சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட 4 பேரையும் விடுவித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதமன்றம் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு வழங்கியது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.
இது தொடர்பான விரிவான செய்திக்கு | சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை |
நிகழ்நேரப் பதிவு:
12.43 PM: ஜெயலலிதா விடுதலையை விமர்சித்து தமிழக அரசியல் தலைவர்கள் அறிக்கை வெளியிட தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. | ஜெ. வழக்கில் தீர்ப்பு: கருத்து சொல்ல தலைவர்கள் தயக்கம்? |
12.10 PM: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக, அதிமுக தலைமை அலுவலகக் காட்சிகள் குறித்து ஒரு பார்வை. விரிவான செய்திக்கு: | ஜெ. விடுதலை: ஆர்ப்பரிக்கும் அதிமுக... அமைதி காக்கும் திமுக |
12.00 PM: ஜெயலலிதா வழக்கில் தீர்ப்பு வெளியானதும், கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்துக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் சென்றனர்.
11.30 AM: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெறும் 2 நிமிடங்களில் தீர்ப்பை வழங்கினார். | ஜெ. விடுதலை: இரண்டே நிமிடத்தில் தீர்ப்பை வாசித்த நீதிபதி |
11.25 AM: சென்னை கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதி வீட்டருகே குவிந்திருந்த தொண்டர்கள் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டனர்.
11.22 AM: ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக எம்.பி.க்களுக்கு மக்களவையில் மற்ற எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
11.10 AM: சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த ரூ.100 கோடி அபராதமும் ரத்து செய்யப்பட்டது.
11.00 AM: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். மேலும், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
10.59 AM: நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கும் அறைக்குள் ஏராளமான பத்திரிகையாளர்கள் காத்திருப்பு.
10.55 AM: திமுக தலைவர் கருணாநிதி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை. திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
10.52 AM: கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தில் அதிமுகவினர் ஒருவர்கூட இல்லை.
10.47 AM: சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதி வீடு முன்பு ஏராளமான திமுக தொண்டர்கள் திரண்டுள்ளனர்.
10.46AM: #JayaVerdict என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் முதன்மையாக உள்ளது. இதில், ஆங்கிலத்திலும் தமிழிலும் குறும்பதிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. | விவரம் ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பு: ட்விட்டரில் தொடர்ந்து முதன்மை
10.45 AM: தீர்ப்பு வழங்கப்படவுள்ள அறை எண் 14-க்குள் வழக்கறிஞர்கள், செய்தியாளர்கள், நீதிமன்ற ஊழியர்கள் சென்றனர்.
10.40 AM: சென்னை போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வீட்டின் முன் அதிமுகவினர் திரண்டு வருகின்றனர். அதிமுக தொண்டர்கள் "எங்கள் அம்மா தென் இந்தியாவின் ஜான்சி ராணி, பாரதி கண்ட புதுமைப் பெண்" என்று கோஷம் எழுப்பினர்.
10.25 AM: திமுக வழக்கறிஞர்கள் தாமரைச் செல்வன், பாலாஜி சிங், நடேசன் ஆகியோர் நீதிமன்றம் வந்தடைந்தனர்.
10.15 AM: ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் பி.குமார், மணிசங்கர், செந்தில்நாதன் ஆகியோர் நீதிமன்றத்தை அடைந்தனர்.
10.10 AM: ஜெ., மீதான தண்டனை உறுதி செய்யப்பட்டால், உடனடியாக ஜாமீன் கோரியும்; கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் அவர் சரணடைய விலக்கு அளிக்கக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வதற்கும், அவரது வழக்கறிஞர்கள் தயார் நிலையில் உள்ளனர்.| ஜெ. தண்டனை உறுதியானால் அடுத்தது என்ன?- டெல்லியில் தயார் நிலையில் வழக்கறிஞர்கள்
10.08 AM: காலை 11 மணிக்கு, தீர்ப்பு வழங்கப்பட உள்ள நீதிமன்ற ஹாலுக்குள் வருவார் எனத் தெரிகிறது.
10.06 AM: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள தனது அறைக்கு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வந்துவிட்டார்.
