Monday, May 25, 2015

BIG GAME -சினிமா விமர்சனம்

அந்த  ஏரியாவுலேயே  அவர்தான்  பெரிய  வேட்டைக்காரர். அவர்  பையனுக்கும்  அந்த  பட்டம் கிடைக்கனும்னு நினைக்கறார், அவங்க  குல வழக்கப்படி  காட்டுக்குள்ளே    பையனை அனுப்பறாங்க . அவன் ஏதாவது  ஒரு மிருகத்தை  வேட்டையாடிட்டு  வரனும்.இவனை  இங்கேயே விட்டுட்டு  செகண்ட் இண்ட்ரோக்குப்போவோம்.


அமெரிக்க  நாட்டின்  ஜனாதிபதி  ஒருஃபிளைட்ல வெளியில்  கிளம்பறாரு. அவருக்கு அமைஞ்ச  வைஸ்  பிரசிடெண்ட்  ஓபிஎஸ்  மாதிரி  விசுவாசமானவரும்  இல்லை, க அன்பழகன் மாதிரி சாந்தமானவரும் இல்லை.இனத்துரோகி  விடுதலைப்புலி கருணா  மாதிரி  அடுத்தவன் ஏமாந்தப்போ  காலை வாரி விடும் ஜாதி.தீவிரவாதியின்  துணையுடன் ஜனாதிபதியைப்போட்டுத்தள்ளிட்டு  இவர் அந்த  இடத்துக்கு  வர ஆசைப்படறாரு.

அவரோட சதியால   ஜனாதிபதி  செல்லும்  விமானம்  தாக்கப்படுது.அவரு தப்பி  ஒரு காட்டில் தஞ்சம் அடையறார். அந்த காட்டில்  வேட்டையாட வந்த  பைய்ன் அவர்  தப்பிக்க உதவறான். 

வில்லன் க்ரூப் ஒரு பக்கம் இவங்களைத்துரத்துது. இவங்க 2 பேரும்  எப்படி  ஜெயிக்கறாங்க  என்பதுதான் மிச்ச  மீதிக்கதை


காதில்  பூ  சுற்றும்  விஷயங்கள் ஆங்காங்கே  இருந்தாலும்  ஓவர் ஆல்  பார்த்தா இது  ஒரு டைம் பாஸ்  ஆக்‌ஷன்  படம்  தான்.


ஹீரோவா சாமுவேல் .ஒபாமா  கேரக்டர். ஆனா வசனங்களில்  பல இடங்களில்  அவரை நக்கல் அடிப்பது  கலக்கல் . அந்த  சின்னப்பையன்  கேரக்டருக்கு அதீத  முக்கியத்துவம் . ரொம்ப  செயற்கையான  சாகசங்கள்


வில்லனா வருபவர்  நல்ல  பாடி லேங்குவேஜ். தீவிரவாதி  கேரக்டர் கன கச்சிதமான  நடிப்பு 


 ஒளிப்பதிவு  , லொக்கேஷன் செலக்சன்  கலக்கல் ரகம்...


2 மணி  நேரத்துக்கு  10 நிமிசம்  கம்மியா ஓடும்  படத்தில்  போர் அடிக்கும்  காட்சிகள்  அதிகம்  இல்லாதது  படத்தின்  வெற்றிக்கு சாட்சி 





மனதைக் கவர்ந்த  வசனங்கள்


ஒரு காரியத்தை வெற்றிகரமா முடிக்கனும்னா அதுக்கான தைரியமும் ,பலமும் நம்ம ரத்தத்தில் ஊறி இருக்கனும் GAME


2 ஒரு மரணத்தால இந்த உலகத்தில பெரிய மாறுதலை ஏற்படுத்திட முடியாது.நடக்கவேண்டியது நடந்தே தீரும் G




3 ஒரு வேட்டைக்காரன் வேட்டையாடுனதும் தன் இரையோட ஒரு போட்டோ எடுத்து வெச்சுக்குவான்.எல்லாம் ஒரு அடையாளத்துக்கு G




 படம் பார்க்கும்போது   அப்டேட்டட் ட்வீட்ஸ்



இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்


1  ஹாலிவுட்  படமா இருந்தாலும்  அமெரிக்க அதிபரை  நக்கல்  அடிக்கும்  துணிச்சலான  காட்சிகள்  பலம்’


2  ஹெலிகாப்டர்கள் சுற்றிவரும்  க்ளைமாக்ஸ்  காட்சிகள் பிரம்மாண்டம்




இயக்குநரிடம்  சில கேள்விகள்


1 ஜனாதிபதிதான்  வில்லனொட டார்கெட் . அவரை  ஒரு பெட்டில போட்டு ஹெலிகாப்டர்ல  போற போது அந்த பெட்டி  மேல  சின்னப்பையன் தாவி  ஏறுவதால் ஒரு தீவிரவாதியும்  , வில்லனும்  பதறுவது  ஏன்?


2  அவனை  தவிர்க்க   ஹெலிகாப்டரை  அவ்வளவு  தாழ்வாக  பறக்க விட்டால்  ஜனாதிபதி  எட்டிக்குதிக்க மாட்டார்  என எப்படி  எதிர்பார்க்கறாங்க?


3  ஒரு  ராமநாராயணன்  படம்னாக்கூட இந்த மாதிரி  சூழல்ல  ஹெலிகாப்டர்ல  உயரத்துக்குக்கொண்டு போய் ஆட்டி ஆட்டி ஜெர்க் அடிச்சு ஆளைக்கவிழ்ப்பாங்களே  தவிர   இப்படி  பேக்கு  மாதிரி ஹெலிகாப்டரை தாழ  பறக்க விட மாட்டாங்க 


4  அந்த  சின்னப்பையன்  குறி பார்த்து  அம்பு விட  10 நிமிசம்  கால  அவகாசம்  எடுத்துக்கறான்  அதுவரை  வில்லன்  வாட்சப்ல  ஹன்சிகா  வீடியோ  ஓடற  மாதிரி   பெப்பரப்பேன்னு  பார்த்துட்டு இருக்கான், கொஞ்சம்  கூட  குனியவோ  விலகவோ இல்ல 


5   தீவிரவாதி   பார்க்க  புத்திசாலி  போல்  இருக்கான், வில்லனை  நம்பி  விமானத்தை விட்டு  இறங்கி  அப்படியா  மாட்டிக்குவான்? அட்லீஸ்ட்  கோபத்துல  அந்த  ஹெலிகாப்டரை  சுடமுயற்சி  கூடப்பண்ண மாட்டானா?





சி  பி  கமெண்ட்  =


BIG GAME - அமெரிக்க பிரசிடென்ட்டை காப்பாற்றும் ஆக்சன் பிலிம்.லாஜிக் மிஸ்டேக்ஸ் 2 ஜி ஊழல் அளவு.ஆனாலும் ரசிக்கலாம்.ரேட்டிங் = 3 / 5



 ஈரோடு  விஎஸ்பி ல  படம்  பார்த்தேன்



0 comments: