சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2002-ம் ஆண்டைப் போன்ற அரசியல் நிகழ்வு மீண்டும் தமிழகத்தில் நடப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிரான டான்சி நில பேரம் தொடர்பான இரண்டு வழக்குகளில் கடந்த 9.10.2000 அன்று சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஒரு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொரு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து 2001-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தேர்தல் நடைபெற்றது. அப்போது, புவனகிரி, கிருஷ்ணகிரி, ஆண்டிப்பட்டி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கும் மேல் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த காரணத்தால், தேர்தலில் போட்டியிட தகுதி யில்லை என்று கூறி அவரது 4 வேட்பு மனுக்களும் தேர்தல் அதிகாரிகளால் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனால் அந்தத் தேர்தலில் அவரால் போட்டியிட முடியாமல் போனது. எனினும், அவரது தலைமையிலான அ.தி.மு.க. பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
தேர்தலில் போட்டியிடாத ஜெயலலிதா, அதிமுக சட்டபேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுநர் பாத்திமா பீவியும் அவருக்கு அனுமதி வழங்கினார். இதனால் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை 2001-ம் ஆண்டு மே 14-ம் தேதி பதவியேற்றது.
ஜெயலலிதா இவ்வாறு பதவியேற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பலர் மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா முதலமைச்ச ராக பதவியேற்றது செல்லாது என 21.9.2001 அன்று தீர்ப்பளித்தது.
ஓ.பி.எஸ். முதல்வரானார்
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவை அன்றைய தினமே பதவி விலகியது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந் தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார்.
மீண்டும் முதல்வரான ஜெ
அதன் பிறகு டான்சி வழக்குகளில் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் 4.12.2001 அன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. டான்சி வழக்குகளில் இருந்து ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டார். இந்தத் தீர்ப்பின் காரணமாக தேர்தலில் போட்டியிடவும், முதல்வராக பதவி யேற்கவும் ஜெயலலிதாவுக்கு இருந்த சட்ட ரீதியிலான தடை நீங்கியது. ஆகவே, 21.2.2002 அன்று நடைபெற்ற ஆண்டிப்பட்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா, சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக ஜெயலலிதா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவி விலகியது. 2.3.2002 அன்று ஜெய லலிதா மீண்டும் முதல்வராக பதவியேற்றார்.
2001-ம் 2014-ம்
2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் காரணமாக 2001-ம் ஆண்டில் நடந்ததைப் போலவே முதல்வர் பதவியை ஜெயலலிதா இழக்க நேர்ந்தது. 2001 போலவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்றுக் கொண்டது.
மீண்டும் திரும்பும் 2002
இந்நிலையில் சொத்து குவிப்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடவோ, முதலமைச்சராக பதவி வகிக்கவோ தற்போது ஜெயலலிதாவுக்கு எந்த தடையும் இல்லை.
ஆகவே 2002-ம் ஆண்டைப் போலவே ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவி விலகும் என்றும், ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவை ஓரிரு நாளில் பதவி ஏற்கும் என்றும் கூறப்படுகிறது.
thanx - the hindu
நெஞ்சுரம் மிக்க ஒரு பெரும் தலைவராக அகில இந்திய அளவில் ஜெயலலிதா அம்மா அவர்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளார் . கருணாவோ கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி அதுவும் தேய்ந்து சிறுகொசுவான நிலைக்குப் போய்விட்டார் . அம்மாவுடன் இணைந்து பணியாற்ற அல்லது தங்களைத் தற்காத்துக் கொள்ள திரு .வாசன் , திரு .வைக்கோ போன்றோர் முயல்வதும் ஏற்கனவே கூட்டணியில் உள்ள சரத், ஈஸ்வரன் , தமிழரசன் ,கதிரவன் போன்றோர் உச்ச பட்ச சந்தோசத்தில் இருப்பதும் கண்கூடாக தெரிகிறது . ஆப்பசைத்த குரங்காக சூனா சானா வும் கட்டுமரம் கம்பெனியும் விழிபிதுங்கி நிற்பதும் தெரிகிறது . இனிவரும் காலம் ஜெய லலிதா அம்மாவின் ஆட்சி ஜே ஜே என்று நடக்கும் .Points1145
SELVAM · Anonymous · CS · RBALAKRISHNAN · mani · ibrahim · kalaimagesh · valluan · சரவணகுமார்மு Down Voted
ஜெயா இன்னும் சர்வாதிகாரியாகத்தான் இருப்பார். எல்லா ஆண்களும் அவர் காலில் விழ வேண்டும் என்று நினைப்பவர். கட்சி எம் எல் ஏ / மந்திரி கலை கூட அடிமை மாதிரி வைத்து இருப்பவர். தமிழர்களின் தன்மானத்தை மறக்க வைத்தவர். எதிர்த்து பேசினால் அவர்கள் மீது போடா / தடா கேசு ( வேண்டும் என்றால் கஞ்சா கேசு கூட ) போட்டு உள்ளே தள்ளுவர். (வைகோ - சீமான் இதனால் தான் பம்முவது ) தமிழர் நலன்களை தனது கேசுக்காக கர்நாடகத்தில் அடகு வைத்தவர். தமிழ் நாட்டில் இருந்த தொழிற்ச்சாலைகளை எல்லாம் அண்டை மாநிலங்களுக்கு போக வைத்தவர். அதனால் தமிழ் நாடு தொழிற் துறையில் இரண்டாம் இடத்தில் இருந்து 20 ஆவது இடத்துக்கு வர வைத்தவர். எப்படி வேண்டும் என்றாலும் கொள்ளை அடிக்கலாம் ஆனால் கோர்ட்டை/ கேசை இழுத்து அடித்து பிறகு கவனிக்க் வேண்டியவர்களை வைத்து வெளியில் வரலாம் என மக்களுக்கு புரிய வைத்தவர். தனக்கு 4000 ஏக்கர் நிலம் இருந்தாலும் தனது சொந்த அண்ணன் குடும்பத்தை கூட ஒண்ட விடாது தனது தோழிக்கு தாரை வார்ப்பவர். இதைத்தான் வரலாறு இவரை பற்றி சொல்லும்.Points105
தமிழ்நாட்டின் முதல்வராய் ஜெயலலிதா அரியணையில் அமர்ந்து தமிழ்நாட்டுக்கும், உலக தமிழினத்துக்கும் நல்லாட்சி வழங்கினால் தமிழ்நாடும், உலக தமிழினமும் உங்கள் அன்பிற்கு ஆதரவாய் அணிவகுத்து நிற்கும்Points1825
Narimankhan Up Voted
இவரது துணிச்சல் எல்லை அற்றது. இறை அருளால் மீண்டும் முதல்வராக வேண்டும்.
குற்றசாட்டுக்கு உள்ளாகி சிறை சென்ற முதல்வர் என்கிற பெருமையுடன் இவர் அரசியல் சன்யாசம் பெறுவதே நல்லது.Points59135
t Down Voted
ஜெயலலிதா தோல்வி கண்டு துவண்டு விடாமல் ,தனித்து நின்று போராடி எதிரிகளை துவம்சம் செய்தவர் நெஞ்சில் உரமிக்கவர், குறை இல்லாத மனிதன் இல்லை. ஆனால் குறைகளையே உரமாக்கி விதை விதைத்தவர். இவர் இடத்தில் இன்னொரு பெண்மணி இருநதிரிந்தால் , எதிர்ப்பு கண்டு துவண்டு போயிருப்பார் ஆண்டவன் கருணையோ, அவரின் நல்ல நேரமோ அவரை மீண்டும் முதல் அமைச்சர் ஆக்கிஉள்ளது எதிர்த்தவர் எழ முடியாத அளவில் சட்டம் சாதித்துள்ளது. கண்ணதாசன் வேட்டைக்காரன்(எம்ஜீயார்) படத்தில் பாடும் பாடல் ------உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் , உலகத்தில் போராடலாம்.உயர்ந்தாலும்,தாள்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம். மாபெரும் சபையில் நீ நடந்த்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும். ஒரு மாற்று குறையாத மன்னவன் (அரசி) என்று உன்னை போற்றி புகழ வேண்டும். இனி எங்கெங்கு கானினும் சக்தி , சக்தியே இருள் நீக்கும் ,தீமைகளை விலக்கும், சாதனைகள் புரியும், தாரணியை தாங்கும்.சஞ்சலங்கள் தீர்க்கும். சக்தி நீ வாழி.Points280
நன்றீ - THE HINDU
0 comments:
Post a Comment