10.02 AM: சென்னையின் அண்ணா சாலை உட்பட பல முக்கிய இடங்களில் சாலைகள் சற்றே வெறிச்சோடி கிடக்கின்றன. சென்னை போயஸ் தோட்டத்தில் அதிமுகவினர் குவிந்துள்ளனர். | படம்: ம.பிரபு
10.00 AM: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வெளியாவதை ஒட்டி தமிழகம் - கர்நாடக எல்லையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். விரிவான செய்திக்கு | ஜெ. வழக்கில் இன்று தீர்ப்பு: தமிழக - கர்நாடக எல்லையில் சுமுக சூழல் நிலவுவதாக போலீஸ் தகவல் |
9.50 AM: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு 900 பக்கங்களுக்கு மேல் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரிவான செய்திக்கு | ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு: 900 பக்கங்களுக்கு மேல் தீர்ப்பு |
9.45 AM: பெங்களூருவுக்குள் அதிமுக வாகனங்கள் வர எந்த தடையும் இல்லை. சோதனைக்குப் பின்னர் கட்சி வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
9.40 AM: தீர்ப்பு வெளியாவதால் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் பல லட்சம் மதிப்புள்ள பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் பெங்களூருவில் குவிந்துள்ளனர். | பெங்களூருவில் கூடுதல் பாதுகாப்பு: பட்டாசு, இனிப்புகளுடன் காத்திருக்கும் அதிமுகவினர் |
9.35 AM: அதிமுக தொண்டர்கள் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ சங்குபனி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். | படம்: கோபாலகிருஷ்ணன்
9.32 AM: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு, சுப்பிரமணியன் சுவாமிக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. | தீர்ப்பு தேதி சுப்பிரமணியன் சுவாமிக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி? |
9.30 AM: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதை ஒட்டி இன்று காலை 6 மணிக்கே கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது.
வழக்கு கடந்து வந்த பாதை:
1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்துக்கு அதிக மாக ரூ.66.65 கோடி சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது.
18 ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்.
மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும் மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் 29-ம் தேதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அமர்வு அமைக் கப்பட்டு சி.ஆர்.குமாரசாமி நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஜனவரி 5-ம் தேதி தொடங்கிய மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை 41 நாட்களில் நிறைவுபெற்றது.
- இனி இவர் நீதியின் முதல்வர் ஆகிவிட்டார். இப்படியும் கூறலாமோ நீதிபதிகளின் முதல்வர் ! பிரதமர் சார்பான நிதிஅமைச்சரின் முதல்வர் என்னலாமா சட்டத்தின் முதல்வரோ ?இருக்கலாம் எது எப்படி இருந்தாலும் இனிமேல் மக்களின் முதல்வராக இருக்கத்தேவை இல்லை. .அப்பாடா ஓபிஎஸ் அவர்களுக்கு தாடைவளர்க்க வேண்டிய அவசியமில்லை விடுதலையானது அவருந்தான்.இல்லையா !Points2140
