 'தத்துவார்த்தமாகக் கூற வேண்டுமென்றால், அடித்தட்டு சாதிப்பிரிவினர் தங்கள் அடையாளத்தின் மீது கர்வம் கொண்டு அடக்குமுறைக்கு எதிராக செயல்படுவதன் மூலம் தங்கள் அடையாளத்தை உறுதி செய்தல் அவசியம். ' வெற்றுக் கோஷங்களும் கடமை தவறுவதை உரிமை என்றும் ஏமாற்றாமல் கடமைகளைச் செய்யும் போதே பணியாமல் ,பிரிதொருகட்சிக்கு வால் பிடிக்காமல் தீவிர செயல் பாட்டில் இறங்கினால் போதும் ஆனால் சத்தி உணர்சியினைத் தூண்டிவிட்டுக் குளிர்காய்பவர்களை நம்பும் வரை வலதுசாரிகளின் மதவாதம் வென்றுகொண்டிருப்பதைத் தடுக்க முடியாது. ஒவ்வொரு தலித்தும் தான் தலித் என்று கூறிக்கொள்வதில் கர்வம் கொள்ளவேண்டும். வெறும் பொருளுக்காக மட்டும் சாதிச் சான்றிதழ் வாங்கினால் போதும் என்று நினைக்கக் கூடாது. தன்னொத்த இன்னொரு தலித்தையும் தன போல உயர்த்திப் பிடிப்பது நம் கடமை என்று நினைக்கவேண்டும்Points2050humanbeing Up Voted
- கண்ணன்இதுமாதிரி நிலசீர்திருத்தம் பேசியே மேற்குவங்கத்தை அழிசீங்க உங்க கேரளாவில் கம்யூநிச்ட்டைப் பாத்தாலே சிரிக்கிறான் 2மாநிலத்திலும் ஒரு சின்ன பட்டறை வைக்கக்கூட யாரும் வரமாட்டேங்கறான் உங்களை நம்பினா மிச்சம் மீதி ஆளுங்களும் அம்போ நீங்களே ஒரு பார்பனர் என்பது தெரிஞ்சிடப்போகுதுPoints2820
- கண்ணன்இந்தம்மா யாரு முன்னேயல்லாம் அறிவாளிமதிரி கிறுக்குத்தனமா டிவி நிகழ்ச்சி நடத்துவாரே அந்த பிரணாய் ராய் வீட்டு அம்மாவா? பாவம் சுடுகாட்டு வாசமோ என்னவோ?
0 comments:
Post a Comment