36 வயதினிலே
புறம்போக்கு பொதுவுடைமை
சோன்பப்டி
லயன் (தெலுங்கு) (14 5 15)
பேயுடன் ஒரு பேட்டி காம பிசாசு
MADMAX FURY ROAD
பேயுடன் ஒரு பேட்டி காம பிசாசு
MADMAX FURY ROAD
# 15 5 2015
தியேட்டர்கள் கிடைக்காததால் சோன்பப்டி இன்று ரிலீஸ் இல்லை
தியேட்டர்கள் கிடைக்காததால் சோன்பப்டி இன்று ரிலீஸ் இல்லை
1 36 வயதினிலே
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோதிகா நடிப்பில் வெளிவரும் படம் என்பதையும் தாண்டி பல விஷயங்கள் இந்த 36 வயதினிலே படத்தில் உள்ளது. ஜோதிகா தமிழ் சினிமாவில் யாருமே நிரப்ப முடியாத ஒரு இடத்தில் இருந்த போது, திருமணமாகி குடும்ப வாழ்வில் இணைந்தார்.
ஆனால், ஜோதிகாவை தமிழ்நாடு மக்கள் எப்போது மீண்டும் திரையில் பார்ப்போம் என காத்திருந்தனர். அவர்களுக்காகவே மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற How old are you? படத்தின் ரீமேக் உரிமையை சூர்யா வாங்கி ஜோதிகாவை நடிக்க வைத்துள்ளார்.
சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோதிகா, ‘நம் திருமணத்திற்கு பிறகு பெயருடன் கணவர் பெயரும் இணைந்து விடுகின்றது, பிறகு நம் வாழ் நாள் முழுவதும் அவர்களுக்காகவே தான் இருக்கின்றோம், அதில் எந்த தவறு இல்லை, நம் குழந்தைகளை கவனித்து அவர்களை நல்ல முறையில் வளர்க்க வேண்டும்.
ஆனால், நம்மை 20 வருடங்களாக வளர்த்த நம் தாய், தந்தை பெயருக்கு என்ன செய்தோம் என்பதே இப்படத்தின் மைய கரு’ என்று கூறியிருந்தார். அவர் சொல்வதை கொஞ்சம் உற்று நோக்கினால் புரியும். இத்தனை நாட்கள் திருமணமான பெண்கள் அனைவரும் குடும்பம், குழந்தைகள் என இருந்து தங்கள் பெற்றோரை மறந்து சராசரி பெண்களை போல், ஏதோ சாதனை என்ற வார்த்தையே அவர்களுடையே அகராதியில் இல்லாதது போல் தான் வாழ்கின்றார்கள்.
அவர்களுக்கான படம் தான் இந்த 36 வயதினிலே, திருமணம் ஆன ஒவ்வொரு பெண்களும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது, அதுமட்டுமில்லாமல் திருமணம் ஆகாமல் இருக்கும் இளம் பெண்கள் கூட, பின்னாளில் யோசிப்பதற்கு பதிலாக தற்போதே நாம் செய்ய வேண்டிய சாதனைகள் நிறையவுள்ளது என கண்டிப்பாக இந்த படம் நினைக்க தூண்டும். பெண்களுக்கு பெருமை சேர்க்கும் இந்த 36 வயதினிலே படத்தை பார்க்க தவறாதீர்கள். உங்கள் வாழ்விலும் ஒரு மாற்றம் ஏற்படலாம்
‘36 வயதினிலே’ படத்தின் பாடல் வெளியீட்டிற்குப் பிறகு, ஜோதி காவைப் பேட்டி எடுப்பதற்காக அனைத்து ஊடகங்களும் வரிசைகட்டி நிற்கிறார்கள். ஆனால், ஜோதிகா முன்னணி நாயகியாக இருந்த காலத்தில் இருந்தே ஊடகங்களுக்கு அவ் வளவாகப் பேட்டி அளித்தது இல்லை. இப்போதும் அதே மாதிரிதான் இருக்கிறார்.
தன்னுடைய கணவர் தயாரித் திருக்கும் படம் என்பதால்தான் இசை வெளியீட்டு விழாவிற்கே வந்தார். ஆனால், தற்போது இருக்கும் காலகட்டத்தில் ஒரு படம் மக்கள் மத்தியில் எளிதாகச் சென்றடைய வேண்டும் என்றால் அதற்கு ஊடகங்களின் உதவி கண்டிப்பாகத் தேவை என்பதை அறிந்த ஜோதிகா, அவர்களைச் சந்திக்க கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார். ஆனால், அதற்கு நிபந்தனை விதித்துள்ளார். அதாவது, இரண்டு தொலைக்காட்சி மற்றும் இரண்டு தமிழ்ப் பத்திரிகை தவிர வேறு யாருக்கும் பேட்டி கொடுக்கமாட்டேன் என்று கூறிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஜோதிகா பேட்டி அளித்திருந்தார். ஜோதிகா இப்படியிருக்க சூர்யாவோ எங்கு சென்றாலும் ‘36 வயதினிலே’ படம் பற்றிதான் வாய் வலிக்காமல் பேசிக்கொண் டிருக்கிறார் என்கிறது கோடம் பாக்க வட்டாரம்..
2
'புறம்போக்கு என்கிற பொதுவுடைமை'.
0 comments:
Post a Comment