- 2G வழக்கு நடக்கும் போது கனிமொழிக்கும் ராசாவுக்கும் ஜாமீன் கொடுக்கவே கூடாது என்று சொன்ன சி பி யை, கருணா சோனியாவை சந்தித்ததும் ஜாமீன் தரலாம் என்கிறது... அது நேர்மை...2G வழக்கு விசாரணை தொடங்கியவுடன், கனிமொழி அவரசமாக தனியார் டிவி இயக்குனர் பதவியில் இருந்து மாற்றப் பட்டாலும், கனிமொழிக்கும் லஞ்சப் பணத்துக்கும் தொடர்பு இல்லை என்று சொன்னால் அது தான் நீதி, இவர்கள் தனியார் டிவி ஆவணங்களை திருத்திய உரையாடல் வெளியானாலும் அது போலியானது என்று இவர்களே தீர்ப்பு சொல்லலாம், 60% பங்குதாதருக்கு அல்சமீர் நோய் உள்ளது என்று இவர்களே ஒரு மருத்துவ சான்றிதழ் கொடுத்தால் நீதியரசரே வீடு தேடிவந்து வாக்குமூலம் வாங்கி செல்வார் (அதுவும் சாட்சியாக)...742 கோடி இவர்கள் சொத்து முடக்கப் பட்டாதும் அது அரசியல் பழிவாங்குதல்...நீதி நேர்மை நியாயம் - அன்பழகனுக்கு தான் முதலில் சொல்லிக் கொடுக்க வேண்டும்...Points4270
- எப்படியோ, ஒருவழியாக இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வந்ததே! இனி யாருக்கும் அஞ்சவேண்டாம். ஊழல் நம் உதிரத்தில் ஓடும் மரபணு. இந்தத் தீர்ப்பு தெரிவிக்கும் நீதி அதுவே. வளரட்டும் நம் ஊழல் வரலாறு. தொடரட்டும் நம் சொத்துக் குவிப்பு. நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம். நடலையில்லோம். ஊழலுக்கு வாக்களித்து ஊராள்வோம்.Points32405
- நீதிபதி ஏன் விடுதலை செய்தார் என்று அவர் கூறும் தீர்ப்பை பார்த்துவிட்டு கமென்ட் அடிக்கவும். வயிற்ற்ரிசலில் எழுத வேண்டாம். நேற்று வரை தண்டனை உறுதி என்று கூறிய யோக்கியர்கள், யார் பிழைப்பையும் கெடுக்காதவர்கள், அடுத்தவன் வயிற்றில் அடிக்காதவர்கள் அமைதி காக்கவும். நான் 25 வருடமாக accounts துறையில் இருக்கிறேன். இந்த தீர்ப்பு தான் வரும் என்று பல தடவைகள் பத்திரிக்கைகளில் வாதம் செய்துள்ளேன். accounts பக்கம் இருந்து பார்த்தால் இந்த கேஸ் நிக்காது. மீண்டும் யார் உச்சநீதி மன்றம் போனாலும் இதே தீர்ப்பு தான் வரும்.Points375
- எல்லோரும் ஒன்று புரிந்து கொள்ளவேண்டும் . தி.மு .க கட்சிக்கு மாற்று ஜெயா லலிதா தவிர வேறு யாரும் எல்லை . ஜோகர் விஜயகாந்த் காணமல் போய்விட்டார் , பிஜேபி பெரிய முயற்சி தேவை ஈனும் தமிழகத்தில் காலுன்ற 5 வருடங்கள் பிடிக்கும் ... 1 லக்ஷம் கோடி கொள்ளை அடித்த மு.க விருக்கு JJ எவல்லவோ தேவலை .Points550PUTHUVAI Down Voted
- இது நான் முன்னமே சொன்னதுதான்.. அவர் யாரிடமும் லஞ்சம் வாங்கவில்லை.. லஞ்சம் கேட்டதாகவோ கொடுத்ததாகவோ எந்த குற்றச்சாட்டும் இல்லை. ஆனாலும் ஜே குற்றவாளி இல்லை என்று சொல்ல முடியாது.. இன்றைய அனைத்து நடிகர் நடிகைகளைப்போல அந்த காலத்து அவரது வருமானத்தை முறையாக கணக்கு காட்டாமல் மறைத்த வகையில் அவரும் ஒரு குற்றவாளியே.. ஆனாலும் இவ்வளவு கொடுமையாக தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளி இல்லை.. இந்த வழக்கை தொடுக்க தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு ய்ந்த அதிகாரமும் இல்லை.. அந்த காலத்தில் அவருக்கு வந்த வருமானத்தை.. அன்பளிப்பை முறையாக கணக்கு காட்டாமைக்கு.. வருமான வரித்துறை மட்டுமே வழக்கு போட முடியும்.. சாதாரண சிவில் வழக்கை.. கிரிமினல் வழக்காக ஜோடித்த பெருமை.. பொறாமை திமுகவினரையே சாரும்.
நன்றி - த இந்து
0 comments:
Post a Comment